Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thulasidhalam
Thulasidhalam
Thulasidhalam
Ebook434 pages4 hours

Thulasidhalam

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

பூத தேவதைகளும் பிசாசுகளும் உண்டா இல்லையா என்ற பிரச்னை கதாசிரியான எனக்கு தேவையில்லை. பல இடங்களிலிருந்து சேகரிக்கபட்ட செய்திகள். இந்த நாவலில் சொல்லி இருக்கிறேன். சங்காரெட்டி என்ற இடத்தில் சூனியம் வைப்பவனைப் போட்டோ எடுக்கப் போய் அவனிடமிருந்து நான் தப்பிப் பிழைத்தது பெரிய விஷயம். ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஒரு மந்திரவாதி உயிரோடு ஒரு ஆட்டின் தோளை அப்படியே முழுதாக உரித்து எடுத்ததை நான் என் கண்ணால் பார்த்தேன். அங்கே நூற்றுக்கு முப்பது பேர் மந்திரவாதிகள். இந்த நாவலை எழுத முடிவு செய்து அதற்கான செய்திகளை சேகரிக்க ஆரம்பித்திலிருந்து பல அபூர்வ விஷயங்கள் நடந்தன. அவற்றை அப்படியே வாசகர்களுக்கு அளிப்பது கடினம். பூத வித்தைகள் உண்டா இல்லையா என்ற தர்க்கத்தை விட்டு விட்டு கதையைப் படிப்போம்.

-- எண்டமூரிவீரேந்திரநாத்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545535
Thulasidhalam

Read more from Yandamoori Veerendranath

Related to Thulasidhalam

Related ebooks

Reviews for Thulasidhalam

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thulasidhalam - Yandamoori Veerendranath

    http://www.pustaka.co.in

    துளசி தளம்

    Thulasi Dhalam

    Author:

    எண்டமூரி வீரேந்திரநாத்

    Yandamoori Veerendranath

    For more books

    http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    பூத தேவதைகளும் பிசாசுகளும் உண்டா இல்லையா என்ற பிரச்னை கதாசிரியரான எனக்குத் தேவையில்லை. பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட செய்திகளை’ இந்த நாவலில் சொல்லி இருக்கிறேன்.

    சங்காரெட்டி என்ற இடத்தில் சூனியம் வைப்பவனைப் போட்டோ எடுக்கப் போய் அவனிடமிருந்து நான் தப்பிப் பிழைத்தது பெரிய விஷயம்.

    ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஒரு மந்திரவாதி உயிரோடு ஒரு ஆட்டின் தொலை அப்படியே முழுதாக உரித்து எடுத்ததை நான் என் கண்ணால் பார்த்தேன். அங்கே நூற்றுக்கு முப்பது பேர் மந்திரவாதிகள்.

    இந்த நாவலை எழுத முடிவு செய்து அதற்கான செய்திகளை சேகரிக்க ஆரம்பித்திலிருந்து பல அபூர்வ விஷயங்கள் நடந்தன. அவற்றை அப்படியே வாசகர்களுக்கு அளிப்பது கடினம்.

    பூத வித்தைகள் உண்டா இல்லையா என்ற தர்க்கத்தை விட்டு விட்டு கதையைப் படிப்போம்.

    எண்டமூரி வீரேந்திரநாத்

    yandamoori@hotmail.com

    1

    வெய்யில் காலம்.

    சூரியன் தீவிரமாக ஜொலித்துக் கொண்டிருந்தான். மதியம் பன்னிரண்டு மணி. நிலம் பாளம் பாளமாக வெடித்திருந்தது.

    தொலைவில் காகம் ஒன்று தாகத்தினால் கரைந்து கொண்டிருந்தது.

    பெரிய பெரிய கற்கள், புதர்களால் அந்த இடம் முழுவதும் நிரம்பியிருந்தது. காட்டுச் செடிகள், கொடிகள் சீரில்லாமல் அடர்த்தியாகப் படர்ந்திருந்தன.

    ஜே அண்ட் ஜே கம்பெனியைச் சேர்ந்த ஆட்கள் சுமார் ஐம்பது பேர் அங்கே வேலை செய்து கொண்டு இருந்தார்கள்.

    தூசியைக் கிளப்பிக் கொண்டே ஸ்ரீதரின் ஜீப் அங்கே வந்து நின்றது.

    ஹலோ டைரக்டர்! நம்பூத்ரி வரவேற்றான்.

    ஹலோ இன்ஜினியர்! வேலை எப்படி நடந்து கொண்டிருக்கிறது?

    ஒவ்வொரு அடிக்கு ஒரு மண்டை ஓடு கிடைக்கிறது. நம்பூத்ரி சொன்னான்.

    எந்தப் பிறவில் என்ன பாவம் செய்தோமோ? இன்று மயானங்களைத் தோண்டிக் கொண்டு இருக்கிறோம்.

    இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.

