Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbulla Sandaikozhiye!
Anbulla Sandaikozhiye!
Anbulla Sandaikozhiye!
Ebook177 pages1 hour

Anbulla Sandaikozhiye!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எல்லோருக்கும் சிந்திக்கும் திறனோடு மூளை உண்டென்றால், ஜே.எஸ். ராகவனுக்கு மட்டும் சிரிக்கும் திறனோடு இருக்கும்போல. விபரீதமான, விவகாரமான, அசாதாரணமான சூழ்நிலைகளைக்கூட, நகைச்சுவையோடு விவரிக்கும் அசாத்தியத் திறன் கொண்டது அவரது எழுத்து. அது வெறும் எழுத்தல்ல, கோமா பேஷண்டையும் காமாசோமாவெனச் சிரிக்க வைத்திடும் சக்தி கொண்ட ஹாஸ்ய மந்திரம்.

வயிறு குலுங்கச் சிரித்தல், விழுந்து புரண்டு சிரித்தல், கண்ணில் நீர்வரச் சிரித்தல், சூழ்நிலை மறந்து சிரித்தல், இன்னும் சிரித்தலில் என்னென்ன வகையுண்டோ அத்தனையும் இந்தப் புத்தகத்தில் சாத்தியம்.

அண்ணாநகர் டைம்ஸ், மாம்பலம் டைம்ஸ் ஆகிய பிராந்திய வார இதழ்களில் தொடர்ந்து ஐநூறு வாரங்களுக்கும் மேல் வெளிவந்து கொண்டு இருக்கும் 'தமாஷா வரிகள்' பத்தியின் சமீபத்திய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127204422
Anbulla Sandaikozhiye!

Read more from J.S. Raghavan

Related to Anbulla Sandaikozhiye!

Related ebooks

Related categories

Reviews for Anbulla Sandaikozhiye!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbulla Sandaikozhiye! - J.S. Raghavan

    http://www.pustaka.co.in

    அன்புள்ள சண்டைக்கோழியே!

    Anbulla Sandaikozhiye!

    Author:

    ஜே. எஸ். ராகவன்

    J.S. Raghavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. இறையா, இரையா?

    2. க.மு. க.பி. கோரிக்கைகள்

    3. தீபாவளிப் புடைவை எக்ஸ்சேஞ்ச்!

    4. நடை, குடை, பாவனை!

    5. காது அறுந்து போயிடும்!

    6. 'தூங்குங்க...’

    7. சினிமா கண்ணன்

    8. அன்புள்ள சண்டைக்கோழியே!

    9. கருணைக் கிழங்கு!

    10. இம்‘மைக்’கும் மறு‘மைக்’கும்!

    11. பேசும் 'சாமி'கள்!

    12. கண் மங்கலும் வெண் பொங்கலும்!

    13. சிண்டு (முடி) பைரவி!

    14. பத்து - பத்து - பத்து

    15. பழையது மேளா!

    16. 'இங்கிலீஷ் காய்கறிகள்'

    17. இதோ நானூறு!

    18. ‘திருஷ்டி’ சித்தி!

    19. காபி சத்ஸங்!

    20. விஜயாவா? விமலாவா?

    21. யாருக்கு டயம் இருக்கு?

    22. என்ன ஆச்சு உங்களுக்கு?

    23. சிக்கன வாழ்வில் மகிழ்ந்து!

    24. மார்ச் பதினைந்து

    25. பரீட்...ச்சை!

    26. ஏன்? ஏன்? ஏன்?

    27. நடையா இது நடையா?

    28. பெட்ரூமில் கேமரா

    29. டெலிபோன் சர்வாதிகாரிகள்

    30. போளி மருந்து

    31. புடைவை பத்மா

    32. ரவிக்கை ரங்கநாயகி

    33. காலர்!

    34. தேவையானவை

    35. 'பற’ந்த மனப்பான்மை

    36. நுங்கு!

    37. 420

    38. உதைக்காதே பந்தை உதைக்காதே!

    39. எம்மாம் பயம்!

    40. ஃபுட்பால் டமால் டுமீல்!

    41. வெற்றிலைச் செல்லம்!

    42. 'விக்கிற’மாதித்யன் கதை!

    43. சிட்டுக்குருவிக்கு என்ன தட்டுப்பாடு?

    1. இறையா, இரையா?

    குளித்து முழுகி, பளிச்சென்று சலவை செய்த ஆடைகளை அணிந்து, நெற்றியில் திருநீறு, குங்குமக் குறிகளுடன் ஓட்டல் அறையில் புறப்படத் தயாராக இருந்த பெற்றோரைப் பார்த்து சரவணன் மகிழ்ந்தான்.

