Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அன்பினால் திறப்போம்!
அன்பினால் திறப்போம்!
அன்பினால் திறப்போம்!
Ebook112 pages41 minutes

அன்பினால் திறப்போம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஊரிலிருந்து வந்த களைப்பு தீர ஈஸிசேரில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் கணவனிடம் வந்தாள் கோமதி.
 "என்னங்க... வந்ததிலிருந்து அமைதியா இருக்கீங்க. நம்ப மக பத்மா எப்படியிருக்கா? புகுந்த வீட்டில் எல்லாரும் அவகிட்டே பிரியமா நடந்துக்கிறாங்களா? மாப்பிள்ளை என்ன சொன்னாரு? செவ்வாய் தோஷம்னு சரியான வரன் அமையாமல் கல்யாணம் தள்ளிப்போய், இப்பதான் இருபத்தைஞ்சு வயசுலே அவளுக்குக் கல்யாணம் முடிஞ்சுருக்கு. பெரிய குடும்பம், முன்னே பின்னே இருந்தாலும் பரவாயில்லைன்னு கட்டிக் கொடுத்துட்டோம். கல்யாணம் முடிஞ்சு இரண்டு மாசம் ஆச்சு. போனில் கூட சரியா பேச மாட்டேங்கிறா. அதான் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி ஒரு நடை நேரில் போய் பார்த்துட்டு வரேன்னு போனீங்க. வந்ததிலிருந்து ஒண்ணுமே சொல்லலையே." கணவன் முகத்தைப் பார்த்தாள்.
 "நீயும், நானும் பயப்படற மாதிரி ஒரு விஷயமும் இல்லை கோமதி. உன் மகள் புகுந்த வீட்டில் சந்தோஷமா இருக்கா. என்ன நம்பளை பிரிஞ்ச ஏக்கம் கொஞ்சம் இருக்கு. அதுவும் அவங்க குடும்பத்தாரோட அன்பான கவனிப்பில் மறைஞ்சுடும். பெத்த நாமதான் மனசு சஞ்சலப்படறோம். என் தம்பி வெங்கடாஜலத்தைப் பாரு. செல்லமா கண்ணுக்குள்ளே வச்சு வளர்த்த மகளை கடல் கடந்து கட்டிக் கொடுத்திருக்கான். மரகதமும் மகள் நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் போதும்னு மகளைப் பார்க்க முடியலைன்னாலும் நிம்மதியா இருக்கா. நீதான் பதட்டப்படறே."
 கணவனின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் கோமதி.
 "உங்க பேச்சுக்கு மறு பேச்சு பேசியிருக்கேனா. உங்க வாயால நம்ப மகள் சந்தோஷமா இருக்கான்னு சொன்னா எனக்கு அது போதும்."
 அன்போடு மனைவியை ஏறிட்ட கணபதி, "சரி, உன் திருப்திக்கு இன்னொரு தடவை சொல்றேன். உன் மகள் சந்தோஷமா இருக்கா. என்னையும் நல்லபடியா கவனிச்சு அனுப்பினா. அடுத்த முறை வரும்போது உன்னையும்கூட்டிட்டு வரச் சொன்னா. போதுமா. போய் சமையல் வேலையை கவனி கோமதி. நான் சாப்பிட்டுட்டு நிலம் விக்கிறது சம்பந்தமா சதாசிவத்தைப் போய்ப் பார்க்கணும்."
 கணவனின் பதிலில் திருப்தி அடைந்தவளாக சமையலறை நோக்கி நடந்தாள்.
 நிலம், தோட்டம் என்று பெரிய பண்ணையாளராக வாழ்ந்த குமரகுருவிற்கு, மகனாகப் பிறந்தவர்கள்தான் கணபதியும், வெங்கடாஜலமும், அவர்களை அடுத்து சாருமதியும், சாரதாவும் பிறக்க, அந்த கிராமத்து வீட்டில் பாசப் பறவைகளாக சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
 குமரகுரு பிள்ளைகளுக்கு எந்தக் குறையும் வைக்காமல் நல்லபடியாக வளர்த்து, ஆளாக்கி நான்கு பேரின் திருமணம் முடிந்த சில வருடங்களில் இந்த உலகைப் பிரிந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த அவர்கள், ஒருவருக்கொருவர் பாசம், பற்றுதலுடன் இருந்தார்கள். அந்த அன்பும், பாசமும் மாறாமல் தங்களுக்கென்று தனி குடும்பம் வந்த போதும், உறவுகளின் நெருக்கத்தோடு, சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை மாறாமல் வாழ்ந்தார்கள். அதுவும் கணபதி எல்லோருக்கும் மூத்தவர் என்பதால் அவர் சொல்லை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு கூட பிறந்தவர்கள் இன்றளவும் நடந்து வந்தார்கள்.
 கணபதிக்கு அப்பாவோடு விவசாயம், தோட்டம் என்று ஈடுபாடோடு அலைந்ததால், படிப்பில் நாட்டம் வரவில்லை. அப்பாவுடன் விவசாயப் பண்ணையை நிர்வகிக்க, வெங்கடாஜலம் படிப்பில் ஆர்வமுடன் இருந்து, நன்கு படித்து முன்னேறினார். ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவர். தன் திறமையால் தனியாக தொழில் தொடங்கும் அளவிற்கு உயர்ந்தார். தம்பியின் வளர்ச்சியில் பெருமிதம் கொண்டார் கணபதி. வெங்கடாஜலத்திற்கு புவனா பிறந்த நேரம் அதிர்ஷ்ட தேவதையும் கண் திறக்க, யாரும் எதிர்பார்க்காத அளவு கோடி, கோடியாக சம்பாதிக்க ஆரம்பித்தார்.
 வருடங்கள் உருள, காலம் தான் வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. சாருவும், சாரதாவும் நடுத்தரக் குடும்பத்தில் வாழ்க்கைபட்டாலும், நிறைவாக வாழ்ந்தார்கள். ஆனால் சொல்லி வைத்தாற்போல, நால்வருக்கும் ஒரு குழந்தைதான் பிறந்தது. சாருவுக்கும், சாரதாவுக்கும் ஆண் குழந்தை பிறக்க,கணபதியும், வெங்கடாஜலமும் மகள்களை பெற்றெடுத்தார்கள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223901907
அன்பினால் திறப்போம்!