    பத்தடி ஆழத்திற்கு குழியைத் தோண்டி அஸ்திவாரம் போட வேண்டும். பிறகு தூண்களை எழுப்ப வேண்டும். இருநூறு மைல்களுக்குக் குழாய்களைப் போட வேண்டும். இருபது கோடி பிராஜெக்ட்.

    வெயில் தீவிரமாக இருந்தது. உஷ்ணக்காற்று முகத்தை வந்து தாக்கியது. எங்கு பார்த்தாலும் கற்கள், சிவப்பு மண் தரை. கிட்டத்தட்ட ஏழடி ஆழத்திற்குக் குழியைத் தோண்டி விட்டார்கள். இன்னும் மூன்று அடிகள் தோண்டினால் போதும்.

    அதுவரையில் நடந்து முடிந்த வேலையை மேற்பார்வையிட்ட ஸ்ரீதருக்கு திருப்தி ஏற்பட்டது. கடந்த பத்து நாட்களுக்குள் நினைத்ததைவிட அதிகமாக வேலை முடிந்திருந்தது. ஜீப் அருகில் சென்றவன் வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீரைக் குடித்துவிட்டு, ஜீப்பில் ஏறப் போனான்.

    அதுவரை கேட்டுக் கொண்டிருந்த கடப்பாறையின் ஓசை திடீரென்று நின்றுவிட்டது. சின்ன கல் விழுந்தால்கூட கேட்கும் அளவுக்கு நிசப்தம்.

    ஸ்ரீதர் தலையைத் திருப்பிப் பார்த்தான். கூலி ஆட்கள் எல்லோரும் கும்பல் கும்பலாகக் குழிக்குள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அத்தனை தூரத்தில் இருந்த போதும் அவர்கள் முகத்தில் தெரிந்த வியப்பு கலந்த பயத்தை ஸ்ரீதரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. நம்பூத்ரி ஓட்டமும் நடையுமாகக் குழி இருந்த இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.

    ஸ்ரீதரும் வேகமாக நடையை எட்டிப்போட்டு அந்த இடத்திற்குச் சென்றான். உள்ளே எட்டிப் பார்த்தான். உள்ளே நான்கு ஆட்கள் தோண்டுவதை நிறுத்திவிட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.

    உள்ளே கிட்டத்தட்ட ஆறடி நீளமும், இரண்டடி அகலமும் உள்ள பெட்டி ஒன்று தென்பட்டது. பேட்டியின் மீது மண் சிதறிக் கிடந்தது.

    யாருமே பேசவில்லை. ஸ்ரீதர் மெதுவாகக் குழிக்குள் இறங்கினான். தார் பூசியது போல் கருப்பு நிறத்தில் அந்தப் பெட்டி இருந்தது. சவப்பெட்டியாக இருக்கக்கூடும். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்து, சிதிலமாகிக் கொண்டு வருவது போல் தென்பட்டது.

    ஸ்ரீதர் ஒரு நிமிடம் அதைக் கவனமாகப் பார்த்துவிட்டு, வெளியில் எடுங்கள் என்றான்.

    வேண்டாம். மேலே இருந்த நம்பூத்ரி கத்தினான். டிபார்ட்மென்ட் காரர்களுக்குச் சொன்னால் ஆக வேண்டியதை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

    ஸ்ரீதர் மேலே ஏறி வந்தான். அவர்கள் வரும் வரையில் நாம் வேலையை நிறுத்தி விட்டு உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டுமா? நம்பூத்ரியைக் கேட்டான். பிறகு கூலி ஆட்களை நோக்கி, பெட்டியை வெளியில் எடுங்கள் என்று ஆணையைப் பிறப்பித்தான்.

    ஐந்து நிமிடங்கள் வரை அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவியது. பெட்டியைச் சுற்றிலும் இருந்த மண்ணைத் தள்ளி விட்டார்கள். பக்கவாட்டில் தோண்டி, அடியிலிருந்து நெம்பி பெட்டிக்கு எந்தச் சேதமும் இல்லாமல் மேலே கொண்டு வந்தார்கள். பெட்டி பூட்டப்பட்டு சீல் இடப்பட்டிருந்தது. பேட்டியின் மீது ஏதோ எழுத்துக்கள் தென்பட்டன. நம்பூத்ரி அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    ஸ்ரீதர் அவன் அருகில் வந்தான்.

    ஏதோ மந்திர தந்திரங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதாகச் சொல்வாயே. அந்த எழுத்துக்களைப் படிக்க முடியுமா பாரு. கிண்டல் செய்வது போல் சிரித்தான்,

    நம்பூத்ரி குனிந்து படிக்க முயற்சி செய்தான். ஊஹூம். மண்ணில் புதைந்து கிடந்ததில் எழுத்துக்கள் செல்லரித்துப் போய் விட்டன என்றான்.

