Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gopikaikalum Jangirikalum
Gopikaikalum Jangirikalum
Gopikaikalum Jangirikalum
Ebook199 pages58 minutes

Gopikaikalum Jangirikalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தட்டு நிறைய இருக்கும் ஜாங்கிரிகள் விள்ளாமல் விலகாமல் ஒரே சீராக இருக்கலாம். இருக்க வேண்டும். ஆனால் மனிதர்கள் வெவ்வேறு வடிவங்களில் மாறுபட்டு இருப்பதுதான் அழகு. இல்லாவிட்டால் சுவாரஸ்யம் ஏது? ஒரு தீப்பெட்டியில் இருக்கும் தீக்குச்சிகளில் கூட ஒன்று அல்லது இரண்டு மண்டைக் கனத்துடன் வேறு பட்டு இருந்து, உராய்ந்தவுடன் இரட்டைப் பிரகாசமாகப் பற்றி எரிவதில்லையா?

நான் பார்த்த கலை நுணுக்கமுள்ள ஒரு ஓவியத்தில் தவழும் குட்டிக் கண்ணனைச் சுற்றி இருந்த கோபிகைகள், ஒரே உருவம், ஒரே முகச் சாயலுடன் இருந்தது என் சிந்தனையைக் கிளறிவிட்டது. அதன் விளைவுதான் இத்தொகுப்பில் இடம் பெறும் 35 தமாஷா வரிகள் கட்டுரைகளில் ஒன்றான 'கோபிகைகளும் ஜாங்கிரிகளும்!'

- ஜே.எஸ். ராகவன்

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580127205723
Gopikaikalum Jangirikalum

Read more from J.S. Raghavan

Related to Gopikaikalum Jangirikalum

Related ebooks

Related categories

Reviews for Gopikaikalum Jangirikalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gopikaikalum Jangirikalum - J.S. Raghavan

    http://www.pustaka.co.in

    கோபிகைகளும் ஜாங்கிரிகளும்

    Gopikaikalum Jangirikalum

    Author:

    ஜே. எஸ். ராகவன்

    J.S. Raghavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சந்தேக சாந்தா!

    2. ரிஸப்ஷன் ப(பர்)ட்டி மன்றம்

    3. தும்மினார் கெடுவதில்லை!

    4. ‘மை நேம் இஸ் நந்து!'

    5. புத்தகப் 'பெண்' காட்சி!

    6. சாப்பாடு படும் பாடு!

    7. பத்ரியின் டயரிக் குறிப்புகள்

    8. விருப்பு, வெறுப்பு, கரப்பு!

    9. ஸரிகம கதைகள்

    10. போர்வெல் தவளைகள்!

    11. தாடிக்கார சாமி கோவில் தெரு

    12. எமனுக்கு எமன்!

    13. கர்சிக்காய்!

    14. தனப் பெயர்ச்சிப் பலன்கள்

    15. கொஞ்சம் ஞாபகம்!

    16. ‘பட்டாஸா? டப்பாஸா?'

    17. ஜாக்கிரதையாக இருக்குமா?

    18. மின் வெட்டின் பயன்கள் யாவை?

    19. நான் பாட! நீ ஆட!

    20. சிங்கூரும் சிறுதேரும்!

    21. ‘ஆர்த்தோ' - நாரீஸ்வரா!

    22. ‘பட்சணக் கடை!’

    23. ஆஞ்ச நேயர்!

    24. புத்தகக் கிச்சடி!

    25. தேள் கண்டார் தேளே கண்டார்!

    26. வெற்றி ‘எட்டு’ திக்கும் எட்ட!

    27. ஒரு சொட்டு அதிகம்!

    28. மின் வெட்டின் விசிறி!

    29. நிமிஷமா? யுகமா?

    30. அனு ஆயுத ஒப்பந்தம்!

    31. கோபிகைகளும் ஜாங்கிரிகளும்!

    32. பக்கெட்டில் பாதாம் அல்வா!

    33. உலோக நாயகன்

    34. ஷேக்ஸ்-ஃபியர்!

    35. சினிமா டாக்கீஸ்

    36. மேலாக்கு, லோலாக்கு, புல்லாக்கு!

    என்னுரை

    தட்டு நிறைய இருக்கும் ஜாங்கிரிகள் விள்ளாமல் விலகாமல் ஒரே சீராக இருக்கலாம். இருக்க வேண்டும். ஆனால் மனிதர்கள் வெவ்வேறு வடிவங்களில் மாறுபட்டு இருப்பதுதான் அழகு. இல்லாவிட்டால் சுவாரஸ்யம் ஏது? ஒரு தீப்பெட்டியில் இருக்கும் தீக்குச்சிகளில் கூட ஒன்று அல்லது இரண்டு மண்டைக் கனத்துடன் வேறு பட்டு இருந்து, உராய்ந்தவுடன் இரட்டைப் பிரகாசமாகப் பற்றி எரிவதில்லையா?

