Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kutra Parigaram
Kutra Parigaram
Kutra Parigaram
Ebook177 pages3 hours

Kutra Parigaram

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Sudha Suresh
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466503
Kutra Parigaram

Read more from Sudha Suresh

Related to Kutra Parigaram

Related ebooks

Related categories

Reviews for Kutra Parigaram

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kutra Parigaram - Sudha Suresh

    35

    1

    அந்த இளங்காலை... ஸ்டாப்... ஸ்டாப்... வர்ணிப்புகளெல்லாம் வேண்டாம்! காலை... மணி ஆறு... அலாரம் அடித்தது... எழுந்தேன்! அவ்வளவுதான்.

    இப்பொழுது எழுந்தால்தான் சரியாக இருக்கும். ஒரு வாரமாகப் பார்த்தாயிற்று... சாலையின் ஓரமிருக்கும் குட்டிப் பிள்ளையாருக்கு, அவசர அவசரமாய்த் தன் வெண்டை விரல்களால், மோவாயில்த் தாளம் போட்ட படி உஷா கடந்து செல்லும் போது, மணி 7.03 ஆகும். (வேண்டுமென்றால் கூட குறைய ஒரு நிமிடம் வைத்துக் கொள்ளலாம்) அட்ஷர சுத்தமாக எப்படித்தான் அப்படி கடக்கின்றாளோ! அது அந்தப் பிள்ளையாருக்கே வெளிச்சம்., இல்லைனா ஆச்சர்யம்...! அட! ஏதோ ஒன்னு வைத்துக் கொள்ளுங்களேன்!இருங்கள்., உங்களுடன் பேசிக் கொண்டிருந்தால் என்ன ஆவது. மணி ஆகிறதே... நான் கிளம்ப வேண்டும்., அவளைப் பார்க்கனும்... பார்த்து தைரியமாக...

    தைரியமாக??!?

    பொறுங்கள்... என்ன அவசரம்! பார்த்துப் பார்த்து எழுதியிருந்த கடிதம், காற்றில் படபடத்து அவசரப் படுவது போல நீங்களும் பறக்கறீர்களே! பொறுமை! பொறுமை! போர்வையை உதறித்தள்ளி உற்சாகமாய் எழுந்தேன்.

    உற்சாகம்?!?

    பின்னே இருக்காதா! அப்ப்ப்பா! எத்தனை நாளாய் போட்ட ப்ளான்... இன்று நடைபெறப் போகிறதென்றால் உற்சாகம் வராதா! இரண்டு நாள் தாடி (!), கலைந்த தலை, லுங்கியுடனும் இருந்தவன்... அம்சமாய் மாற அரைமணி நேரம் ஆனது...! வாவ்! எனக்கே என்னைப் பிடித்தது. கடிதத்தை மறக்காமல் எடுத்துக் கொண்டேன்...

    லவ் லெட்டர் கொடுக்க இத்தனை பில்டப்பா?!?

    வெய்ட்... வெய்ட்... லவ் லெட்டர் என்று யார் சொன்னது...? நீங்களே முடிவு செய்து விடுவதா?

    பின்ன... ஷவரம்... டிப்டாப்... லெட்டர்... ப்ளான்... வேறு என்னவாம்!?

    அட! தேவுடா! உங்களிடம் விஷயத்தைச் சொன்னால்தான் சரிவரும் போல... உஷாவைக் கடத்தப் போகிறேனப்பா... கடத்தப்போகிறேன்!

    வ்...வ்வாட் கடத்தப் போகிறாயா? ஏய்... உலுலுவாட்டிக்குத்தான சொல்கிறாய்! கடத்தப் போவதற்கு இத்தனை அலங்காரமா?

