Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mouname Kaadhalaga...
Mouname Kaadhalaga...
Mouname Kaadhalaga...
Ebook358 pages2 hours

Mouname Kaadhalaga...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இலக்கியம் என்பது உண்மை; வாழ்க்கையின் பிரதிபலிப்பு. மனிதனைப் பற்றிய கண்ணோட்டம், மனிதனின் விருப்பு, வெறுப்புகள், குடும்பம், சமூகம் இவற்றுடன் அவனுக்கு உள்ள உறவு, ஈடுபாடு, ஈடுபாடின்மை இவற்றை முழுமையாக காட்டுவதே இலக்கியம். மானுடத்தின் தன்மையை நன்கு உணர்ந்து, மானுடத்தின் சாயலோடு ஒட்டிப்போய், மானுடத்தின் மேன்மையைக் கருதி எழுதப்படுவதே உண்மையான முற்போக்கான இலக்கியம்.

இலக்கியம் இன்றைய சமூகத்தை பிரதிபலித்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தை ஒவ்வொரு கதையிலும் காண முடிகிறது. 'மௌனமே காதலாக' என்னும் சிறுகதை இலக்கிய சிந்தனையில் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. உண்மைக்கு புறம்பில்லாமல் எழுதி இருக்கிறார். இளம் உள்ளங்களை நன்கு புரிந்துகொண்டு காதல் எனும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்களை தெளிவாக குழப்பாமல் எழுதி இருக்கிறார். இது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம். வாசகர்களை நாகலட்சுமியாகவும், சந்தானமாகவும் மாறிமாறி அவஸ்தைப்பட விட்டிருக்கிறார். இது போன்ற பல சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்...

Languageதமிழ்
Release dateAug 8, 2022
ISBN6580156808681
Mouname Kaadhalaga...

Read more from Balakumaran

Related to Mouname Kaadhalaga...

Related ebooks

Reviews for Mouname Kaadhalaga...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mouname Kaadhalaga... - Balakumaran

    http://www.pustaka.co.in

    மௌனமே காதலாக...

    சிறுகதைகள்

    Mouname Kaadhalaga...

    Sirukadhaigal

    Author :

    பாலகுமாரன்

    Balakumaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/balakumaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சமர்ப்பணம்

    ஒரு (விமரிசன) முன்னுரை

    என்னுரை

    மௌனமே காதலாக...

    அந்தரங்கம்

    சமுத்திர ராஜகுமாரா...

    யாதுமாகி நின்றாய் காளீ...

    தொட்டால் நோகும் தழும்புகள்

    செங்கல்

    துக்கம் விசாரிக்கச் சென்றவன்

    கயமை

    ஆண்மை

    சுழல் பந்து

    கல்யாண முருங்கை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    நான் என்ன சொல்லிவிட்டேன்...

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    சமர்ப்பணம்

    எனக்கும் என் தலைமுறைக்கும்

    எழுத்தின் வலிமையைத் தெரிவித்த

    என் முன்னோர்களுள் ஒருவரான

    த. ஜெயகாந்தன்

    அவர்கட்கு சமர்ப்பணம்

    ஒரு (விமரிசன) முன்னுரை

    இலக்கியம் என்பது என்ன? காலம் காலமாக கேட்கப்படும் இந்த கேள்விக்கு வரையறுத்து விடைளிப்பது சாத்தியமல்ல. இலக்கியத்தை உணர்வது சாத்தியம், உணர்த்துவது கடினம். இலக்கிய ரசனை ஓர் அனுபவம். அனுபவத்தில் திளைத்து இன்புற முடியுமே தவிர, எடுத்துச் சொல்ல முடியாது. இனிப்பை சுவைக்க முடியும். இனிப்பு உணர்ச்சியை எங்ஙனம் வார்த்தைகளில் வடிக்க முடியும்? அனுபவம் அனைத்தையும் எடுத்துச் சொல்வது சாத்தியமில்லை.

    இலக்கியம் இன்னதுதான் என்று சொல்ல முடியாமற் போனாலும் இப்படித்தான் இருக்கும் என்று அடையாளம் காட்டிவிடலாம்.

