Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Comedy Cocktail
Comedy Cocktail
Comedy Cocktail
Ebook192 pages1 hour

Comedy Cocktail

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியா வின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 78.

வட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார்.

தொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்..

Laughing Tablets என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய இந்த சிவசாமியின் சபதம் முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 28.

தேவன் அறக்கட்டளை விருதுபெற்ற இவருக்குப் பிடித்த சவால் வாசகம்: 'அறிவில் சிறந்தவர்களைச் சிரிக்கவைப்பது கடினம்!'

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580127204955
Comedy Cocktail

Read more from J.S. Raghavan

Related to Comedy Cocktail

Related ebooks

Related categories

Reviews for Comedy Cocktail

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Comedy Cocktail - J.S. Raghavan

    http://www.pustaka.co.in

    காமெடி காக்டெய்ல்

    Comedy Cocktail

    Author:

    ஜே. எஸ். ராகவன்

    J.S. Raghavan

    For more books

    http://pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அப்பனே கணேசா!

    2. தேவை: பெண் சாமரவீசிகள்

    3. வருகிறாள் மகராசி!

    4. இலை போட்டாச்சு!

    5. மாடை'த் தேடி மச்சான் வரப்போறான்!

    6. தும்மலுக்கு ஜிஎஸ்டியா?

    7. (பிராக்கெட்) பசுபதி

    8. கீ போர்டு கிளி!

    9. சிவசாமியின் சொத்துக்குவிப்பு!

    10. காபியின் ஆற்றாமை

    11. தலை 'தொப்பி'யது!

    12. தொடரும்!

    13. 'பழசா? சீச்சீ! சீச்சீ! புதுசுதான் வேணும்!'

    14. முனி, மினி, மௌனி!

    15. போன வருஷத்தைவிட...

    16. 'சிரபுஞ்சி' சித்ரா

    17. 75+55+1008

    18. அரசியல்வாதி தினம்

    19. குஞ்சப்பாவும் கடப்பாவும்!

    20. கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!

    21. பசுபதிக்கு வெகுமதி!

    22. சௌ-சௌ பாத்!

    23. 'வாராய்! நீ வாராய்!'

    24. நரகாஸ்!

    25. 'விட்டுப்பிடி' வைத்தியம்!

    26. ஜிமிக்கி கம்மல் டான்ஸ்

    27. ஏசி இல்லே, டிசி இல்லே! நாங்க ஓசி!

    28. நடராஜர் சர்வீஸ்

    29. பட்டுக்குஞ்சலம்

    30. டாட்டாவுக்கு டாட்டா!

    31. அப்டி-யா?!

    32. டூவீலரில் ஒரு தத்துவம்

    33. பாட்டாளி பரமு

    34. புளித்தேவன்

    35. எப்படிப் பிறாண்டினரோ?

    37. எமனுக்கு ஒரு கோயில்!

    38. 'இங்கித' கலாநிதி

    1. அப்பனே கணேசா!

    அசோக் நகர் பதினோராவது நிழற் சாலையின் மத்தியப் புள்ளியில் இருக்கும் 'வாக்கிங்' விநாயகர் கோயில் முகப்பில் அவசர கதியில் யூடர்ன் எடுத்து திரும்பும் நடை ராஜாக்களில் சிலர் செய்வது 'த்ரீ-இன் - ஒன்' வழிபாடு.

    அதென்ன த்ரீ-இன்-ஒன் வழிபாடு? தீமிதி வேகத்தில் ‘விசுக் விசுக்' என்று நடக்கிறவர்கள் விநாயகருக்கு முன் ஒரு நானோ செகன்டு பிரேக் போட்டு, (1) நின்ற இடத்திலேயே கலங்கரை சுழல் விளக்கு மாதிரி பிரதட்சிணமா சுற்றிக்கொண்டே,

    (2) கன்னங்களில் மோதிர விரலால் மாப்பிள்ளையின் கன்னத்தில் மாமியார் பட்டும் படாமலும் சந்தனம் இடுவதுபோலத் தொட்டு விட்டு,

    (3) அதே அவசரரீதியில் கை கூப்பிவிட்டு நடையைத் தொடர்ந்து ‘மேனி முடங்காது' செய்யும் வழிபாடுதான் அது. ஆனால் கணபதி கோபிப்பாரா? மாட்டார். ஜாலிடைப் ஆச்சே!

