Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andha 37 Varudangal
Andha 37 Varudangal
Andha 37 Varudangal
Ebook105 pages2 hours

Andha 37 Varudangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முன்னுரை

ஆலமரத்திற்கு அதில் வாழ் அணிலின் அணிந்துரை... இல்லை ஆராதனை இது.

நாமும் எழுத முயற்சிக்கலாம் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தவர்களில் முக்கியமானவர் நம் அறிவில் கலந்துவிட்ட திரு. பாக்கியம் ராமசாமி அவர்கள். அவர் இறந்து முழு வருடம் கடந்ததை நினைவுட்டும் கூட்டத்தில் பேசிய அனைவரும் அவர் எழுத்தை விட அவரைப் பற்றி அதிகம் பேசிய போது என் இழப்பு எத்தகையது என்று புரிந்தது.

ஒரு ஏகலைவனாகவே இருந்துவிட்டிருந்தேன். இல்லையெனில் நம் உணர்வில் கலந்துவிட்ட திரு பா. ரா. என்றே பதிவு செய்திருப்பேன். அதற்கு அவர் இளைய மகனும் ஒரு காரணம். ஆம் அவர் என்னை மிக தாமதமாக புரிந்து கொண்டதும் ஒரு காரணம். நகைச்சுவை, பேச்சில் வருவது வேறு, எழுத்தில் வருவது வேறு. திரு பா. ரா. இரண்டிலுமே ஜாம்பவான்.

இவர் அனுபவித்த வறுமையையும் நகைச்சுயையுடனே விவரிக்கிறார் 'அந்த 37 வருடங்களில்' என்கின்ற அவர் படைப்பு வந்த காலத்தே இவருடைய நகைச்சுவை உணர்ச்சிகளை படித்தோரும் அவருடன் கூட வாழ்ந்தோரும் புரிந்து கொண்டனரா என்பது ஒரு கேள்வியாக மனதில் எழுவது தவிர்க்க முடியாதது.

இதன் காலத்தை - அவ்வப்பொழுது பெஞ்சு அல்லது காலரி டிக்கெட்டில் இரண்டணா (பன்னிரென்டு பைசா) கொடுத்து கௌரவமாக சினிமா பார்க்க வசதிபட்டது - என்ற வரிகளில் அனுமானித்துக் கொள்ளலாம். அக்காலத்தே இப்படி எழுதியவரை என்ன சொல்லித்தான் பாராட்டுவது.

அந்த காலத்து நகைச்சுவை இன்றும் இளமையாக இருப்பது அதன் ஊற்றின் - காலத்தை மறுதலித்த - சிரஞ்சீவித்தனத்தை காட்டுகிறது. 'விரலிடுக்கில் சிகரெட் வாழாவெட்டியாய் மடியும்' என்ற வரி ஒரு ஹைகூ. அப்படியே கண்முன்னே ஒரு சாம்பல் தொடர் உருளை விரலிடுக்கில் இருப்பது படிப்பவர் மனக்கண்ணில் வந்து நின்று விடுகிறது. மேலும் வாழாவெட்டியாய் என்ற விவரம் பல விடயங்களை நமக்கு பகிர்ந்து விடுகிறது. இவையாவும் நகைச்சுவை அழகால் நுணுக்கமாக வேயப்பட்டிருக்கிறது. அவர் கொஞ்சம் தீவிர விடயங்களையும் முயன்றிருக்கலாமோ என்ற தாபம் நம்மை வந்தடைகிறது.

இப்படைப்பில் இடம் பெரும் சம்பவங்களும் சம்பாஷணைகளும் விவரணைகளும் பல படங்களில் (எழுத்திய காலத்திற்கு பிற்பட்ட) எடுத்தாளப்பட்டிருப்பதை எழுத்தையும் திரையையும் தொடர்ந்து பின்பற்றுபவர்கள் நன்றாகவே உணர்வார்கள்.

இவருக்குள் நாம் தனித்தனியாக பார்த்த கலைவாணர், நாகேஷ், தங்கவேலு, எம் ஆர். ராதா இவர்களனைவரும் ஒன்றாக கலந்து எழுத்துக்களாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இதில்லாமல் அவரும் இவர்களோடு சேர்ந்து ஒரு அமர்களமான நகைச்சுவை ஜூகல்பந்தியாக பல இடங்கள். அப்போதே இவருள்ளே திரு. பாக்கியராஜும் இருந்திருக்கிறார். சான்று இவ்வரிகள். "ஒரு சம்சாரியான ஐயர் இருந்தார். மகா உத்தமர். ஆசாரசீலர். மிக ஆசாரமாக இருந்தாலே அவர்களுக்கு நிறையக் குழந்தைகள் இருக்கும் என்கிற பழங்கால மரபுப்படி அவர் பெரிய குடும்பஸ்தர்.

