Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thayin Madiyil
Thayin Madiyil
Thayin Madiyil
Ebook142 pages52 minutes

Thayin Madiyil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Vijaya Chandran
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466954
Thayin Madiyil

Read more from Vijaya Chandran

Related to Thayin Madiyil

Related ebooks

Related categories

Reviews for Thayin Madiyil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thayin Madiyil - Vijaya Chandran

    1

    அருகில் உள்ள வரதராஜப் பெருமாள் சன்னதியில் சுப்ரபாதம் ஒலித்தது அதைக்கேட்டு பங்கஜம் எழுந்தாள். கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தாள் மணி ஐந்து. காலைக்கடன்களை முடித்து பூஜை அறையில் பூஜை முடித்து வெளியே வந்தாள் மணி ஆறு.

    போர்டிகோவிற்கு வந்தாள் தென்றலில் தவழ்ந்து வந்த காலைநேர இளங்காற்று மனதிற்கு இதமாக இருந்தது அப்டியே கொஞ்சம் நடந்தாள் சுகமாக இருந்தது.

    சங்கரின் அறைக்கு வந்தாள் இதமான குறட்டை சத்தும் வந்தது.

    சங்கர் எழுந்திருப்பா மணி ஆயிடுச்சு......

    அம்மா சனிக்கிழமை லீவுதானே கொஞ்ச நேரம் தூங்கறேன்ம்மா. என்று பெட்ஷீட்டை இழத்து முடினான்.

    சங்கர் இன்றைக்கு சனிக்கிழமை மறந்திட்டியா?

    ஆமாம்மா என்று எழுந்தான்.

    எழுந்து குளித்து பைக்கை எடுத்து அம்மா போயிட்டுவர்றேன் என்று கிளம்பினான்.

    டேய் காபி

    அப்புறமா குடிக்கிறேன்ம்மா,

    சரி போயிட்டு வாப்பா.

    கோவிலுக்குப் போனான் காலை நேரம் சனிக்கிழமை அல்லவா கூட்டம் அதிகம் என்று ஐம்பது ரூபாய் டிக்கட் எடுத்து தரிசனம் முடித்து கையில் மஞ்சளும் துளசியாய் வந்தான். பிரகாரத்தைச் சுற்றி மற்ற துணை தெய்வங்களை சுற்றி வந்து கோவில் முன்பு அமர்ந்தான்.

    ஹாலோ சங்கர்

    பெண்ணின் குரல் கேட்டுத் திரும்பினான்.

    அவனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் வினயா கோவிலுக்கு வந்தீங்களா?

    பார்த்தா எப்படித் தெரிகிறது.

    நம் மரபு வார்த்தை அதுதானே கேட்டேன்

    ஆமாம்

    வாரம் வாரம் வருவீங்களா சங்கர்.

    எங்கப்பா பெருமாள் மீது பக்தி அதிகம் அவரோட வழியில் அவரோட மறைவுக்கு பிறகு நான் வர்றேன்.

    அப்ப ஆன்மீகத்தில் ஈடுபாடு

    அப்படியே வைச்சுக்க.... நீயும் வருவியா?

    மாதத்தில் ஒருவாரம் வருவேன் மற்ற மூன்று வாரமும் பல தெய்வ சன்னதிக்குப் போவேன்.

    அப்ப நீ ஆன்மிகவாதி தானே?

    ஆமாங்க மனதுக்கு ஆறுதல் நிம்மதியைத் தேடி வரும் ஒரே இடம் தெய்வசன்னதி தானே?

    ஆமாம் வினயா. உட்காந்திருந்த சங்கர் எழுந்தான்.

    போறீங்களா,

    ஆமாம் நேரமாச்சு....

    கொஞ்சம் உங்களிடம் பேசணும் பேசலாம்.

    அவள் எதையோ? ஆபிஸ் விஷயமாக பேசுவாள் என்று சம்மதம் தெரிவித்தான்..

    அவனுடைய அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த ஒன்றரை ஆண்டாக அவனுடைய அழகு அடக்கம், பணிவு எல்லாமே பிடித்துப் போனதால் ஒரு தலைப்பட்சமாக காதலித்தாள் இன்று தெய்வ சன்னதி முன் தன் காதலை வெளிப்படுத்த நல்ல நேரம் அதற்கு கொடுத்து வைச்சிருக்கு என மனதில் உள்ளதை கொட்டிவிட வேண்டும் என்று நினைத்தாள்.