    ஆஞ்சநேயர் அப்படி இல்லை. காரணம்? சுர்ரென்று உறைக்கும் மிளகு வடைகளை மாலையாகவே போட்டுப் பழகிய அவருக்கு சுர்ர்ர்ர்ரென்று கோபம் வருவது இயற்கையே! ஆகவே, தித்திக்கும் வெல்லக் கொழுக் கட்டையை தயாராக கையில் வைத்திருக்கும் சாந்த சொரூபியான விநாயகரை இளைஞிகளின் பாணியில் பஞ்ச்சோடு வருணிக்க வேண்டும் என்றால், 'ச்ச்ச்சோ ச்வீட்!’

    டூ-இன்-ஒன் வழிபாடு என்கிற சிக்கன முறையும் உண்டு. எப்படி? கூப்பிய கைகளைத்தாடை லெவலுக்கு உயர்த்தி இரண்டு ஆள்காட்டி விரல்களை மட்டும் பிரித்து, கன்னங்களில் போட்டுவிட்டு நடையைத் தொடர்வது தான் அது.

    தவிர, நெற்றிப் பொட்டுகளில் ஐந்து முறை குட்டிக்க வேண்டும் என்பது சாத்திரம். இருந்தாலும் சிலர் அதை சாய்சில் விட்டுவிடுவார்கள். காரணம்? அப்படிச் செய்யும் போது மரங்கொத்தி மரத்தைத் தட்டும் சத்தமாக கேட்டு விடும் என்கிற உதறலால் தான்! தொடர்ந்து கைகளைப் பெருக்கல் குறியாக வைத்து, காது மடல்களை இழுத்துப் பிடித்து தோப்புக்கரணம் போட வேண்டும் என்றால் பலருக்கு பீதி. சின்னஞ்சிறு வயதில் ஆசிரியரின் தண்டனையாக வெயிலில் நின்று 108 தடவை தனியாகவோ அல்லது கூட்டணி பார்ட்னருடனோ 'உன்னோலே நான் கெட்டேன். என்னாலே நீ கெட்டே'ன்னு சொல்லிண்டே போட்டதுதான், பாகற்காயின் கசப்புடன் நினைவுக்கு வரும். ஆனால், சில வெள்ளைக்கார விஞ்ஞானிகள் சமீபத்தில் தோப்புக் கரணத்தை ப்ரெயின் யோகாவாக அங்கீகரிப்பதைக் கேட்டுவிட்டு நம்மவர்களில் பலர் போட ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம்? 'அட! சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்யா!' என்கிற அண்டப்புளுகல்தான்.

    நான் இருந்த அபார்ட்மென்ட்டில், பிள்ளையாருக்குக் கோயில் கட்ட வேணும்கிற தீர்மானம் அவரோட ஆசியாலே ஏகமனதாக நிறைவேறியது. தொடர்ந்து, பிரதிஷ்டை செய்ய பிள்ளையார் சிலையை வாங்க வேணும். ஆனா சிலையைத் திருடிக்கொண்டு வந்தால் விசேஷம்னு சாஸ்திர சம்பிரதாயங்களை கூகுளாகக் கொட்டும் வயசாளி நீலகண்டமாமா சொன்னார்.

    'என்னது? பிள்ளையார் சிலையைத் திருடறதா? தெய்வ காரியத்தில் இப்படிச் செய்யறது மகாதப்பு இல்லையா'ன்னு நாடக நடிகர் கார்த்தி கேட்டார். விக்ரகத்தை வாங்குவது என்று முடிவெடுத்தோம். ‘ஆகட்டும், ஆகட்டும்'னு சொல்லி நீலகண்ட மாமா மர்மமாகச் சிரித்தார்.

    'ஆபரேஷன் பிள்ளையார்' குழுவில் என்னையும் கறி வேப்பிலைக் கொசுறா சேர்த்துக்கொண்டார்கள். நாள் நட்சத்திரம் பார்த்து ஈசிஆர் வழியாக, சீனு, ரமணி, டில்லி பாபு கல்யாணம், எல்ஐசி சங்கரன், சி.கே. பட்டாபி இணைந்து மகாபலிபுரத்துக்கு சிவராமனின் ஸ்கார்பியோவில் கிளம்பினோம். மண்வாசனையுடன் தூரல்! வழக்கமாக மென்- ஒன்லி 'விழுப்பு' ஜோக்குகளைச் சொல்லி மகிழ்ந்து பிறரை மகிழ்விக்கும் சீனு, படு ‘சுத்தமாக' பேசிக் கொண்டு வந்தான். பின்னே? தெய்வகாரியம் ஆச்சே! எல்லாமே கோஷர்!

