Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaasamilla Malarithu Vasanthathai Thediyathu
Vaasamilla Malarithu Vasanthathai Thediyathu
Vaasamilla Malarithu Vasanthathai Thediyathu
Ebook145 pages30 minutes

Vaasamilla Malarithu Vasanthathai Thediyathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Vijaya Chandran
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466961
Vaasamilla Malarithu Vasanthathai Thediyathu

Read more from Vijaya Chandran

Related to Vaasamilla Malarithu Vasanthathai Thediyathu

Related ebooks

Related categories

Reviews for Vaasamilla Malarithu Vasanthathai Thediyathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaasamilla Malarithu Vasanthathai Thediyathu - Vijaya Chandran

    1

    மாலை நேரம் வந்த உறவினர்கள் எல்லாமே போய்விட்டார்கள் வீடு விரிச்சோடி இருந்தது. உமாவின் கணவர் கிருபாகரன் போட்டோ முன் நின்று அழுதுக் கொண்டிருந்தார்கள்.

    ஐயோ ராசா என்னை விட்டுப் போயிட்டியே? நான் எப்படி குழந்தைகளை வைச்சு காப்பாத்தட்டும் என மனக்கவலைகளைச் சொல்லி அழுதுகொண்டிருந்தாள்.

    உமா அவர்தான் அல்ப ஆயுசில் போயிட்டார் உனக்கு பூவும் பொட்டும் கொடுத்து வைக்களை அழதா மட்டும் மாண்டவர் திரும்பியா வரப்போகிறார் மனதை தேத்திக்க. நீ அழுதா குழந்தைங்க பிஞ்சு மனது பாதிக்கும் போய் சாப்பிடு. உன்னால் குழந்தைகளும் சாப்பிடலை என்றாள் அம்மா சிவகாமி.

    மாமியார் சிவமணி எதுவும் பேசாமல் உட்காருந்திருந்தாள் மாமானாரும் அழுதுக் கொண்டிருந்தார். சிவகாமி ஆறுதல் சொல்லி எல்லாருக்கும் டிபன் பறிமாறினாள்.

    உமா மட்டும் சாப்பிட மனமில்லாமல் உட்காந்திருந்தாள்.

    உமா சாப்பிடு குழந்தைங்க உன் வாயைப் பார்க்குதல்ல பாவம்,

    உமா ஒன்றும் பேசவில்லை

    வாய் பேசமாட்டியாடி

    பேசாமல் என்னம்மா

    இனிமேல் குழந்தைகளுக்காக நீ மனதை திடப்படுத்திக்க மனதை கல்லாக்கிக் கொண்டு வாழப்பழகு குழந்தைகள் எதிர்காலம் முக்கியம் என்று உன் நினைப்பு இருக்கணும்.

    சரிங்கம்மா

    டிபன் குழந்தைகளுக்கு ஊட்டினாள் அவளும் சாப்பிட்டாள்.

    அம்மா அப்பா சாமியா போயிட்டாரா அதனால் கண்ணாடி பிரேமுக்குள் இருக்காரா குழந்தைகள் கேட்டனர். எப்பம்மா எங்களைப் பார்க்க வருவார் அப்பா,

    அடுத்த மாதம் வருவார்,

    இளம் - பிஞ்சு மனதுக்கு - புரியாததால் அம்மா சொன்னதை ஏற்றுக் கொண்டது.

    கனிஷ்கா, அம்மா பொய் சொல்றாங்க என்றான் சுந்தர்.

    இல்லைண்ணா? வருவார்

    செத்துப்போனவங்க எப்படி வருவாங்க அம்மா பொய் சொல்றாங்க கனிஷ்கா,

    அண்ணா அம்மா பொய் சொல்லாது,

    சுந்தர் பேசாம படுடா காலையில் பேசுங்க

    அம்மா அதட்ட -

    போய் படுத்துக் கொண்டார்கள்.

    உமா மட்டும் கவலையாய் போட்டோவை பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

    எல்லோரும் ஆறுதல் கூறி படுக்க வைத்தனர்

    தூக்கம் வரவில்லை புரண்டு படுத்தபடியே இந்த உமா வெகுநேரம் கழித்து தூங்கிவிட்டாள்.

    விடிந்தது.

