Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

என் வானில் ஒரு வெண்ணிலா..!
என் வானில் ஒரு வெண்ணிலா..!
என் வானில் ஒரு வெண்ணிலா..!
Ebook95 pages35 minutes

என் வானில் ஒரு வெண்ணிலா..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதவைத் திறந்து பால்கனிக்கு வந்தாள் சினேகா. சில்லென்ற பனிக்காற்று முகத்தில் அறைந்தது. ஊட்டி குளிர் உடலை ஊசிகளால்  குத்தியதுபோல ஓர் இதமான உணர்வை தோற்றுவிக்க அந்த இதம் அப்போது  அவளுக்கு தேவையாகவே இருந்தது. 

வாழ்க்கை எப்போதும் நேர்கோட்டில் செல்வதில்லையே. அதன் பாதைகள் எங்கே, பயணங்கள் எங்கே? யாருக்கு தெரியும். 

சினேகாவின் வயது முப்பதை தொடப்போகிறது. கவிதை பாடும் கண்கள் ஆழ்ந்த செந்நிற இதழ்கள். கன்னத்தில் குழிவிழும் அழகு. பிறை நெற்றி, சுருண்ட கற்றைமுடி, முன் நெற்றியில் விழும் அழகு கோதுமை நிறத்தில் கடைந்தெடுத்த சிற்பமாக அழகுக்கு இலக்கணம் சொல்வது போல இருக்கும் சினேகா... இன்று இளம் விதவை. 

கடைசிவரை உன் கை விடமாட்டேன் என்று கைப்பிடித்து அக்னியை வலம் வந்தவன் இப்போது இல்லை. சொர்க்கமான வாழ்க்கை கிடைத்திருக்கிறது. என்று எத்தனை முறை சந்தோஷப்பட்டிருப்பாள். சிறுவயதில் தாயை இழந்தாலும், அந்த குறை தெரியாமல் வளர்த்தவர் அப்பா. டீ எஸ்டேட். பணத்திற்கு என்றுமே கஷ்டப்பட்டவர் இல்லை. 

அப்பாவின் நேரடி பார்வையில் எஸ்டேட்டில் பணம் அபரிமிதமாக கொட்டியது. அவள் ஆசைப்பட்டது எதுவாக இருந்தாலும் அடுத்த நிமிடம் அவள் கைக்கு வந்தது. அவள் கேட்டு எதையும் மறுத்ததில்லை ரகுநாதன். ஒரே மகள். எல்லாவற்றுக்கும் உரிமையான வாரிசு. அவளுக்கு இல்லாமல் எதற்கு இவ்வளவு பணம்? மகளுக்காக பணத்தை தண்ணீராக செலவழித்தார். 

காலேஜில் படிக்கும் போது அவளை அழைத்துப்போக அவள் தேவைக்கென்று டிரைவருடன் தனி கார் அவள் இருக்கும் இடத்தில் அவள் வருகைக்காக காத்திருக்கும். 

சமையல்காரி அவள் எழுந்து வந்து "என்ன டிபன்" என்று கேட்டு செய்வதற்கு கதவு எப்போது திறக்கும் என்று அவள் பெட்ரூம் கதவையே பார்த்தபடி இருப்பாள். 

'சின்னம்மாவுக்கு பிடிக்காது. சின்னம்மா  கோபப்படுவாங்க ரோஜாமலர்கள் செடியில் இருப்பது தான் அழகுன்னு சின்னம்மா சொல்வாங்க. யாரும் பறிச்சுடாதீங்க. சின்னம்மா தோட்டத்துக்கு வந்து பார்த்தால் கோபப்படுவாங்க' என்று, அவள் குணம் புரிந்து வீட்டில் வேலை செய்பவர்கள் நடந்தார்கள். பிறந்த வீட்டில் ஒரு இளவரசியாக வாழ்ந்தாள் சினேகா. பணமும் அழகும் ஒரு சேர இருந்தவளை இளவட்டங்கள் ஏக்கத்தோடு பார்த்தார்கள். 