    ஸ்ரீதர் சீலைப் பிரிக்கப் போனான். அதை பார்த்து நம்பூத்ரி பதற்றமடைந்தான். வேண்டாம் பாஸ்! எதுக்கு இந்த வம்பு? ஏதாவது கெடுதல்வந்தாலும் வரலாம்.

    ஸ்ரீதர் தன் வேலையை நிறுத்தவில்லை. இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கு? என்று சொல்லிக்கொண்டே பூட்டை பலமாக இழுத்தான். திறந்து கொண்டது.

    சுற்றிலும் நின்றிருந்த கூலியாட்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    பெட்டியின் மூடியைத் திறக்க முயன்றான். எத்தனை வருடங்களுக்கு முன் பூட்டப்பட்டதோ! துருப்பிடித்து லேசில் திறந்துகொள்ளவில்லை. கூலியாட்கள் இரண்டு பேர் உதவி செய்ய முன்வந்தார்கள். கிர்ர் என்ற சத்தத்துடன் மூடி மெதுவாகத் திறந்துகொள்ள ஆரம்பித்தது.

    அங்கே இருந்த எல்லோரும் மூச்சை அப்படியே அடக்கிக் கொண்டிருந்தார்கள். நம்பூத்ரி எந்த நிமிடமும் நினைவு தப்பிப் போகும் நிலையில் இருந்தான். ஸ்ரீதர் அதையே பார்த்துக் கொண்டிருந்தான். மூடி முழுவதுமாகத் திறந்து கொண்டது. எல்லோரும் தங்களையும் அறியாமல் ஓரடி பின்னால் நகர்ந்தார்கள்.

    உள்ளே ஒரு பிணம் இருந்தது. கைகள் மார்புக்குக் குறுக்கே கட்டப்பட்டு இருந்தன. உடல் சிதிலமாகாமல் இருந்தது. உடைகளைப் பூச்சிகள் தின்று விட்டிருந்தன. வாய் லேசாகத் திறந்து ஏதோ சொல்ல முயற்சி செய்வது போல் இருந்தது.

    மை காட்! நம்பூத்ரி முணுமுணுப்பது போல் சொன்னான்.

    ஸ்ரீதர் பிணத்தைப் பார்க்கவில்லை. அதன் மார்பின் மீது இருந்த பத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். விலங்கின் தோல் மீது சிவப்பு வண்ணத்தில் ஏதோ எழுதப்பட்டு இருந்தது. குனிந்து அதை எடுத்தான். எழுத்துக்கள் ஆங்கில மொழியைச் சேர்ந்தவையாக இருந்தாலும் அர்த்தம் புரியவில்லை.

    தோள் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருத்த நம்பூத்ரியிடம் கொடுத்து, உனக்கு ஏதாவது புரிகிறதா பார் என்றான்.

    நம்பூத்ரி சற்றுத் தயங்கியவாறே அதைப் பெற்றுக்கொண்டான். விரல்களுக்கு நடுவில் பூத்தாற்போல் பிடித்துக் கொண்டு கண்ணுக்கு அருகில் உயர்த்தி படிக்க முயற்சி செய்தான். அவனுக்குப் பேய் பிசாசுகள் மீது நம்பிக்கை அதிகம். கையில் தாயத்துகளைக் கட்டியிருப்பான். அவனிடம் இருக்கும் புத்தகங்கள் பெரும்பாலும் பேய் பிசாசுகள் சம்பந்தப்பட்டவை.

    தோல் பத்திரத்தின் இருந்த எழுத்துக்களை அவனால் சரியாகப் படிக்க முடியவில்லை. கூலியாட்கள் கும்பல் கும்பலாகக் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். நம்பூத்ரி சட்டைப் பையில் இருந்து பூதக் கண்ணாடியை எடுத்து அந்த எழுத்துக்களைக் கவனமாகப் பரிசீலித்தான். படித்து முடித்ததும் அவன் முகத்தில் வியர்வை அரும்பியது.

    க்ராண்டியர்ஸ் ஃபாக்ட் !! நம்பூத்ரி சொன்னான்.

    என்ன? ஸ்ரீதர் கேட்டான்.

    கிராண்டியர்ஸ் ஃபாக்ட்!!!

    அப்படி என்றால்?

    டாக்டர் ஃபாக்ட்ஸ் பற்றி நீ படித்தது இல்லையா?

    இல்லை.

    உயிருடன் இருக்கும் போது சாத்தானை வழிபட்டால் செய்வினை வித்தைகள் எல்லாம் சுலபமாக வசமாகி விடும். ஆனால் ஒரு நிபந்தனை. இறந்து போன பிறகு அந்த நபர் தன்னுடைய உடலை, ஆன்மாவைச் சாத்தானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தைதான் ‘க்ராண்டியர்ஸ் ஃபாக்ட் என்பார்கள்."

    அதில் என்ன எழுதியிருக்கிறது?

    நம்பூத்ரி படிக்கத் தொடங்கினான்.