    நான் பார்த்த கலை நுணுக்கமுள்ள ஒரு ஓவியத்தில் தவழும் குட்டிக் கண்ணனைச் சுற்றி இருந்த கோபிகைகள், ஒரே உருவம், ஒரே முகச் சாயலுடன் இருந்தது என் சிந்தனையைக் கிளறிவிட்டது. அதன் விளைவுதான் இத்தொகுப்பில் இடம் பெறும் 35 தமாஷா வரிகள் கட்டுரைகளில் ஒன்றான 'கோபிகைகளும் ஜாங்கிரிகளும்!'

    ஜே.எஸ். ராகவன்

    *****

    1. சந்தேக சாந்தா!

    (காலையில் லேட்டாக வந்த பேப்பரை ஆபீஸில் இருந்து திரும்பி வந்த சங்கரன் படிக்க ஆரம்பிக்கிறார். தரையில் உட்கார்ந்து கொத்தவரங்காயை ஆய்ந்து கொண்டு சாந்தா பேச ஆரம்பிக்கிறாள்)

    சாந்தா: உங்களை ஒண்ணு கேக்கணும். எம். கே. தியாகராஜ பாகவதர் மூத்தவரா? எஸ்.ஜி. கிட்டப்பா மூத்தவரா?

    சங்கரன்: (தலையைத் திருப்பாமலே) இப்போ ரொம்ப முக்கியமா அது?

    சாந்தா: இல்லே! உங்க அக்கா எம். கே. டின்னுதான் சாதிக்கிறா? உங்களுக்குத் தெரியுமா?

    சங்கரன்: (எரிச்சலுடன்) யாருக்குடி இதெல்லாம் ஞாபகம் இருக்கு மறந்து போச்சு.

    சாந்தா: ‘அவங்களை மாதிரி இப்போ யார் பாடறா?'னு மாத்திரம் சொல்றீங்களே? இதெல்லாம் ஞாபகத்திலே இருக்க வேணாமா? அது போகட்டும். இப்போ வர வாரப் பத்திரிகைகளிலே அசிங்க அசிங்கமா லேடீஸ் படம் போடறாங்களே? ஏன்? ஏன் அப்படிப் பண்ணறாங்க?

    சங்கரன்: எனக்கு எப்படி தெரியும்? நான் சென்ஸாரான்ன? என்னைக் கேட்டுண்டா ஸ்ட்ரைக் ஆர்டர் குடுக்கறாங்க?

    சாந்தா: அதை விடுங்க. அது என்ன டைப் ஒன், டைப் டூ டயாபடீஸ்? ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

    சங்கரன்: ஏதாவது இருக்கும். கேட்டிருக்கேன். இப்போ மறந்து போச்சு. எனக்கு ஷுகர் கிடையாது. திருப்பதி லட்டையும் பழனி பஞ்சாமிர்தத்தையும் அல்வாவா முழுங்கற நான் இதைப் பத்தி ஏன் கவலைப்படணும்?

    சாந்தா: ‘உங்ககிட்டே கேட்டுத் தெரிஞ்சிக்கோ'ன்னு ரமணி சொன்னான். அவனுக்கு டைப் டூவாம்.

    சங்கரன்: (முணுமுணுப்பாக) இருக்கலாம். உன் தம்பியே ஒரு டைப்தானே.

    சாந்தா: ம்? காதிலே விழலே. மறந்துட்டேனே. மாடி வீட்டுக் கிழவருக்கு அடுத்த வெள்ளிக் கிழமை சதாபிஷேகமாம். ஆமா? சதாபிஷேகம் எப்ப செஞ்சிப்பாங்க? எண்பது வயசு ரொம்பின அப்புறமா? இல்லே எண்பது ஆரம்பிக்கற போதா?

    சங்கரன்: அந்தக் கிழவரையே கேக்கிறதானே? தகவல் கூகுளாச்சே. பேச ஆரம்பிச்சா அவரோட போன ஜன்மத்திலே நடந்ததைப் பத்திக் கூட நடுவிலே இன்டர்வல் விடாம மகாபாரத ரேஞ்சிலே உபகதைகளோட சொல்ல ஆரம்பிப்பாரே?

    சாந்தா: இதப் பாருங்க. நீங்க வாங்கிண்டு வந்த கொத்தவரங் காயிலே முக்காவாசி சொத்தை. மீதி கால்வாசி முத்தல். நெஜமாத்தான் கேக்கறேன். உங்களுக்கு பீன்ஸுக்கும், கொத்தவரங்காயுக்கும் வித்தியாசம் தெரியாதான?

    சங்கரன்: ஏன்?

    சாந்தா: நான் கேட்டது பீன்ஸ். நீங்க வாங்கிண்டு வந்தது கொத்தவரங்காய். இதை உங்கம்மா சாப்பிட மாட்டா. காசியிலே விட்டது. அது சரி. உங்களுக்குத்தான் இந்த நார்த் இண்டியன் சாப்பாட்டு சமாச்சாரமெல்லாம் பிடிக்குமே. பிரியாணிக்கும், புலவுக்கும் அப்படி என்ன வித்தியாசம்?

    சங்கரன்: ஹூம்? நான் சமையல் திலகம் அம்பிகா அமர் நாத்தான? ஏதான இருக்கணும். என்னைக் கேட்டா?

