Eliyum Naanum
()
About this ebook
வணக்கம்! இது நான் எழுதி முகநூலில் நல்ல வரவேற்பைப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு. என் வாழ்வின் பல அனுபவங்களின் ஒரு சிறு பகுதி இந்தக்கட்டுரைத்தொகுப்பு. உங்களைக்கொஞ்சம் சிரிக்கவும் வைக்கும் என்று நம்புகிறேன். படித்து பின்னூட்டம் இட்டால் மகிழ்வேன். மேலும் மேலும் உங்களைக்கொஞ்சம் சிரிக்க வைக்க இது கொஞ்சம் உந்துசக்தியாக இருக்கும். நன்றி,
லலிதா சங்கர்.
Read more from Lalitha Shankar
Aagasa Kottai Rating: 0 out of 5 stars0 ratingsMafiavum Maaya Ulagamum Rating: 0 out of 5 stars0 ratingsAllopathiyum Naanum Rating: 0 out of 5 stars0 ratingsAmputtu Aasai Rating: 0 out of 5 stars0 ratingsBindi Sabji Rating: 0 out of 5 stars0 ratingsAlamu Paattiyum Koushikum Rating: 0 out of 5 stars0 ratingsSappendru Oru Arai Rating: 0 out of 5 stars0 ratingsMary Endra Maari Rating: 0 out of 5 stars0 ratingsMel Nokki Paayum Aruvi Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugalum Ennangalum Rating: 0 out of 5 stars0 ratingsIthuthan Kaadhala? Rating: 0 out of 5 stars0 ratingsKansuvin Andraada Akkap Porgal Rating: 0 out of 5 stars0 ratingsPallathin Manathu Rating: 5 out of 5 stars5/5Kannukutty Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsVinakkalum Kanakkalum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Eliyum Naanum
Related ebooks
Ninaivugalum Ennangalum Rating: 0 out of 5 stars0 ratingsAndharmugam Rating: 0 out of 5 stars0 ratingsVelvom Rating: 0 out of 5 stars0 ratingsPattikkattu Krishnan Rating: 0 out of 5 stars0 ratingsAdai Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsIndiargal Kaadhalikkirargal! Rating: 5 out of 5 stars5/5Thottathil Oru Veedu Rating: 0 out of 5 stars0 ratingsAppavin Radio Rating: 0 out of 5 stars0 ratingsKattazhagu Rajyam Rating: 0 out of 5 stars0 ratingsPulligalum Kodum Rating: 0 out of 5 stars0 ratingsTheerpu Rating: 0 out of 5 stars0 ratingsPasithalum Puli... Rating: 0 out of 5 stars0 ratingsKollathey Yaarum Paarthal! Rating: 0 out of 5 stars0 ratingsKuttram Purinthavan Rating: 0 out of 5 stars0 ratingsAnbaana Anuvirkku Rating: 0 out of 5 stars0 ratingsVaazhvil Vetri Rating: 0 out of 5 stars0 ratingsKathai Paathiram Rating: 0 out of 5 stars0 ratingsKanavugalukku Kaathiruthal Rating: 0 out of 5 stars0 ratingsImaikatha Iravu Rating: 5 out of 5 stars5/5Dharmayutham Rating: 5 out of 5 stars5/5Nivetha Nee Engey Rating: 5 out of 5 stars5/5Sollattuma Konjam? Rating: 0 out of 5 stars0 ratingsMaalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsSoundarammal Rating: 0 out of 5 stars0 ratingsMugizh Nagai Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsMana Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsKaal Rasi Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Pen... Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Pengalin Sneham Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Eliyum Naanum
0 ratings0 reviews
Book preview
Eliyum Naanum - Lalitha Shankar
https://www.pustaka.co.in
எலியும் நானும்
Eliyum Naanum
Author:
லலிதா சங்கர்
Lalitha Shankar
For more books
https://www.pustaka.co.in/home/author/lalitha-shankar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
எலியும் நானும்
ஜீவகாருண்யம்-ஒரு யதார்த்தவாதியின் பார்வையில்:
வீடு வாங்கலையோ! வீடு!
வியாதியும் வியாதியஸ்தர்களும்
லாக்டவுன் அனுபவம்-தோசை
பொறாமை என் பார்வையில்
மழை வருது மழை வருது
நானும் எழுத்தாளராகவேண்டும்
திருப்புமுனை
என் நாடக அனுபவம்
ஒரு அனுபவம்
என் முதல் விமானப்பயண அனுபவம்
ஆண்ட்ராய்டு போனும் நானும் என் அம்மாவும்
அழகுக்கலை
எலியும் நானும்
எலியின் அட்டகாசத்தை வைத்து ஒரு முழுநீளப்படமே வந்துவிட்டது. அதை மீறி ஒரு கட்டுரையா? எனும் எண்ணம் இந்த தலைப்பை பார்த்தவுடன் அனைவருக்கும் வரும். அதுவும் சரிதான். என்ன செய்வது! என் உள்மனம் இதை பற்றி கட்டுரை எழுதச்சொல்லி என்னை பாடாய் பாடு படுத்துகிறதே! அதனால் எழுத தொடங்கிவிட்டேன். ஆனால் அரைத்த மாவையே அரைக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன்.
