Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanamellam Sivappoo!
Vanamellam Sivappoo!
Vanamellam Sivappoo!
Ebook125 pages47 minutes

Vanamellam Sivappoo!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அழகான ஒரு குடும்பம்... சில புல்லுருவிகளால் சிதைக்கப்படுகிறது. மனித நடமாட்டம் இல்லாத அடர்வனத்தில் நடக்கும் சில கொலைகள் அந்த கொலைகளை யார் செய்தார்கள்? எதற்கு செய்தார்கள்? எப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த கொலை நடந்தது? குற்றவாளியை காவல்துறையினர் தங்களுடைய புத்தி கூர்மையால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து கதை நகர்கிறது. இறுதி முடிவு யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருக்கிறது நாவலை படித்து விட்டு தங்கள் கருத்துக்களை சொல்லவும்.

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580129510283
Vanamellam Sivappoo!

Read more from Daisy Maran

Related to Vanamellam Sivappoo!

Related ebooks

Related categories

Reviews for Vanamellam Sivappoo!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanamellam Sivappoo! - Daisy Maran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வனமெல்லாம் சிவப்பூ!

    Vanamellam Sivappoo!

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/daisy-maran

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 1

    இரவுப்பொழுதின் அமைதியை புரட்டிப்போட்டது காற்றின் வேகம். காற்றிற்கு ஈடு கொடுக்க முடியாமல் மரங்கள் தலை விரித்தாட, இலைகளின் சலசப்பும் கிளைகள் உரசும் சத்தமும் ஒருவிதப் பீதியை ஏற்படுத்தியது. கூடவே காட்டு பூச்சிகளின் ரீங்காரம் காதுகளை உரசி சென்றது. சற்று தொலைவில் தளர்ந்த உடலும் ஜீவனற்ற உறைந்த பார்வையுமாய், கிடந்த அந்த சடலத்தின் முகத்தில் ஈக்கள் ஓசை எழுப்பி வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

    தீப்பந்தத்தை கொளுத்தி சடலத்திற்கு கீழிருந்த விறகு குவியலுக்கு தீ மூட்டினான் அவன். பறை மேளங்கள் பற்றி எறிவதுப்போல் ஒரு உணர்வு. அதைத் தொடர்ந்து உறங்கிக் கிடந்த ஒலி தீச்சுவாலையோடு எழும்பி அதிர்ந்தது. மரகட்டைகள் எரிவது தசை பொசுங்குவதைப் போன்று நாறியது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு சிறு பிரளயத்தில் இறந்து போன அவனுடைய தகப்பனின் சதையை தின்று பசியாறிய தீ நாக்குகளை நினைவுப்படுத்தி விட்டுச்சென்றது.

    அன்றைய சம்பவத்தின் தாக்கம் அவன் கண்களில் கொழுந்து விட்டெரிந்தது.

    நெருப்பின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, மடிந்து சாம்பலாய் சரிந்து கிடந்ததை ஒருவித மன நிறைவோடு கண்டு களித்தவன், தன் ஆள்காட்டி விரலால் சாம்பலை தொட்டு நெற்றியில் தீட்டினான். ரத்தம் படிந்து ஈரம் உறைந்திருந்த கத்தியைக் கையிலெடுத்து ஒரு முறை இட வல புறமாய் திருப்பிப் பார்த்துவிட்டு அதிவேகத்தோடு வலதுபக்கத்தில் தூக்கி எறிந்தான். அது இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு எதன் மீதோ மோதி இரண்டு முறை கணீர் சத்தத்தை ஏற்படுத்திவிட்டு மரணித்து அமைதியானது. வெற்று காலோடு அந்த மலைக்காட்டு சுடுகாட்டை விட்டு வெளியில் வந்த போது தலைக்கு மேல் சிதறிக்கிடந்த நிலவொளியில் பருந்து ஒன்று வட்டமிட்டு பறப்பதை பார்வைக்குள் பத்திரப்படுத்தினான்.

    அந்த சமயம் எதிரில் வந்த ஒரு மனிதன் இவனை கண்டு முட்புதரோரம் ஒதுங்கினான். அவன் பார்வையில் இவன் வேற்றுக்கிரகவாசியாய் தெரிந்திருக்க வேண்டும். விஷ ஜந்துவை பார்ப்பதுப்போல் கண்களை இடுக்கி புருவத்தை சுருக்கி பார்த்தான். வேகமாக ஓடி வந்த நாய் ஒன்று இருவரையும் மாறி மாறி பார்த்து சத்தமிட்டு குரைத்தது. பொதுவாக காட்டு நாய் சத்தம் அடி வயிற்றில் அமிலத்தை வார்ப்பதுப்போல் இருக்கும். அந்த நாயின் குரைப்பு அர்த்த ராத்திரியில் கேட்கும் ஓலமாய் செவிகளில் அறைந்தது. இவனின் நடை தளரவில்லை வேகம் குறையவில்லை. பாதையை கணித்தப்படி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். எதுவாக இருந்தாலும் என்னைக் கண்டு விலகி போகட்டுமே? இனி எதைபற்றின கவலையும் எனக்கில்லை. நாய் மீண்டும் சத்தமாக குரைத்துக்கொண்டு இவனை நோக்கி ஓடி வந்தது.

    தாடை இறுக, தலைகுனிந்து சரளைக் கல் ஒன்றை எடுத்து நாயை குறிப்பார்த்து அடித்தான். அதன் சத்தம் குறைந்து பொத்தென்று கீழே சுருண்டு விழுந்ததை இவன் திரும்பிக் கூட பார்க்கவில்லை. நடையில் தொய்வின்றி பழைய வேகத்தோடு அடிகளை வைத்து நடந்தான்.

    அது அவனுக்கு பழகிய இடம்தான்.