இந்த அழகுமலர் கிடைத்தால் ராஜபோக வாழ்க்கை வாழலாமே. யாருக்கு கொடுத்துவைத்து இருக்கிறதோ? அந்த கொடுப்பினை பிரசன்னாவுக்கு இருந்தது. 

"ராஜ் சாக்லெட்ஸ் கம்பெனி வச்சிருக்கிறாரே ரகுநாதன். உனக்கு பழக்கமா?" 

நண்பர் கேட்க 

"கேள்விப்பட்டிருக்கேன். பார்த்ததில்லை."

பதில் சொன்னார் ரகுநாதன். 

"அவர் மகன் வெளிநாட்டில் படிப்பை முடிச்சுட்டு வந்திருக்கானாம். மகனுக்கு பெண் தேடறாங்க. ஒரே பிள்ளை எனக்கு உன் மகள் சினேகாதான் நினைவுக்கு வந்தா உனக்கு மகளைத்தர சம்மதம்னா நானே அவங்ககிட்டே பேசறேன். இங்கே வாழ்ந்ததை விட நூறு மடங்கு சந்தோஷமாக இருப்பா ஊட்டியை வளைச்சுபோட்டு இடம் வாங்கியிருக்காரு என்னப்பா சொல்ற?" 

எந்த பிரச்சனையுமில்லாமல் சுலபமாக திருமணம் முடிவானது. 

பிரசன்னாவின் அழகும் அமைதியும் சினேகாவை வசீகரிக்கிறது. 

லேசான தலையாட்டலில் அப்பாவிடம் தன் சம்மதத்தை தெரிவித்தாள். 

"பணம் பணத்தோடு சேருது. கொடுத்து வச்சவங்கப்பா இவர் டீ எஸ்டேட் முதலாளி இவர் சாக்லெட் கம்பெனிக்கு முதலாளி. சம்பந்தியாயீட்டாங்க." 

கழுத்தில் ரோஜா மாலையுடன் வைரங்கள் ஜொலிக்க பளபளப்பான ஆடையில் நின்ற சினேகாவையும் பிரசன்னாவையும் பார்த்து பெருமூச்சுவிட்டார்கள். 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 29, 2023
ISBN9798223139157
என் வானில் ஒரு வெண்ணிலா..!

Read more from Parimala Rajendran

Related to என் வானில் ஒரு வெண்ணிலா..!

Related ebooks

Reviews for என் வானில் ஒரு வெண்ணிலா..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    என் வானில் ஒரு வெண்ணிலா..! - Parimala Rajendran

    1

    கதவைத் திறந்து பால்கனிக்கு வந்தாள் சினேகா. சில்லென்ற பனிக்காற்று முகத்தில் அறைந்தது. ஊட்டி குளிர் உடலை ஊசிகளால் குத்தியதுபோல ஓர் இதமான உணர்வை தோற்றுவிக்க அந்த இதம் அப்போது அவளுக்கு தேவையாகவே இருந்தது.

    வாழ்க்கை எப்போதும் நேர்கோட்டில் செல்வதில்லையே. அதன் பாதைகள் எங்கே, பயணங்கள் எங்கே? யாருக்கு தெரியும்.

    சினேகாவின் வயது முப்பதை தொடப்போகிறது. கவிதை பாடும் கண்கள் ஆழ்ந்த செந்நிற இதழ்கள். கன்னத்தில் குழிவிழும் அழகு. பிறை நெற்றி, சுருண்ட கற்றைமுடி, முன் நெற்றியில் விழும் அழகு கோதுமை நிறத்தில் கடைந்தெடுத்த சிற்பமாக அழகுக்கு இலக்கணம் சொல்வது போல இருக்கும் சினேகா... இன்று இளம் விதவை.