Read more from Parimala Rajendran

Related to அன்பினால் திறப்போம்!

Related ebooks

Related categories

Reviews for அன்பினால் திறப்போம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அன்பினால் திறப்போம்! - Parimala Rajendran

    1

    அகலமான அந்தத் தெருவும் அழகிய வடிவமைப்புடன் கூடிய பெரிய வீடுகளும், பணக்காரர்கள் வசிக்கும் இடம் என்பதை பறைசாற்றின.

    அந்த தெருவிலேயே ‘புவனா இல்லம்’ என்று பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்ட அந்த வீடுதான் மிகப் பெரியதாக குட்டி பங்களா போல காட்சியளித்தது. வீட்டைச் சுற்றி பெரிய காம்பவுண்ட் சுவரும் உள்ளடங்கிய வீடும், வெளிப்புறம் அழகான பூச்செடிகளும் செயற்கை நீரூற்றுமாக பார்ப்பதற்கு அழகு மிளிற காட்சியளித்தது.

    அந்த வீட்டின் முன் படகு போன்ற கார் வந்து நிற்க, காவலாளி ஓடிவந்து கேட்டைத் திறந்தான். உள்ளே போர்டிகோவின் முன் கார் நிற்க, டிரைவர் பவ்யமாக கதவைத் திறந்து விட, ஐம்பத்தைந்தை நெருங்கும் வெங்கடாஜலம் காரிலிருந்து இறங்கினார்.

    நான்கு திரையரங்குகள், பெட்ரோல் பங்க், காட்டன் மில், என்று கோடி கோடியாய் பணம் கொட்டும் தொழிலில் இறங்கி, பிஸினஸ் உலகில் கோடீஸ்வரராக கொடி கட்டி பறந்தார்.

