Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaaimaiyidathu
Vaaimaiyidathu
Vaaimaiyidathu
Ebook128 pages1 hour

Vaaimaiyidathu

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written BySudha Suresh
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466503
Vaaimaiyidathu

Read more from Sudha Suresh

Related to Vaaimaiyidathu

Related ebooks

Related categories

Reviews for Vaaimaiyidathu

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaaimaiyidathu - Sudha Suresh

    30

    1

    "ஓம் சனைச்சராய வித்மஹே

    சாயாபுத்ராய தீமஹி

    தந்நோ: மந்தப்ரசோதயாத்

    ஓம் காக த்வஜாய வித்மஹே

    கட்க ஹஸ்தாய தீமஹி

    தந்நோ மந்த: ப்ரசோதயாத்"...

    மனதார சனீஸ்வர காயத்ரி மந்திரங்களை சொல்லி நமஸ்காரம் செய்து, பூஜை அறை விட்டு பர்வதம் வெளியே வரும் பொழுது காலை ஆறு ஆறரை இருக்கும். இது இன்று நேற்றல்ல! வருடக்கணக்காக தொடருகிற பழக்கம்.

    சாதாரணமாக, சனீஸ்வர தெய்வத்தை யாரும் வீடுகளில் வணங்குவது இல்லை... கோயிலுக்குச் சென்றால் அங்கேயொரு அவசரக் கும்பிடு... அதுவே சனிக்கிழமையாக இருந்துவிட்டால், ‘ஸ்பெஷலாக’ அன்று மட்டும் சனீஸ்வரன் சன்னதியை ஒன்பது சுத்து... இன்னும் சொல்லப் போனால் ‘அவர்’ பெயரைச் சொல்லக் கூட பலர் பயப்படுவார்கள்! சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் ‘சனிக்கிழமை’ என்று கூட சொல்ல மாட்டார்கள்... வெள்ளிக்கு அடுத்த கிழமை., ஞாயிறுக்கு முந்தியக் கிழமை என்பார்கள். இன்னும் சிலர், நூறு படி மேலே போய் ‘8’ என்ற எண்ணை சொல்ல மாட்டார்கள்! ஏனென்றால் அது சனி பகவானுக்கு உரிய எண்ணாம்... அதனால், ஒன்பதுக்கு முந்தியது, ஏழுக்கு அடுத்தது என பிலாக்கனம் பாடுவார்கள். இவர்களின் அழுகைக்கு அந்த சனீஸ்வரனே தேவலாம்! கேட்டால் ‘அதிஜாக்கிரதையாய்’ இருக்கிறார்களாம்! சோதனைக்கென்றே இவர்களைப் போன்ற சிலருக்கு ‘எட்டாம்’ தேதியே பிறந்தநாளாய் அமைந்து தொலைக்கும்! இல்லையெனில் இவர்களின் வாரிசுகள் அன்றையத் தேதியில் பிறக்கும்! எல்லாம் அந்த சனீஸ்வரனின் லீலைகள்!

    பர்வதம் அப்படியல்ல... அவளுக்கு நான்கு வரியேனும் ‘கௌசல்யா சுப்ரஜா’வில் தொடங்கி, வரிசையாக சில பல தெய்வங்களுக்கு அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு ‘சனீஸ்வர காயத்ரி’யில் முடித்தால் தான் திருப்தி.

    நன்றாக பொலபொலவென பொழுது விடிவதற்குள், அதாவது சாதாரணமாக நமக்கெல்லாம் விடியும் ஏழு...எட்டு மணி இல்லை! உண்மையான அதிகாலையில் எழுந்துவிடுவாள். இன்றளவிலும் பெயருக்காகவேணும் சிறுதுளி சாணியை அரை பக்கெட் தண்ணீரில் கலந்து, வாசல் தெளித்தால்தான் அவளுக்கு நிம்மதி. ( இந்த பசுஞ்சாணியை கொடுப்பதற்காகவே கார்டன் தெரு மாரிமுத்துவிற்கு மாசமானால் தவறாது இருநூறு முன்னூறு முள்ளங்கி பத்தையாட்டம் படியளப்பாள் ) ரெண்டு புள்ளியோ... ஏழு புள்ளியோ ஒரு கோலத்தையும் இழுத்துவிட்டு... ஒரு நாளைப் போல சித்த நாழியாவது நின்னு, அதை தானே ரசித்து (!) பார்வை பார்க்கும் அழகே தனி.

