Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malai Mangai
Malai Mangai
Malai Mangai
Ebook75 pages51 minutes

Malai Mangai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Historical Based Fiction Written By Sudha Suresh
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466503
Malai Mangai

Read more from Sudha Suresh

Related to Malai Mangai

Related ebooks

Related categories

Reviews for Malai Mangai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malai Mangai - Sudha Suresh

    15

    1. அருவிக்கரை

    கஜூரோஹா எனும் கலைநயமிக்க கோயிலை பின்நாளில் தன்னுள்ளே ஏந்திக்கொள்ளப் போவதும்...

    ‘நீலகண்ட மஹாதேவ்’ எனும் நாமத்தில் அந்த சர்வேஸ்வரனை இந்நாளில் (கதை நடந்த காலம்) தன்னகத்தே கொண்டதுமான காளிஞ்சர் கோட்டை அன்றைய சுக்லபக்ஷத்து முழு பௌர்ணமி நிலவின் பொண்ணொளியில் ஜெகஜோதியாய் மின்னியது.

    கோட்டை சற்றே தூரத்தே தெரிந்தாலும், அந்த தூரம் கூட அதன் அழகை அதிகப் படுத்தியதேயன்றி, சற்றும் குறைத்து விடவில்லை என தன்னுள் எண்ணியபடி, விந்திய மலையினின்று விழுந்த அருவிக் கரையில் நின்றிருந்தான் அந்த வாலிபன்.

    இத்தனை உச்சியில்* மாபெரும் இந்த காளிஞ்சர் கோட்டையை நிர்மாணித்ததாலேயே,

    ‘காலின்ஜராதிபதி’** என சந்தேள வம்சத்தினர் தங்களை சற்றே கர்வமுடன் அழைத்துக் கொண்டதில் எந்த ஒரு வியப்பும் இல்லை என்றும் பரிபூரணமாய் நம்பினான் அந்த இளைஞன்.

    காளிஞ்சர் கோட்டையின் அழகில் இவன் திளைத்தது போல், இவன் வீர வதனம் கண்டு, கோட்டையும் ரசித்திருக்கக் கூடும். பௌர்ணமி நிலவின் வண்ணத்திற்கு போட்டி போடும் விதமாய் மஞ்சள் மஞ்சேளென கோபி சந்தனமிட்ட அகன்ற நெற்றி... அதை தெள்ளென எடுத்துக் காட்டுவது போல் அமைந்த கரேலெனப் புருவம், சதா குறும்பு தவழ்ந்தாலும் காரியம் என வந்துவிட்டால் சட்டெனக் கூர்மையாகிவிடும் கண்கள், சுருள் முடியும் இல்லாது நீள் முடியும் அல்லாது அங்கங்கே சுருண்டும் நீண்டும் இருந்த அவனது குழல் எல்லாம் சேர்ந்து அவனுக்கு தனி வசீகரத்தைக் கொடுத்தது. அளவான மீசை அதனை சீர்படுத்துவதில் கூட அவனின் அக்கரையைக் காட்டியது! இத்தனை அழகிலும் வீரம் ததும்பிய முகம்... அந்த வீரத்தைப் பறை சாற்ற நெற்றியிலும் காதருகிலும் உள்ள இரண்டொரு வடுக்கள் என கம்பீர ஆண்மகனாய் தோற்றமளித்தான் அவ்வாலிபன்.

    கோட்டையைக் கண்டு கொண்டிருந்தவன், திடீரென ஒரு ஏக்கப் பெருமூச்சினை விட்டான். பின், காரணமின்றி மேல் துணியையும் இடை சராயில் தொங்கிய நீண்ட வாளினையும் கழற்றி கரையில் வைத்தவன், தனது புரவி ‘நீலனுடன்’ அருவி விழுந்த சுனையில் இறங்கினான்.

    நீலனுக்கு சிரமப் பரிகாரம் செய்து கொண்டே, காளிஞ்சர் கோட்டையின் புற அழகை நேரிடையாகவும், கோட்டையின் உள்ளே உள்ள நங்கையின் அழகைக் கற்பனையிலும் கண்டு மயங்கி, புரவியின் கழுத்தில் தேய்த்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் தேய்த்துக் கொண்டிருந்தான் அந்த வீரன்.

    தன் எஜமானனின் இந்த செய்கையை எண்ணித் தனக்குள்ளேயே நகைத்துக் கொண்டது நீலன். அவனது ஒரே மாதிரியான சைத்யோபகாரம் காளிஞ்சர் கோட்டையினால் ஏற்பட்ட பிரமையினாலா, அல்லது அதன் உள்ளே உள்ள சித்தினியின் நினைவினாலா என எண்ணிய புரவி, அனேகமாக இரண்டாவதாகத் தான் இருக்கும்... பின் ஏன் அந்த ஏக்கப் பெருமூச்சு, எனத் தானே முடிவிற்கும் வந்தது.

    ஆனால், ஒன்று மட்டும் அவனது புரவி நீலனுக்கு புரியவில்லை... வைர வைடூரியம் இழைத்த உடை உடுத்தும் தன் எஜமானன், மிகவும் படோடாபமாக இல்லாமல் சாதாரண ஆடையில் வந்திருப்பதன் காரணமும், மேலும் வீராவேஷமாக தன் இருப்பிடத்திலிருந்து கிளம்பியவன், கோட்டையை அடைய இன்னும் இரண்டு மூன்று நாழிகை பயணமே இருக்கையில், ஏன் தயங்கி முன்னரே நின்று விட்டான், என்பதன் மர்மம் மட்டும் அதற்கு விளங்கவில்லை! தனக்கு சிஸ்ருஷை செய்யும் பாசாங்கு கூட, கோட்டைக்குள் செல்வதை தாமதமாக்கும் காரணத்திற்காகத்தானே தவிர, உண்மையான காரணம் வேறு ஏதோ இருக்க வேண்டும் என்றும் முடிவிற்கு வந்தது. அது தெரிய வேண்டுமானால், முதலில் தன் எஜமானனை இந்த பிரமையிலிருந்து விடுவிக்க வேண்டும் என எண்ணி, அப்படியே அவனை நெட்டித் தள்ளியது.

    புரவி நெட்டித் தள்ளியதிலிருந்து தன்னிலை அடைந்த வீரன், அது தன்னையும் தன் உடைகளையும்... காளிஞ்சர் கோட்டையையும் மாறி மாறிக் கண்டதை வைத்து, அதன் எண்ணத்தைப் புரிந்து கொண்டான். புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாது, சற்றே வாய்விட்டு சிரித்தவன்...

    ஆமாம் நீலா, நீ யோசனை செய்வதும் சரிதான்! இதற்கு மேல் கால் நகர மறுக்கிறதே! என்ன செய்வது, நூறு வீரர்கள் வந்தாலும் சிறிதும் அச்சமின்றி போரில் விளையாடும் உன் எஜமானன்... ஒரே ஒரு சித்தினியைப் பார்க்க துணிவின்றி வீணே காலம் கடத்துகிறான் என்றுக்

    Enjoying the preview?
    Page 1 of 1