    பிரம்மாண்டமாக காட்சியளித்த உள் ஹாலில் நுழைந்தவரை, முகத்தில் சோகம் படர உட்கார்ந்திருக்கும் மரகதம் நிமிர்ந்து பார்த்தாள். மனைவியைப் பார்த்ததும் அவர் முகமும் வாடியது.

    என்ன மரகதம், புவனா என்ன சொல்றா? ஏதாவது பேசினாளா...? ஒழுங்கா சாப்பிட்டாளா?

    ரூமை விட்டே வெளியே வரலை. லட்சுமிகிட்டே ஜூஸ் கொண்டு வரச் சொல்லி, குடிச்சுட்டு உள்ளே இருக்கா. சாப்பிடக் கூப்பிட்டேன். வரலை. என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? ஒரே பொண்ணுன்னு அதிகச் செல்லம் கொடுத்து வளர்த்ததன் பயனை இப்ப அனுபவிக்கிறோம்.

    அவள் குரலில் வருத்தம் இழையோடியது.

    சரி சரி, அவளாக சொல்ற வரை நீ எதுவும் வாயைத் திறக்காதே. வந்து இரண்டு நாள் தானே ஆகுது. அவளாக எதுவும் சொல்லாட்டி மாப்பிள்ளைகிட்டே போன் போட்டு பேசலாம். பெரிசா எதுவும் இருக்காது. நீ கவலைப் படாதே

    கோடீஸ்வரரான வெங்கடாஜலத்தின் ஒரே மகள் புவனா. அத்தனை சொத்துக்களுக்கும் ஏக போக வாரிசு. சந்தன நிறத்தில் அழகான வடிவமைப்புடன் தேவதையாக காட்சியளித்தாள். மகளின் படிப்பிற்கும், அழகுக்கும் ஈடு கொடுக்கக் கூடியவனாக மாப்பிள்ளையை தேர்ந்தெடுப்பதில் வெங்கடாஜலம் மிகவுமே சிரமப்பட்டார். கடைசியில் அந்தஸ்தில் அவர்களை விட குறைந்தவனாக இருந்தாலும், பெற்றவர்கள் இல்லாமல், சித்தப்பாவின் பராமரிப்பில் வளர்ந்து, அறிவில் சிறந்தவனாக நன்கு படித்து, அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக டாலரில் சம்பாதிக்கும் பரணியை வெங்கடாஜலத்திற்கு மிகவும் பிடித்துப் போனது.

    என்னங்க, கடல் கடந்து மகளை கட்டிக் கொடுத்துட்டு நாம என்ன செய்யப் போறோம். கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணுங்க. நம்பகிட்டே வேணுங்கிற அளவு சொத்து இருக்கு. எல்லாமே புவனாவுக்கு தானே. கூப்பிட்ட குரலுக்கு வேலைக்காரங்க, நினைச்சதை உடனே நிறைவேத்தி கொடுக்கற பெத்தவங்க, எந்தக் கவலையுமில்லாமல் வளைய வருபவள் புவனா. அவளால எப்படிங்க இவ்வளவு தூரம் நம்மை பிரிஞ்சு இருக்க முடியும். வேண்டாங்க உள்ளூரிலேயே நல்ல வரனா பாருங்க.

    "அப்படி நினைக்காத மரகதம். நான் நல்லா பையனைப் பத்தி விசாரிச்சுட்டேன். ரொம்ப நல்ல பையன் எந்தவிதக் கெட்டப் பழக்கமும் கிடையாது. அமைதியான குணம். சின்ன வயசிலேயே பெத்தவங்களை இழந்தவனை, அவங்க சித்தப்பாதான் வளர்த்து ஆளாக்கியிருக்காரு.