    சாந்தா: ம்? உங்க அக்காதான் பீத்திண்டா? எங்க சங்கரனுக்கு இதெல்லாம் அத்துப்படின்னு (முணுமுணுக்கிறாள்) எல்லாம் சுத்த உதார்.

    சங்கரன்: என்ன சொன்னே? காதிலே விழலே.

    சாந்தா: (உரக்க) ஒண்ணுமில்லே. அது சரி. ரஞ்சனிக்கும் ஸ்ரீரஞ்சனிக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிக்கிறது. எனக்குத் தெரிய மாட்டேங்கிறது.

    சங்கரன்: ரஞ்சனி உயரமா சேப்பா இருப்பா. ஸ்ரீரஞ்சனி மாநிறம். ஆனா மூக்கும் முழியுமா நன்னா இருப்பா.

    சாந்தா: நா கேட்டது ராகத்தைப் பத்தி. நம்ம அபார்ட்மென்டிலே இருக்கிற பொண்களைப் பத்தி இல்லே. அது போகட்டும். ‘அழைக்காதே! அழைக்காதே'ங்கிற பழைய சினிமாப் பாட்டு எதிலே வரும்? மணாளனே மங்கையின் பாக்கியத்திலேயா? இல்லே கணவனே கண்கண்ட தெய்வத்திலேயா?

    சங்கரன்: சட்னு மறந்து போச்சு? இப்போ அது எதுக்கு தெரிஞ்சாகணும்?

    சாந்தா: இல்லே. எங்க மன்னார்குடி கோண்டு மாமா அதை எப்போவும் பாடிண்டே இருப்பார். அவர் ஞாபகம் இன்னிக்கு திடீர்னு வந்தது. அதான் கேட்டேன்.

    சங்கரன்: (எரிச்சலுடன் பேப்பரை விட்டெறிந்து) மணாளனே மங்கையின் பாக்கியம். கணவனே கண் கண்ட தெய்வத்தை எல்லாம் ஞாபகம் வெச்சிண்டு கேக்கறே. ஆபீஸிருந்து டயர்டா வந்த உன்னோட மணாளனுக்கு காப்பி கீப்பி குடுக்கணுங்கிறது மாத்திரம் மறந்து போச்சில்லே?

    சாந்தா: (திகைப்புடன் எழுந்து) அட ராமா! உங்களை காப்பி வேணுமான்னு கேக்க மறந்தே போயிட்டேனே. வயசாயிண்டு வரதில்லையா? கொண்டு வரேன். ஆனா நெஸ்கபேதான். ஏன்னா, டிகாஷன் போட மறந்துட்டேன்.

    *****

    2. ரிஸப்ஷன் ப(பர்)ட்டி மன்றம்

    (சாத்தூர் சுப்பையாவின் தலைமையில் கல்யாணப் பெண் வந்தனாவின் வீட்டில் பட்டி மன்றம் தொடங்குகிறது)

    சுப்பையா: மலபார் அவியலின் சேர்மானத்துடன் இணைந்து வாழும் குடும்ப அங்கத்தினர்களே! அன்பு உள்ளங்களே! சாப்பாட்டுப் பிரியர்களே! வரவிருக்கும் வந்தனா கல்யாண ரிஸப்ஷன் விருந்து, 'இலை போட்டே' என்று அங்கிள் அண்ணாசாமியும், ‘புஃபேயே' என்று ‘பைக்' பாஸ்கரும் வாதாட வராங்கய்யா. அண்ணாசாமி ஆயிரம் கல்யாண விருந்துகளில் கை நனைத்து, நீண்ட அதிரடி ஏப்பங்கள் விட்டவர். பாஸ்கரோ இளங்கன்று. ஈ.சி.ஆரில் பைக் ஓட்டிக் கொண்டே, அடர்த்தியான மீசையில் ஒரு துண்டு சிக்காமல் கப் - நூடுல்ஸ் சாப்பிட்டு சாதனை செய்து அசத்தியவர். ரெண்டு பேரும் இன்னிக்கு மோதிக்கறாங்கய்யா. முதல்லே அண்ணாசாமி. வாங்கய்யா! வந்து உங்க கருத்தை லைன்லே வந்து பரிமாறுங்க.

    அண்ணா: தலைவர் அவர்களே! பசியால் வாடும் காதுகளில், ‘இலை போட்டாச்சு’ என்கிற குரல் பால் பாயசமாக வந்து பாயும். ஈரத்தால் பளபளக்கும் மரகதப் பச்சை நிற நுனி வாழை இலை வரிசைகள் விருந்தினர்களுக்கு பசி ஊக்கியாக அமைவது போல, காய்ந்த விரட்டியாக அடுக்கப்பட்ட பீங்கான் தட்டுகள் அமையுமா? பாயசத்திலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு ஐட்டமாக சாஸ்திரப்படி அதற்காக வரையறுக்கப்பட்ட இடங்களில் பரிமாறுவது, வெவ்வேறு நிற, நீள அகல உலகத் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தக் கூடிய உச்சி மகாநாட்டில்

    Enjoying the preview?
    Page 1 of 1