    என்ன வினயா? பேசனும் என்று சொன்னே அமைதியாயிட்டே?

    ஒன்றும் இல்லை என்று சமாளித்தாள்.

    சரி நான் புறப்படட்டுமா?

    பேசுவோம் சங்கர்

    இருவரும் எழுந்து நடந்தார்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தன குளக்கரை தாதர்கள் மடம் தாண்டி ஒரு புங்கை மரத்தடியில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் எதிர் எதிரே அமர்தனர்.

    வினயா சங்கரைப் பார்த்தாள். .

    சொல்லு

    ஐலவ்யூ..

    இந்த வார்த்தையைக் கேட்டவன் ஆடிப்போனான்

    வினயா தமிழில் இது தான் எனக்குப் பிடிக்காத வார்த்தை.

    வினயா இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவனா பெண்களை துரத்திக் காதலிக்கும் ஆண்கள் மத்தியில் இவன் ஒரு மகனா என்று நினைத்தாள்.

    தன்னை ஆசுவாத்ப் படுத்திக் கொண்டான்.

    எனக்கு காதல் மேல் ஈர்ப்பு இல்லை என் அம்மா பார்த்து இந்தப் பெண் உனக்கு ஏற்றவள் என்று சொன்னா? நான் தாலிகட்டி மனைவியா? ஏற்றுக்குவேன்.

    உங்களுக்கு என்று சுய கௌரவம் இல்லையா

    இருக்கு ஆனா எனக்கு அப்பா அம்மா முக்கியம் அப்பா போன பிறகு அம்மா முக்கியம் என்னை விரும்பினது சரி என் அம்மா கிட்ட உன்னோட அம்மா அப்பாவை அனுப்பி முறைப்படி பேசச் சொல்லு சம்மதப்பட்டால் நான் உன் ஆசையை நிறைவேற்றுகிறேன்.

    இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு ஆண் என்று பெருமைப்பட்டாலும் மறுமுறை இவனெல்லாம் ஒரு மகனா என்று கோபம் வந்தது.

    சரி வினயா வருகிறேன்

    போயிட்டு வாங்க

    நடந்தவனை மறையும் வரை பார்த்து நின்று ஸ்கூட்டியை எடுத்து கிளம்பினாள்.

    வீட்டிற்கு வந்தான் அம்மா அடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்தது அவனும் போய் உதவி செய்தான்.

    இருவரும் சாப்பிட்டார்கள்.

    அம்மா?

    என்ன சங்கர்

    ஆஸ்பிடல் செக்கப் பண்ண போகனுமே? மறந்திட்டீங்களா?

    ஆமாப்பா?

    நானும் மறந்திட்டேன் தேதியைக் காலையில் பார்த்த பிறகு தான் ஞாபகம் வந்தது

    போகலாமல்ல?.

    போகலாம் சாப்பிடாமல் சுகர் டெஸ்ட் சாப்பிட்ட பிறகு ஒரு டெஸ்ட் எடுக்கனும் சாப்பிட்டுட்டியே எப்படிம்மா போக முடியும் நாளைக்குப் போகலாம்.

    ஞாயிற்றுக்கிழமை டாக்டர் இருப்பாரா?

    அரை நாள் இருப்பாரம்மா?

    சரி நாளைக்கே போகலாம்.

    காலை டிபனை சாப்பிட்டு தொலைக்காட்சி முன்பு அமர்ந்தான்.

    சங்கரின் அருகில் வந்து அமர்ந்தாள்.

    சங்கர்

    என்னங்கம்மா?

    நம்ப குடும்ப ஜோதிடர் கிட்ட உன்னுடைய ஜாதகத்தைப் பார்த்தேன் இந்த வருடம் குருபலன் வந்திருக்காம் என்னால் வேலை செய்ய முடியலை அதனால் உனக்கு திருமணம் செய்யலாம் என்கிற முடிவில் இருக்கேன்.

