Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sarida Saridi
Sarida Saridi
Sarida Saridi
Ebook143 pages44 minutes

Sarida Saridi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நண்பர்களையோ, உறவினர்களையோ நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது, அவர்களை எப்படிக் கூப்பிட்டு மரியாதை செய்வது அல்லது அன்னியோன்யத்தை வெளிப்படுத்துவது என்பது ஒரு முக்கியமான பிரச்னை.

மணமான சில ஆண்கள், மனைவியை அவங்க என்று தான் பயம் கலந்த எச்சரிக்கையுடன் குறிப்பிடுவார்கள். ஆனால் அந்த மாதரசியோ, கணவனை அசால்ட்டாக 'அது' என்று அஃறிணையில் குறிப்பிட்டு மரியாதை செய்வார்.

கணவனுக்காக கடுகளவு ஏங்காவிட்டாலும், சில மனைவிமார்கள் அவரை 'ஏங்க ஏங்க?’ என்று கூப்பிடுவது ஒரு முரண்பாடு, பெண்டாட்டியை 'டி' போட்டுத் தான் கூப்பிட வேண்டும் என்று வாதிடும் ஒரு சாரார், அதற்குக் காரணமாக முன்வைக்கும் வாதம், பெண்டாட்டி என்கிற வார்த்தையிலேயே டி இருப்பதால்தான். லா.ச.ரா. அவர்கள் ஒரு கட்டுரையில் மேனேஜரை ‘மேனேஜன்' என்று குறிப்பிட்டு, அந்த ஆளுக்கு ‘ர்’ விகுதி மரியாதை எதற்கு என்று கேட்டு, அவர் மேல் ஏற்பட்ட வெறுப்பை பதிவுசெய்வார். 'அவன்' எனப்படும் மைக்ரோவேவ் அடுப்பை உபயோகித்துச் சமைக்கும் கணவனை சில மனைவிகள், அவன் சமையல் என்று கூறி, மரியாதை கொடுக்காத மாயையை ஏற்படுத்திக் கொண்டு விடுவார்கள். பொதுக்கூட்டங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப் படும் வார்த்தை 'அவர்களே'தான். அழைப்பிதழை பிரித்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு பெயரோடு ‘அவர்களே'யை ஒட்டி அழைத்துப் பேசினால், பல நிமிடங்களைத் தள்ளிவிடலாம்.

அந்தக்கால சிறுவர்களும் சிறுமிகளும், டி, டா போட்டு ஏண்டி சரோஜா, ஏண்டா சாரங்கா என்று பேசிக்கொள்வது இயற்கையாக அமைந்த ஒன்று. இப்போது டி போட்டுப் பேசினால், பெண்கள் டின் கட்டி விடுவார்கள். இந்த டி, டா சொருகல்கள் பற்றி மேலும் அறிய, உள்ளே இருக்கும் 'சரிடா சரிடி’ கட்டுரையைப் படித்து அறிந்து கொள்ளலாம்.

அக்கட்டுரையின் தலைப்பைத் தாங்கிவரும் இப்புத்தகம் வெளிவர உதவியவர்களைப் பற்றி ஓரிரு ஈரமான வார்த்தைகளைச் சொல்லாவிட்டால், முன்னுரை நிறைவு பெறாது. வாராவாரம் விடாமல் எழுத மண்டைக்குள் பொறியைப் புகுத்தி ஆசீர்வதிக்கும் விநாயகப் பெருமானுக்கு என்னுடைய முட்டிகள் கிறீச்சிடும் நமஸ்காரங்கள். அப்பொறியை ஊதிப் பெரிதாக்கி, எழுதிய கட்டுரைகளைக் கடந்த 640 வாரங்களாகத் தொடர்ந்து வெளிவந்ததற்கும், வட்டார ஏடுகளின் ஆசிரியரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான கே. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இதயபூர்வமான நன்றிகள்.