    "நான் நம்பிய சாத்தான் மீது ஆணையிட்டு இந்தப் பத்திரத்தை எழுதுகிறேன். நான் உயிருடன் இருந்த வரையில் எனக்கு எல்லா விதமான செல்வங்களையும் வழங்கிய சாத்தானுக்கு நன்றிக் கடனாக இந்த நிமிடம் முதல் என் உடலை அர்ப்பணிக்கிறேன். எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும் என் உடலை காப்பாற்றும் பொறுப்பு சாத்தானுடையதாகும். என் இரத்தத்தில் எழுதப்பட்ட ஒப்பந்தம் இது.

    ஜே. அப்ரஹாம்

    240 கி.மு.

    அதன் கீழே பிறந்த தேதி மற்றும் இறந்த தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இறந்து போன நபரின் பிணமா! நம்பூத்ரியின் குரலில் உத்வேகம் தெரித்தது. இத்தனை வருடங்கள் கழித்து நம் கண்ணில் பட்டிருக்கிறது. உலக வரலாற்றிலேயே ரொம்ப அபூர்வமான நிகழ்ச்சி இது. சாத்தான் எத்தனை பத்திரமாக பிணத்தைப் பாதுகாத்து வந்திருக்கிறதென்று பார்த்தாயா ஸ்ரீதர்! திடீரென்று நம்பூத்ரியின் கண்களில் இன்னதென்று தெரியாத பயம் எட்டிப் பார்த்தது.

    இந்தப் பிணத்தை நாம் வெளியில் எடுத்திருக்கிறோம். இதனால் நமக்கு ஆபத்து எதுவும் வந்து விடாது இல்லையா? என்றான்.

    ஸ்ரீதர் எதுவும் பேசவில்லை. பிணத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். தங்களுடைய உடல்களை, ஆன்மாவை பூத தேவதைகளுக்குக் காணிக்கையாக்கி, வாழ்நாள் முழுவதும் சாத்தானை வழிபட்டு வந்த மந்திரவாதிகளைப் பற்றி அவன் புத்தகங்களில் படித்து இருக்கிறான். ஆனால் அதெல்லாம் உண்மையாக இருக்கலாம் என்று அவனால் நம்ப முடியவில்லை. நிஜமாகவே சாத்தான் இந்தப் பிணத்தை இரண்டாயிரம் வருடங்களாகப் பாதுகாத்து வந்திருக்குமா?

    இப்பொழுது என்ன செய்யலாம்? ஸ்ரீதர் கேட்டான்.

    அரசாங்கத்திற்குத் தகவல் கொடுக்க வேண்டும். நாளை பேப்பர்களில் இந்தச் செய்திதான் பிரதானமாக இருக்கப் போகிறது. எல்லாவற்றுக்கும் முன்னால்... அவன் சற்று நிறுத்திச் சொன்னான். இந்தப் பிணத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் வராமல் பரிகாரம் ஏதாவது செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ஸ்ரீதர் அவனை நேராகப் பார்த்தான். நம்பூத்ரி! இவ்வளவு படித்திருக்கிறாய். இன்ஜினியராக வேலை பார்க்கிறாய். உனக்கும் பரிகாரம், சாந்திஹோமம் இவற்றில் நம்பிக்கை இருக்கிறதா?

    கண்ணுக்கு எதிரிலேயே ஆதாரம் இருக்கும் போது நம்பாமல் எப்படி இருக்க முடியும்?

    ஸ்ரீதர் மௌனமாக ஜீப்பை நோக்கி நடந்தான். பின்னாடியே வந்தான் நம்பூத்ரி.

    நானும் உன்னுடன் வந்து விடுகிறேன்.

    அவனுடைய குரலில் இருந்த பதற்றத்தை ஸ்ரீதர் கவனித்தான். ஸ்டீரிங் முன்னால் ஸ்ரீதரும், பக்கத்திலேயே நம்பூத்ரியும் அமர்ந்து கொண்டார்கள்.

    ஜீப் ஸ்டார்ட் செய்யும் போது நம்பூத்ரி சொன்னான். இருநூற்றி நாற்பது கி.மு. என்றால் மை காட்! இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக....

    ஸ்ரீதரின் மூளையில் ஏதோ பிளாஷ் அடித்தது போல் இருந்தது. இக்னிஷனை அணைத்து விட்டு, எங்கே அந்தப் பத்திரம்? என்றான்.

    நம்பூத்ரி கொடுத்தான்.

    ஸ்ரீதர் அதை ஒரு நிமிடம் கவனமாகப் பார்த்துவிட்டு உரத்தக் குரலில் சிரிக்கத் தொடங்கினான். பிறகு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டே, மை டியர் நம்பூத்ரி! நம்மை யாரோ முட்டாளாக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்றான்.

    புரியாதவன் போல் பார்த்தான் நம்பூத்ரி.

    இந்த ஆப்ரஹாம் எப்போ இறந்து போனான்?

    கி.மு. 240.

    கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இறந்து போனவனுக்கு கிறிஸ்துவைப் பற்றி எப்படித் தெரிந்தது? கி.மு. என்பதே கிறிஸ்து பிறந்த பிற்பாடுதானே ஏற்பட்டிருக்கும்?

    ஸ்ரீதர் சொன்னது புரிந்ததும் நம்பூத்ரியின் முகம் களை இழந்தது.

    இது பொய் என்கிறாயா? என்றான்.

    இதில் சந்தேகம் வேறு இருக்கிறதா? என்னுடைய கணிப்பின்படி இந்தப் பிணத்தைப் புதைத்து இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்காது. உடல் கெட்டு விடாமல் ரசாயன பூச்சுகளை பூசி இருக்கிறார்கள். உன்னைப் போன்றவர்களின் கண்ணில் இந்தப் பிணம் தென்பட்டால் வேறு என்ன வேண்டும்? பேய் பிசாசுகளை நம்புகிறவர்கள், ஆராய்ச்சி செய்கிறவர்கள் இதை ஆதாரமாக எடுத்துக் கொண்டு மேலும் தீவிரமாகத் தங்களுடைய கொள்கைகளைப் பரப்புவார்கள். உன்னைப் போன்று நான்கு பேர் இருப்பதால்தான் பேய் பிசாசுகளைப் பற்றி பிரசாரம் செய்பவர்களின் பிழைப்பு எந்தத் தடையும் இல்லாமல் நிம்மதியாகக் கழிகிறது. அவன் கொஞ்சம் முட்டாள்தனமாக நடந்து கொண்டதால் இந்தக் குட்டு வெளிப்பட்டு விட்டது. இல்லையென்றால் இந்தப் பிணத்தைப் பற்றி இந்நேரத்திற்கு எத்தனை கதைகள் பின்னப்பட்டு இருக்குமோ.

    ஸ்ரீதர் ஆணித்தரமாகச் சொல்லும்போது நம்பூத்ரியால் மறுக்க முடியவில்லை. இருந்தாலும் ஏதோ சொல்ல வாயைத் திறந்தான்.

    இனி இந்த விஷயத்தை இப்படியே விட்டு விடுவோம். எனக்கு நேரமாகி விட்டது. அந்த மரப்பெட்டியை வேறு இடத்தில் புதைக்க ஏற்பாடு செய். நான் கிளம்புகிறேன். புன்னகையுடன் சொல்லிவிட்டு ஜீப்பை கிளப்பினான்.

    தூசியைக் கிளப்பிக் கொண்டு ஜீப் போய் விட்டது.

    நம்பூத்ரி அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

    பெட்டியில் இருந்த பிணம் மட்டும் அப்படியே இருந்தது, சலனமில்லாமல், சூனியத்தை நோக்கியபடி.

    *****

    விடியற்காலை வேளை. கிழக்கில் சூரியன் உதயமாகி விட்டது. சூரிய கிரணங்கள் தோட்டத்தில் இருந்த மரங்களுக்கு நடுவில் ஊடுருவி அந்தக் கட்டிடத்தின் மீது விழுந்து கொண்டிருந்தன.

    அப்பொழுதுதான் விழித்துக் கொண்ட பறவைகள் கலகலவென்று சத்தமிட்டுக்கொண்டே ஆகாயத்தில் பறந்து சென்று கொண்டிருந்தன. அவற்றின் சத்தம் உள்ளே அறை வரையிலும் கேட்டுக் கொண்டிருந்தது.

    ஸ்ரீதர் சோம்பலை முறித்துக் கொண்டே வாட்சைப் பார்த்தான். ஆறேகால் ஆகிவிட்டிருந்தது.

    கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா பிரவர்த்ததே

    சாரதாவின் குரல் காற்றில் அலை அலையாக மிதந்து வந்தது.

    கால்களில் செருப்பு மாட்டிக் கொண்டு, இரவு உடைகளை சரிசெய்து கொண்டே பூஜை அறைப் பக்கம் வந்தான். வாசல் வரை வந்தவன் அப்படியே நின்று விட்டான்.

    பின்னாலிருந்து பார்க்கும் போது அவளுடைய அடர்ந்த கூந்தல் முதுகில் படர்ந்து, கிருஷ்ணா நதியை நினைவுப் படுத்தியது. காற்றுக்கு முன் நெற்றியில் கேசக் குழல்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தன. கண்களை மூடிக் கடவுளை வழிபட்டுக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் தென்பட்ட தூய்மையை, புனிதத்தை பார்த்துக் கொண்டே இருந்தான்.

    பிரார்த்தனை முடிந்துவிட்டது போலும். கண்களைத் திறந்து பின்னாலிருந்து விழுந்த நிழலை கவனித்துத் திரும்பினாள்.