    இரவில் பயணம் செய்யும்போது பழக்கமற்றவர்களுக்கு தான் காடுகள் முற்றிலும் வித்தியாசமாகவும் ஒரு வித பயத்தையும் தோற்றுவிக்கும். அங்கு வீசும் காற்றுக்கூட பிரத்தியேக வாசனையை உண்டாக்கும். ஆனால், அந்த மலைகாட்டிலேயே பிறந்து வளர்ந்தவனுக்கு பறவைகளின் ஒலி மட்டுமல்ல பழுத்து விழுகின்ற இலைகளின் சரசர ஒலிக்கூட பரிச்சயமே! அது எந்த மரத்தின் இலைகள் என்பதை துல்லியமாக கணித்து விடுவான்.

    பார்வையை விட காதுகளை கூர்மையாக்கியபடி ஒரு வித கவனத்தோடு நடந்தான். அழகான வெண்ணிற முயல் குட்டியைப்போல் அவனை பின்தொடர்ந்த நிலவை சட்டைப்பண்ணாமல் நடந்தவனுக்கு இடப்பக்க முட்புதரின் சலசலப்பு கவனத்தை ஈர்த்தது. விழிகளை தீட்டி புதரில் பார்வையை வீசியப்போது ஜொலிக்கின்ற இரண்டு நெருப்புத் துண்டுகள் முட்புதரில் மின்னியது. அதைக் கூர்ந்து கவனித்தான். இது ஆந்தையின் கண்கள் அல்ல என்பது உறுதியானது. அதற்கு எதிர்ப்புறம் அதே சாயலில் மற்றொரு ஜோடி நெருப்பு துண்டுகள். அடுத்து முதுகிற்கு பின்னால் துளைக்கும் பார்வை. இப்படி ஒரே சமயத்தில் பார்வைகளின் கதிர் வீச்சுகள் அவனை நோக்கிப் பாய்ந்தது. அதன் வீரியத்தை வைத்து கணித்தப்போது ஒன்றிரண்டு அல்ல பல ஜோடி மனித கண்கள் தன்னை குறிப்பார்ப்பதை உணர்ந்தான். கூடவே பிஸ்டல் போன்ற ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும் என்று கணித்தான். மறுநிமிடம் பதுங்கும் புலியின் மனநிலையில் ஒவ்வொரு அடியும் மிக கவனமாக எடுத்து வைத்தப்போது தான் ஒரே நேரத்தில் பல காலடி ஓசைகள் அவனை நோக்கி வருவதை உணரமுடிந்தது.

    டேய்... அப்படியே நில்லு. நகர்ந்தீன்னா சுட்டுடுவோம்... ஒரு கனத்த குரல் முதுகுக்கு பின்னால் கேட்க,

    அடுத்த நிமிடமே தாயை பிரிந்த கோழிக்குஞ்சை பருந்து கூட்டம் வட்டமிடுவதுப்போல் காக்கி உடைகள் இவனை வட்டமிட்டு சூழ்ந்துக்கொள்ள, அனிச்சையாக அவனுடைய இரண்டு கைகளும் மேல் நோக்கி நீண்டது. வானத்து வட்ட நிலவு ஒருவித பயத்துடன் கருமேகத்துக்குள் தன்னை திணித்துக்கொண்டது. அந்த ஒருநிமிட இருளில் தப்பிப்பது எப்படி என்று அவனுடைய மனது துரித கதியில் திட்டம் போட்டது.

    ஒரே வழிதான் பட்டென்று இடதுப்புறம் படுத்து உருண்டு விட வேண்டும். ஐம்பதடி பள்ளத்தில் இறங்கும் தைரியம் இங்கிருக்கும் காக்கி உடைகளுக்கில்லை என்பது இவனுக்கு நன்றாகவே தெரியும். நினைத்த மறுநிமிடம் அதை செயல்படுத்த முயன்றான். சாஷ்டாங்கமாக கீழே படுத்து உருண்டவனை நோக்கி துப்பாக்கிகள் நீண்டது.

    ஸ்டாப்... யாரும் சுடாதீங்க. உயிரோடு பிடிக்கணும் என்பது தான் மேலிடத்து உத்தரவு... என்ற இன்ஸ்பெக்டரின் ஆணைக்கு கட்டுப்பட்டு அனைவரும் சிலையாய் நிற்க, அருகில் இருந்தவரிடமிருந்து அந்த பவர்ஃபுல் டார்ச்சை வாங்கி பள்ளத்தாக்கில் ஒளியை பாய்ச்சினார் மற்றொரு காக்கிச்சட்டைகாரர். அங்கே ஆழ்ந்த இருளும் சலனமற்ற பள்ளத்தாக்குமே எஞ்சியிருந்தது.

    சார் அவன் ரொம்ப தூரம் தப்பிச்சிருக்க வாய்ப்பில்ல... நாம உடனே கிளம்பினா அரைமணி நேரத்துக்குள்ளே அவன் விழுந்த இடத்துக்கு போயிடலாம் சார். அவன் அடிப்பட்டு உயிருக்கு போராடிக்கிட்டுதான் இருப்பான். அலாக்கா தூக்கி போட்டுட்டு ஸ்டேஷனுக்கு கொண்டு போயிடலாம் சார்... இளம் போலீஸ்காரர் ஒருவர் தன் ஆர்வ கோளாறை வெளிப்படுத்தினார்.

    "இல்ல அதுக்கு வாய்ப்பேயில்லே. அவனுக்கு இந்த காடு முழுவதும் அத்துப்படி. எங்கே குதித்தால் எப்படி தப்பிக்கலாம் எல்லாமே அவனுக்கு தெரியும். நமக்குதான் இது ஒரு காடு. ஆனா அவனுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1