Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kansuvin Andraada Akkap Porgal
Kansuvin Andraada Akkap Porgal
Kansuvin Andraada Akkap Porgal
Ebook54 pages19 minutes

Kansuvin Andraada Akkap Porgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கண்சுவின் அன்றாட அக்கப்போர்கள். கண்சு என்ற கணேசன் நிஜத்தில் என் அண்ணன். சிரிக்க சிரிக்க பேசுவான். முதலில் விளையாட்டாய் அவன் பேசுவதை வைத்து எழுத ஆரம்பித்து பின் நகைச்சுவையாக அவனை வைத்து கற்பனையிலும் கதைகள் தெறித்து விழுந்தன. இதில் எது கற்பனை எது நிஜம் என்பது எனக்கும் என் அண்ணன் கணேசனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். கதைகள் படிக்கும்போது உங்களுக்கு சிரிப்பு வந்தால் அதை எனக்கு தெரிவிக்க மறக்காதீர்கள். அடுத்த பகுதி எழுத உந்து சக்தியாக உங்கள் விமர்சனம் நிச்சயம் இருக்கும்.

அநேக பிரிய்ங்களுடன்,

லலிதா சங்கர்.

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580142208501
Kansuvin Andraada Akkap Porgal

Read more from Lalitha Shankar

Related to Kansuvin Andraada Akkap Porgal

Related ebooks

Related categories

Reviews for Kansuvin Andraada Akkap Porgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kansuvin Andraada Akkap Porgal - Lalitha Shankar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கண்சுவின் அன்றாட அக்கப்போர்கள்

    Kansuvin Andraada Akkap Porgal

    Author:

    லலிதா சங்கர்

    Lalitha Shankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lalitha-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கண்சுவும் கருப்பு ரோசாவும்

    கண்சுவும் அப்ரைசலும்

    கண்சுவின் ஞாபகம் வருதே!

    கண்சுவின் புது வாடகை வீடு

    கண்சுவும் அந்த துக்கமும்

    கண்சுவின் திக் திக் அனுபவம்

    கண்சு காது கேக்காது!

    கண்சுவும் கருப்பு ரோசாவும்

    அது ஒரு ஞாயிறு காலை,

    என்ன? இன்னிக்கு காலைலயே கருப்பு ரோசாவோட உட்கார்ந்துட்டீங்க? அய்யா! எப்பவும் வெள்ளை முடியைப்பத்தி கவலையே படாத ஆளாச்சே! இன்னிக்கு என்ன திடீர்னு?

    அதுவா! நாளைக்கு எங்க ஆபீஸ்ல புதுசா ஒரு பாஸ் வரப்போறாங்க. வரப்போறவங்க முன்னாடி நான் ஹீரோ மாதிரி தெரியவேண்டாமா? அதுக்குத்தான்.

    ஓ! வரப்போற பாஸ் யாரு லேடி பாஸா?

    அப்படி இருந்தாத்தான் நல்லா இருக்குமே! எங்க? எங்க ஆபீஸ்ல அப்படி வந்துட்டாலும். வறண்ட மூஞ்சிகளையும் வறண்ட பேச்சையும் கேட்கணும்னுதானே என் தலைல எழுதி இருக்கு! நாளைக்கு மட்டும் ஒரு லேடி பாஸ் வரட்டும், உன் வாய்க்கு சக்கரைபோடறேன் ஜெய்!

    போதுமே! உங்க ஆசைல மண்ணை அள்ளிப்போட! அய்யய்யோ! மீசைக்கு எதுக்கு இதைப்போடறீங்க?

    பின்ன! தலைல டை அடிச்சுட்டு மீசையை மட்டும் வெள்ளைவெளேர்னு வெச்சுண்டா நல்லாவா இருக்கும்? அதான் அதுக்கும் கொஞ்சம் போட்டுவிட்டேன்.

    என்னவோ பண்ணுங்க!

    ஜெய்! இப்போ நான் பார்க்க எப்படி இருக்கேன்? ஹீரோமாதிரி இல்ல?

    டை அடிச்சாத்தானா? நீங்க எப்பவும் எனக்கு ஹீரோதான்.

    அடடா! இதைக்கேக்கும்போது எனக்குக்குத்தாலத்துல குளிச்சதுபோல ஜில்லுன்னு இருக்கே!

    ஏங்க! எல்லாம் நல்லாத்தான் இருக்கு. இந்த மீசைதான் ராஜா மீசை மாதிரியும் இல்லாம சாதா மீசை மாதிரியும் இல்லாம ரெண்டுங்கெட்டானா தொங்கு மீசை மாதிரி இருக்கு. இதைக்கொஞ்சம் ட்ரிம் பண்ணினா பக்காவா நீங்க ஹீரோதான்.

    அப்படியா? இரு உடனே ட்ரிம் பண்ணறேன். என் பொண்டாட்டி சொன்னா அதுக்கு மறுபேச்சு ஏது?

    இப்போ பாரு.

    இந்த வலது பக்கம் கொஞ்சம் பெருசா இருக்கோ?

    இப்போ?

    இப்போ இடது பக்கம் கொஞ்சம் பெருசா இருக்கற மாதிரி இருக்கு இல்ல?

    இப்போ பாரு.

    அய்யய்யோ! இப்போ வலது பக்கம் கொஞ்சம் சின்னத்தாயிடுச்சு பாருங்க.

    Enjoying the preview?
    Page 1 of 1