    இலக்கியம் என்பது உண்மை; வாழ்க்கையின் பிரதிபலிப்பு. மனிதனைப் பற்றிய கண்ணோட்டம், மனிதனின் விருப்பு, வெறுப்புகள், குடும்பம், சமூகம் இவற்றுடன் அவனுக்கு உள்ள உறவு, ஈடுபாடு, ஈடுபாடின்மை இவற்றை முழுமையாக காட்டுவதே இலக்கியம்.

    மானுடத்தின் தன்மையை நன்கு உணர்ந்து, மானுடத்தின் சாயலோடு ஒட்டிப்போய், மானுடத்தின் மேன்மையைக் கருதி எழுதப்படுவதே உண்மையான முற்போக்கான இலக்கியம்.

    இன்றைய இலக்கியம் நேரில் காணக்கூடிய வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இன்று விளையும் உணர்ச்சி கொந்தளிப்பால், பொருளாதார சிக்கலால், மரபு மீற முடியாத நபும்ஸகத்தால் விளையக்கூடிய நெருக்கடிகளை யதார்த்த முறையில் ஆராய வேண்டிய அவசரம் இருக்கிறது. உணர்ச்சி வேகத்தில் இயங்கும் ஜீவனுக்கு லட்சியத்தின் தேவை வெளிப்படை. எனினும், வெறும் லட்சிய கண்ணோட்டம் மட்டும் பலனளிக்காது. வாழ்க்கையை ஒட்டாத கற்பனை மேலோட்டமான மகிழ்ச்சியை அளித்து மறைந்துவிடும். நெஞ்சைவிட்டு அகன்றுவிடும்.

    முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. மாறுதல் காலத்தின் நியதி என்றபோதும் அண்மைக் காலங்களில் மாறுதல்கள் விண்கல வேகத்தில் தோன்ற ஆரம்பித்துள்ளன. இந்த நிலைமைக்கு அதீதமான விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும், சவால்களும் காரணமாக இருக்கலாம், சுய வாழ்க்கை நிலையற்றதாகவும், ஒரு சவாலாகவும் ஏற்பட்டுள்ள நிலையில் பயம், பொறாமை, நம்பிக்கையின்மை முதலியவை தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. இது தனி மனிதனுக்கு மட்டுமல்லாமல் தேசிய அளவில் வளர்ந்து, சதா ஒரு யுத்த பயத்தை நிரந்தரமாக உண்டாக்கியுள்ளது. இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம், வளர்ந்த வேகத்தில் மனிதநேயம் மறக்கப்பட்டுவிட்டது. புறக்கணிக்கப்பட்டுள்ளது. பரஸ்பர நேசம் நம்பிக்கை படிப்படியாக கைவிடப்பட்டது. இன்றைய இளைய தலைமுறையினரிடம் இதன் விளைவும் பாதிப்பும் வெளிப்படையாகத் தோன்றியுள்ளன.

    மனிதனை மனிதன் நேசிப்பது இயற்கை, ஓர் ஆண் பெண்ணை ஸ்நேகிப்பது என்பது சுபாவமாக, சிரமில்லாமல் இயற்கையாக இருக்க வேண்டுமல்லவோ? ஒரு வேடிக்கை பாருங்கள். ஓர் ஆண் ஒரு பெண்ணை ஸ்நேகித்தான் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசங்களையும், விகல்பங்களையும் கற்பித்து விடுகின்றன.

    இன்றைய அடிப்படை அவசரத் தேவை, ஆண் - பெண் ஸ்நேகிதம் இயற்கை என்பதுவே. அது வளர்க்கப்பட வேண்டும். நல்ல நண்பர்களாக நாம் அனைவருமே இருக்க முடியும் என்ற எண்ணத்தை வலுப்படுத்த இது மிக்க அவசரமாக செய்ய வேண்டிய காரியம். இந்த எண்ணத்துக்கு வித்திட்டு, உரமிட்டு, வேகமாக வளர்க்கவில்லை என்றால் மனிதனுக்கு மனிதன் பரஸ்பர விரோதத்தில் மடிந்துவிடுவது திண்ணம்.

    பழைய காலத்தில் பால்ய விதவையின் கண்ணீர் ஓடிற்று என்றால் இப்பொழுது வயது முதிர்ந்த பெண்கள் ஆண்துணை இல்லாமல் அலைபாய்கிறார்கள்.

