Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vinakkalum Kanakkalum
Vinakkalum Kanakkalum
Vinakkalum Kanakkalum
Ebook61 pages22 minutes

Vinakkalum Kanakkalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது எனது முதல் நாவல். ஒரு பெண். அவள் தன் தாயின் ஆசைகளை நிறைவேற்றுவதையே லட்சியமாகக் கொண்டவள். அவள் அதில் ஜெயித்தாளா? இல்லையா? என்பதைச் சொல்லும் கதை.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580142206690
Vinakkalum Kanakkalum

Read more from Lalitha Shankar

Related to Vinakkalum Kanakkalum

Related ebooks

Reviews for Vinakkalum Kanakkalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vinakkalum Kanakkalum - Lalitha Shankar

    https://www.pustaka.co.in

    வினாக்களும் கனாக்களும்

    Vinakkalum Kanakkalum

    Author:

    லலிதா சங்கர்

    Lalitha Shankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lalitha-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 1

    இன்னும் கொஞ்சம் கேசரி வெக்கட்டுமா? அம்மா! அம்மா!

    பரிமாறுபவரின் குரல் மீராவை உலுக்கியது.

    இரண்டு நாட்களாக அவளைச்சுற்றிச்சுற்றி வரும் கழுகின் நினைப்பு அவளை இம்சித்தது. அந்தக்கழுகுக்கு இரையாகும் மாடப்புறாவா? அல்லது அதனை பலம் கொண்ட மட்டும் எதிர்க்கும் பருந்தா நான்?

    அவள் நினைவுகள் பின்னோக்கிப்பின்னோக்கி ஓடியது.

    அந்த அழகிய எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய ஷிபான் புடவையை ஆசையாகத் தடவிப்பார்க்கும் அம்மாவைப்பார்த்து மீரா,

    அம்மா! இந்தப்புடவை அழகா இருக்குல்ல? இதை நீ கட்டிக்கிட்டா ரொம்ப அழகா இருக்கும்மா. வாங்கிக்கோயேன்?

    ம்ஹூம் அதெல்லாம் எனக்கு குடுத்துவைக்கல கண்ணு. இதையெல்லாம் பார்த்துப்பார்த்து ஏங்கணும். அதுதான் என்னோட தலையெழுத்து. வா! உனக்குத்தான் பிறந்தநாள் வருது. அதுக்கு முதல்ல வாங்குவோம்.

    அம்மா! இந்தப்பட்டுப்பாவாடை அழகா இருக்குல்ல? வாங்கித்தரயா?

    அடடா! அழகா ஜொலிஜொலிக்குதே! ம்ஹூம்! நமக்கு இதுக்கெல்லாம் கொடுப்பினை இல்ல தங்கம். நீ வா! அங்க பிராக் தொங்குது பாரு! அதுல ஒண்ணு எடுத்துக்கலாம்.

    அப்படிப்பார்க்காதடா ராஜாத்தி! எனக்கு மட்டும் உன்னை விதவிதமா துணி உடுத்தி அலங்கரிச்சுப்பார்க்கணும்னு ஆசை இல்லன்னு நினைக்கறயா? என் தங்கம் இல்ல?

    சரிம்மா! இதையே வாங்கு!

    வசந்தாவிற்கு மனது வலித்தது. சே! ஆசைப்படுவதை வாங்கி அனுபவிக்க முடியாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?

    வசந்தா! இன்னிக்கு சம்பளம் வந்துடுச்சு, மல்லிப்பூவும் அல்வாவும் வாங்கிட்டு வந்தேன். பசங்களுக்கும் குடுத்துட்டு நீயும் சாப்பிடுவயாம்.

    ஆசையுடன் பார்க்கும் ராஜேந்திரனைப் பார்த்து, ம்க்கும். பொல்லாத சம்பளம். என்னமோ லட்சலட்சமா கொட்டறமாதிரிதான். உங்க சம்பளத்தை வெச்சு என்ன பண்ணமுடியும்? சோத்தை வடிச்சு வடிச்சு கொட்டினத்தைத்தவிர நான் வேற என்னத்தைக்கண்டேன்?

    இப்ப நமக்கு என்ன குறைச்சல் வசந்தா? PWD ல வேலை, கவர்ன்மெண்ட் கோர்ட்டர்ஸ், நிம்மதியான வாழ்க்கை வேற என்ன வேணும் சொல்லு?

    ஆ…மாம்! உங்க வேலையும் நீங்களும். நீங்கதான் மெச்சிக்கணும். கவர்ன்மெண்ட் வேலைன்னா சம்பளம் அதுக்கும்மேலே கிம்பளம்னு வரும். நம்ம பொண்ணு சந்தோஷமா இருப்பான்னு எங்க அப்பா உங்களுக்கு என்னைக்கட்டி வெச்சார். இங்க வந்து பார்த்தா மூக்கோட்டைக்குக்கூட பத்தாத ஒரு சம்பளம். இதுல நாங்க உச்சி குளிர்ந்து போகணுமாக்கும்?

    வசந்தா! இன்னிக்கு நான் எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா? என்னதான் வேணும் உனக்கு? இப்படியே

    Enjoying the preview?
    Page 1 of 1