கட்டுரைகளுக்கு அலங்காரமாகத் திகழும் ஓவியங்களை வரைந்து அளிக்கும் மியூரல் / ஓவிய மேதை நடனத்துக்கும், அவ்வப்போது பாராட்டும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இதைக் கேட்டிருக்கிறீர்களா? 'டி' போட்டுக் கூப்பிடும் வயதையும் உற்சாகத்தையும் கடந்த ஒரு 90 வயதான சூப்பர் சீனியர் சிடிஸன், தன் மனைவியை டார்லிங், ஸ்வீட்டி, ஹனி என்று பரவசத்துடன் கூப்பிடுவதைப் பார்த்து வியந்த ஒருவர், 'உங்கள் மனைவி மேல் இந்த வயதிலும் அவ்வளவு ஈர்ப்பா? காதலா?' என்று வியப்புடன் கேட்டபோது, அந்த முதியவர் சொன்ன பதில்: 'காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை அவள் பேர் மறந்து போய் பல வருஷங்கள் ஆச்சு. 'உன் பேரு என்னன்னு கேட்டா சும்மாவிடுவாளா? தொலைச்சிடுவாள் அதான்!’

அன்புடன்,
ஜே.எஸ்.ராகவன்

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580127204585
Sarida Saridi

Read more from J.S. Raghavan

Related to Sarida Saridi

Related ebooks

Related categories

Reviews for Sarida Saridi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sarida Saridi - J.S. Raghavan

    http://www.pustaka.co.in

    சரிடா சரிடி

    Sarida Saridi

    Author:

    ஜே. எஸ். ராகவன்

    J.S. Raghavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    சரிடா! சரிடி!

    தாயார் ஸ்ரீ சொல்படி

    பன்னீர்த் துளிகள்

    மீண்டும் வாக்கிங்

    இது எப்படி இருக்கு

    மிஸ்டர் நய் நய்

    வருத்தப்படாத வயோதிகர் சங்கம்!

    இனிய சரவெடி இருபது!

    போலீஸிடம் இருந்து காத்த எம்.டி.ராமநாதன்

    அப்படின்னா இப்படி!

    என் பெயர் பாயசமுங்க!

    சுண்டலும் கிண்டலும்

    கூகுள் கிட்டுவின் பிரசாரம்

    கரகர காராபூந்தி

    மைசூர்பாவளி

    கூத்தும் கேலிக்கூத்தும்!

    மொட்டைக் கடுதாசுகள்

    வம்பும் தும்பும்!

    ஆள்காட்டி விரல்

    கதம்ப பஜ்ஜி!

    மோடிக்கு தம்பையாவின் டிப்ஸ்!

    காக்காய் உட்கார...

    ஷாரபோவாவா? யாரது?

    வள்-வள்! லொள்-லொள்!!

    பதில் மரியாதை!

    கறை ஒன்றுமில்லை!

    இடி மின்னல் பேரிடி!

    வெங்கியும் வங்கியும்

    ரிக்ஷா பந்தன்!

    முன்னுரை

    நண்பர்களையோ, உறவினர்களையோ நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது, அவர்களை எப்படிக் கூப்பிட்டு மரியாதை செய்வது அல்லது அன்னியோன்யத்தை வெளிப்படுத்துவது என்பது ஒரு முக்கியமான பிரச்னை.

    மணமான சில ஆண்கள், மனைவியை அவங்க என்று தான் பயம் கலந்த எச்சரிக்கையுடன் குறிப்பிடுவார்கள். ஆனால் அந்த மாதரசியோ, கணவனை அசால்ட்டாக 'அது' என்று அஃறிணையில் குறிப்பிட்டு மரியாதை செய்வார்.

