Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaveri
Kaveri
Kaveri
Ebook158 pages1 hour

Kaveri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கையில் பல அனுபவங்களின் நினைவுகள் நீங்காத தடங்களாய் மனதில் நிலைத்துவிடுகின்றன. அவற்றில் பசுமையான நினைவுகளும் உண்டு. அப்போது என் கணவர் திரு. ரமணன் இராஜஸ்தானில் பாக்கிஸ்தான் எல்லையிலுள்ள பார்மீரில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தார்.
தார் பாலைவனத்தின் ஒரு பகுதி அது. முழுவதும் மணல் பிரதேசம். தகிக்கும் வெய்யில். தாங்க முடியாத குளிர். தண்ணீர் கஷ்டம். எங்கோ தொலைதூரத்திலிருந்த கேணியிலிருந்து ஒட்டகத்தின் மீது தோல் பைகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொண்டுவந்து கொட்டுவார்கள். ஒட்டகம் உடம்புக்கு வந்து படுத்துக் கொண்டால் திண்டாட்டம்தான். காவல் துறையினருக்கான குடியிருப்பிலிருந்த கிணற்றிலிருந்து ஒரு மண்பானையில் குடிநீரைத் தினமும் வேலையாள் கொண்டுவருவான். சமையல், சாப்பாடு, விருந்தோம்பல் எல்லாமே அதற்குள் அடங்கவேண்டும், பாம்பும், தேள்களும், எலிகளும் சகவாசிகளாய் எங்களைச் சுற்றிவரும்.
இரவு நேரங்களில் அமைதி படர்ந்து கிடக்கையில் காற்றின் ஓசைகூடப் பயங்கரமாய் ஒலித்து கிலியூட்டும். நாகரீகத்தோடு எங்களை இணைத்த ஒரே போக்குவரத்து தினமும் ஒரு முறை ஜோத்பூருக்குச் சென்ற ரயில்தான்!
அன்றாட வாழ்க்கையில் எழும் கனமான பிரச்சினைகளை நகைச்சுவை உணர்வோடு அணுகிப் பார்ப்போமானால் அவற்றின் பரிமாணம் குறைந்து, லேசாகி, சமாளிப்பது எளிதாகிவிடும் என்பது அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.
- லக்ஷ்மிரமணன்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580125804986
Kaveri

Read more from Lakshmi Ramanan

Related to Kaveri

Related ebooks

Reviews for Kaveri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaveri - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    காவேரி

    Kaveri

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஒரு நாளும் மாமரம் வைக்க வேண்டாம்!

    2. காவேரி என்றாலே...

    3. ஹஹ்ஹா... டிராஸோஃபீலா

    4. மாட்டேன் என்ற மாடு...

    5. ப. ப. சாவி கொத்து

    6. பரங்கி விஷயம்

    7. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!

    8. டாக்டர் பசுபதி

    9. தேவை... ஃபிளாட்டுள்ள ஒரு மணமகன்

    10. தைரியத்தோடு...

    11. பூஜையறையில் புகுந்த குதிரை!

    12. மரியாதைக் குரியவர்!

    13. ஆடு, புலி, குழந்தை

    14. டின்னருக்கு அழைப்பு

    15. யாருக்காகவோ?

    16. பாக்ஸ் ஆபீஸ்

    17. விடுமுறைக்கு எங்கே போகலாம்?

    18. நெய்க்கு அலைந்தோம்!

    19. லேடீஸ் கிளப் திறப்பு விழா!

    20. தலைநகரில் குரங்குகள்

    21. அழகாக இருப்பது எப்படி?

    என்னுரை

    வாழ்க்கையில் பல அனுபவங்களின் நினைவுகள் நீங்காத தடங்களாய் மனதில் நிலைத்துவிடுகின்றன. அவற்றில் பசுமையான நினைவுகளும் உண்டு. அப்போது என் கணவர் திரு. ரமணன் இராஜஸ்தானில் பாக்கிஸ்தான் எல்லையிலுள்ள பார்மீரில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தார்.