    என் தாயாரின் மச்சினிக்கு திருமணம் தள்ளிப் போனது செவ்வாய் தோஷத்துடன் கூடிய மூல நட்சத்திரத்தினால் என்றால், இதோ என் தமக்கையின் கல்யாணம் அவள் பின்னால் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் தம்பி, தங்கைகளாலும், ஓய்வுபெற்றுவிட்ட தந்தை ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடியாலும் நெட்டி வெகுதூரத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது.

    ஆண்களும் பெண்களும் தங்களுடைய இளமைக் காலங்களில் அதிகமாக நெருங்கிப் பழகக்கூடிய ஒரு சுதந்திரத்தினால் சில விபரீதங்கள் ஏற்படுகின்றன. இந்த விபரீதங்களுக்கு நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு ஒரு காரணம் என்றாலும், இன்றைய சூழலில் அப்படிப்பட்ட நெருக்கமான சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பது அசாத்தியம். இந்த விபரீதங்கள் நிகழாமலிருக்க வேண்டும் என்றால் பழகும் நெஞ்சங்கள் நிறைவேற முடியாத, சாத்தியக்கூறு அற்ற எதிர்பார்ப்புகளை தவிர்க்க வேண்டும். ஆகவே இன்றைய இளைய தலைமுறையினருக்கு, குறிப்பாக பெண்களுக்கு ஆண் - பெண் ஸ்நேகிதத்தைப் பற்றி சரியாக கற்பிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. இச்சிறுகதைத் தொகுப்பில் பொதுப்படையாகக் காணப்படுவது ஆண் - பெண் ஸ்நேகிதத்தின் பல கோணங்கள்.

    ஆண் - பெண் உறவு பற்றி சொல்லுவதெல்லாம் ஆபாசம் என்பது போலித்தனமான வாதம். செக்ஸ் உணர்ச்சி என்பது வாழ்க்கையின் அடித்தள உணர்ச்சி. ஆக இலக்கியத்தில் ஆண் - பெண் உறவு பற்றி சொல்லப்படுவதை தவிர்க்க இயலாது. இலக்கியத்தில் ஆபாசம் என்பது வேறு, ஆபாச இலக்கியம் என்பது வேறு. இதை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். இலக்கிய கண்ணோட்டம் என்ன என்பதில் தெளிவு இருக்க வேண்டும். ரசனை முறை சரியாக இருந்துவிட்டால் சங்கடம் இல்லை.

    திரு. பாலகுமாரனை 'மெர்க்குரிப் பூக்கள்' என்னும் மகத்தான இலக்கியம் மூலமாக நான் இனம் கண்டுகொண்டேன். ஒருவேளை நான் ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணிபுரிவதால் 'மெர்க்குரிப் பூக்கள்' கதையில் தொழிலாளர் பிரச்சினையை கையாண்டவிதம் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.

    இளைய தலைமுறையினரின் இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்து, தன் இருப்பை ஸ்திரமாக நிலைநாட்டி வருபவர் திரு. பாலகுமாரன். பத்திரிகையில் வரும் கதைகள் இலக்கியத்தை வளர்ப்பதில்லை. இதன் மூலம் கதாசிரியன் Compromise செய்து கொள்கிறான் என்பது போன்ற பலவிதமான அர்த்தமற்ற சித்தாந்தங்களைத் தவிர்த்து, விழிப்போடு, தேடலோடு கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கி படிக்கும் வேளையில் எனக்கு பரிச்சயம் ஆனவர்.

    பெண்களின் மனத்திற்குள்ளே புகுந்து அங்குள்ள சஞ்சலங்களை, தாபங்களை, தவிப்புகளை கவனித்து கவிதை ததும்பும்படி சித்திரங்களாகத் தந்து இருக்கிறார். மனிதர்களின், குறிப்பாக பெண்களின் துயரத்தைப்பற்றி ஒரு பிரக்ஞையோடு எழுதி இருக்கிறார்.

    இலக்கியம் இன்றைய சமூகத்தை பிரதிபலித்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தை ஒவ்வொரு கதையிலும் காண முடிகிறது.

    'மௌனமே காதலாக' என்னும் சிறுகதை இலக்கிய சிந்தனையில் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. உண்மைக்கு புறம்பில்லாமல் எழுதி இருக்கிறார். இளம் உள்ளங்களை நன்கு புரிந்துகொண்டு காதல் எனும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்களை தெளிவாக குழப்பாமல் எழுதி இருக்கிறார். இது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம். வாசகர்களை நாகலட்சுமியாகவும், சந்தானமாகவும் மாறிமாறி அவஸ்தைப்பட விட்டிருக்கிறார்.

