Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalaagi Kasindhurugi
Kaadhalaagi Kasindhurugi
Kaadhalaagi Kasindhurugi
Ebook105 pages32 minutes

Kaadhalaagi Kasindhurugi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Sudha Suresh
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466503
Kaadhalaagi Kasindhurugi

Read more from Sudha Suresh

Related to Kaadhalaagi Kasindhurugi

Related ebooks

Reviews for Kaadhalaagi Kasindhurugi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalaagi Kasindhurugi - Sudha Suresh

    21

    1

    காதல்...

    உனது பெயரை

    உன்னையே ரசிக்க வைக்கும்

    வல்லமை வாய்ந்தது!

    அட்டென்ஷன் ப்ளீஸ்......

    ‘இப்ப நீங்க பார்க்கிறதுதான், கொடைக்கானலை சந்து பொந்தெல்லாம் பிரபலமாக்க வச்ச ‘தி ஃபேமஸ் சூசைட் பாய்ண்ட்’ தற்கொலை பண்ணிக்கனும்னு முடிவெடுத்து, இங்க வந்து குதிச்சாங்கன்னா உடம்பு கீழ போகறதுக்குள்ள உசுரு மேல போயிடும்... ஒரு நேரத்துல, காதல்ல தோத்த ஜோடிங்க சகட்டு மேனிக்கு இங்க வந்து உயிரை விட்டாங்க! செதறுன உடம்புகளையும், எலும்புகளையும் பொறுக்கறதே கவர்ன்மெண்ட்டுக்கு பெரிய வேலையா போச்சு... இனிமே இது சரிபட்டு வராதுனு, ‘எல்லை வலை’ போட்டுட்டாங்க! அரசாங்கத்துக்கே இந்த இடம் கொடைச்சலை குடுத்துச்சுன்னா பாத்துக்கங்க! காதலுக்கு அம்புட்டு சக்தி!...

    காதலுக்கு அம்புட்டு சக்தி! ‘கைடு’ சொன்னதைக் கேட்டு கிரிதர் உள்ளூர சிரித்துக் கொண்டான்.

    ஆம்... காதலுக்கு தான் எத்தனை சக்தி!

    அவனையறியாமல் ரம்யாவின் ஞாபகம் வந்து நெஞ்சை நிரப்பிக் கொண்டது!

    ரம்யா!

    ரம்யா இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்! கிரிதர் ஆபீஸ் க்ளையண்டிற்கு ஊர் சுற்றிக் காட்டிக் கொண்டிருப்பது போல தான் சென்ற பிக்னிக்கில், ஏதோ ஒரு கைடு, ஏதோ ஒரு காதல் கதையைச் சொல்ல... ‘கிரிதர் இப்போது என்ன செய்து கொண்டு இருப்பான்’ என்று, தான் நினைப்பது போல் நினைத்துக் கொண்டிருப்பாளோ!

    அசட்டுத்தனமாகத் தான் எண்ணியதை நினைத்து கிரிதருக்கே சிரிப்பு வந்தது. கைடு சொன்னது போல, ‘காதல்’ என்றதும் இத்தனை வயதிற்கு மேலும் அசட்டுத்தனம் வருகிறதென்றால்...! அப்ப்ப்பா... அதற்குதான் எத்தனை சக்தி!

    கண்ணுக்கு தெரிந்த மட்டும் மெல்லிய புகையென மேற்குத் தொடர்ச்சி மலையின் மேகங்கள், வெண்புகை போல தவழ்ந்து சென்றது. தன் கால்களை தழுவிச் சென்ற மேகங்களைப் போல... கிரிதரின் நினைவுகளும் அவனை அறியாமலேயே பல வருடங்களுக்கு முன்னாலான ஒரு மாலை பொழுதிற்கு தவழ்ந்து சென்றது!

    அதுதானே... அந்த மாலைப் பொழுது தானே ஒரு இனிய காதல் காவியத்திற்கு முத்தாய்ப்பு வைத்தது. முப்பது வருடங்களுக்கு மேல இருக்குமா? இருக்கும்... அதனாலென்ன!

    இந்த மனம் இருக்கிறதே ஆகச்சிறந்த ‘மெமரி கார்ட்’. எதையும் நினைத்த வினாடியில் கடகடவென திரைப்படம் போல கண்முன் ஓட்டும்! அப்படித் தான், அனிச்சை செயலாய் உடம்பு மட்டும் கூட்டி வந்த கிளையன்டுகளுடன் நடக்க, உள்ளம் மட்டும் மதுரை வீதியில், சிவாவுடன் பேசிக்கொண்டு நின்ற அந்த நாளைப் படம் போலக் காட்டியது!

    என்னடா மாப்ள எப்படி பண்ணிருக்க காம்பௌண்ட் வாசலில் நின்றிருந்த கிரிதரை நோக்கி சைக்கிளை நிறுத்தியபடியே கேட்டான் சிவா.

    எதோ பண்ணிருக்கேன்டா... நீயி... அடச்சே... உன்னை போய்க் கேக்றேன் பாரு... நீதான் படிப்பாளியாச்சே

    ஆமாண்டா! இப்படி ஏத்தி விட்டே ஒடசல கொடுங்கடா... ஆனா, மாப்ள என்ன இருந்தாலும் உனக்கு அதிர்ஷ்டம்டா... நல்லா மெயின் ரோட்டுல வீடு... பக்கத்துலையே கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸகூல்... படிக்கிறதுல பாதி பிள்ளைங்க இங்கனதான் கடந்து போகுதுங்க!