    சிவகாமி காபி போட்டுக்கொண்டு எழுப்பினாள்,

    எழுந்தாள் உமா முகம் அலம்பி காபியை வாங்கி சாப்பிட்டாள்.

    உமா நான் ஊருக்குப் போகனும் வந்து இருபது நாளாயிடுச்சு ஆடு, மாடு எல்லாம் எப்படி மேய்க்குறாங்களோ? தெரியலை போய்ப்பார்க்கிறேன்.

    அம்மா உன்கூடவே வர்றேன் என் குழந்தைகளைப் பார்த்துக்கம்மா நான் வேலைக்குப் போய் எப்படியும் காப்பாற்றி விடுவேன்.

    நீ பிறந்த இடத்தில் வாழ்கிறது பெருமை அல்ல புகுந்த வீட்டில் வாழறதுதான் பெருமை. அங்கே உன் அண்ணன் அண்ணியின் ஆட்சியில் சிக்கி கஷ்டப்படுகிறான் உன். தங்கை உஷாவை கரை சேர்க்கனும் அதற்கே சிரமப்படுகிறான் புகுந்த வீட்டிலேயே காலம் தள்ளுவது பெருமை ஒரு பெண்ணுக்கு அழகு,

    அம்மா இங்கே இருக்க முடியாது என் கணவர் இருக்கும் போது நல்ல சேலைகட்டினா? தலை நிறைய பூவை வைச்சா? தெரிந்த ஆண்களுடன் பேசினா? பிடிக்காது உடனே சந்தேகப்புத்தியில் பேசுவாங்க மாமியார் இராட்சசி.

    உமா கொஞ்ச நாளைக்கு இரு எப்படி பார்க்கிறார் மாமியார் என்று பார்ப்போம். அதற்கு மேல் நல்ல முடிவாக எடுப்போம்.

    அரை குறையாக தலையாட்டினாள்.

    சிவகாமி சம்பந்தியிடம் நிறைய புத்தி சொல்லவிட்டு கிளம்பினாள்.

    பேத்தியும் பேரனும் நீங்க போகாதீங்க என்று அழது அடம்பிடித்தது அதைச் சமாளித்துப் போனாள். பெரும் பாடாகிவிட்டது.

    சுந்தரையும் கனிஷ்காவையும் பள்ளிக்கு அனுப்ப குளித்துவிட்டு தலைவாரிக் கொண்டிருந்தாள்.

    உமா இங்கிலிஸ் மீடியத்துக்கெல்லாம் பணம் கட்ட முடியாது, அரசுப் பள்ளியில் பார்த்து சேர்த்துவிடு அடுத்த வருடம்.

    ஏங்க அத்தை குழந்தைங்க எதிர்காலம் நல்லாயிருக்க அங்கேதான் படிக்க வைக்கணும்.

    பணம் கொட்டிகிடக்கா?

    நான் சம்பாதிச்சு படிக்க வைப்பேன்

    நீ பெரிய கலெக்டர் வேலை பார்க்கிறே பீஸ்கட்டி படிக்கவைச்சிடுவே?

    என்னால் முடியும். நான் பட்டதாரி எங்கோ ஒரு வேலைக்குப் போய் படிக்க வைப்பேன் இதை யாராலும் தடுக்க முடியாதுங்க அத்தை,

    படிக்கவைப்பே? பார்க்கலாம்,

    ஆட்டோ வந்தது குழந்தைகளை ஏற்றிவிட்டு வந்தாள்.

    கணவர் கண்ணாடி பிரேமில் சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்து மாமியார் சிவமணி அங்கு வந்தாள்!

    உன் இராமாயணத்தை ஆரம்பிச்சுட்டியா? மாமனார் வந்தார். சிவமணி கணவன் இறந்து ஒரு மாதம் கூட ஆகலை ஆசாபாசம் மறந்து போகுமா? அவங்க அவங்க வாழ்ந்த வாழ்க்கை அப்படி, நீ சும்மா கத்தாதே உமாவை,

    நான் பேசினா கத்துகிற மாதிரி தெரியுதா உங்களுக்கு எப்பவும் மருமகளுக்கு வக்காலத்து வாங்குகிறவர்தானே நீங்க.

    ஆமா அப்படியே வைச்சுக்க, என்று கூறிவிட்டு வேலைக்கு கிளம்பினாள்.

