Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dabbaji Bansleyudan Appusami
Dabbaji Bansleyudan Appusami
Dabbaji Bansleyudan Appusami
Ebook148 pages50 minutes

Dabbaji Bansleyudan Appusami

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மூன்று நீள் சிறுகதைகளைக் கொண்டது இந்த நகைச்சுவைத் தொகுப்பு.

ஒரு காலகட்டம் வரை அப்புசாமி சிறுகதைகளை, ஐந்து அல்லது ஆறு பக்கத்தில் அடங்கக்கூடிய சிறுகதைகளாகவே எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் அப்புசாமி வளர வளர, அவருடைய உலாவுக்குச் சற்றுக் கூடுதலான இடம் தரவேண்டியவனாகி விட்டேன்.

எந்தப் பத்திரிக்கையாவது அப்புசாமி சிறுகதை கேட்டால், “கொஞ்சம் நீளமான சிறுகதையாக வரும் போலிருக்கிறது. குறைந்தது இரண்டு வாரமாவது தேவைப்படும்,” என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

எடுத்துக்கொள்ளும் பின்னணிகளுக்கு ஏற்ப, சம்பவங்களுக்குத் தக்கவாறு சிறுகதை தன் எல்லையைத் தாண்டிவிடும் கட்டாயம் நேருகிறது. நகைச்சுவை என்பது இழுத்துக் கட்டிய விறைப்பான கூடாரம் போல் இருக்கலாகாது. கொஞ்சம் தொளதொளவென்று - (அரபு ஷேக்குகளின் தாராள கவுன் அளவுக்கு ஒரேயடியான தொள தொளாவாக இல்லாமல், கச்சிதமான தாராளத்துடன் இருப்பதையே விரும்புகிறேன்.)

அப்படிக் கை மீறிய சிறுகதைகளே இந்த மூன்று கதைகளும்.

-பாக்கியம் ராமசாமி

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580112303503
Dabbaji Bansleyudan Appusami

Read more from Bakkiyam Ramasamy

Related authors

Related to Dabbaji Bansleyudan Appusami

Related ebooks

Related categories

Reviews for Dabbaji Bansleyudan Appusami

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dabbaji Bansleyudan Appusami - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    டப்பாஜி பான்ஸ்லேயுடன் அப்புசாமி

    Dabbaji Bansleyudan Appusami

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அப்புசாமியும் டெஹல்காவும்

    தே. ந. வே.க. தலைவர் அப்புசாமி

    டப்பாஜி பான்ஸ்லேயுடன் அப்புசாமி

    முன்னுரை

    மூன்று நீள் சிறுகதைகளைக் கொண்டது இந்த நகைச்சுவைத் தொகுப்பு.

    ஒரு காலகட்டம் வரை அப்புசாமி சிறுகதைகளை, ஐந்து அல்லது ஆறு பக்கத்தில் அடங்கக்கூடிய சிறுகதைகளாகவே எழுதிக்கொண்டிருந்தேன்.

    ஆனால் அப்புசாமி வளர வளர, அவருடைய உலாவுக்குச் சற்றுக் கூடுதலான இடம் தரவேண்டியவனாகி விட்டேன்.

    எந்தப் பத்திரிக்கையாவது அப்புசாமி சிறுகதை கேட்டால், கொஞ்சம் நீளமான சிறுகதையாக வரும் போலிருக்கிறது. குறைந்தது இரண்டு வாரமாவது தேவைப்படும், என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

    எடுத்துக்கொள்ளும் பின்னணிகளுக்கு ஏற்ப, சம்பவங்களுக்குத் தக்கவாறு சிறுகதை தன் எல்லையைத் தாண்டிவிடும் கட்டாயம் நேருகிறது.

    நகைச்சுவை என்பது இழுத்துக் கட்டிய விறைப்பான கூடாரம் போல் இருக்கலாகாது. கொஞ்சம் தொளதொளவென்று - (அரபு ஷேக்குகளின் தாராள கவுன் அளவுக்கு ஒரேயடியான தொள தொளாவாக இல்லாமல், கச்சிதமான தாராளத்துடன் இருப்பதையே விரும்புகிறேன்.)

    அப்படிக் கை மீறிய சிறுகதைகளே இந்த மூன்று கதைகளும்.

    -பாக்கியம் ராமசாமி

    அப்புசாமியும் டெஹல்காவும்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    1

    அப்புசாமியின் நடவடிக்கைகள் கொஞ்சநாளாக தாலிபான்தனமாக இருப்பதாக சீதாப்பாட்டிக்குத் தோன்றியது.

    இரண்டு தினங்களுக்கு முன், அவள் அழகாகப் பலகாலம் போற்றி வைத்திருந்த அவளது போட்டோவைக் கீழே தள்ளி உடைத்து விட்டார்.

    அபூர்வமான கண்ணாடி பிரேம். உடைத்ததோடு மட்டுமல்ல. இந்தாடி சீதேக் கியவி! இங்கே வந்து பாரேன்! என்று அட்டகாசமாகச் சிரித்தார். எப்படித்தூள் தூளா நொறுங்கியிருக்கு பார் என்று அந்தக் கண்ணாடிச் சிதறல்களையெல்லாம் சுற்றிக் காட்டினார். தலை வாரிக்கிற இடத்திலே கொண்டு வந்து வெச்சியானா இப்படித்தான் உடையும். எல்லாத்தையும் ஒரு சில்லு விடாமப் பொறுக்கி எறி! என்று தெனாவட்டாகக் கட்டளை வேறு.