    அட...! நம்பவில்லையா! ஆமாம்பா ஆமாம்! நிஜமாகத்தான் கடத்தப் போகிறேன்... ஏன்! கடத்த வேண்டுமென்றால் அட்டு பீஸாகத்தான் போக வேண்டுமா என்ன!? டிப்டாப்பாக போகக்கூடாதா? என்னை என்ன சினிமாவில் வருகிற வில்லன் மாதிரினு நினச்சீங்களா? ஒன்னு தெரியுமா! இப்போதெல்லாம் வில்லனுங்க சூப்பரா இருந்து, ஹீரோ ரௌடி மாதிரி இருந்தால்தான் படமே ஹிட் ஆகும்! டக்கரா ஓடும் தெரியுமா! அதை விடுங்க... நம்ம கதைக்கு வருவோம்... என்ன கேட்டீங்க... ஆங்... என்ன அலங்காரம்னுதானே! எனக்கு எல்லாமே பெர்ஃபெக்ட்டாய் இருக்க வேண்டும். கட்டிலைப் பாருங்கள், இத்தனை அவசரத்திலும் எவ்வளவு அழகாய் படுக்கைப் போர்வைகளை மடிச்சு வச்சிருக்கேன்! கொடியிலப் பாருங்க, லுங்கிய மடிச்சு எவ்வளவு நீட்டா தொங்கவிட்ருக்கேன்! அட இவ்வளவு ஏங்க, கொலையே செஞ்சா கூட அதுல ஒரு அழகு இருக்கனும் எனக்கு.

    கொலையா? அப்புறம் அந்த லெட்டர்?!?

    நீங்கள் ரொம்ப அவசரப்படுகிறீர்கள்! இத்தனை அவசரம் எனக்கு ஒத்துவராது. அவசரத்தில் அள்ளித் தெளிப்பதென்பது என் ஜாதகத்திலேயே இல்லை! அதுவும் இந்த மாதிரி விஷயத்திற்கெல்லாம், அவசரம்தான் முதல் எதிரி!

    சரி! அவசரப்படவில்லை! நிதானமாக கேட்கிறோம் சொல்லு! எதுக்கு இந்த கடத்தல் வேலை! ஓ... ‘சீயான் விக்ரம்’ மாதிரியா! கடத்தி வச்சு ‘என்னை லவ் பண்ணு... கல்யாணம் பண்ணிக்கோனு’ டார்ச்சர்... இல்ல...!

    அடடா! எல்லாரும் ரொம்ப கற்பனைப் பண்றீங்களே! இப்போ என்ன!? ஏன் உஷாவைக் கடத்தப் போகிறேன்னு உங்களுக்குக் காரணம் தெரிய வேண்டும் அவ்வளவுதானே! வெல்! உங்களுக்கு கோவிந்தாச்சாரியைத் தெரியுமா? கொஞ்சமே கொஞ்சம் லீடிங் லாயர்... அவருடைய மேல்மாடி... அதாங்க தலைல இருக்குற மூளை நல்லா வேலை செய்யும்... ஆனா மனுஷனுக்கு அதிர்ஷ்டம் கம்மி... அதோட கொஞ்சம் பயந்த சுபாவம் வேற... இல்லைனா அவர் லெவலுக்கு சுப்ரீம் கோர்ட் அளவு முன்னேறி இருக்கனும்! இருந்தாலும் சிட்டில சின்னதா ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி, அதுல ஆபீஸ். குடும்ப ஜாகைக்கு ஹார்ட் ஆஃப் தி சிட்டில ஒரு மினி பங்களா! அவர் வாங்கினதா இல்ல சீதனமா வந்ததானு தெரியாது... அது எதுக்கு நமக்கு! அவர்கிட்ட எனக்கு சில தகவல்கள் வேணும்... சொன்னதும் கெஸ் பண்ணியிருப்பீங்களே! கரெக்ட் அந்தத் தகவல்கள் லிஸ்ட்தான் லெட்டர்ல இருக்கு.

    நான் நேர போய் ‘ச்சாரி சார்., ச்சாரி சார்... எனக்கு இந்திந்த தகவல்கள் எல்லாம் வேணும்னு கேட்டாத் தருவாரா... காதை கொடுங்களேன்... போலீசுக்கு போனைப் போடுவார்... இல்ல்ல்ல நீங்க நைச்சியமா பேசி வாங்கித்தர முடிஞ்சா சொல்லுங்க... உஷா மேட்டரை இந்த செகண்டே ட்ராப் பண்ணிடறேன்...

    என்ன...!? முடியாதில்ல...!