    அவரும் பாங்க் ஆபீசராக நல்ல உத்தியோகத்தில் இருக்காரு. கௌரவமான குடும்பம். பையனும் நாலு வருஷமா அமெரிக்காவில் சம்பாதித்து இங்கே இரண்டு வீடு வாங்கி போட்டிருக்கான். நிச்சயம் கெட்டிக்காரனாகதான் இருப்பான். நம்ம மகளும் எந்த பிக்கல், பிடுங்கலில்லாமல் சந்தோஷமா இருப்பா. நாம மகளைப் பார்க்கணும்னு நினைச்சா உடனே ப்ளைட் ஏறிடுவோம். நமக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லை மரகதம். நம்ப புவனாவோட வாழ்க்கை சந்தோஷமாக அமையணும். அவ கடைசி வரை இதே போல ஒரு சுதந்தரப் பறவையாக இருக்கணும். அதுக்கு இந்த வரன்தான் பொருத்தமா இருக்கும்னு தோணுது. சரி முடிவை புவனாகிட்டே விடுவோம். மாப்பிள்ளை பத்திய முழு விபரமும் சொல்வோம். போட்டோவைப் பார்க்கட்டும். பிடிச்சிருந்தா இந்த விஷயத்தில் இறங்குவோம். என்ன சொல்றே?"

    சரிங்க... உங்க விருப்பப்படி செய்ங்க. நிச்சயம் புவனா இதுக்கு ஒத்துக்கமாட்டான்னுதான் தோணுது.

    ஆனால் மரகதம் நினைத்ததற்கு எதிர்மறையாக சந்தோஷத்துடன் சம்மதம் தெரிவித்தாள் புவனா.

    டாடி என் மனசுப்படி... மாப்பிள்ளையை செலக்ட் பண்ணியிருக்கீங்க. மாமனார், மாமியார் பெரிய குடும்பமுன்னு உள்ளூரில் இருக்கிறது ஒத்து வராது. நானும், அவருமான வாழ்க்கை நிச்சயம் சந்தோஷமா இருக்கும். அதுவும் அமெரிக்காவில் என் வாழ்க்கை தொடரப் போகுதுன்னு நினைக்கும்போது உண்மையில் மகிழ்ச்சியா இருக்கு. எந்தக் குறையும் சொல்ல முடியாம அவரும் அழகா இருக்காரு. எனக்கு டபுள் ஓ.கே. டாடி.

    நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மகள் பேச, அவளையே பார்த்தபடி நின்றாள் மரகதம்.

    புவனா, கடல் கடந்து எங்களை பிரிஞ்சு உன்னால அவ்வளவு தூரத்தில் இருக்க முடியுமா?

    அவள் குரலில் மகளை பிரியப் போகிற ஏக்கம் தெரிந்தது.

    என்னம்மா இது, இதைப் போய் பெரிசா நினைக்கிறே. நினைச்சா நீ புறப்பட்டு வா. உங்களைப் பார்க்கணும்னு தோணினா. நான் உடனே புறப்பட்டு வரேன்.

    அப்பாவைப் போலவே மகளும் சொல்ல, மரகதமும் சம்மதம் தெரிவித்தாள்.

    ஊரை கூட்டி பிரம்மாண்டமாக மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினார் வெங்கடாஜலம். அவர் அண்ணன், குடும்பத்தின் மூத்த உறுப்பினர் கணபதியின் தலைமையில் திருமணம் நல்லவிதமாக நடந்தேறியது.

    புவனா, உன் அப்பா ஒரே மகள்னு, உன்னை எந்த கஷ்டமும் தெரியாம, அதிகம் செல்லம் கொடுத்து வளர்த்துட்டான். நீ இப்பதான் உன் குடும்பத்தில் காலடி எடுத்து வைக்கிறே. பொறுப்பான மனைவியாக, உன் கணவன் முகம் கோணாமல் நடந்துக்கணும். அடக்கமும், அன்பும் இருந்தா ஒரு பெண்ணால நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பி. இந்த பெரியப்பாவோட ஆசீர்வாதம் என்னைக்கும் உனக்கு இருக்கு.

    தம்பி மகளை வாழ்த்தினார்.

    மகள் அமெரிக்காவில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாள் என்று வெங்கடாஜலமும், மரகதமும் நிம்மதியாக இருக்க, இரண்டு நாட்கள் முன், எந்தவித தகவலுமில்லாமல் இந்தியா வந்து இறங்கினாள் புவனா. திருமணம் முடிந்து அமெரிக்கா போய் முழுசாக

    Enjoying the preview?
    Page 1 of 1