    கோயம்பத்தூரை விட்டு லேசில் வெளியே வராதவர்களைக் கிளப்பி, தான் பணிபுரியும் கும்பகோணத்துக்கு வரவழைத்திருந்தான்.

    'நிறைய கோயில்கள் இருக்குப்பா. ஒவ்வொண்ணா ரசித்துப் பார்க்க ஒரு மாமாங்கமாவது வேணும். லிஸ்ட் போட்டு குடுத்திருந்தேனே பார்த்தீங்களா? இன்னிக்குக் காலையிலே திருநாகேஸ்வரம், சுவாமிமலை அப்புறம் கும்பேஸ்வரர்.'

    'பார்த்தேன்யா. நானும் ஒரு லிஸ்ட் கொண்டாந்திருக்கேன். நம்ம நண்பர் குனியமுத்தூர் குமாரசாமி சொற்படி போட்டது.'

    'என்னென்ன கோயில்கள்? படிச்சு சொல்லுங்கப்பா. என்னோட லிஸ்ட்டிலே விட்டுப் போயிருக்கான்னு பார்க்கலாம்.’

    'கோயில்கள் இல்லே. ஹோட்டல்கள். மாமி மெஸ், வெங்கடரமணா, மீனாட்சி பவன், அர்ச்சனா அப்படீன்னு நீளமா போகிறது.'

    'சாப்பாடா? அதான் இருக்கவே இருக்கேப்பா. முதல்லே திரு நாகேஸ்வரத்தைப் பத்திச் சொல்லியாகணும். அது ராகு ஸ்தலம். ராகுபகவான் சிலைக்குப் பால் அபிஷேகம் பண்ணினா வெள்ளைப் பால் நீல நிறமாயிடும்.'

    'நீல நிறத்தை விடுடா. அந்தக் காலத்திலே கும்பகோணத்திலே மூணு வகையா காப்பி உண்டாமே. ஆர்டினரி, 'எஸ்பி'ங்கற ஸ்பெஷல். அப்புறம் டிகிரி காப்பியாம். காசுக்குத் தகுந்தா மாதிரி குடுத்து வாங்கின காப்பி, வெள்ளைச் சட்டை மேலே வழிஞ்சுட்டா பழுப்புக் கலரா சட்டை நிறம் மாறிடுமாம். எப்படிப்பட்ட சவுக்காரத்தைப் போட்டாலும் கறை போகவே போகாதாம். அப்புறம் அந்தக் காலத்திலே மாயவரத்திலே காளியாகுடின்னு ஒரு ஓட்டலாம்...'

    'அப்பா. காப்பி இருக்கட்டும்பா. கொஞ்ச நாளைக்கு முன்னாலே ராகு ஸ்தலத்திலே செஞ்ச அபிஷேகப் பால் வெளியே ஓடி வறச்சே அங்கே ஒரு பாம்பு வந்ததாம். அது வளைஞ்சு வளைஞ்சு ஓடின ரூட்டிலேயே பாலும் வளைஞ்சு வளைஞ்சு ஓடி ஜலதாரையில் போய் மறைஞ்சுடுத்தாம். போட்டோ எடுத்து வெச்சிருக்காங்க. நீங்க பார்க்கணும்.'

    'படம் எடுக்கிற பாம்பைப் படம் எடுத்தாங்களா? பாத்துடலாம். அப்புறம் கும்பேஸ்வரார் சன்னதியிலே பாத்திரக் கடைகள் வரிசை நடுவே ஒரு அய்யர் சின்னதா ஓட்டல் வெச்சிருக்காராம். ஞாயிற்றுக் கிழமை கிடையாதாம். கார்த்தாலே இட்லிக்குத் தொட்டுக்க 'டாங்கர் சட்னி'ன்னு போடுவாராம். சூப்பரா இருக்குமாம்.'

    'சாப்பிட்டாப் போறது. சுவாமிமலைக்குப் போகணும்பா. தந்தைக்கு உபதேசம் பண்ணின முருகனோட கோயில். எல்லாம் பக்கம்தான்.'

    'அங்கே அடிக்கடி போவே போலிருக்கு. அதான் உன்னோட தந்தைக்கும் கோயில்களைப் பற்றி உபதேசம் செய்யறே. அந்தக் கோயில்லே எலுமிச்சம் பழ சாதம் ரொம்ப சுவையா இருக்குமாம். பிரசாத ஸ்டால்லே விக்கறாங்களாமே.'

