Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalagi
Kaadhalagi
Kaadhalagi
Ebook133 pages56 minutes

Kaadhalagi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“மிரட்டல் நாட்கள்", தலைப்பை போலவே நிஜத்திலும் நடந்த ஒரு அனுபவம். “எனக்கு மட்டும் உறக்கம் இல்லை“ சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த, அறிவு மிகுந்த பெண்ணின் எச்சரிக்கை உணர்வை புரியாத தலைவர் பற்றிய கதை. எஸ் எஸ் எல் சி தேர்வு முடிவும் மாற்றமும் தூத்துக்குடி நண்பர் வாழ்வில் நிகழ்ந்த நிஜம்.(நேற்றைய கனவுகள் ) நம்மை சுற்றி நிறைய நடக்கும் போது, கேட்கும் போது எழுதாமல் இருக்க முடியவில்லை. நகைச்சுவை உணர்வும் உள்ளதால் சோகம் கூட சுகம் ஆகிறது. இலக்கிய பயணம் தொடர தமிழ் கடவுள் வழி காட்ட வேண்டும்.

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580169110879
Kaadhalagi

Related to Kaadhalagi

Related ebooks

Reviews for Kaadhalagi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalagi - Na. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதலாகி

    (சிறுகதை தொகுப்பு)

    Kaadhalagi

    Author:

    நா. நாகராஜன்

    Na. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/na-nagarajan

    பொருளடக்கம்

    கதைகள் பற்றி

    சொல்லாத காதல்

    அச்சில் வராத கதைகள்

    அன்பில் ஆளும் அம்மா

    எனக்கு மட்டும் உறக்கம் இல்லை

    காதலாகி

    காதலே நிம்மதி

    காதல் பொய்கள்

    கனவில் ஒருத்தி

    நேற்றைய கனவுகள்

    புதிய கனவுகள்

    போகி

    மிரட்டல் நாட்கள்

    வாழ வந்தான்

    கடைசி அத்தியாயம்

    கதைகள் பற்றி

    புஸ்தகா வில் என் இரண்டாவது சிறுகதை தொகுப்பு.

    மிரட்டல் நாட்கள் , தலைப்பை போலவே நிஜத்திலும் நடந்த ஒரு அனுபவம்.

    எனக்கு மட்டும் உறக்கம் இல்லை சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த, அறிவு மிகுந்த பெண்ணின் எச்சரிக்கை உணர்வை புரியாத தலைவர் பற்றிய கதை.

    எஸ் எஸ் எல் சி தேர்வு முடிவும் மாற்றமும் தூத்துக்குடி நண்பர் வாழ்வில் நிகழ்ந்த நிஜம்.(நேற்றைய கனவுகள் )

    நம்மை சுற்றி நிறைய நடக்கும் போது, கேட்கும் போது எழுதாமல் இருக்க முடியவில்லை.

    நகைச்சுவை உணர்வும் உள்ளதால் சோகம் கூட சுகம் ஆகிறது.

    இலக்கிய பயணம் தொடர தமிழ் கடவுள் வழி காட்ட வேண்டும்.

    என்றும் அன்புடன்,

    நா. நாகராஜன்,

    ஊரப்பாக்கம், சென்னை.

    கைபேசி :8778935252.

    சொல்லாத காதல்

    அம்மாவுக்கு சங்கரை ரொம்ப பிடிக்கும். வாரியார் சுவாமிகள் சொல்வது மாதிரி மூத்த பிள்ளை தான் மலடி இல்லை என்று நீரூபிக்க வந்தவன் என்கிற மாதிரி. அவனது இயற்கை ஆர்வமும் பணத்தின் மேல் அதிக பற்று இல்லாததும் அவள் வெள்ளை மனதிற்கு பிடித்து இருந்தது. வெளிப்படையாக பேசுவான் பிறர் மனம் புண்படாமல்.

    ஸ்ரீகாந்த் இதற்கு நேர் எதிர். அப்பாவுக்கு அவனைத் தான் ரொம்ப பிடிக்கும்.

    பி.இ மெக்கானிக்கல் படித்து, சிவில் நண்பருடன் சேர்ந்து, கட்டுமானப் பணிகளில் பெரிய அளவில் ஈடுபட்டு, மாநிலத்தின் பெரிய கோடீஸ்வரனாக பெயர் எடுக்க ஆசைப்படுபவன்.

    வாரியார் சொன்ன மாதிரி, கடைசி பிள்ளை, பத்து வருட இடைவெளியில் பிறந்தாலும், தான் இன்னும் ஆம்பளை என்று நீரூபிக்க வந்தவன் என்று அவருக்கு அவன் மேல் பாசம். அளவுக்கு மீறிய செல்லம்.