    கும்பாபிஷேகத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிவாச்சாரியாரின் சொல்படி, பிள்ளையார் சிலையை வாங்கி சென்னை திரும்பும் போது, வழியில் சிவராமனின் காலிஃபிளாட்டில் ராத்தங்குவது என்று பிளான். பிள்ளையார் சிலை அவ்வளவு அம்சமாக அமையும் என்று நினைக்கவே இல்லை. ஹாலில் ஒரு மேஜை மேல் வைத்துவிட்டு தூங்கிவிட்டோம்.

    விடியற்காலையில், மின் விசிறியின் வேகத்தைக் குறைக்க எழுந்தேன். பிள்ளையாருக்கு ‘குட்மார்னிங்' சொல்ல மேஜையைப் பார்த்தேன். மை காட்! பி...பி..பி.. பிள்ளை யாரைக் கா...கா...காணோம். கார்த்தியையும் காணும் அலறி அடிச்சு, 'ஆபரேஷன் பிள்ளையார்' செயல் வீரர்களை எழுப்பினேன். வீடு பூரா சல்லடை போட்டு, வலை வீசித் தேடினோம். கிடைக்கவில்லை.

    வாட்ச்மென் பஞ்சவர்ணம், 'எனக்குத் தெரியாது, சாமி. ஆனா ஒண்ணு, யாரோ ஒரு ஆள் கறுப்பு கம்பளியை போத்திண்டு கையிலே ஒரு கோணி மூட்டையைத் தூக்கிண்டு போனாப்ல!' என்று சொல்லி நைட் வாட்ச் மென்களுக்கும் நடக்கும் திருட்டுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லாமல் சொல்லி திரும்பிப் படுத்துக் கொண்டான்.

    சென்னை வந்த எங்களுக்கு அடுத்த ஷாக். அப்பார்ட்மென்ட் போர்வெல்லுக்கு அருகாமையில் பிள்ளையார், திருவிழாவில் தொலைந்து மீட்கப்பட்ட குழந்தை மாதிரி தேமேன்னு இருந்தார். சிவராமன் என் காதைக் கடிச்சான். 'நீலகண்ட மாமா போட்ட டிராமா இது. இந்த எபிசோடில் கார்த்திக்கு திருடன் ரோல். அவன்தான் திருடிக்கொண்டு நம்மளுக்கு முன்னே கிளம்பிப் போனானாம்.'

    நீலகண்ட மாமா கும்மோண வெத்திலை, வறுத்த சீவல், சுண்ணாம்பு, பன்னீர் புகையிலை தாம்பூலக் காம்போ மணக்கச் சொன்னார். 'தெய்வங்களிலே எனக்குத் தெரிந்து பிள்ளையாரும் ஆஞ்சநேயரும்தான் உடன் உறை தேவி/ தேவியர் இல்லாத பிரம்மசாரிகள். புராண காலத்திலேயே கல்யாண மாலை, தமிழ், அப்புறம் சாய் சங்கரா மேட்ரி மோனியல் இருந்திருந்தாலும், கணபதிக்கு கல்யாணம் ஆகிஇருக்குமோன்னு சந்தேகம். லோகநாயகி பார்வதி மாதிரி பொண்ணு கிடைத்திருப்பாளா? நோவே! அதான், எப்போதும் பிரசன்னவதனத்துடன், காணாமல் போயும் ஜாலியா இருக்கார். ஒரு சம்சாரிக்கு இந்தச் சலுகைகள் கிடைக்குமா? எழுத்தாளனாச்சே, ஒன் லைனரா ஏதான சொல்லாம என்ன பண்றே? வாயில் என்ன கொழுக்கட்டையான்னு?' என்னை அதட்டினார்.

    'மாமா! அவரை கட்டை பிரும்மசாரின்னு சொல்றதை விட, கொழுக்கட்டை பிரும்மசாரின்னு சொன்னாதானே பூரணமா இருக்கும்.'

    நீலகண்ட மாமா கண்களைச் சிமிட்டி சிரித்தார். ஏன், ஏன் சிரிக்கமாட்டார்னேன்? அவரும், உடன் உறை மாமி இல்லாத அதிர்ஷ்டக்- கட்டை பிரும்மசாரியாச்சே!'