    'தெரியாதுப்பா. சாயந்திரமா கூத்தனூர் போயிடலாம். சரஸ்வதியோட கோயில். ஒட்டக்கூத்தரின் சொந்த ஊர். பரீட்சைக்குப் போகிற மாணவர்களெல்லாம் தங்களோட நம்பர்களை சுவற்றில் எழுதிட்டுப் போவாங்களாம். அப்படி செஞ்சா சரஸ்வதி எல்லாருக்கும் நல்ல மார்க் வரும்படியா செஞ்சிடுவாங்கிற நம்பிக்கை.'

    'நல்ல வேளை கூத்தனூரை ஞாபகப்படுத்தினே. திருவாரூர் ரூட்டிலே பூந்தோட்டம் தாண்டினவுடனே வருமாமே. அங்கே கோயிலுக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு குடிசையிலே அய்யர் ஒருத்தர் ஓட்டல் நடத்தறாராம். வடை ஒரு ரூபாயாம். இட்லி மல்லிப் பூவா இருக்குமாம். அடை - அவியல் ஸ்பெஷலாம். அய்யரோட மனைவியே ஆர்டர் எடுத்தவுடனே அடுக்களையிலே முறுகலா செஞ்சு சுடச் சுடச்சுடப் போடுவாங்களாம். சாப்பிட்ட இலையை நாமே எடுத்துத் தொட்டியிலே போடணுமாம். காபின்னா அப்படி இருக்குமாம்.'

    'போகலாம்பா. நாளைக்குக் காலையிலே வைத்தீஸ்வரன் கோயில். ஐந்து சன்னதிகள் இருக்கு. பிள்ளையார், அங்காரகன், முத்துக்குமாரசாமி, தையல்நாயகி, அப்புறம் நோய்களைத் தீர்க்க வைத்தீஸ்வரன். அங்கே திருச்சாத்துருண்டைன்னு ஒண்ணைக் கொடுப்பாங்க. அது சகலவியாதிகளையும் குணப்படுத்திடும்.'

    'பாத்தியா! நல்லவேளை வைத்தீஸ்வரனை ஞாபகப்படுத்தினே. அங்கே வெளிப் பிரகாரத்திலே ஒரு பிரசாத ஸ்டால் இருக்காம். அங்கே விக்கற பழுப்பு நிறத் தட்டை மினுமினுன்னு மிளகு, கறி வேப்பிலை காம்பினேஷனோட கடிக்கறவங்க வாயில் 'சுள்'ளுன்னு சுவையா கரையுமாம். பல்லோட மல்லுக்கு நிக்காதாம்...'

    இதுவரை மவுனமாக இருந்த சரவணனின் அம்மா பொறுமை இழந்து குறுக்கிட்டாள். 'அப்பா சரவணா! உங்கப்பா வயத்திலே மணி அடிச்சாச்சு. முதல்லே பக்கத்திலே இருக்கிற ஓட்டலுக்கு அழைச்சிண்டு போய் பொங்கல் வடை, காப்பி ஆகாரம் செய்ய வெச்சுடு. வெறும் வயத்தோட இருக்கிறச்சே அவர் வாய் இரையைப் பத்தித்தான் பேசும். கேட்கும். இறையைப் பத்தி இல்லே.'

    'உங்கம்மா புரிஞ்சிண்டிருக்கா. நீ புரிஞ்சிக்கலையே!' என்கிற பாவனையில் சரவணனை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு டயாபடீஸ் பசி வேட்கையுடன் நாற்காலியிலிருந்து எழுந்து கொள்கிறார்.

    *****

    2. க.மு. க.பி. கோரிக்கைகள்

    ஓர் அறுபதாம் கல்யாணத்தில் தம்பையாவைப் பார்த்தேன்.

    'பையனோட கல்யாணம் செட்டில் ஆயிடுத்தா, ஸார்?'

    தம்பையா தலையை ஆட்டினார். கண்கள், 'என் சோகக் கதையைக் கேளுங்களேன்' என்று கெஞ்சின.