    எழுந்து விட்டீர்களா? என்றாள். குளிக்காமலேயே பூஜை அறைக்குள் வர்றீங்களே?’ என்றவள், அவன் செருப்பு கால்களோடு உள்ளே வந்து விட்டதைக் கவனித்து, செருப்பு போட்டுக்கொண்டே பூஜை அறைக்குள் வரலாமா?" கண்டிப்புடன் சொல்லிக்கொண்டே எழுந்தாள்.

    அவன் கதவை நோக்கி நடந்தான். அப்போ நீ வெளியில் வாயேன் என்றான்.

    குளித்து விட்டு வந்தால் பிரசாதம் தருகிறேன்.

    பிரசாதத்தைத் தந்தால் குளித்துவிட்டு வருகிறேன். சிரித்துக் கொண்டே சொன்னான்.

    இத்தனை வயதான பின்னும் சின்னக் குழந்தையைப் போல் பிடிவாதம் பிடிப்பார்களா? பொய்க் கோபத்துடன் கேட்டாள்.

    வயது ஆகி விட்டதா? நான் இன்னும் அப்பாவாகக்கூட ஆகவில்லையே? என்றான்.

    நிமிடத்திற்கும் குறைவான நேரம் சாரதாவின் முகத்தில் வேதனையின் நிழல் படிந்தது. உடனே சமாளித்துக் கொண்டு, இருந்தாலும் நமக்குத் திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் முடிந்து விட்டன என்றாள்.

    காலத்தை அனுசரித்து வயது ஏறாது. மனநிலையைப் பொறுத்துதான் ஏறும். அந்தக் கோணத்தில் பார்த்தால் நான் இன்னும் இளைஞன்தான். நீதான் இப்படி பூஜை விரதம் என்று மூழ்கிப் போய்க் கிழவியாகிக் கொண்டு வருகிறாய்.

    நான் கிழவியாகிவிட்டால் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு.... வார்த்தைகள் இன்னும் முடிக்கவில்லை. வீலென்று கத்தினாள்.

    ஸ்ரீதர் அவளுடைய காதைப் பிடித்துத் திருகிக் கொண்டே, எங்கே? மறுமடியும் சொல், பார்ப்போம் என்றான்.

    செருப்பு... செருப்பு... பூஜை அறை! அவனிடமிருந்து விடுபட முயற்சி செய்தாள். வெளியில் போங்க.

    அவளை மெதுவாக விடுவித்தான். போகத்தான் போகிறேன். இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் நிலைமை என் கையை மீறிப் போய்விடும் என்று அறையை விட்டு வெளியில் வந்தான்.

    கணவனைப் பின்தொடர்ந்து சாரதாவும் வெளியில் வந்தாள். சீக்கிரமாய்க் குளித்துவிட்டு கடவுள் முன்னாடி பத்து தோப்புக்கரணம் போடுங்கள். விடியற்காலை வேளையில் சுவாமியறைக்குள் வந்து இப்படி ரகளை செய்யலாமா?

    அவன் அப்பாவியைப் போல் கடவுள் விக்கிரகம் இருந்த பக்கம் திரும்பினான்.

    சகல ஜீவராசிகளையும் சுருஷ்டிக்கும் தேவ தேவா! உன் முன்னால் சுருஷ்டியின் ரகசியத்தைப் பற்றிப் பேசுவது அபசாரம் எப்படி ஆகும் சுவாமி! என்றான்.

    அவளுக்குச் சிரிப்பு வந்தது. தான் சிரிப்பதை அவன் பார்த்துவிட்டால் மேலும் ஆபத்தாகி விடும் என்று நினைத்தவளாய், போதும் போதும். கடவுளிடம் அப்படிப் பேசினால் கண்கள் போய்விடும் என்று உள்ளே போகப் போனாள்.

    சாரதா! அழைத்தான்.

    அவள் நின்றாள்.

    நிஜமாகவே கடவுள் இருக்கிறாரா?

    ஒரு நிமிடம் அங்கே பயங்கரமான மௌனம் நிலவியது. அவளுக்கு ஏனோ அந்தக் கேள்வி அபசுருதியைப் போல் ஒலித்தது. மனதில் ஏற்பட்ட கலவரத்தை மறைத்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டே புன்னகைத்தாள்.

    உங்களுக்கு இந்த சந்தேகம் ஏன் வந்தது?

    எனக்கு எப்போதும் தென்படவில்லையே? அதான் கேட்டேன்.

    கடவுள் மேலிருந்தே நம்மை ஆட்டி வைத்துக் கொண்டிருப்பார். பக்தியுடன் வழிபட்டால் நமக்கு எந்தக் குறையும் வைக்க மாட்டார்.

    உனக்கு எந்தக் குறையும் வைக்கவில்லையா?

    சாரதா அவன் அருகில் வந்தாள். கடவுளைப் போன்ற உங்களைக் கணவராக அளித்து எனக்கு எந்தக் குறையும் இல்லாமல் செய்து விட்டார்.

    ஸ்ரீதர் சிரித்தான். இத்தனை பூஜைகளைச் செய்கிறாயே. உன் வயிற்றில் ஒரு குழந்தை உருவாகும்படி ஏன் செய்யவில்லை?