எலிக்கும் எனக்கும் என் திருமணத்திற்கு முன்பு வரை நேரடித்தொடர்பு கிடையாது. என் அம்மா என் இரு அண்ணன்களிடமும் இரு பெரிய தாத்தா கம்பை கொடுத்து எலி இருக்கும் திசையில் நிற்க வைத்துவிடுவாள். அவர்கள் இருவரும் தப்பித்தவறி கூட எலிமேல் தங்கள் கம்பு பட்டுவிடாதபடி தரையில் டொப் டொப் என்று அடித்து போக்கு காண்பிப்பார்கள். அம்மா அவர்களைத்திட்டுவாள். நாங்கள் இதை ஒரு நகைச்சுவை காட்சியாக பார்த்து ரசிப்போம். ஒவ்வொரு மாதமும் இது நடக்கும். எலி அடிக்கும் பொழுதுபோக்கில் ஒரு எலி கூட இறந்ததில்லை. வழக்கம்போல் அது தப்பித்துப்போய்விடும்.
திருமணமாகி டெல்லியில் தனிக்குடித்தனம். மூன்றாவது மாடியில் எங்கள் குடியிருப்பு. நடுஇரவு! நான் மல்லாக்க படுத்துக்கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்தேன். என் ஒருகையிலிருந்து இன்னொருகைமேல் ஏதோ ஒன்று ஓடிப்போனதுபோல ஒரு குறுகுறுப்பு. சடாரென்று முழிப்பு வந்தது. அருகில் இருந்த கணவனை எழுப்பினேன். ஏதோ ஒன்று மேல ஏறினமாரி இருந்ததுப்பா.
அதெல்லாம் ஒண்ணும் இல்லையே! உன்னைத் தாண்டி என்மேல எதுவும் ஏறினமாரி தெரியலையே? ஏதோ பிரமை உனக்கு தூங்கு,
என்று கூறிவிட்டு அவர் கும்பகர்ணனாக தொடர்ந்தார். எனக்கு ஒரே குழப்பம்.
மறுநாள் இரவு நான் கொஞ்சம் உஷாராக இருந்தேன். அதேபோல ஒருகையில் இருந்து மறுகையில் ஏறியவுடன் சடக்கென்று எழுந்து விளக்கை போட்டேன். ஒரு சுண்டெலி என்னை திரும்பி பார்த்தபடி ஓடியது. எனக்கு தூக்கம் போச்சு. அன்றிலிருந்து எலியின் ஆட்டம் ஆரம்பம். அப்போது பிரிட்ஜ் கிடையாது. காய்கறிகளை கூடையில் தான் வைப்பது வழக்கம். கூடையிலிருந்த தக்காளியை ஒவ்வொரு அடி இடைவெளியில் ஒவ்வொரு தக்காளியாக கடித்து, கடித்து வைத்து போக்கு காமிக்கும். ஒரு தக்காளியை ஒழுங்கா தின்னு தொலைக்காம பத்து தக்காளியை ஒவ்வொரு கடியா கடிச்சு வெச்சா? எனக்கு பத்திக்கொண்டு வரும். எலிக்கு ஒரு முடிவு கட்டவேண்டும். முதலில் எலிப்பொறி வாங்கி அதில் பிரட் துண்டை நெய்யில் தோய்த்து வறுத்து மாட்டினால் எலி சிக்கிக்கொள்ளும். பிறகு அதை தொலைதூரத்தில் விட்டுவிடலாம் என்று என் மச்சினர் சொன்னதை கேட்டு அதன் படி செய்தேன். மறுநாள் ஆசையோடு எலிப்பொறியை பார்த்தால் அது சமத்தாக பிரட் துண்டை தின்றுவிட்டு பொறியில் சிக்காமல் சென்று விட்டது. அது நம்மை விட புத்திசாலியாச்சே! அதன் பிறகு மச்சினர் யோசனைப்படி கோதுமைமாவில் எலிபாஷாணத்தை கலந்து உருட்டி, உருட்டி வைத்தேன். ஆனால் இரவில் எலி பரிதாபமாக இறக்கும் காட்சி என் நினைவில் வந்து உலுக்கி ஒரு வித அவஸ்தையில் தவித்தேன். மறுநாள் விடிந்தவுடன் கோதுமை உருண்டைகளை பொறுக்கி தூரப்போட்டேன். பிறகுதான் நிம்மதி. போய்த்தொலையட்டும் அதை கொன்னு அந்த பாவம் நமக்கெதுக்கு? ஆனால் அதன் பிறகு எலி என்னை பார்த்து பரிதாபப்பட்டு வருவதில்லை. ஆனால் நாங்கள் வேறு வீடு மாறி புதிதாக முதல்மாடியில் ஒரு வீட்டிற்கு