    'அந்தரங்கம்' - என்னும் வார்த்தைக்கே ஓர் வசியம் இருக்கிறது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய விஷயங்களையும்கூட அந்தரங்கம் என்னும் போர்வை மூடிவிட்டால், அதற்கு ஒரு தனி மகத்துவம் ஏற்பட்டு விடுகிறது. பிறருடைய அந்தரங்கங்களை அறிவதில் எவருக்குமே ஒரு அலாதியான அக்கறை; அவசரம். இவைகளை இப்போதைய கிசுகிசுக்கள் நன்றாக exploit பண்ணிக்கொண்டு வருகின்றன. நம்முடைய அந்தரங்கம் பகிரங்கமாகும் போதுதான் சம்பந்தப்பட்டவனின் அவஸ்தை புரிகிறது.

    'அந்தரங்கம் மென்மையானது; மேன்மையானது' என்பது எவ்வளவு உண்மையான கருத்து. வியாபார ரீதியில் அந்தரங்கத்தை அம்பலப்படுத்துவதும், பொய்யை இது நிஜமா என்ற கேள்வி மூலம் நிஜமாக்கிவிடுவதும் கேவலம் மனிதாபிமானத்திற்கு புறம்பானது. தாசித் தொழில் என்பதை எவ்வளவு நளினமாக எடுத்துரைத்து விட்டார். 'பலே' என்று நம்மையறியாமல் வெளிப்படுகிறது பாராட்டு.

    'சமுத்திர ராஜகுமாரா'

    'முதிர்கன்னிகள்' எப்படி இந்த வார்த்தை பிரயோகம் பளிச்சென்று முகத்தில் அறைகிறாற்போல் இருக்கிறது. இதயமில்லாத இந்த நவநாகரிக யுகத்தில் முதிர்கன்னிகள்' எங்குமே நிறைந்து காணப்படுகிறார்கள். காலேஜ் லெக்சரராக, ஆபீஸ் சூபரின்டெண்டெண்டாக, டைப்பிஸ்டாக, காஷியராக, வீட்டுக்கு வீடு சோப் விற்கும் பெண்களாக! 'வுமன்ஸ் லிபரேஷன்' பற்றி வாய் கிழியப் பேசுகின்ற நேரத்தில் எது உண்மையான பெண்மையின் விடுதலை என்பது பற்றி ஆராய்ந்து இருக்கிறீர்களா? என் பெண்மையைப் பகிர்ந்துகொள்ள, என்னையும் ஆட்கொள்ள இதோ ஒரு ஆண்மகன் என்ற நினைப்பல்லவா உண்மையான விடுதலை. 'யாதுமாகி நின்றாய் காளீ’- ஒரு பெண்ணுக்கு இவ்வளவு துணிச்சலா என்று ஆச்சரியமாக இருக்கிறது. வாஸ்தவத்தில் ஒருபெண் தான் நினைத்துவிட்ட, முடிவு செய்துட்ட ஆணிடம் தன்னை பரிபூரணமாக ஒப்படைத்து விடுகிறாள். வேணும்னு முடிவு பண்ணிவிட்ட பிறகு வெட்கத்திற்கோ, பயத்திற்கோ, பிறர் ஏச்சுக்கோ, பேச்சுக்கோ இடமே கொடுப்பதில்லை. இந்த இயற்கையை உணராத வகையில் பெண்கள் புதிர்களாகவே இருக்கிறார்கள். பரிபூரண ஒப்படைப்பு என்பது பெண்களுக்கே சாத்தியம். ஒரு பெண் செய்கிற காரியமா என்று வியக்கும் பொழுது நினைவிருக்கட்டும், இது ஒரு பெண்ணிற்கு மட்டுமே சாத்தியம் என்பது.