    கடைசிவரை உன் கை விடமாட்டேன் என்று கைப்பிடித்து அக்னியை வலம் வந்தவன் இப்போது இல்லை. சொர்க்கமான வாழ்க்கை கிடைத்திருக்கிறது. என்று எத்தனை முறை சந்தோஷப்பட்டிருப்பாள். சிறுவயதில் தாயை இழந்தாலும், அந்த குறை தெரியாமல் வளர்த்தவர் அப்பா. டீ எஸ்டேட். பணத்திற்கு என்றுமே கஷ்டப்பட்டவர் இல்லை.

    அப்பாவின் நேரடி பார்வையில் எஸ்டேட்டில் பணம் அபரிமிதமாக கொட்டியது. அவள் ஆசைப்பட்டது எதுவாக இருந்தாலும் அடுத்த நிமிடம் அவள் கைக்கு வந்தது. அவள் கேட்டு எதையும் மறுத்ததில்லை ரகுநாதன். ஒரே மகள். எல்லாவற்றுக்கும் உரிமையான வாரிசு. அவளுக்கு இல்லாமல் எதற்கு இவ்வளவு பணம்? மகளுக்காக பணத்தை தண்ணீராக செலவழித்தார்.

    காலேஜில் படிக்கும் போது அவளை அழைத்துப்போக அவள் தேவைக்கென்று டிரைவருடன் தனி கார் அவள் இருக்கும் இடத்தில் அவள் வருகைக்காக காத்திருக்கும்.

    சமையல்காரி அவள் எழுந்து வந்து என்ன டிபன் என்று கேட்டு செய்வதற்கு கதவு எப்போது திறக்கும் என்று அவள் பெட்ரூம் கதவையே பார்த்தபடி இருப்பாள்.

    ‘சின்னம்மாவுக்கு பிடிக்காது. சின்னம்மா கோபப்படுவாங்க ரோஜாமலர்கள் செடியில் இருப்பது தான் அழகுன்னு சின்னம்மா சொல்வாங்க. யாரும் பறிச்சுடாதீங்க. சின்னம்மா தோட்டத்துக்கு வந்து பார்த்தால் கோபப்படுவாங்க’ என்று, அவள் குணம் புரிந்து வீட்டில் வேலை செய்பவர்கள் நடந்தார்கள். பிறந்த வீட்டில் ஒரு இளவரசியாக வாழ்ந்தாள் சினேகா. பணமும் அழகும் ஒரு சேர இருந்தவளை இளவட்டங்கள் ஏக்கத்தோடு பார்த்தார்கள்.

    இந்த அழகுமலர் கிடைத்தால் ராஜபோக வாழ்க்கை வாழலாமே. யாருக்கு கொடுத்துவைத்து இருக்கிறதோ? அந்த கொடுப்பினை பிரசன்னாவுக்கு இருந்தது.

    ராஜ் சாக்லெட்ஸ் கம்பெனி வச்சிருக்கிறாரே ரகுநாதன். உனக்கு பழக்கமா?

    நண்பர் கேட்க

    கேள்விப்பட்டிருக்கேன். பார்த்ததில்லை.

    பதில் சொன்னார் ரகுநாதன்.

    அவர் மகன் வெளிநாட்டில் படிப்பை முடிச்சுட்டு வந்திருக்கானாம். மகனுக்கு பெண் தேடறாங்க. ஒரே பிள்ளை எனக்கு உன் மகள் சினேகாதான் நினைவுக்கு வந்தா உனக்கு மகளைத்தர சம்மதம்னா நானே அவங்ககிட்டே பேசறேன். இங்கே வாழ்ந்ததை விட நூறு மடங்கு சந்தோஷமாக இருப்பா ஊட்டியை வளைச்சுபோட்டு இடம் வாங்கியிருக்காரு என்னப்பா சொல்ற?

    எந்த பிரச்சனையுமில்லாமல் சுலபமாக திருமணம் முடிவானது.