    பர்வதம்...

    அறுபதுகளில் பிறந்த மனுஷி... கொஞ்சம் குள்ளந்தான்! ஆனாலும் அவளது செவேலென்ற அழகும், மகாலட்சுமி போன்ற களையான முகமும், அந்த பக்கம் இந்த பக்கம் அவள் திரும்பும்போது மின்னும் வைரக்கல் மூக்குத்தி அணிந்த மூக்கும், ஏழுகல்லு வெள்ளை புஷ்பராக வைரம் பதிச்ச, பல பலனு டாலடிக்கிற தோடும், மடிசார் புடவையும்... இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இத்தனைக்கும் இன்னும் இரண்டு மூன்று வருடத்தில் அறுபது வயது நெருங்கப் போகிறது.

    பார்த்தால் யாராவது சொல்ல முடியுமா... அந்தக்கால ஊட்டச்சத்து!

    அந்தகாலம்! அட அட அட பொற்காலமாச்சே!

    பர்வதமே இதை அடிக்கடி புலம்புவதுண்டு! ‘என்னத்த பிள்ளைங்களோ போ... ரெண்டு கிலோ அரிசியை தூக்க முடியல... இந்த கைக்கும் அந்த கைக்கும் பத்து தரம் மாத்தறதுகள். நாங்கள்லாம் இப்படியா!? அதுவும் கிலோ...கிராம் எல்லாம் இப்பன்னா வந்தது! அப்பல்லாம் படி கணக்குதானே! ஒரு படி அரிசி இப்பத்தைக்கு ஒன்றரை கிலோன்னா இருக்கும்... அந்தக் காலத்தில பத்திருபது படி தானியத்தை சர்வசாதாரணமா தூக்கி இடுப்புல வச்சி, ஒரு மைல் ரெண்டு மைல்னா நடப்போம்... எல்லாம் சாப்பாட்டோட மகிமை!

    இந்த ஊட்டச்சத்து மகிமைக்கு அவள் அடிக்கடி சொல்லும் ஒரு உதாரண சம்பவம் சுவையாக இருக்கும். பர்வதத்தின் பாட்டியுடைய நாத்தனாருக்கு கல்யாணமாம்... எத்தனையாவது நாத்தனார்னுலாம் கேட்கப்படாது... கனக்கு தெரியாது... அப்போல்லாம் டஜன் கணக்கில் இல்ல பெத்துப்பா... ஏதோ ஒரு நாத்தனார்! அட! முதல்ல கல்யாண வைபவங்களை சொல்லனுமே! கல்யாணம் என்றாலும் சும்மாவா! அஞ்சு நாள் ஏழு நாட்களல்லவா நடக்கும். அதையெல்லாம் கதை கதையாக சொல்லணும்னா ஒரு நாள் போதாது... அப்பல்லாம் இத்தனை சத்திரம் சாவடிகளெல்லாம் ஏது! எல்லாம் கிராமத்தில்தான். தெருவை அடைத்துக் கொண்டு பந்தல் போட்டு... ஏழு நாளும் கல்யாண வீட்டைத் தவிர எந்த வீடுகள்ல அடுப்பு எரியும்... எல்லாருக்கும் நாலு வேளையும் சாப்பாடு காப்பித்தண்ணி அங்கதான்.