    'தொட்டால் நோகும் தழும்புகள்' - சமீபத்தில் ‘கழுத்தில் விழுந்த மாலை' என்ற திரு. ஜெயகாந்தன் எழுதிய குறுநாவலைப் படித்தேன். இரண்டு புறாக்கள் கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்த சமயம், ஒரு வேடன் ஆண் புறாவை அம்பு எய்து வீழ்த்தக் கண்ட முனிவர் ஆறாத்துயரம் கொண்டு கவி இயற்றினார் - ராமாயணம் உதயமாயிற்று. பெண் புறா என்ன ஆயிற்று? வால்மீகி கவலைப்படவேயில்லை என எழுதி இருந்தார். அத்தை ஏற்படுத்திய ரணம் மைத்ரேயிக்கு ஆறி தழும்பாகிவிட்டது. தொட்டால் மட்டுமே நொந்தது. ராமகிருஷ்ணனின் ரணம் ஆறவேயில்லை சீழ் பிடித்து, புரையோடி கொஞ்சம் கொஞ்சமாய் அழுகிச் செத்துக் கொண்டிருக்கிறது. இங்கு அனைவரும் ஆண்புறாவை மறந்து விட்டனர்.

    'செங்கல்' - இலக்கியம் இன்றைய சமூகச் சூழலை பிரதிபலித்தே ஆக வேண்டும். பிள்ளைக் குழந்தைக்கு தவம்கிடந்து, காசி ராமேஸ்வரம் யாத்திரை செய்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. பிரஜா உற்பத்தியைப் பொருளாதாரம் நிச்சயிக்கின்ற காலம் இது என்றாலும் பாவம் புண்ணியம் என்கிற மரபுநிலை முழுமையாக மறைந்து விடாது. பகலும் அல்லாத இரவும் அல்லாத அந்தி நேரம் இது. அந்திநேர மனக் குழப்பத்தையும் உணர்ச்சி கொந்தளிப்பையும் ஆவேசமாக்கிவிட்டிருக்கிறது - இந்தக் கதை தொகுதிக் கட்டடத்தில் ஒட்டாமல் துருத்திக் கொண்டிருக்கும் செங்கல், 'துக்கம் விசாரிக்கச் சென்றவன்' ஆண், பெண் ஸ்நேகிதம், அதில் ஏற்படும் சிக்கல்கள் மட்டுமே கையாளப்படாமல் பிற மனித தொடர்புகளையும் மையாகக் கொண்டு கையாளப்பட்டிருக்கிறது. இதுவே சிறப்பாகவும் இருக்கிறது, தொழில்நுட்பங்களை கவனித்து, சரியான முறையில் விளக்கம் கொடுத்திருப்பது கதையின் யதார்த்த தன்மையை உயர்த்தி விடுகிறது. ராதாகிருஷ்ணனின் ஐம்பது வயது தாயார் கண்களை பனிக்க வைக்கிறாள். இன்று இந்த க்ஷணம் இவள் உலகம் சிநேகமயமானது. இவள் அப்பாவித்தனம் 'ஐயோ' என்றிருந்தாலும் இவளுக்குள் மகிழ்ச்சி ததும்புகிறது அப்பப்பா! என்ன கருத்துச் செறிவுள்ள வார்த்தைகள் சிநேகமயமாக உலகத்தை நோக்க அப்பாவித்தனம் தேவைப்பட்டால், நான் அப்பாவியாகவே இருந்துவிட்டுப் போகிறேன். எல்லாவற்றையும் தர்க்க ரீதியாய் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டு என்ன பயன்? மன எரிச்சலும் வெறுப்புமே மிஞ்சிப்போகிறது. உலகத்தை விட்டு தனித்துப் போய் தனி மரமாய் வெதும்பி கருகிவிடுகிறது...

    'கயமை' - தப்பு யார் பேரில்? ராகவன் பேரிலா அல்லது அவன் தந்தையின் பேரிலா? அப்பாவைக் கேட்டால் பிள்ளையின் மேல் பழி சுமத்துவார். பிள்ளை அப்பாவை காரணம் காட்டுவான் தெளிவாக இல்லை. மொத்தத்தில் பிரச்சினைக்கு இருவருமே காரணமாகிறார்கள். 'சின்னச் சின்னதாய் அப்பா அடித்த காயங்களெல்லாம் வலுவாயின' என்று நியாயம் பேசுகின்ற ராகவனுக்கு மூடு... வாயை மூடு என்று தன் குழந்தையை விசிறிக் காம்பால் அடித்து தாத்தாவிடமிருந்து பிரிக்கும்போது இது அந்தக் குழந்தையின் உணர்வு நசுக்கப்பட்டு, பிற்காலத்தில் வலுவான காயங்களாக மாறக்கூடும் என்று ஏன் தோன்றவில்லை? இதுதான் மனித இயல்போ?