    தார் பாலைவனத்தின் ஒரு பகுதி அது. முழுவதும் மணல் பிரதேசம். தகிக்கும் வெய்யில். தாங்க முடியாத குளிர். தண்ணீர் கஷ்டம். எங்கோ தொலைதூரத்திலிருந்த கேணியிலிருந்து ஒட்டகத்தின் மீது தோல் பைகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொண்டுவந்து கொட்டுவார்கள். ஒட்டகம் உடம்புக்கு வந்து படுத்துக் கொண்டால் திண்டாட்டம்தான். காவல் துறையினருக்கான குடியிருப்பிலிருந்த கிணற்றிலிருந்து ஒரு மண்பானையில் குடிநீரைத் தினமும் வேலையாள் கொண்டுவருவான். சமையல், சாப்பாடு, விருந்தோம்பல் எல்லாமே அதற்குள் அடங்கவேண்டும், பாம்பும், தேள்களும், எலிகளும் சகவாசிகளாய் எங்களைச் சுற்றிவரும்.

    இரவு நேரங்களில் அமைதி படர்ந்து கிடக்கையில் காற்றின் ஓசைகூடப் பயங்கரமாய் ஒலித்து கிலியூட்டும். நாகரீகத்தோடு எங்களை இணைத்த ஒரே போக்குவரத்து தினமும் ஒரு முறை ஜோத்பூருக்குச் சென்ற ரயில்தான்!

    அன்றாட வாழ்க்கையில் எழும் கனமான பிரச்சினைகளை நகைச்சுவை உணர்வோடு அணுகிப் பார்ப்போமானால் அவற்றின் பரிமாணம் குறைந்து, லேசாகி, சமாளிப்பது எளிதாகிவிடும் என்பது அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.

    - லக்ஷ்மிரமணன்.

    1. ஒரு நாளும் மாமரம் வைக்க வேண்டாம்!

    'வீட்டுக்கு ஒரு மரம், நாட்டுக்கு ஒரு வனம்' என்பார்கள். வீட்டில் எந்த மரத்தை வேண்டுமானாலும் வையுங்கள்.

    ஆனால் மாமரம் மட்டும் வேண்டாம்!

    அப்புறம் 'மா' பெரும் துயருக்குள்ளான 'கதையை' என்னைப் போல் கண்ணீர் விட்டுச் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்.

    மாங்காய்க்காக எறியப்படும் கற்கள் தலையை, முகத்தை, கையைப் பதம் பார்க்க, மருத்துவமனைக்குப் போய்க் கட்டுப் போட்டுக்கொண்டு 'கட்டழகியாக' மாற வேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு ஏற்படும்!

    மாம்பழம் என்றால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஆந்திராவின் பங்கனபள்ளி, பஞ்சாபின் நீலம், உத்திரப்பிரதேசத்தின் சௌஸா, மகாராஷ்டிரத்தின் அல்ஃபான்ஸோ, டில்லியின் தஸ்ஸேரி, கர்நாடகத்தின் ரஸபூரி, சேலத்தின் குண்டு மாம்பழம் எல்லாவற்றையுமே சுவைத்து ரசித்தவள் நான்.

    வடக்கில் 'லங்கடா' என்கிற ஒரு ரகம் உண்டு. அதன் முதல் மரம், ஒரு மனிதன் சற்றே காலை மடித்து நொண்டி போல் நின்ற வடிவத்தில் இருந்ததாம். அதனால் அந்த ரகப் பழத்துக்கே 'லங்கடா' என்கிற பெயர் சூட்டப்பட்டது.

    முகலாய மன்னர் அக்பர் மாம்பழப் பிரியராம். (என்னை மாதிரி என்று பெருமையாக நான் நினைத்ததுண்டு. இந்திய சரித்திரத்தில் ‘மகா' மன்னர் என்று, பெயரும் சிறப்பும் பெற்றவரின் ஒரு ரசனையாவது எனக்கிருக்கிறதே என்கிற பெருமை).