    அம்மா உங்க விருப்பம் என் விருப்பம் நான் உங்க பேச்சைமீறினது உண்டாம்மா.

    சரி தேடறேன்

    அம்மா ஒரு கண்டிசன்

    என்னப்பா சொல்லு.

    படித்த பெண்ணாக இருக்கணும் வசதியில்லாத குடும்பப் பெண்ணாக இருக்கணும். வேலைக்குப் போகாத பெண்ணாக இருக்கணும். உங்களை முடியாத காலத்தில் பெற்ற அம்மாவாக நினைத்து கவனிக்கிற பெண்ணாக இருக்கனும்.

    ஏப்பா உன் கண்டிசன் நியாயமானது தான் இந்தக் காலத்தில் பெண்கள் ஆண்களை விட நன்றாக படிக்க வைச்சிடறாங்க. படித்த மாப்பிள்ளையா அரசு உத்யோக நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறாங்க என் மகள் பிறந்த இடத்தில் எப்படி இருந்தாலும் புகுந்த வீட்டில் சொகுசாக வாழனும் கஷ்டப்படாமல் வாழனும். என்று உன்கிட்ட அவங்க எதிர்பார்க்கிற தகுதிகள் இருக்கு அதனால் நல்ல சம்பந்தம் தேடி வரும் அதை ஏப்பர் வேண்டாங்கிற?. என்னைப்பற்றி கவலையின்றி உன் வாழ்க்கை நன்றாக இருக்கனும் அதைப் பாருப்பா?

    அம்மா வயதான காலத்தில் பெற்றவங்களை கவனக்கிறது ஒரு புண்ணியம் எனக்குப் பிடித்த மாதிரி பாருங்கம்மா,

    சரி உன் விருப்பமே எனக்கும் சங்கர் நாம நினைக்குற மாதிரியே? வாழ்க்கையில் எல்லாமே? நடந்திட்டா வாழ்க்கை சுவைக்காது போராடி வாழ்க்கையில் ஜெயிக்கிறது தான் வாழ்க்கை அப்புறம் இப்படித்தான் உன் வாழ்க்கை என்று ஆண்டவன் தலையில் எழுதியிருக்கானோ அது நடந்தேதீரும்.

    அம்மாவின் பேச்சு நிறைய யோசிக்க வைத்தது.

    அப்படியே சிறிய குழந்தை போல் அம்மா மடி மீது சாய்ந்தான்.

    ஞாயிற்றுக்கிழமை டாக்டரிடம் அம்மாவை அழைத்து போய் செக்கப் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தான் மதியம் பன்ரெண்டு மணி ஆனது.

    அலைபேசி ஒலித்தது..

    எடுத்தாள்.

    வணக்கம் பங்கஜம் அம்மாதானே?

    ஆமாங்க நான் தரகர் சுந்தரராமன் பேசறேன்

    சொல்லுங்க..

    உங்க பையனுக்கு வரன் வேண்டும் என்று உங்க குடும்ப நண்பர் ரங்கநாதன் சொன்னார். உங்க வீட்டிற்கு வர்றேன். ஏற்ற ஜாதகத்துடன்

    வாங்கய்யா? வீடு தெரியுமா?

    ரங்கநாதன் சொல்லியிருக்கார்

    வீட்டிலேதான் இருக்கேன் வாங்க..

    போனை ஆப்பண்ணி சோபாவில் உட்காந்தாள் பங்கஜம்.

    சங்கர் பேசினதைக் கேட்டியா?

    கேட்டேன்ம்மா எல்லாமே மின்னல் வேகம் தான்

    எனக்கும் மருமகள் கையில் சாப்பிடனும் பேரப்பிள்ளைகளை கொஞ்சனும் என்கிற ஆசை இருக்காதாப்பா

    அவன் சிரித்தான்.

    அம்மா ரெஸ்ட் எடுங்க. நான் லைப்ரரி வர போயிட்டு வந்திடறேன்.

    டேய் தரகர் வருகிற நேரம் போறியோ என்று அம்மாவின் தாடையைத் தொட்டு விட்டு வெளியே போனான்.

    மகன் என் மீது உள்ள பாசம் எப்பவும் இப்படியே இருக்கணும் என்றால் எனக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1