    குழந்தை முகம் சிவந்து, வாய்பொத்தி குலுங்கியபோது இவன் நெஞ்சில் வடித்த ரத்தத்தை உணர முடிந்ததே தவிர, தன் தந்தையின் இதயமும் இரத்தம் வடித்திருக்கக்கூடும் என்று ஏன் நினைக்கவில்லை? குதர்க்கமான நோக்கு நிரந்தரமான குரோதத்தில் முடிவடைகிறது. ராகவனுக்கு இதை யார் உணர்த்துவார்கள்? ஒரு கதையின் முடிவோடு வாசகன் முரண்படுவது கூட கதாசிரியருக்கு வெற்றிதான்.

    'ஆண்மை' - எலிப்பத்தாயம் சினிமா நினைவுக்கு வருகிறது. ஆனால் 'எலிப்பத்தாயம்’  சினிமா வருவதற்கு வெகுகாலம் முன்பே எழுதப்பட்ட கதை. "எலிப்பத்தாயத்தில் ஒரு பெண் எலியுடன் பொறியை நீரில் முக்கிக்கொன்று விடுவாள். ஒரு பிராணியைக் கொல்வதற்கு நல்ல மனோதிடம் தேவை இதை 'ஆண்மை' என்று கூற முடியாது. கல்யாணமான புதிதில் என் இளம் மனைவி கரப்பான்பூச்சியை துடைப்பத்தால் அடித்துக் கொல்வதைப் பார்த்து திகைத்திருக்கிறேன். ஒரு பெண் இவ்வளவு குரூரமாக இருக்க முடியுமா என்று அதிர்ந்து இருக்கிறேன். ஆனால், இன்று படுக்கை அறையில் கரப்பான்பூச்சியைத் கண்டவுடன் மனைவியைக் கூப்பிட்டு அடிக்கச் சொல்கிறேன். அடுத்து எலி மாட்டினால் இவனும் மனைவியை வெந்நீர் போட்டுக் கொண்டு வரத்தான் சொல்லப் போகிறான்.

    'சுழல் பந்து' - இது ஒரு இளமைக் கதை. மனது குழந்தையாய் இருப்பின் உலகம் சந்தோஷம்தான். மகிழ்ச்சியான இளமைக்காலம் - பெரியவர்கள் மனதிலே சின்னப்பையன் எப்பொழுதுமே இருக்கிறான். ‘Transactional Analis' தத்துவப்படி எல்லோருக்குமே குழந்தை ego உள்ளே ஒளிந்துகொண்டு அவ்வப்பொழுது தலைநீட்டுவது இயற்கை. பாலா இதனை நன்கு உணர்ந்து அனுபவித்திருக்கிறார். உலகத்தில் கிரிக்கெட் மட்டுமா சுவாரஸ்யம் (லதா லவ் மேட்டர் அதைவிட சுவாரஸ்யம்). 'நான் உன்னை பிரதர் மாதிரி நினைச்சிட்டிருக்கிறேன்' - என்னும் வார்த்தை கபடமில்லாத இளம் உள்ளத்தை மட்டுமே தைத்து வரம்பு மீறாமல் தடுக்க முடியும். பெண்களிடம் வம்பு செய்யும் ஆபீஸர் ஓநாய்களிடம் நீங்க என் அப்பா மாதிரி சார் என்று கண்ணீர்விட்டாலும் எடுபடாது. கள்ளமில்லா இளம் வயதைக் கடந்துவிட்ட காலமல்லவா? பிஞ்சுகள் வெம்பி பழுப்பது உடலுக்கு முன்மூளை தெரிந்து கொள்வதால்தான் என்பது எவ்வளவு வாஸ்தவம். படிக்கும்பொழுது என்னுள் உள்ள கண்ணன் விழித்துக்கொண்டு அழுதான். ராதா, பத்ரீ, சுயம்பு, குமார், ஆனந்து, சுட்டி, கணேஷ் எல்லோருமே என்னுள் ஏதோ ஒரு காலகட்டத்தில் இருப்பதை உணர்ந்தேன். ஆஹா! அந்த இளமைக்காலம் இனி திரும்புமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது.

