Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appusamyin Colour TV
Appusamyin Colour TV
Appusamyin Colour TV
Ebook55 pages34 minutes

Appusamyin Colour TV

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580112301824
Appusamyin Colour TV

Read more from Bakkiyam Ramasamy

Related authors

Related to Appusamyin Colour TV

Related ebooks

Related categories

Reviews for Appusamyin Colour TV

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appusamyin Colour TV - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    அப்புசாமியின் கலர் டி. வி.

    Appusamyin Colour TV

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For other books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஒரு பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலை செய்வதில் ஒர் அனுகூலம் உண்டு. சார், சார், என் கதையைப் பிரசுரியுங்கள் சார், என்று ஒரொரு பத்திரிகை ஆபீசாகப் போய்க் கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை. நாம் எந்தப் பத்திரிகையில் வேலை செய்கிறோமோ, அந்த ஆசிரியரை மட்டும் கெஞ்சினால் போதும்.

    நான் ஒருவகையில் அதிருஷ்டக்காரன். குமுதம் ஆசிரியர் பெருமதிப்புக்குரிய எஸ். ஏ. பி. அவர்களை எனது ஆசானாக அடைந்தது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும்.

    தனது இலாகாவினரை அவரே விதம்விதமாகக் கதைகள் எழுதச் சொல்வார்.

    அவர் தந்த பயிற்சியும், கற்றுத் தந்த உத்திகளும், செய்த இலக்கியத் தொந்தரவுகளும் ஏராளம். அதி அற்புதமான ரசிகர்.

    ‘ரா. கி. ர, புனிதன், ஜ. ரா. சு' என்ற மூவரை மட்டும் தனது ஆசிரிய இலாகாவில் வைத்துக் கொண்டு, இந்தியாவிலேயே அதிக விற்பனையுள்ள பத்திரிகை என்று குமுதத்துக்கு எப்படி அவர் பெருமை சேர்த்தார் என்று பலரும் ஆச்சரியப் பட்டனர். அதற்குக் காரணம் இருந்தது. ஆசிரியர் திரு. எஸ். ஏ. பி. அவர்கள் அந்த மூவரைப்போல் முப்பது மடங்கு ஒரொரு இதழுக்கும் உழைத்துக் கொண்டிருந்தார்.

    தாமும் அதிஅற்புதமாக எழுதிக்கொண்டு தனது சகாக்களையும் எழுத வைத்து, அவர்களோடு தனது ரசனைகளையும் பகிர்ந்துகொண்டு, அவற்றை விதம் விதமான வடிவங்களில் எழுத்துக்களாக்கி மக்களுக்கு விநியோகித்தார். எல்லா வகைச் சுவைகளிலும் என்னை எழுதவைத்தார்.

    நகைச்சுவை உணர்வில் அவர் அரசு.

    அவர் அருளால் உருவாகிய பாத்திரங்களே அப்புசாமி - சீதாப்பாட்டி

    தமிழகத்தில் முப்பத்தைந்து வருஷங்களாக உலவி வருகிற கதாபாத்திரங்களாக அவை இன்னும் இருந்து வருவதற்குக் காரணம் எனது ஆசான் நகைச்சுவை வள்ளல் திரு. எஸ். ஏ. பி. அவர்கள்தான்.

    ஒரொரு கதையை உருவாக்குவதிலிருந்து அச்சில் வெளிவரும்வரை கூடவே நிழலென வருவார்.

    மற்றக் கதைகளைவிட அப்புசாமி கதைகள் உருவாக்குவதில் அவர் பங்கு அதிகம். காட்டிய சிரத்தை அதிகம் என்றே சொல்வேன். அதில் அவரும் நானும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு குழந்தையின் கையில் கண்ணாடி ஜக்கைக் கொடுத்து அனுப்பிவிட்டுக் கூடவே போகிற அம்மா மாதிரி அவர் எனக்கு அப்புசாமி கதையில் கூடவே வருவார்.

    அப்புசாமியை எப்படியெல்லாம் வறுத்து எடுக்கலாம் என்று இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கண்ணில் நீர் வருகிற மாதிரி சிரிப்போம்.

    சுலபத்தில் திருப்தி அடைந்துவிட மாட்டார். இன்னின்ன மாதிரி எழுதினால் ஒருத்தரை அழவைக்க முடியும். இப்படி எழுதினால் சிரிக்க வைக்க முடியும் என்ற உத்திகளை வெகு நன்றாக அறிந்தவர். மற்றவர்களிடம் இருந்து அதை வெளிக்கொணரப் படாதபாடுபடுவார்.

    Enjoying the preview?
    Page 1 of 1