    பிரசன்னாவின் அழகும் அமைதியும் சினேகாவை வசீகரிக்கிறது.

    லேசான தலையாட்டலில் அப்பாவிடம் தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

    பணம் பணத்தோடு சேருது. கொடுத்து வச்சவங்கப்பா இவர் டீ எஸ்டேட் முதலாளி இவர் சாக்லெட் கம்பெனிக்கு முதலாளி. சம்பந்தியாயீட்டாங்க.

    கழுத்தில் ரோஜா மாலையுடன் வைரங்கள் ஜொலிக்க பளபளப்பான ஆடையில் நின்ற சினேகாவையும் பிரசன்னாவையும் பார்த்து பெருமூச்சுவிட்டார்கள்.

    "சினேகா நீ என்னை விட்டு ரொம்ப தூரம் போயிடுவியோன்னு கவலைப்பட்டேன். நல்ல வேளை உள்ளூரிலேயே உனக்கு மாப்பிள்ளை கிடைச்சாச்சு. அந்த வகையில் எனக்கு ரொம்பவே சந்தோஷம் நினைச்சா ஓடி வந்து பார்க்கலாம்.

    மகளை அரவணைத்து சொல்கிறார் ரகுநாதன்.

    கவலைப்படாதீங்கப்பா மாசத்தில் இரண்டு வாரம் அங்கிருந்தா இரண்டு வாரம் இங்கிருப்போம். இதை என் கண்டிஷனாகவே அவர்கிட்டே சொல்லிடுவேன். என் அப்பாவுக்கும் என்னை விட்டா யார் இருக்கா. அவர் எப்படி அவங்களுக்கு ஒரே பிள்ளையோ அதுமாதிரிதானேப்பா நானும்.

    அன்புடன் சொல்பவளை கண்கலங்க பார்க்கிறார்.

    அமெரிக்காவில் படித்திருந்தாலும் அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பவனை சினேகாவால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

    அவளை பொறுத்தவரை ஒரு நல்ல கணவனாக அன்பாக நடந்து கொள்கிறான். சினேகா எது கேட்டாலும் சொன்னாலும் அப்பாவைபோல உடனே செய்து தருகிறான். இருந்தாலும் ஏதோ ஒரு குறை ஒன்று இருப்பதுபோலவே தோன்றுகிறது.

    மாமியாரிடம் ஜாடையாக கேட்கிறாள்.

    உங்க மகன் எப்போதுமே இப்படித்தானா அத்தை. அனாவசியமாக ஒரு வார்த்தை பேசமாட்டேங்கிறாரு. கலகலப்பான எனக்கு எதிர்மறையாக இருக்காரு

    அது அவன் சுபாவம் சினேகா. குடும்பத்தை பிரிந்து படிப்பதற்காக வெளிநாடு போனான். மூணு வருஷ தனிமை அவனை ரொம்பவே மாத்திடுச்சு. ஆனா மனசிலிருக்கிற அன்பை சந்தோஷத்தை வெளிப்படையாக காட்டத்தெரியாட்டியும் அவன் நல்லவன் சினேகா. அவனுடன் உன் வாழ்க்கை நல்லாவே இருக்கும் பயப்படாதே

    அதைப் போலவே தடங்கல் இல்லாத வாழ்க்கை. சினேகாவின் அன்பு நெருக்கம் பிரசன்னா மாறத்தொடங்கினான். குறும்பும், சிரிப்புமாக இருவரும் வளைய வர பெற்றவர்கள் சந்தோஷப்பட்டார்கள். சினேகா கருத்தரிக்க இரண்டு குடும்பமும் அவளை கையில் ஏந்தி கொண்டாடியது. இருவரின் அழகையும் அள்ளிச் சேர்த்து சொர்ண விக்கிரகமாக லயா பிறந்தாள்.

    அப்படியே சின்ன வயசில்

    Enjoying the preview?
    Page 1 of 1