    'கல்யாண முருங்கை'  மெல்லியதாய் காற்று வீசிக்கொண்டு பிரகாசமாய் இருந்த ஆகாயத்தில் மடமடவென்று இருமேகங்கள் சூழ்ந்து படபடவென்று மின்னலடித்து 'சோ' என்று மழைகொட்டியது. குடையில்லாமல் தவித்துப் போய்விட்டேன். நாலு கதைகளை லேசாக காபியை உறிஞ்சிக்கொண்டே இதழோரத்தில் புன்னகை தவழபடிந்த சமயத்தில், இதோ ஒருகனத்த 'கல்யாண முருங்கை, விரலிடுக்கில் இருந்த சிகரெட் புகைக்காமலேயே சாம்பலாய் உதிர்ந்துவிட்டது. என் அத்தை பெண் ஞாபகம் வந்தது. தாய் வீட்டுக்கு வந்த பெண்ணை தாய் கேட்கிறாள், ஏண்டி பரபரக்கிறே? சாயந்திரமே போயிடணுமா என்ன? ஒரு பத்துநாள் இருந்துவிட்டுப் போயேன்? பெண் அவசரத்துடன் பதில் அளிக்கிறாள், ஐயய்யோ! பத்து நாளா? வேற வினையே வேண்டாம் போ. உன் மாப்பிள்ளை பற்றி உனக்குத் தெரியாது. விளக்கு வச்சிட்டால் வந்து நிப்பார். லீவு நாள் என்றால் பகல் என்கிற விவஸ்தைகூட கிடையாது. 'இது’ இல்லாம இருக்க முடியாத ஜன்மம் என்னால் முடியலேம்மா! கை கால் எல்லாம் ஒய்ஞ்சு போறது. மகளின் பேச்சுக்கு பெருமையில் தாய் பூரித்துப் போகிறாள்.

    ஒடம்பை பார்த்துக்கோ கொழந்தே. மாமனாருக்கு ஏத்த மாப்பிள்ளையாத்தான் வாச்சிருக்கு. சாய்வு நாற்காலியில் பேப்பர் படிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்து அர்த்தபுஷ்டியாக நகைக்கிறாள் இன்றிரவு கிழவர் பாடு கொண்டாட்டம்.

    சற்று வித்தியாசமாகப் பாருங்கள், நேரம் காலமின்றி பகலிரவு பாராமல் உடலுறவுகொள்ளும் பெண்ணைப் பற்றி பெருமைப்படும் தாய், அந்தப் பெண்ணிற்கு திருமணமாகாமல் இந்நிகழ்ச்சி நடைபெற்றிருந்தால் தற்கொலையே பண்ணிக் கொண்டிருப்பாள்.

    நடவடிக்கை ஒன்றாய் இருப்பினும் முன்னதுக்கு சமூக ஆமோதிப்பு, ஒப்புதல் இருக்கிறது. பின்னதுக்கு சமூக எதிர்ப்பு, ஆக்ஷேபனை இருக்கிறது. இந்த சமூக மரபுக்குள் சௌக்கியம் கருதி உள்ளே புகுந்து கொண்டாலும் வெளியேற மீற முடியவில்லை என்று தவிப்பு. சங்கடம். அடிக்கடி சாமி ஆடியாவது மரபு மீறல் தேவைகளை தணித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரேயடியாக மரபுக்கு தலைமுழுகி வெளியே வந்துவிட்டாலும் தனிமை வாட்டி வதைக்கிறது. மரபு மீறினவனை உலகம் அவன் வாழும் காலங்களில் ஒப்புக்கொண்டதாக சரித்திரமே இல்லை. கூட்டத்திலிருந்து விழுந்த காக்கை போல், துரத்தித் துரத்தி அடிக்கப்படுகிறான். மரபு மீறினது பெண்ணாயிருந்தால் மிகவும் கொண்டாட்டம் மரபு மீறமுடியாமல் அகப்பட்டுக் கொண்டு அவஸ்தைப்படுகிற பெண் நண்டுகள் கொடுக்கால் கவ்வித் திரும்பவும் வளைக்குள் இழுத்துக் கொண்டுவிடும். ஆண்களுக்கு மரபு மீறின பெண்களைக் கண்டால் கொண்டாட்டம்தான். அனுமதியோ, சம்மதமோ ஒன்றும் தேவையில்லை என்ற நினைப்பு, மரபு மீறப்படும் சமயத்தில் ஆவேசமாகச் கண்டிக்கப்பட்டாலும் பிற்காலத்தில் மீறல்கள் மரபாகி விடுகின்றன.