    கணவனுக்காக கடுகளவு ஏங்காவிட்டாலும், சில மனைவிமார்கள் அவரை 'ஏங்க ஏங்க?’ என்று கூப்பிடுவது ஒரு முரண்பாடு, பெண்டாட்டியை 'டி' போட்டுத் தான் கூப்பிட வேண்டும் என்று வாதிடும் ஒரு சாரார், அதற்குக் காரணமாக முன்வைக்கும் வாதம், பெண்டாட்டி என்கிற வார்த்தையிலேயே டி இருப்பதால்தான்.

    லா.ச.ரா. அவர்கள் ஒரு கட்டுரையில் மேனேஜரை ‘மேனேஜன்' என்று குறிப்பிட்டு, அந்த ஆளுக்கு ‘ர்’ விகுதி மரியாதை எதற்கு என்று கேட்டு, அவர் மேல் ஏற்பட்ட வெறுப்பை பதிவுசெய்வார். 'அவன்' எனப்படும் மைக்ரோவேவ் அடுப்பை உபயோகித்துச் சமைக்கும் கணவனை சில மனைவிகள், அவன் சமையல் என்று கூறி, மரியாதை கொடுக்காத மாயையை ஏற்படுத்திக் கொண்டு விடுவார்கள்.

    பொதுக்கூட்டங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப் படும் வார்த்தை 'அவர்களே'தான். அழைப்பிதழை பிரித்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு பெயரோடு ‘அவர்களே'யை ஒட்டி அழைத்துப் பேசினால், பல நிமிடங்களைத் தள்ளிவிடலாம்.

    அந்தக்கால சிறுவர்களும் சிறுமிகளும், டி, டா போட்டு ஏண்டி சரோஜா, ஏண்டா சாரங்கா என்று பேசிக்கொள்வது இயற்கையாக அமைந்த ஒன்று. இப்போது டி போட்டுப் பேசினால், பெண்கள் டின் கட்டி விடுவார்கள். இந்த டி, டா சொருகல்கள் பற்றி மேலும் அறிய, உள்ளே இருக்கும் 'சரிடா சரிடி’ கட்டுரையைப் படித்து அறிந்து கொள்ளலாம்.

    அக்கட்டுரையின் தலைப்பைத் தாங்கிவரும் இப்புத்தகம் வெளிவர உதவியவர்களைப் பற்றி ஓரிரு ஈரமான வார்த்தைகளைச் சொல்லாவிட்டால், முன்னுரை நிறைவு பெறாது. வாராவாரம் விடாமல் எழுத மண்டைக்குள் பொறியைப் புகுத்தி ஆசீர்வதிக்கும் விநாயகப் பெருமானுக்கு என்னுடைய முட்டிகள் கிறீச்சிடும் நமஸ்காரங்கள். அப்பொறியை ஊதிப் பெரிதாக்கி, எழுதிய கட்டுரைகளைக் கடந்த 640 வாரங்களாகத் தொடர்ந்து வெளிவந்ததற்கும், வட்டார ஏடுகளின் ஆசிரியரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான கே. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இதயபூர்வமான நன்றிகள்.

    கட்டுரைகளுக்கு அலங்காரமாகத் திகழும் ஓவியங்களை வரைந்து அளிக்கும் மியூரல் / ஓவிய மேதை நடனத்துக்கும், அவ்வப்போது பாராட்டும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    இதைக் கேட்டிருக்கிறீர்களா? 'டி' போட்டுக் கூப்பிடும் வயதையும் உற்சாகத்தையும் கடந்த ஒரு 90 வயதான சூப்பர் சீனியர் சிடிஸன், தன் மனைவியை டார்லிங், ஸ்வீட்டி, ஹனி என்று பரவசத்துடன் கூப்பிடுவதைப் பார்த்து வியந்த ஒருவர், 'உங்கள் மனைவி மேல் இந்த வயதிலும் அவ்வளவு ஈர்ப்பா? காதலா?' என்று வியப்புடன் கேட்டபோது, அந்த முதியவர் சொன்ன பதில்: 'காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை அவள் பேர் மறந்து போய் பல வருஷங்கள் ஆச்சு. 'உன் பேரு என்னன்னு கேட்டா சும்மாவிடுவாளா? தொலைச்சிடுவாள் அதான்!’