    அதனால்தான் உஷா! பொண்ணு வருவதற்கு அஞ்சு நிமிஷம் லேட்டானாலே அவருக்கு அரை உசுரு போயிடும்... அரைமணி நேரம் அலறவிட்டா ஹைக்கோர்ட்டையே எழுதிக் கொடுத்திடுவார்!அதான் எனக்கு வேணும்... பார்த்தீங்களா... உங்களிடம் பேசிக் கொண்டே இருந்தா டைம் ஆகாதா... நான் கிளம்புகிறேன்! நீங்களும் என் கூடவே வருவதானால் தாராளமாக வரலாம்... எனக்கு ஒரு ஆட்சேபனையும் கிடையாது? ஆனா ஒன்னு... நான் உடான்ஸ் விடறேன்னு மட்டும் நெனச்சுடாதீங்க. என்ன...! வரலையா!? பயம்மாயிருக்கா! சரி அப்படி ஓரமா உட்கார்ந்து நடக்கப் போவதை வேடிக்கைப் பாருங்க... வரட்டா! டாட்டா பை பை...!

    என்னங்க தொண்டை கிழிய இவ்ளோ சொன்னேனே! ஒரு பெஸ்ட் ஆஃப் லக் கிடையாதா... சரி விடுங்க நானே சொல்லிக்கிறேன்... பெஸ்ட் ஆஃப் லக்.

    2

    ஏக்கர் கணக்கில் வளைத்துப்போட்டு, ‘கல்விச் சேவை’ புரியும் ஏதோ ஒரு கல்வித் தந்தையின் ஏதோ ஒரு கல்லூரி...

    அரட்டை அடித்தபடியே உள்ளே வந்து கொண்டிருந்தவர்களிடம்... முக்கியமாக வருங்காலத் தாய்க்குலங்களிடம் துண்டுச்சீட்டு ஒன்றைக் கொடுத்துக் கொண்டிருந்தான் ஜூனியர் ஒருவன்...

    ‘ராகிங் செய்வது சட்டத்திற்கு விரோதமானது. ராகிங் செய்யும் மாணவர்கள் விசாரனையின்றி கல்லூரியிலிருந்து விலக்கப்படுவர்’

    - கல்லூரி நிர்வாகம்.

    ...என்று அதில் எழுதியிருந்தது. படித்துவிட்டு சட்டைப் பைகளிலும், புத்தகத்திலும், பர்ஸிலும் திணித்துக் கொண்டவர்கள் பலர். சில கீழே அங்கங்கே கசங்கியும், கிழித்துப் போடப்பட்டும் இருந்தன. மாணவர்கள் அல்லாது, ஒரே ஒரு ப்ரொபசர் மட்டும் (அநேகமாய் லேங்குவேஜ் ஆசிரியராய் இருக்க வேண்டும்) அந்தச் சீட்டை வாங்கிப் பார்த்தார்!

    அடடே இது நம்ம காலேஜ் அபீஸ் ரூம் நோடீஸ் போர்ட்ல இருக்கறதாச்சே! வெரி குட் வெரி குட்! எந்த கோர்ஸ்பா நீ

    பி.எஸ்.சி., பிஸிக்ஸ்... ஃபர்ஸ்ட் இயர் சார்

    பலே பலே பொறுப்பா நடந்துக்குறியே... ஐ அப்ரிஷியேட் யூ

    சார்... அதெல்லாம் இல்ல சார்

    பின்ன! இவ்ளோ தைரியமா (!) அதுவும் இந்த காலேஜ்ல கொடுக்கறியே... உன்னைப் பாராட்டலாம்பா., தப்பே இல்ல

    நீங்க வேற கடுப்ப கிளப்பாதீங்க சார்... நானே நொந்து போயிருக்கேன்...

    ஏம்பா... பாராட்டினா தப்பா என்றவரின் மூஞ்சிக்கு நேரே விரலை வைத்து சுத்தினான் பிஎஸ்சி...

    ஏன்டாப்பா... என் மூஞ்சில முறுக்கு புழியர

    ஃப்ளாஷ் பேக் சார்... கேளுங்க... பாருங்க... சீ... பார்த்துக்கிட்டே கேளுங்க....

    கல்லூரிக்கே உரித்தான மரத்தடி...

    ஏ... பிடி பிடி... ஒரு எல்கேஜி வருது பாரு

    வாங்க ஜூனியர் சார்! வந்து சீனியர்ஸ்க்கு ஒரு வணக்கம் போட்டுட்டு போங்க

    குட் மார்னிங்... சாரி வணக்கம் என்றான் அந்த ஜூனியர் பயந்தபடி...