    2. தேவை: பெண் சாமரவீசிகள்

    (குரட்டூர் சிற்றரசர் சூரகேசி, உப்பரிகையில் சிந்தனை வயப்பட்டு இருக்க, அமைச்சர் மாரப்ப பூபதி வருகிறார்).

    மாரப்ப: வணங்குகிறேன் மன்னா.

    சூரகேசி: (சினத்துடன்) அமைச்சரே. எமக்கு கூர்மையான கண்கள் உள. வணங்கினால் போதும். வணங்குகிறேன் என்கிற வர்ணனை வேண்டாம். வந்த காரணம் என்ன?

    மாரப்ப: அரசே! இளம் பெண்களை சாமரவீசிகளாக தேர்ந்தெடுப்பது பற்றி...

    சூரகேசி: (குதூகலத்துடன்) அட அதற்காகவா? (குரலைத் தாழ்த்தி) மகாராணியார் ஏழிசைவல்லபி கோவிலுக்கு சென்றுவிட்டாரா?

    மாரப்ப: அவர்களை வழி அனுப்பிவிட்டுத்தான் வருகிறேன் அரசே.

    சூரகேசி: (மகிழ்ச்சியுடன்) சூரர் ஐயா நீர். மேலே சொல்லும்.

    மாரப்ப: உத்தரவு மன்னா. தற்போது இருக்கும் சாமரவீசிப் பெண்கள் முதிர்கன்னிகைகளாக மாறிக்கொண்டு வருவதால், தங்கள் ஆணைப்படி இளம் சிட்டுகளை நியமிக்க வேண்டி நானே களத்தில் இறங்கி விட்டேன்.

    சூரகேசி: (கேலியுடன்) களத்தில் இறங்கிவிட்டேன் என்கிறீர்களே. இதே உற்சாகத்துடன் போர்க்களத்தில் இறங்கிடுவீர்களா?

    மாரப்ப: மன்னா, அடிக்கடி அண்டை நாடுகளுக்கு விஜயம் செய்து நல்லுறவைப் பேணுவதால், நம் மீது மோடி, மன்னிக்கவும், மோதி, தோற்று மண்ணைக் கவ்வ மாட்டார்கள். போரில்லாததால் குதிரை, யானைப் படைகள் தூங்கி வழிந்து கொண்டும் இருக்கின்றன. சாமரப் பெண்களுக்கு வருகிறேன். வனிதையர் அரசுப் பணியாளர்கள் நியமனத்துறைக்கு நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தார்கள். சல்லடை போட்டு சலித்து, ஆறு அழகுப்பதுமைகளை தேர்ந்தெடுத்திருக்கேன்.

    சூரகேசி: சலித்தா? இப்பணியில் சலிப்பு ஏற்படாதே. ஏற்படக் கூடாதே.

    மாரப்ப: அரசரின் சிலேடைக்குத் தலை வணங்குகிறேன். தேர்வாக நான் வகுத்த வரைமுறைகள் இதோ அரசே! 1. பாவைகளின் அகவை, 16 முதல் 22- க்குள் இருத்தல் வேண்டும். 2. முகத்தில் எப்போதும் வசீகரமும், பணிவும் கூட்டணியாக பின்னிப் பிணைந்து இருக்க வேண்டும். 3. தலை எப்போதும் பூமாதேவியைப் பார்த்து குனிந்து இருக்க வேண்டும். 4. சிம்மாசனத்துக்கு இட, வலப் பக்கங்களில் நெடுநேரம் நிற்கவேண்டி இருப்பதால் கால்களும், நேரமாக ஆக சாமரங்களின் எடையும் கூடிக் கொண்டே போகும் என்பதால், கைகளும் வலிவு பெற்றதாகவும் இருக்க வேண்டும். இதைச் சோதிக்க, அரண்மனை தலைமை மருத்துவ வித்தகர் ‘பச்சிலை மாமணி' லேகிய தாசனாரின் மருத்துவ சோதனைக்கு உட்பட வேண்டும். 5. இளம்பெண்களுக்கே உரிதான குணப்படி, ஒருவரை ஒருவர் பார்த்து, காரணம் இன்றி 'களுக்' என்று சிரிப்பதற்கு அனுமதி கிடையாது. 6. சபையில் வழக்கை விசாரிக்கும் சமயம், மன்னர் சினந்து, 'இவனை ஊறுகாய் போட வேண்டி மாங்காயைத் துண்டிப்பது போல மொக்கைக் கத்தியால் வெட்டி வெட்டி, காக்காய்க்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1