    அன்புடன்,

    ஜே.எஸ்.ராகவன்

    *****

    சரிடா! சரிடி!

    கிமூ என்பது வாய்க்கு சுளுவாக இருக்க கிருஷ்ணமூர்த்தியை நாலாக மடித்துச் சுருக்கி சூட்டப்பட்ட வாமனப் பெயரே தவிர, சரித்திரத்தில் பேசப்படும் கி.மு., கி.பி.யுடன் இம்மி அளவுகூட சம்பந்தம் இல்லாதது. கி. மூ. சமீபத்தில் சுய சவரம் செய்ய ஆரம்பித்தவன். மிஸ்ஸியம்மா பட 'வாராயோ வெண்ணிலா’வே பாட்டைப் பாடிப் பாடி பாராயணம் செய்பவன். வலது கை கட்டைவிரலில் சிவப்பு நெயில் பாலிஷ் மின்ன, பாவாடை மேலாக்கு போட்ட இளம் கன்னிகைகளுடன் 'ஹிஹி’ பேச்சுக் கொடுப்பதில் மன்மதன். அசால்ட்டாக 'டி' போட்டுதான் பேசுவான்.

    'ஏண்டி சாமளா? எங்கேடி போறே? பாட்டு கிளாஸா? பட்டு ஸார் ஊரிலே இல்லியேடி. போகாதேடி வேஸ்ட்டுடி.’

    கிமூவிடமிருந்து எவ்வளவு தள்ளி நடந்து போக முடியுமோ அவ்வளவு தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் சாமளா, பிரேக் போட்டு நிற்பாள்.

    இவ்வளவு 'டி'க்களைப் போட்டுப் பேசியவனைப் பதில் மரியாதையுடன் 'டா' போட்டுப் பேச வேண்டும் என்கிற வேகம் வந்தாலும் பயம். 'நெஜமாவே பட்டு ஸார் இல்லியா கிமூ?' என்று மேல் உதடு வியர்க்க கேட்டு வைப்பாள்.

    'நெஜமாடி. நான் எதுக்கு பொய் சொல்லப்போறேன். அதோ பாரு, துளசி திரும்பி வரா? ஏண்டி துளசி! பட்டு ஸார் இல்லியோல்யோடி?'

    அவர்கள் போனபின் வாசலுக்கு வந்த கிமூவின் அம்மா, கிமூவைக் கடிந்து கொள்கிறாள். 'ஏன்டா? என்ன திமிர் உனக்கு போறவர ஊரான் வீட்டுப் பெண்களை ‘டி’ போட்டுக் கூப்பிடறியே? தப்புடா அது. பொம்மனாட்டிகளோட சேந்தா காது அறுந்துடும் ஜாக்கிரதை. இப்படி ‘டி’ போட்டா யாராவது உன் முதுகிலே செமத்தியா டால்டா டின்னைக் கட்டப்போறா? அப்போதான் உனக்கு உறைக்கும். புத்தி வரும். உங்கப்பாவைப் பாரு. வயசானவரா இருந்தாலும், ஏம்மா லட்சுமி? ஏம்மா சுசீலான்னுதான் பக்கத்து ஆத்துப் பொண்களைக் கூப்பிடறரார். என்னைக் கூட வாய் நிறைய 'ராஜராஜேஸ்வரி இங்கே வா, ராஜ ராஜேஸ்வரி ஐலம் கொண்டு வா'ன்னுதான் கேட்பார். அவர் கோத்திரம் நீ! அவரை மாதிரி நடக்க வேணாமோ? என்ன ஜென்மம்டா நீ?'

    Enjoying the preview?
    Page 1 of 1