    ஹஹ... என்னடா சிவா! என்னைப் பத்தி உனக்கு தெரியாதா! எனக்கு இதுலலாம் இன்ட்ரஸ்டே இல்ல... இல்ல

    சிவா மட்டுமல்ல என் உடன் படித்த பல நண்பர்களுக்கு காதில் புகை வரும். நான் இருந்தது பத்து, பதினோரு குடித்தனங்கள் அடங்கிய காம்பௌண்ட்தான். ஆனால் அது அமைந்த இடம் அப்படி. ஆயிரக்கணக்கான பெண்கள் படித்த பள்ளி என் வீட்டருகே! அதனால், என் வீட்டை தாண்டியுள்ள சுத்துப்பட்டு ஏரியாவின் தொன்னூறு சதவிகித டீனேஜ் பொண்ணுங்க என் வீட்டைத் தாண்டிதான்ச் செல்ல வேண்டும். மாடியில் நின்று பார்த்தால், ஜெகஜோதியாக இருக்கும்! ஆனால், எனக்கென்னவோ இதிலெல்லாம் அத்தனை ஈடுபாடு கிடையாது.

    அன்றும் அப்படித்தான், டைப்ரைட்டிங் எக்ஸாம் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அந்த பள்ளி விட்டு மயில்களும் மான்களும் வரத் துவங்கி இருந்தன. அதைப் பார்த்துவிட்டுத் தான் சிவாவின் காதில் அந்த புகை!

    பேசிக் கொண்டே நின்ற போது அவள் வந்தாள். இந்த நேரத்தில் ஒன்று முக்கியமாக சொல்லியாக வேண்டும். கொஞ்ச நாட்களாக அந்த நட்ஷத்திரக் கூட்டத்தில் அவள் நிலவெனத் தனியாகத் தெரிந்தாள். அப்படி ஒன்றும் அழகோ, சிவப்போ இல்லை! அந்த மாநிறமே அவளுக்கு தனி அழகை கொடுத்ததோ என்னவோ! ஆனால் என்னைக் கவர்ந்தது அந்த அழகல்ல! அவள் நடந்து வந்த விதம். எப்பொழுதும் போல் இரு தோழியர் இரண்டு பக்கமும் வர, குனிந்த தலை நிமிராது வந்து கொண்டிருந்தாள். பல சமயங்களில் என் பார்வையில் படத் தொடங்கியதிலிருத்து, என்னை க்ராஸ் செய்யும் வரை கண்கொட்டாமல் பார்த்திருக்கிறேன்... கூட வரும் தோழிகளின் பேச்சுக்கு தலையாடுமே தவிர, இவள் பேசியோ தலை நிமிர்ந்தோ நான் பார்த்ததேயில்லை. இப்படியும் ஒரு பொண்ணா! இன்ட்ரஸ்டே இல்லாத எனக்கும் ஒரு ஈர்ப்பினைத் தந்திருக்கிறாள் என்பதே, ‘சைட்’அடிப்பதை பற்றிய சிவாவின் இன்றைய பேச்சுதான் காட்டியது.

    மாப்ள... டக்குனு திரும்பாத... உனக்கு இருபதடி தூரத்ல ஒரு பொண்ணு தலைய குனிஞ்சா மாதிரியே வருது பாரு! பக்கத்ல ரெண்டு சொரட்டைங்க கக்க பிக்கனு சிரிச்சிக்குட்டே வரும்... இவ எவ்ளோ அமைதியா வரா பாரு மாப்ள... பல நாள் கவனிச்சுருக்கேன்டா, இப்டியே தான் வரா... நீ நம்ப மாட்ட, இவ தலை நிமிர்ந்தே நான் பார்த்ததில்ல

    வழக்கம் போல் கண்கொட்டாமல் அவளை பார்த்தபடியே, சிவாவிடம் பல்லைக் கடித்தபடி சொல்லவும், மெதுவாய் திரும்பிப் பார்த்தான்... பார்த்த வேகத்தில் சடக்கென திரும்பியவன், எனக்கு மேல பல்லைக் கடித்தபடி சொன்னான்...

    டேய் சும்மார்றா... அங்க பாக்காதடா... தெரிஞ்ச பொண்ணுடா அவன் முகத்தில் ஒரு பதட்டம் அப்பட்டமாய்த் தெரிந்தது!

    அட! என்னடா சொல்ற!... தெரிஞ்ச பொண்ணுனா... ஓ... நீ சைட்டடிக்கிறியாக்கும். சூப்பர்றா சிவா! பார்த்தா நல்ல பொண்ணா தெரியுது! பெஸ்ட் ஆஃப் லக்டா மாப்ள

    சே... சே... அதெல்லாம் ஒன்னுமில்லடா... நீ வேற

    இதுல என்னடா இருக்கு! அப்படி எதாவது இருந்தா மறைக்காம சொல்லு! நாளப்பின்ன ஹெல்ப் கில்ப்பு கூட செய்றேன்

    Enjoying the preview?
    Page 1 of 1