    எங்கள் வீட்டு மாமரத்தின் வரலாறு சுவாரஸ்யமானது. என் தாத்தா பிரத்யேகமாக எங்கிருந்தோ வாங்கி வந்து நட்ட செடியாம் அது. காய் ஊறுகாய் போடலாம். பழமும் சுவையாக இருக்கும். அது என்ன ரகம் என்று தெரியாது. பக்கத்திலிருந்த குப்பத்துவாசிகள பொழிந்த கல்மழை காரணமாக 'அமிர்தவர்ஷிணி' என்று பெயர் வைத்தோம்! மாங்காய் நிச்சயம் விழும் என்று எதிர்பார்த்துக் கற்களை எறிவார்கள்!

    மாங்காயும் போச்சு?

    நம் தலையும் போச்சு.

    ஜன்னல்களில் கண்ணாடி இருந்தால் அதுவும் போச்சு.

    ஆரம்பத்தில் அந்த மாமரத்தைக் காக்கவே ஓர் ஆள் போட்டிருந்தது. அவன் ஊமையானாலும், படு சுறுசுறுப்பாய்ச் செயல்படுவான். கற்கள் வீட்டுக்குள் வந்து விழுகிற வேகத்திலேயே திரும்பி, ரிவர்ஸில் வந்த திசையில் திரும்பிப் போகும். திரும்பிப் போய் கல் எய்தவர்களையே தாக்கும். அதற்குப் பயந்து கொண்டு தாக்குதல் ஓரிரண்டு சீஸனில் குறைந்திருந்தது.

    அவனுக்கு உடம்பு சரியில்லாமல், ஊரைப் பார்த்துப் போய்விட்டதும் மறுபடியும் தலைவலி துவங்கிவிட்டது. அடித்த மாங்காய்களைச் சேகரிக்க சிறுவர்கள் பட்டாளம் சுவரேறிக் குதித்து வரும்.

    அதைத் தடுக்க, பின் மதிலை உயர்த்திக் கட்டி, அதன் மீது மூன்றடி உயரத்துக்கு முள்வேலியிட்டோம்.

    பயனில்லை!

    வாசல் கேட்டைத் திறந்து கொண்டு சர்வ சுதந்திரமாய் அவர்கள் உள்ளே வந்தார்கள்.

    கேட்டைக் காக்க வாட்ச்மேன் போட்டோம்.

    அவன் காபி சாப்பிடப் போகும் நேரத்தை, தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

    பின்னால் சலசலப்புக் கேட்டாலே, அம்மா புரிந்து கொண்டு கத்துவாள்.

    அடேய் யாராது! ஊரில் உலகத்தில் மாங்காய் திருட வேறு மரமே கிடையாதா? இங்கே வந்து கழுத்தை அறுக்கறீங்களே!

    கவலைப்படாதீங்க மாமி, அங்கேயும் போவோம் என்று ஜன்னல் வழியாக ஒன்று கத்திவிட்டு ஓடும்!

    ஒரு முறை ‘திருட்டுப் பசங்களா!' என்று அம்மா கத்தியது விபரீதத்தில் முடிந்தது.

    என் மகனுக்கு எப்படி நீ திருட்டுப் பட்டம் கட்டுவே? அடிச் செருப்பாலே. ஒரு மாங்காயத் திருடனின் தாயின் பொருமல் இது.

    மாமரத்தை வளர்த்து வெச்சுண்டு என்னாட்டும் இளிச்சவாய் இருந்தால், கல்லாலும் அடிப்பீங்க. இப்படிச் சொல்லாலும் அடிப்பீங்க. இன்னும் செருப்புதான் பாக்கி.

    இன்னா முணுமுணுக்கிறே நீ. தில் இருந்தா சத்தமாப் பேசு. நானும் விடமாட்டேன்.

    கல்லடிச்சு விழுந்த மாங்காயைத் தெரியாமே எடுத்துக்கிட்டுப் போறது திருட்டு இல்லாமே என்னவாம்? இது அம்மா.