    "ஏன் சார் டர்ராகுறீங்க...

    நாமல்லாம் பிரண்ட்ஸ் ஆக வேணாமா! நீங்க என்ன பன்றீங்க...

    எ... என்...என்ன ராகிங்கா? அதெல்லாம் இங்க கிடையாதுனு சொன்னாங்களே! நோட்டீஸ் போர்டுல கூட போட்டுருக்காங்களே

    பார்றா., ‘சுவாமிநாதன்’ நம்மகிட்டயே ‘வசூல்ராஜா’ வேலைய காட்டுது... அப்டியா சார் எங்களுக்கு தெரியாதே! மச்சான் உனக்கு தெரியுமாடா...

    ம்.,ஹூம்...

    உனக்கு...

    இல்ல தல...

    பார்த்தியா எங்க யாருக்கும் தெரியல! அது என்ன நோட்டு

    பிஸிக்ஸ் ரிகார்ட் நோட்

    ரிகார்டலாம் நாங்க ப்ரேக் பண்ணிக்கறோம். நீ என்ன பன்ற... அந்த போர்டுல சொன்னியே அத இதுல எழுதிட்டு வர! போ போ டைம் வேஸ்ட் பண்ணாத

    தயங்கிய ஜூனியரைப் பார்த்து ஒரு ஜால்ரா சொன்னான்...

    ஏய் அரவேக்காடு... தல சொன்னத செஞ்சிட்டு வா... இதோட விட்ருவோம்... இல்ல...

    வேறு வழியில்லாமல் எழுதிக் கொண்டு வந்தவனின் முன்னாலேயே அந்தப் பக்கத்தை ‘டர்’ரெனக் கிழித்த தல, நோட்டை ஜால்ராக்களிடம் தூக்கியெறிந்தபடியே, ஜூனியரிடம் சொன்னான்...

    குட் சைல்ட்., நாளைக்கு இதே மாதிரி ஐநூறு காபி எழுதி கொண்டு வர... ஜெராக்ஸ்லாம் எடுக்கக் கூடாது... நீயேதான் எழுதனும்... அக்கா எழுதினா தம்பி எழுதினான்னு சொல்லக்கூடாது... மச்சான் இவன் ஹேண்ட்ரைட்டிங் நோட் பண்ணிக்கங்கடா...

    அதான் ரெக்கார்ட் நோட்டே கைல இருக்கே தல கலகலவென சிரித்தபடி சொன்னான் ஜமாவில் இருந்தவன்.

    தலைவிதியே எனத் தலையாட்டிவிட்டு திரும்பியவனை...

    இரு... என்ன அவசரம்... எழுதிட்டு எங்ககிட்ட காமிச்சுட்டு, அந்தோ தெரியுது பாரு காலேஜ் வாசல்... அங்க நின்னு, நாளைக்கு காலைல வர்ற ஸ்டூடன்ட்ஸ்க்கு கொடுக்கனும்... மெயினா மைனாக்களுக்கு கொடுக்கனும்... கொடுத்துட்டு பிச்சுகிச்சு நோட்டை வாங்கிட்டுப் போ...

    ...இதான் சார் நடந்தது... அவங்கள பகைச்சுக்கக் கூடாதாமே... அதான்... இந்த வேலை... தலையெழுத்து

    யாரு அவங்க? வீராவேசமாய் கேட்ட ப்ரொபசர், பிஎஸ்சி கைக்காட்டிய கூட்டத்தைப் பார்த்ததும், சத்தமில்லாமல் நழுவினார்.

    "என்னடா மச்சான் அந்த எல்கேஜி நம்மளை கை காமிச்சுட்டான் போல

    மொழி மொறைக்குது" என்றான் ஒரு ஜால்ரா.

    விர்றா... நாமதான்னு தெரிஞ்சதும் மொழி பம்மிக்கிட்டே எடத்த காலி பண்ணுது பாரு இன்னொரு ஜால்ரா.

    அதச் சொல்லு... தலைய பகைச்சுக்க முடியுமா? என்ன தல

    பின்ன... காலேஜ் டீனோட க்ளோஸ் பிரண்டு எங்கப்பா! மொழிக்கு சீட்டுக் கிளிஞ்சுருமோனு பயம் இருக்காது...

    Enjoying the preview?
    Page 1 of 1