அவர் தங்கியிருந்த வீட்டில் படிக்க வந்த பையன்கள் அசார்டட் பிஸ்கட்கள் போல சிதறியிருந்தார்கள் என்ற விவரணை எவ்வளவு நுணுக்கம், என்ன ஒரு ரசனை. மேலும் படிப்போரை கவரும் நகைச்சுவை. இவரை இவர் வாழ்ந்த காலம் முழுவதுவாக கொண்டாவில்லை என்பது என் எண்ணம். இப்படைப்பு அவரின் சுயசரிதைக்கான ஒரு முன்னோட்டமாக இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு அவரின் இயற்கையான நகைச்சுவை உணர்வுள்ள எழுத்துக்கான show room display வாகவே தெரிகிறது.

இவர் படைப்புகள் எல்லாமே டிஜிடலைஸ் பண்ண வேண்டும் என்பது என் கோரிக்கை.

ஒரு பெரிய படைப்பாளின் படைப்புக்கு யாருமறிய ஒரு ரசிகனை விட்டு அணிந்துரை எழுத வைக்க யோகேஷ் தவிர யாரால் முடியும். நன்றி யோ. பணி சிறக்க, தொடர, படர வாழ்த்துக்கள்.

- கோவிந்த் மனோஹர்

Address : FLat No. 1-A, Pushkar Exotica 34. 9th Street, U Block Anna Nagar, Chennai - 40. Mob : 94444 00712

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112304127
Andha 37 Varudangal

Read more from Bakkiyam Ramasamy

Related to Andha 37 Varudangal

Related ebooks

Related categories

Reviews for Andha 37 Varudangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andha 37 Varudangal - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    அந்த 37 வருடங்கள்

    Andha 37 Varudangal

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    (இந்த கட்டுரைகள் 1994 வருடம் எழுதப்பட்டது)

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 1

    அண்ணாவுடன் போர்! போர்! போர்!

    அப்போது எனக்கு வயசு பதினாறு. அண்ணாவுடன் மோதினேன். அண்ணா நான் சொல்வதைக் கேட்கவே மாட்டார்..

    அண்ணாவுக்கு மூக்குப் பொடிப் பழக்கம் உண்டு. ''டேய், போய் வெள்ளைப் பொடி வாங்கிட்டு வா. நெய்ப்பொடி வாங்கிடாதே. ஒழுகித் தொலைக்கும்'' என்பார்.

    நான் பொடி நடையில் போய்ப் பொடி வாங்கி வந்து தந்தது எத்தனையோ தடவைகள். என் டைரியைப் புரட்டினால் தேதி கூடச் சொல்லிவிடுவேன்.

    அண்ணா பேசினாரானால் இன்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். சுவையான பேச்சாளர். அவருக்கென்று ஒரு கூட்டம் எப்போதும் வீட்டின் முன் அறையில் குழுமியிருக்கும்.

    அண்ணா மிகச் சாதுரியமாக அவர்களது வழக்குகளைத் தீர்த்து வைப்பார். அண்ணா மிகச் சிறந்த நிர்வாகி என்பதில் எனக்கோ, மற்றவர்களுக்கோ மாற்றுக் கருத்து கிடையாது என்றாலும், நான் மட்டும் அவருடன் போராடத் தொடங்கிவிட்டேன் - எனது பதினாறாவது வயதிலேயே.

    ''எனக்கு உண்டான சொத்து என்று ஏதாவது இருக்குமல்லவா? அதைப் பிரித்துக் கொடுத்து விடு. நான் மெட்ராஸ் போய்ப் பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும்'' என்று கேட்பேன்.

    அண்ணா மூன்றே வார்த்தைதான் பதிலாகச் சொல்வார். ''போடா பைத்தியக்காரப் பயலே!''

    நான் சுதந்திர தாகத்தால் தவித்தேன். அந்தக் தாகம் தீர கன்னையா நாயுடு கடைக்குப் போய் அடிக்கடி கோலி சோடா சாப்பிடுவேன்.