    கடவுளுடைய அருள் இருந்தால் கட்டாயம் குழந்தை பிறக்கும்.

    குழந்தைகள் பிறக்கக் கடவுளின் அருள் மட்டும் போதும் என்றால் இந்த உலகில் ஆண்களுக்கு என்ன வேலை? குறும்பாகச் சிரித்துக் கொண்டே கேட்டான்.

    சாரதா கோபமாகப் பார்த்தாள்.

    சரி. நம் ஒரு பந்தயம் வைத்துக் கொள்வோம். நீ இன்னும் பக்தி சிரத்தையுடன் கடவுளை வழிபட்டுக் கொண்டிரு. நான் நாளையே ஆபரேஷன் செய்து கொள்கிறேன். அந்தக் கடவுள் எப்படிக் குழந்தையைப் பிறக்க வைக்கப் போகிறார் என்பதையும் பார்த்து விடுவோம். அவளை டீஸ் செய்வது போல் சொன்னான்.

    அவள் நடுங்கிவிட்டாள். சட்டென்று அவன் வாயைக் கையால் பொத்தினாள். அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். ததாஸ்து தேவதைளின் காதில் விழுந்துவிடப் போகிறது. கலவரத்துடன் சொன்னாள்.

    ஸ்ரீதர் கலகலவென்று நகைத்தான்.

    சுவற்று கடியாரத்தில் ஏழுமுறை மணி அடித்தது.

    *****

    அண்ணா! சீக்கிரம் வாயேன். அனிதா அவசரப்படுத்தினாள்.

    படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பக்கத்தில் வைத்துவிட்டு, எதற்கு? என்றான் ஸ்ரீதர்.

    வந்தால் சொல்கிறேன்.

    இரவு ஒன்பது மணி. மழை வரும்போல் இருந்தது. காற்றுக்கு ஜன்னல் கதவுகள் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தன. தொலைவிலிருந்து ஹோவென்று சத்தத்துடன் வீசும் காற்று முதுகு எலும்பில் நடுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. எங்கேயோ கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக்கி இருக்க வேண்டும். பிரளயம் ஏற்படக் கூடிய அறிகுறிகள் தென்பட்டன.

    ஸ்ரீதர் ஜன்னல் கதவுகளைச் சாத்திவிட்டு வெளியில் வந்தான்.

    மெயின் ஹாலில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. மாடியிலிருந்து இறங்கப் போனவன் அங்கே நின்று விட்டான்.

    ஹால் நடுவில் சோபாசெட் இருந்தது. பெரிய சோபாவில் சாரதா அமர்ந்திருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் ஸ்டூலில் அனிதா உட்கார்ந்திருந்தாள். எதிரே நாராயணன் இருந்தான்.

    ஸ்ரீதர் அவர்களைப் பார்க்கவில்லை. அவன் பார்வை நடுவில் இருந்த ஸ்டூல் மீது இருந்தது. அதன்மீது செஸ் போர்ட் போன்ற அட்டை ஒன்று இருந்தது.

    அரவம் கேட்டு தலையை உயர்த்திப் பார்த்த அனிதா, வா அண்ணா! உனக்காகத்தான் காத்திருக்கிறோம் என்றாள்.

    அவன் இறங்கி வந்தான்.

    என்ன இது?

    நம் வீட்டுக்குள் பேய் வரப் போகிறதாம். புன்முறுவலுடன் சாரதா சொன்னால். உங்க தங்கை பள்ளியில் ஏதோ வித்தையைக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறாள். நமக்குச் செய்து காண்பிக்கப் போகிறாள்.

    ஸ்ரீதருக்கும் அனிதாவுக்கும் பதினான்கு வருடங்களுக்கு மேல் வயது வித்தியாசம் இருந்தது.

    பேய் வரப்போகிறதா? சோபாவில் உட்கார்ந்துகொண்டே அந்த அட்டையைக் கவனமாகப் பார்த்தான்.

    அப்ஜா போர்ட்!

    அனிதா எப்போதும் இப்படித்தான். புதிதாக ஏதாவது விஷயங்களைக் கற்றுக் கொண்டு வந்து வீட்டாருடன் பகிர்ந்து கொள்வாள்.

    இந்தப் போர்ட் பற்றி தனக்கு எதுவும் தெரியாதது போல் ஸ்ரீதர் முகத்தை வைத்துக் கொண்டான்.

    என்ன விஷயம்? சொல்லு. தங்கையிடம் கேட்டான்.

    காற்றில் பேய் பிசாசுகள் இருக்கும் தெரியுமா? என்றாள்.

    காற்றில் மட்டும்தானா? மனிதர்களுக்குள்ளே கூட இருக்கும். ஸ்ரீதர் சொன்னான்.

    பேச்சை மாற்றுகிறாய். பொய்க் கோபத்துடன் அனிதா சொன்னாள்.