    டெல்லியில் நடந்த இயற்கை உரம் மாநாடுஒன்றிற்காக சங்கர் வந்த போது, அம்மா வின் உடல் நிலை சீரியல் ஆனது.

    அவனுக்கு தகவல் இல்லை.

    இதய வால்வு ஒன்று செயல்படாமல் போக, அறுபது தாண்டியவளுக்கு எதற்கு இத்தனை செலவு என்று சின்ன ஆஸ்பத்திரி யில், குறைந்த விலை வால்வு பொருத்தப்பட, உடல் ஏற்றுக் கொள்ளாததால் மரணம்.

    அப்பா உடைந்து போனார். சங்கர் எப்படி இதை தாங்கிக் கொள்ளப் போகிறான் என்ற கவலை வேறு.

    அவனுக்கு சொல்லாமல் காரியம் நடந்தது.

    அம்மா, ஒரு ஜோக்கை கேளேன்என்று சிரித்தபடி நுழைந்தவன், பத்து நாட்கள், டூர், மீட்டிங் என்று கழித்து, சப்பாத்தி, பிடிக்காமல், அம்மா கையால், வத்தக் குழம்பும் உருளைக் கிழங்கு காரக் கறியும் சாப்பிடலாம். தாஜ்மஹால் பற்றி பேசலாம் என்று வந்தவனை தலை குனிந்து அப்பா தான் வரவேற்றார் கண்ணீருடன்.

    அம்மா எங்கப்பா. தூங்கறாங்களா? நான் இன்னிக்கு வர்ரேன்னு தெரிஞ்சுமா?

    இனிமே அம்மா வரமாட்டா சங்கர். உன் ஆசையான பயணம், பல நாள் கனவு தடை பட்டுடக் கூடாதுன்னு தான் அம்மா இறப்பை உனக்கு சொல்லலை

    அப்பா அம்மாவை விட அந்த கூட்டம் எனக்கு முக்கியம்னு எப்படி நீங்க நம்பினீங்க. உலகத்துல எனக்கு அம்மாவைத்தான் ரொம்ப பிடிக்கும். கடைசில முகத்தை கூட பார்க்க விடாமல் பண்ணிட்டீங்களே. இது யார் வேலை. நான் தானே காரியம் செய்யணும். எப்படி இறந்த... காலமானாங்க

    வழக்கமாக வரும் நெஞ்சு வலி. மூன்று அடைப்பாம் இதயத்தில். செயற்கை வால்வு பொருந்தலை

    எங்க ஆப்பரேஷன். வழக்கமாக அட்டென்ட் பண்ணற சதாசிவம் டாக்டர் தானா?

    என்னப்பா, குற்றவாளி மாதிரி ஆயிரம் கேள்வி. உனக்கு அம்மா ஆறதுக்கு முன்னாள் அவள் என் அன்பு மனைவி

    சங்கர் நம்பாமல் பார்த்தான். ரொம்ப உடைந்து விட்டான் அந்த இழப்பில்.தம்பி கூட அத்தனை பாதிக்கப் பட்டதாக தெரியவில்லை.

    சங்கர், தாஜ்மஹால் எப்படி?பார்க்க தனியாகத் தான் போறியா?இல்லே, டில்லி மும்பை பெண்கள் கூடவா?

    ஒரு சமாதியைப் பார்த்து வரதுக்குள்ளே என் அம்மாவுக்கு சமாதி கட்டடிட்டீங்களே

    ஹலோ அவங்க எங்களுக்கும் அம்மா

    நான் மூத்தவன். என் கிட்டே ஒரு வார்த்தை சொல்லாமல்

    சொல்லிட்டாலும். இந்த வருடக் கடைசி க்றிஸ்துமஸ் டயத்தில் ஐம்பதாயிரம் கொடுத்து பறந்து வருவீங்களா? இடம் கிடைக்குமா?ஸ்ரீகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக வில்லனாகிறான். ரிடயர் வயது வந்ததும் அவன் துடிப்புக்கும், துணிச்சலுக்கும் முன் அப்பா அதிகம் பேசுவதில்லை.

    அம்மா மட்டும் தான் இந்த பெரிய வீட்டின் ஒரே ஆதரவு. அவளுக்கு எல்லாரும் ஒன்று தான். வேலைக்காரி, சமையல்காரர் பையனுக்கு கூட படிக்க உதவி செய்வாள்.

    காலம் முழுக்க அவன் கஷ்டப்பட மாட்டான் சங்கர் என்பாள் அவன் தலையைக் கலைத்தபடி.

    அந்த மனிதமும், அன்பும் போன பின் வீடு,வட்டிக் கடை மாதிரி ஆகி விட்டது அவனுக்கு. மாதம் முதல் தேதி ஒரு நோட்டில் அவன் சம்பளத்தை வரவு வைப்பதும், ஸ்ரீகாந்த் பிசினசிற்கு அவர் கணக்கில் இருந்து பணம் தருவதும்.