    அண்ணா நகைச்சுவையாகவும், சில சமயம் பொடி வைத்தும் பேசுவார். 'போடா சோடாப் பயலே!' என்று ஒருதரம் அவர் என்னைத் திட்டியது நன்கு நினைவிருக்கிறது.

    ''அண்ணா, உனக்குச் சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. ஆனால் என்னை ஏன் மெட்ராஸ் போய்ப் பத்திரிகை ஆரம்பிக்கக் கூடாது என்று தடுக்கிறீர்கள்?'' என்றேன் கெஞ்சாத குறையாக.

    என்னைவிட அண்ணா இருபது வயது மூத்தவர். அப்பா போன்றவர்.

    அந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு அவர் ஒரு தந்தையின் கட்டுப்பாட்டிலேயே என்னை வைத்திருந்தார்.

    பிற்காலத்தில்தான், ''தம்பீ, உன் வழியை நீ நன்றாகவே தேர்ந்தெடுத்திருக்கிறாய்'' என்று பாராட்டினார்.

    'பதினாறு வயசு என்பது பத்திரிகை சொந்தமாக ஆரம்பிக்கிற வயசல்ல' என்பது அவரது ஆழமான கருத்து.

    சொத்தில் நாலில் ஒரு பங்கு எனக்கு உரிமையானது என்று சுப்பண்ணாவுக்கு நன்கு தெரியும்.

    ஆமாம், என் அண்ணா பெயர் சுப்பண்ணா. சுப்பிரமணிய அண்ணா என்பது சுருங்கி எல்லாருடைய வாயிலும் சுப்பண்ணா என்றே வழங்கியது.

    சேலம் லிட்டில் ஃபிளவர் ஸ்கூலில் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக் கொண்டிருந்தேன்.

    கையெழுத்துப் பத்திரிகை நடத்தினாலும் மனசு என்னவோ, 'சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லிப் போராடு' என்று புரட்சி செய்து கொண்டேயிருந்தது.

    கடைசியில் பாதி வெற்றி கிடைத்தது.

    ''மெட்ராசுக்கு நீ போகலாம். ஆனால் பத்திரிகை ஆரம்பிக்க அல்ல. சொத்து எக்காரணத்தை முன்னிட்டும் பிரித்துத் தரப்பட மாட்டாது. நீ மைனர். மேஜர் ஆக இன்னும் இரண்டு வருடம் ஆகும். உன் சொத்தை நான் தின்றுவிட மாட்டேன். நீ எஸ்.எஸ்.எல்.சி பாசானதும் விரும்பினால் காலேஜ் படி. இல்லாவிட்டால் ஊர் வந்து சேர்ந்து நம்ம பள்ளிக்கூடத்திலேயே ரெண்டு வருஷம் பயிற்சி பெறாத வாத்தியாராக வேலை பார். ரெண்டு வருஷம் பொறு. மேஜர் ஆயிடுவே. அதுவரை ஊரில் இருந்துகொண்டே எல்லாப் பத்திரிகைக்கும் எழுது. அனுபவமாகும்.''

    பல்லை இறுகக் கடித்துக் கொண்டேன்.

    இரண்டு வருஷம் கழித்தாவது சுதந்திரம் அளிக்க ஒப்புக்கொண்டு விட்டாரே என்று சமாதானம் ஆனேன்.

    இந்தியாவுக்குச் சுதந்திரம் கேட்டவுடன் தூக்கி 'இந்தா பிடியுங்கோ' என்று மறுமாசமே மகாத்மா காந்திகிட்டே கொடுத்துவிடவில்லையே!

    படிப்படியாகத்தானே அளித்தார்கள். சரி. நம்ம சுதந்திரமும் அப்படியே நடக்கட்டும் என்று பதினாறு வயதில் பத்திரிகை ஆசிரியராவதற்குப் பதில் பள்ளிக்கூட ஆசிரியராக, பேனாவுக்குப் பதில் பிரம்பைப் பிடித்தேன்.

    மூன்றாம் வகுப்பைப் பராமரிக்கும் மாபெரும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ''டேய் மாதையா! பேசறவங்க பேரெல்லாம் சிலேட்லே எழுதி வை!'' என்று உத்தரவிட்டுவிட்டு நான் அரு. ராமநாதனின் என்னைக் கவர்ந்த

    Enjoying the preview?
    Page 1 of 1