    கல்யாணத்திற்கு பட்ஷணங்கள் எல்லாம் ஆத்து மனுஷா தானே பண்ணிப்பா... அது போல பாட்டி அவ நாத்தனார் கல்யாணத்துக்கு முறுக்கு பிழிஞ்சுண்டு இருந்தாளாம்... சும்மா இல்ல... பாட்டி அப்போது இன்னிக்கோ நாளைக்கோ சிசு பூமில வந்து விழற அளவு நிறைமாச கர்ப்பிணி... முறுக்கு பிழிஞ்சுண்டுருக்கும்போதே இடுப்பு வலி கண்டுடுத்தாம்... பக்கத்தில் உள்ளவளிடம் ‘டீ சித்த பாத்துக்கோ... இடுப்பு நோவெடுக்கறது... வெளியில வர்றதுக்கு குழந்தை அவசரப்படறான்‌ போலருக்கு... நான் கடலைக்காய் தோட்ட குடிசைக்கு போய் புடுங்கி போட்டுக்கறேன்... போ நா கல்யாணத்துக்கு இருந்த மாதிரி தான்... இந்த மனுஷன் அதுக்கு வேற திங்கு திங்குனு குதிப்பார்’னு நடந்தே சென்று, தன் அப்பாவின் மூன்றாவது மாமாவைப் பெத்துப் போட்டாளாம்.

    இப்போ இது மாதிரி முடிகிறதா ‘காவிரி காத தூரத்தில் இருக்கும் போதே வேட்டியை அவுத்தானாம் ஒருத்தன்’ங்கற கதையா வலி வர்றத்துக்கு பத்து நாளைக்கு முன்னாடியே ஆஸ்பத்திரியில போய் படுத்துக்கறதுகள். பாதி பிரசவம் வயித்த கிழிச்சு வேற எடுக்கறான்கள். ஒன்னு ரெண்டுக்கே இந்த கூப்பாடு... அப்போ மாதிரி பத்து பதினொன்னுனா என்ன பண்ணுவாளோ... என அங்கலாய்ப்பாள்.

    பாட்டியின் ஸ்ட்ரென்த்தில் பாதியாவது பர்வதத்திற்கு இருக்காதா! அவளைப் போலவே அவள் செய்யும் காரியங்களும் வெகு அழகு. எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி அமைந்திருக்கும். காபி டிகாஷன் போடுவதற்கு கூட, நபர்கள் கௌண்ட்டிங்கிற்கு ஏற்ற மாதிரி... குட்டி பில்டர்லிருந்து மூன்று...நான்கு, சிட்டு போல வாங்கி அழகாக ஷெல்ஃபில் அடுக்கி வைத்திருப்பாள். அவள் சமையலறையை மெயின்டெயின் பண்ணும் விதம் பார்ப்பவர்களை ஈர்க்கும். காரியங்களை பொறுப்பாக செய்வது என்பது இந்த ஜெனரேஷனுக்கு கொஞ்சம் இல்லை நிறையவே மட்டுதான். பலருக்கு சுட்டுப் போட்டாலும் வருவது இல்லை. என்ன செய்வது அவசர யுகம்.

    பூஜை புனஸ்காரங்கள் முடித்து காபி போடுவதற்கு வாசலுக்கு வந்து பால் பையை எடுக்க வந்த பர்வதத்தின் முகம் கோபத்தில் சிவந்தது! அந்த சிவப்பை மூக்குத்தியில் பட்ட காலைக் கதிரவன் இன்னும் அதிகமாக்கினான்.

    2

    பாலை எடுக்க வந்த பர்வதத்தின் முகம், சிவக்கும் அளவிற்கு கோபம் வந்தது என்றால் அதற்கு காரணம் இருக்கத்தான் செய்தது!

    எதிர்பார்த்தோ எதிர்பாராமலோ

    மனுஷாளுக்கு பிடிக்காத செயல்,

    எது எப்படி எந்த நேரத்தில் நடந்தாலும் அது எரிச்சலை தரும். ஒன்னு நடந்தாலே எரிச்சல் என்றால், பெருமாளை சேவித்த கையோடு... அதுவும் காலங்கார்த்தால... அங்க இருந்த ‘கோலத்தை’ பார்த்தால் யாராக இருந்தாலும் பிரஷர் ஏறும்.

    வாசல்

    Enjoying the preview?
    Page 1 of 1