    பணம் ஒன்றையே அப்பா, ஸ்ரீகாந்த் முக்கியமாக கருத,சங்கர் அம்மா அன்புக்கு ஏங்கினான்.

    ஒன்று விட்ட அத்தை மகள் ஜனனி மட்டும் அவனிடம் உண்மை யான அன்புடன் பழகினாள்.

    சங்கர். நான் சொல்றதை, உன் மனசுக்கு உள்ளே வைத்துக்கோ. உன் அம்மாவுக்கு மதுரை மாதிரி பெரிய சிட்டில, நல்ல ஹாஸ்பிடல்ல கோல்டன் அவர்ஸ் னு சொல்ற, நேரத்துக்குள்ள காட்டி, தரமான இதய வால்வு பொருத்தி இருந்தா, விதி இருந்தா, பத்து வருஷம் கூட இருந்து இருப்பாங்க. நீ இல்லாததால் அவர்கள் உன்னிடம் கேட்காமல் ஒரு ரிஸ்க் எடுத்தார்கள். வசதி இல்லேன்னா சரி. இப்போ ஆஞ்சியோவே தேவையில்லை ன்னு பலர் சொல்லற மாதிரி.

    அவள் கையைப் பிடித்து கொண்டான்.எத்தனை அருமை யான, அழகான, அறிவான, அன்பான பெண்.அவளுக்கு அம்மா வையும், அம்மா வுக்கு அவளையும் ரொம்ப பிடிக்கும்.

    அம்மாவுக்கு யாரைத்தான் பிடிக்காது. வெயிலில் காய் விற்று வரும் தள்ளு வண்டிக்காரரிடம் பேரம் பேசாமல் நானூறு ரூபாய்க்கு காய் வாங்கி, பத்து ரூபாய் கொத்தமல்லி தனியே வாங்குவாள்.

    ஸ்ரீகாந்த் கோபிப்பான்.இவங்க வாங்கின காய்கறிக்கு பத்து ரூபாய் கருவேப்பிலை சேர்த்தே அவன் தரணும்.

    அம்மா காய்கறிகாரர் வெயிலில் லேட்டாக வந்தால் மோர் தருவார்.

    ஜனனிக்கு மருதாணி பறித்து, வேலைக்காரியிடம் அரைக்க சொல்லி அம்மாவே அழகாக இட்டு விடுவார்.

    பூஜைக்கு வந்து உட்கார்ந்து பார்க்கும் நாய்க்கு நெற்றியில் பொட்டு வைப்பார்.

    வீட்டு மனுஷா தவிர எல்லா நாய்களையும், அம்மாவுக்கு பிடிக்கும் என்ற ஸ்ரீகாந்தின் பேச்சுக்கு உன்னையும் பிடிக்கும் "என்று ஜனனி சாதாரணமாகச் சொன்னது பெரிய சண்டைக்கு சாக்காகி விட்டது.

    அவளும் அடிக்கடி வராமல் அன்பான பெண்ணின் வாசனையே இல்லாமல் லாட்ஜ் மாதிரி ஆகி விட்டது வீடு.

    வெளியூரில் வேலை தேடி போகலாம் என்றால் அம்மா நினைவு கள் தாங்கி நிற்கும் வீட்டையும், கம்பெனி வாசலில் சந்தித்து நீண்ட நேரம் பேசும் ஜனனியின் சந்தர்ப்பத்திற்காகவும் அவன் யோசனை தடைபட்டது.

    நாளுக்கு நாள் ஸ்ரீகாந்த் ஆட்டம் அதிகமாகி வந்தது.அவனுக்கு பிடித்த வி.எம்.சத்திரம் தோட்டத்தை விற்று, ப்ளாட் போட்டால் கோடிகளில் பணம் புரட்டலாம் என்ற எண்ணத்தை சங்கர் மட்டும் எதிர்த்தான்.

    அந்த மண் வளமானது.மழை பொழியும், நிலத்தடி நீரும், தாமிரவருணி ஓடுவதால் வற்றாத கிணறும் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது.

    "விவசாயத்துல லாபம் இல்லை அண்ணே. சட்டம் மாறலாம். போராட்டங்கள் மாறாது. பத்தாயிரம் செலவு பண்ணி, ஆறு மாசம் கழிச்சு, எட்டாயிரம் பார்க்கறது என்ன பிசினஸ். பணம் அதிகம் போடாமல்

    உடனடியாக நாலு மடங்கு சம்பாதிச்சு, ஆங்கில பத்திரிகை அட்டைல படம் வர வேண்டாமா"

    Enjoying the preview?
    Page 1 of 1