    அப்போ எம்புள்ளே திருடனா? நீ திருடி... உன் ஆத்தா, ஆயா எல்லாம் திருடி!

    அம்மா! இவங்களோடு சண்டை போடுகிற அளவுக்கு, உனக்கு மதராஸ் பாஷை ஞானம் இல்லே... அதனாலப் பேசாமே இரு. நான் அடக்குவேன்.

    பகல் நேரத்தில் மட்டும் இன்றி, இரவிலும் மாமரப் பிரச்சினை தொடர்ந்தது.

    இதில் பாதிக்கப்பட்டது, அடுத்த வீட்டு மாமியும்தான்.

    இரவு நேரங்களில் கேட்டை நாங்கள் பூட்டி விடுவோம். ஆனால் அடுத்த வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் நடுவிலிருந்த, குட்டைச் சுவரைத் தாண்டிக் கொண்டு மாங்காய் திருட வருகிறவர்களும் உண்டு.

    அப்படி வருகிறவர்கள் போகிற போக்கில், மாமி வீட்டு வெளிக் குழாயையோ, சாக்கடைக்குப் போடப்படும் இரும்பு மூடியையோ சுருட்டிக் கொண்டு நழுவி விடுகிறார்கள் என்பது மாமியின் புகார்.

    மாமி சுவருக்கருகில் காலை நேரத்தில் வந்து நின்றாள் என்றால், அம்மாவுடன் பேச விரும்புகிறாள் என்று அர்த்தம்.

    விஷயம், நிச்சயம் மாமரம்தான்!

    ஒரு நாள்... மாமரத்தினால் அவர்கள் வீட்டில் பெருகிவிட்ட கட்டெறும்புத் தொல்லையை விவரிப்பாள்.

    இன்னொரு நாள்....மாமரத்தின் மீது முதல்நாள் இரவு இரண்டு குட்டிச் சாத்தான்களைப் பார்த்ததை வர்ணிப்பாள்.

    மரத்துமேலே என்னடா பண்றேன்னா.... தீபாவளிக்கு வாசல்லே தோரணம் கட்ட மாவிலை பறிக்கறேன்னு அசடு வழியறாங்க. ஜூன் மாசத்துலே ஏது தீபாவளி?

    அம்மா யோசனையுடன் சிரிப்பாள். அப்பாவிடம் புகார் சொன்னால், அவர் அதைக் கண்டு கொள்ளவே மாட்டார். காய்க்கிற மரத்தை வெட்டச் சொல்லறியா? அது மகாபாவம் என்பது அவர் வாதம்.

    வேண்டாம் சீஸன் முடிஞ்சதும் வெட்டிடலாம். என்னால் இவங்க தொல்லையைச் சகிச்சுக்க முடியல்லே.

    அப்பா சரி என்பாரே தவிர, அதைப்பற்றிப் பேசுவதையே தவிர்த்து விடுவார்.

    ஒவ்வொரு வருஷமும் மாங்காய் சீஸனில் தொல்லை தாங்க முடியாததாக இருந்தது.

    அதன் கிளைகள் நீண்டு வளர்ந்து, அடுத்த வீட்டுப் பக்கம் சாய, அதில் ஏறி அவர்கள் பால்கனியில் குதித்து, அங்கிருந்து மேல் மாடிக்குப் போய் டெலிவிஷன் ஆன்டென்னாவை யாரோ திருடிக் கொண்டு போய் விட்டார்கள்.

    மாமரத்தை நாம வெட்டாட்டி, அடுத்த வீட்டுக்காரங்க வெட்டிடப் போறங்க. அம்மா அலட்டிக் கொண்டாள்.

    மாமர விஷயமா என்ன முடிவு பண்ணினீங்க? மாமி வேறு, தினம் துளைத்தாள்.

    ஆல்ரைட்... ஆல்ரைட்... நான் பார்த்துக்கறேன்.

    அப்பா அலுத்துப் போய் ஆளை அழைத்தார்.

    மாமரத்தை முழுக்க வெட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1