    உமா எதுவும் பேசவில்லை.

    உமா?

    என்னங்க அத்தை.

    நாளையிலேயிருந்து வயல் வேலைக்குப் போ தினமும் இருநூற்றி ஐம்பது ரூபாய் கிடைக்கும்,

    எனக்கு அந்த வேலை தெரியாதே?

    இல்லை உன் கணவன் போன வேலைக்குப் போகமுடியுமா?

    அத்தை அவரோட படிப்பு என்ன? திறமை என்ன?

    கணக்கு வழக்கை கரைச்சுக்குடிச்சவர். நிறைய திறமை கணக்கு நிறைய கடைகளில் எழுதியே பணம் சம்பாதித்தவர் முடியுமா? என்னால்.

    அதனால் தான் விவசாய வேலைக்குப் போகச் சொல்கிறேன்.

    அத்தை எனக்குத் தகுந்த வேலை நிறைய இருக்கு ஏதாவது ஒரு வேலை கிடைக்காமலா போயிடும்.

    அடி நீ இருக்கிற அழகுக்கு உனக்கு வேலையெல்லாம் கொடுப்பான். உனக்கு வேலை கொடுத்து அப்படியே வைச்சுக்குவான்.

    மாமியாரின் வார்த்தை புரியவில்லை கொஞ்சநேரம் யோசித்தவள் புரிந்துக் கொண்டாள் வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்று,

    ஊசி குத்தவிடும் வார்த்தையால் அப்படியே? துடித்துப்போனாள்

    அத்தை நீங்க பேசறது எனக்கு பிடிக்கலை?

    என்னடி உண்மையைத்தான் சொன்னேன் நீ வாழ வேண்டிய வயசில் உன்னோட கிரகம் என் மகன் போய் சேர்ந்திட்டான் உனக்கு ஆசாபாங்களை எத்தனை நாளைக்கு முட்டை கட்டி வைச்சிருப்பே தப்பு பண்ணச் சொல்லும் அப்படியே? அவனோடவே குடும்பம் நடத்தச் சொல்லும் என்ன நாட்டில் இதெல்லாம் நடக்கிறதுதானே? தினமும் பார்க்கிறேன்..

    அத்தை எப்ப என் கணவர் என்னை விட்டுப் போனாரோ? என் தாலியை அறுத்து அவரது காலில் கட்டினனோ? அப்பவே என்னோட ஆசா பாசங்களையும் அவரோட காலிலேயே கட்டிட்டேன்.

    என் குழந்தைகளுக்காக நான் எந்த ஒரு தவறான செயலுக்கும் போகமாட்டேன்னு அப்பவே மனதிலே சத்தியம் செய்துக் கொண்டேன். குழந்தைகளை நல்ல முறையா வளர்க்கனும் எதிர்காலம் முக்கியம் அதையும் வளர்க்கனும் எதிர்காலம் முக்கியம் அதையும், இதையும் சொல்லி கலங்காத மனதை கல்லெடுத்து வீசி கலங்கவைச்சுடாதீங்க,

    இந்த மாதிரி பேசுவாங்க, ஆனால் செயல் வேற மாதிரி இருக்கும். என் பேச்சைக் கேளு.

    அத்தை உங்க சந்தேகப்புத்தி, எனக்குப் பிடிக்கலை நான் எங்கம்மாகிட்டப்போய் அங்கேயே குழந்தைகளை வளர்த்து வாழ்ந்து காட்டுகிறேன்.

    அங்கேயே? நாறிக்கிடக்கு நீயும் சேர்ந்து நாறப் போறியாக்கும்.

    அங்கே நான் போகலை அவங்க எனக்கு ஒரு பாதுகாப்பாக இருந்தால் போதும் நான் எப்படியும் உழைத்து குழந்தைகளை காப்பாற்றி விடுவேன்.

    என் பெயர் கெடும் என் பையனோட பெயர் அடிபடும் இங்கேயே இருந்து வாழ்ந்து காட்டு.

    முடியாதுங்க அத்தை?

    ஏன்?

    உங்களோட சந்தேகப்புத்தி என்னைக் கொன்றுவிடும்.

    என்ன நாட்டில் நடக்கிறதைச் சொன்னேன்,

    நான் உங்கக்கிட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1