    'திருமணம் என்பது ஓர் வாழ்க்கை ஒப்பந்தம். ஒப்பந்தம் என்றால் இரு தரத்தார்க்கும் சில நிபந்தனைகள் உண்டு. உடலுறவு இந்த நிபந்தனைகளுள் தலையாய ஒன்று. இதை இந்திய தாம்பத்திய சட்டரீதியாக நிலைநாட்டிக் கொள்ள முடியும். நிபந்தனை, சட்டம் என்று வந்துவிட்டால் தன்னிச்சை பாதிக்கப்பட்டு நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிவிட வேண்டியிருக்கிறது. ஆகவே 'திருமணம்' என்கிற வாழ்க்கை ஒப்பந்தம் தரும் உரிமையால் ஒரு பெண் கணவனாலேயே பலமுறை கற்பழிக்கப்பட்டு விடுகிறாள். உடலுறவு கடமையாகிவிடுகிறது வியாபாரமாகி விடுகிறது. பல நேரங்களில் சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவர் கண்டிப்பாக நிர்ப்பந்திக்கப்படுகிறார். இதில் அதிகபட்சமாக பெண்ணாகத்தானிருக்கிறாள். தன்னிச்சையாக மனது துள்ளுகையில் அணைத்துக்கொள்ள வாய்ப்பு அநேகமாக வெகுசுலபமாக இருக்கிறது. இதற்குக் காரணம் திருமணம் என்னும் பெரும்பந்தம் கல்யாணம் என்ற சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதால் உண்டாகும் அவஸ்தை, உடலுறவு என்பது மேன்மையான ஸ்நேகிதத்தின் உச்சகட்டம். ஆனால், இது திருமணம் என்னும் நிர்ப்பந்தத்தால் மிகவும் கொச்சைப்பட்டுப் போகிறது. உடலுறவை கொச்சைப்படுத்தாமல் பாருங்கள். அதன் உன்னதமும் அவசியமும் விளங்கும் உடலால் தீண்டுவது, தீண்டப்படுவது ஒரு உயிரியல் தேவை. சூழ்நிலைப் பருவத்தில் இந்தத் தேவை வெளிப்படையாகத் தெரிகிறது அழும் குழந்தை கையிலெடுத்து அனைத்துக் கொண்டவுடனேயே அழுகையை நிறுத்தி விடுகிறது.

    அணைத்துக் கொள்ளுதல், உச்சிமுகர்தல், முத்தமிடுதல் எல்லாமே குழந்தைக்கு மட்டுமே மகிழ்ச்சியளிப்பதில்லை, தாய்க்கும் மகிழ்ச்சி ஊட்டக்கூடியது. இந்த உணர்ச்சிபூர்வமான தேவையை விஞ்ஞானரீதியாக முழுமையாக விளக்க முடியாவிட்டாலும், ஓரளவு கோடிட்டு காண்பிக்க முடியும் கருவுற்ற நாளிலிருந்தே சிசுவுக்கு தாயின் உடலோடு சம்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.

    துரதிர்ஷ்டவசமாக நாகரிகத்தாலும், கட்டுப்பாடுகளாலும் பெரியவர்கள் ஆகஆக இந்த உடற்தீண்டல் புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. தூர விலகிவிட்ட உடல்கள் உணர்ச்சிகளை பரிமாறிக்கொள்வது எங்ஙனம்? இப்பொழுதும் துயர மிகுதியால் கட்டிக்கொண்டு அழுதல் சகஜம் இந்த மாதிரி கட்டித் தழுவுவதால் ஒரு மன ஆதரவு உண்டாகி துயர் துடைக்கப்படுகிறது.

    ரேஸ் மைதானங்களில், விளையாட்டு அரங்குகளில், வெற்றிக் களிப்பில் ஒருவரை ஒருவர் அறிமுகமில்லாமலே கட்டிப்பிடித்து ஆனந்தக் கூத்தாடுவதைக் காணலாம். உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்தும் பொழுது வார்த்தைகள் பற்றாக்குறையாகி உடல் தீண்டல் ஏற்படுகிறது. வார்த்தைகளால் பரிமாறிக்கொள்ள முடியாத உணர்ச்சிகளை உடல் தீண்டலால் மட்டுமே பகிர்ந்து

    Enjoying the preview?
    Page 1 of 1