    'முன்னெல்லாம் கல்யாணத்துக்காகப் பல பெண்கள், கால் வலிக்கக் காத்திருந்து நின்னாங்க. இப்போ கால் மேல கால் போட்டுண்டு கெத்தா சிம்மாசனத்துல உட்கார்ந்திருக்காங்க. ரெண்டு பக்கமும் சேடிகளா நின்னுண்டுருக்க, அம்மாவும் அப்பாவும் சாமரம் வீசறாங்க. இதுவரை சுமார் நூறு வரன்களை எடுத்திருப்பேன். ஒண்ணும் செட்டில் ஆகலே. ஆனா, எல்லாப் பெண் வீட்டாரையும் ஒட்டு மொத்தமா குற்றம் சொல்ல முடியாது. தப்பு. சிலர் போடற என்னன்னு தெரியுமா? திரட்டி லிஸ்ட் போட்டிருக்கேன்.'

    'கி.மு, கி.பி தெரியும். க.மு, க.பின்னா?'

    'கல்யாணத்துக்கு முன். கல்யாணத்துக்குப் பின்.'

    'அட! அப்படியா?'

    'முதல்ல க.முவைப் பத்திச் சொல்றேன். பரம்பொருள் ரேஞ்சில் லேசில் கண்களில் படாத பெண் வீட்டாரின் ஜோஸ்யர் அகப்பட்டு, அவர் ஜாதகங்களைப் பார்க்கும் சுபவேளை வந்து, பொருந்தி இருக்குன்னு அறிவிச்ச அப்புறம் இந்த கண்டிஷன்கள் டெலிஃபோன் வழியா வரும். ஜாதகம் பொருந்தலேன்னா மூச்! பெண் சைடிலேருந்து பதிலே வராது. அப்படி வர்ற சில கோரிக்கைகள் என்னன்னு சொல்றேன் கேளுங்க.

    1. பிள்ளை இருக்கிற வீடு யார் பேரிலே இருக்கு? அவன் பேரிலேயா? அப்பா பேரிலேயா? அண்ணா பேரிலேயா? ஒரே பிள்ளையாயிருந்து, அப்பாவோ அம்மாவோ டிக்கெட் வாங்கிட்டா உயிரோடிருப்பவர் முதியோர் ஹோமுக்குப் போவாரா?

    2. வீட்டுக்குப் பக்கத்திலே குடிசை ஏதானும் இருக்கா? வாசலுக்கு நேரா பாதாள சாக்கடை மேன்ஹோல், ஈ.பி டிரான்ஸ் ஃபார்மர், டாஸ்மாக் ஷாப், கார்ப்பரேஷன் எலிமெண்டரி ஸ்கூல், லேத் வேலை செய்யும் பட்டறை இருக்கா?

    3. வீட்டில் ஹோம் தியேட்டர், பிராட்பாண்ட், ஸ்ப்ளிட் ஏசி, ஃபிரன்ட் லோடிங் வாஷிங் மெஷின் இருக்கா? வேலைக்காரி ரெகுலரா வருவாளா?

    4. பையனின் வாகனம் காரா? காருன்னா, எஸ்.யூ.வியா? பையனுக்கு கார் ஓட்டத் தெரியுமா? இல்லை டிரைவரா? பெண்ணை ஜிம்முக்கு அனுப்புவானா?

    5. பையனுடைய லேட்டஸ்ட் சம்பள ஸ்லிப், இன்கம் டாக்ஸ் ரிடர்னைத் தர முடியுமா? ஐந்து வருஷம் கழிச்சு சம்பளம் எவ்வளவாக உயரும்?

    6. தினம் சமையல் யாரு? மாமியாரா? சமையல்கார மாமியா? முதல் நாட்டுப் பெண்ணா? எங்க பெண்ணுக்குச் சமையல் தெரியாது. வராது. பிடிக்காது.

    ---திரெளபதி புடைவையா இப்படி நீண்டுண்டே போகும் ஸார். எல்லாத்தையும் சொல்லணும்னா நம்ம ராமசாமிக்கு சஷ்டியப்த பூர்த்தியே வந்துடும்.'

    'நெஜமாவா? இவ்வளவு கண்டிஷன்களா? க.பி சமாச்சாரம் எப்படி இருக்கும்?'

    'சொல்றேன். கேட்டுக்கோங்கோ:

    1. பெண்ணுக்கு சல்வார், ஜீன்ஸ்தான் ஒத்து வரும். புடைவை கட்ட மாட்டாள். நாள் நட்சத்திரம், பண்டிகை, திதின்னு கட்டாயப்படுத்தக் கூடாது.

    2. நெத்திக்கு இட்டுக்கொள்வது, கொள்ளாதது அவள் மூடைப் பொறுத்தது.

    3. மாதம் மூணு டிரெஸ்கள் வாங்கித் தரணும். பெண் உரிமையோட

    Enjoying the preview?
    Page 1 of 1