    பேச்சை மாற்ற மாட்டேன். சொல்லு.

    இதன்மீது விரலை வைத்துக்கொள் என்று கேரம் போர்ட் ஸ்ட்ரைக்கரைப் போல் இருந்த பிளாஸ்டிக் வில்லையை அட்டை மீது வைத்தாள்.

    எல்லோரும் கண்களை மூடிக் கொள்ளுங்கள். யாரும் காயினை நகர்த்த முயற்சி செய்யக் கூடாது. நான் ஒரு கேள்வி கேட்பேன். காயின் தானாக நகர்ந்து நமக்குப் பதில் சொல்லும்.

    எப்படிச் சொல்லும்? ஸ்ரீதர் சிரித்துக் கொண்டே கேட்டான்.

    காற்றில் அலைந்து கொண்டிருக்கும் ஆவிகள் காயினை நகர்த்திப் பதில் சொல்லும்.

    சாரதா உற்சாகத்துடன் முன்னால் குனிந்து அந்த அட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    நாராயணனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை. இத்தனை சின்ன வயதில் எப்படி இவ்வளவு கம்பீரமாக இருக்க முடிகிறது? வாயால் வெளியில் வர முடியாத சொற்கள் இதயத்திலேயே மௌனமாய்ப் புதைந்து போய் விட்டிருக்குமோ?

    ஸ்ரீதர் தங்கையைப் பார்த்தான். என்ன கேள்வி கேட்கப் போகிறாய்?

    முதலில் விரலைக் காயின்மீது வைத்துக்கொள்.

    ஸ்ரீதர் ஆள்காட்டி விரலைக் காயின் மீது வைத்தான்.

    மற்றவர்களும் வைக்கலாம். அனிதா உற்சாகத்துடன் சொன்னாள். எல்லோரும் விரல்களை காயின் மீது வைத்தார்கள்.

    எல்லோரும் கண்களை மூடிக் கொள்ளுங்கள்.

    நான்கு பேரும் கண்களை மூடிக் கொண்டார்கள்.

    இறந்து போனவர்களை யாரையாவது நினைத்துக் கொள்ளுங்கள்.

    ஸ்ரீதருக்குப் பெற்றோரின் நினைவு வந்தது. தந்தை ஆமாம் என்றால் இல்லை என்று மறுக்கும் தாய்! இப்போ இந்த காயினை நகர்த்துவதற்குக் கூட அவர்களுடைய ஆவிகள் சண்டை போட்டுக் கொள்ளுமா?

    அவனுக்குச் சிரிப்பு வந்தது. சிரித்தால் நன்றாக இருக்காது.

    அனிதா பிரார்த்தனை செய்வது போல் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

    வெளியில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. எங்கேயோ இடி விழுந்த சத்தம் கேட்டது. ராமய்யா இருக்கும் இடம் தெரியவில்லை.

    அனிதா கேள்வியைக் கேட்டாள். நான் தேர்வுகளில் வெற்றி பெறுவேனா?

    எல்லோருடைய விரல்களும் காயின்மீது இருந்தன. ஒரு நிமிடம்.... இரண்டு நிமிடங்கள்... அனிதா விரலால் காயினை நகரத்த முயற்சி செய்தாள். ஸ்ரீதர் விரலால் அழுத்திக் கொண்டிருப்பதால் காயின் நகரவில்லை. அவனுக்குச் சிரிப்பு வந்தது. சிரித்தால் தங்கை கோபித்துக் கொள்வாள் என்று அடக்கிக் கொண்டான்.

    இங்கே பேய் பிசாசுகளை நம்பாதவர்கள் யாரோ இருக்கிறார்கள். திடீரென்று அனிதா சொன்னாள்.

    சாரதா கணவன் பக்கம் பார்த்தாள்.

    ஸ்ரீதர் விரலை எடுத்து விட்டான். நீங்க மூவரும் ஆடுங்கள்.

    மற்ற மூவரும் கண்களை மூடிக் கொண்டார்கள். அனிதா மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டாள்.

    ஒரு நிமிடம் நிசப்தம்!

    ஜன்னல் திரைச்சீலைகள் காற்றுக்கு அசைந்தன.

    அதோ... பேய் வருகிறது என்றான் ஸ்ரீதர். யாரும் பேசவில்லை. அவன் காயினைப் பார்த்தான்.

    காயின் நகர்ந்து கொண்டிருந்தது.

    மெதுவாக.... மெதுவாக மூன்று பேருடைய விரல்களையும் சுமந்துகொண்டு நகர்ந்து கொண்டிருந்தது.

    அனிதா கண்களைத் திறந்து காயின் நகருவதைப் பார்த்துவிட்டு உத்வேகத்துடன் மூச்சைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் கண்களை மூடிக் கொண்டாள்.

    அனிதா அப்பாவியாகவும், உலக ஞானம்

    Enjoying the preview?
    Page 1 of 1