    டிரெஸ்சிங் மேஜை எபிஸோடுக்காவது கைபட்டு விட்ட சாக்கு சொன்னார். ஆனால் பா.மு. கழக ஆண்டு விழாவில் சீதாப்பாட்டி பேசுவது போன்ற படம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அது ஏன் சுக்குநூறாக வேண்டும்?

    சீதாப்பாட்டி இல்லாத நேரத்தில் அப்புசாமி அதைக் குறிபார்த்துப் பந்து வைத்துத் தகர்த்தார். இத்தனைக்கும் படம் நாலு பக்கமும் ஆணி அறைப்பட்டு கிண் என்று சுவரில் இருந்தது.

    அப்புசாமி வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட். ஆடுவதுபோல, படத்தைப் பார்த்து பந்தை அடியோ அடியென்று அடித்து உடைத்துச் சிதைத்தார். சாமான்னியமான பிரேமா அது? ஆயிரம் ரூபா பிரேம். கழகத்தின் முதலாம் ஆண்டு விழாவில் எடுத்த அபூர்வ படம்.

    சீதாப்பாட்டி பொறுமை காத்தாள். பாட்டிகள் முன்னேற்றக் கழகத் தேர்தல் படுவேகமாக வந்து கொண்டிருந்ததே காரணம்.

    கணவரைக் கண்டிக்கப்போய் அவர் எதிர்க்கட்சிக்கு வேலை செய்யத் தொடங்கிவிட்டால் பிரச்னையாகிவிடும் என்று பதட்டப்படாமல் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள்.

    ஆனால் அப்புசாமியின் அராஜகம் தாளவில்லை.

    அழுக்கு ஜிப்பாவுக்கு டபராத்தணலில் இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தவர், புத்தம் புது வெள்ளை வெளேர் சலவை ஜிப்பாவும், வேஷ்டியும் அரசியல் தலைவர்கள்போல மூன்று வேளைக்கு நான்கு என்று கணக்கில் பளிச்சென அணியத் தொடங்கினார்.

    கோடீஸ்வரன் புதிரில் சரத்குமாரின் சுலபக் கேள்வி எதற்காகவது தப்பித் தவறிச் சரியாகப் பதில் சொல்லி லட்ச ரூபாய் அடித்துவிட்டாரா?

    சீதாப்பாட்டி தனது பிரத்யேக உளவுப் படைப்பிரிவின் பிரதம செயலர் அகல்யா சந்தானத்தின் மூலம் துப்பறிந்ததில், ஒரு திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

    சீதாப்பாட்டியின் எதிரியாகக் கழகத்தில் செயல்படும் பொன்னம்மா டேவிட்டின் வீட்டுக்குத்தான் அப்புசாமி தினமும் போய் வருகிறார் என்பதும், அவரது சமீபத்திய வளப்பத்துக்கும் காரணம் பொன்னம்மாவின் 'ஃபண்டிங்' என்றும் ஊர்ஜிதமான செய்திகள் அவளுக்குத் தெரிவித்தன.

    வோன்ட்யூ வெய்ட் ஃபர் எமோமெண்ட்? என்றாள் சீதாப்பாட்டி கெஞ்சுவது போல.

    வாசற்படி தாண்டிய அப்புசாமி வாக்கூம் பிரேக் அடித்து நின்றிருப்பார் - பழைய அப்புசாமியாயிருந்தால். இப்போதுதான் அவர் ஒரு தமிழ்க்குடிமகன் ஆகிவிட்டாரே.

    சட்! மனுஷன் வாசப்படி தாண்டறப்போ கூப்பிடறியே உன் காப்பியோ, டிபனோ எனக்குத் தேவையில்லை. 'அம்மா' வீட்டிலேதான் டிபன், சாப்பாடு, ஜூஸ், கீஸ் எல்லாம். ஐஸ்கிரீம் கூட உண்டு.

    ஓகே... டியர்... ஓகே... இன்னிக்கு உங்கள் பர்த்டே. கேக்குக்கு ஆர்டர் கொடுத்திருந்தேன்… வந்துட்டுது... நீங்க பார்க்கவேயில்லையே கேக்கை... என்றாள்.

    அப்புசாமி கோபமாக, என்னைக் கேக்காம ஏன் கேக் வாங்கினே? அதை நான் நோக்(க) வேண்டியது அனாவசியம் என்று வாசற்படி தாண்டினார்.

    வெரி வெரி வெரி ஸாரி... ஒரு சின்ன ஹெல்ப் மட்டும் பண்ணிட்டுப் போனீங்கன்னாப் பரவாயில்லை... என்றாள் கெஞ்சுவது போல. இந்த ஏலக்காயை மட்டும் கொஞ்சம் நசுக்கிக் கொடுத்துட்டுப் போங்கள்... ஸாலட் செய்யறப்போ விரலை நறுக்கினுட்டேன்... என்றாள் சீதாப்பாட்டி.

    அப்புசாமி எரிச்சலாக. "ஏலக்காய் இப்போ எதுக்கு? பத்து விரலையுமா நறுக்கிக் கொண்டுட்டே. ஏழெட்டாவது பாக்கியிருக்குமில்லையா? என்றார்.

    'என்ன தெனாவட்! என்ன ஸாடிஸம்' என்று மனசுக்குள் குஜராத் ஏற்பட்டாலும் சாந்தப்படுத்தி கொண்டு உங்க பர்த்டேக்கு ஸ்பெஷல் பாதம் கீர் ரெடி பண்ணினேன். ஏலக்காய் பொடிதான் போடணும். ப்யூர் பாதம்... யு.எஸ். ஸாஃப்ரன் - ஐ மீன் ஸ்டேட்சிலிருந்து உங்க பொன்னம்மா டேவிட் வாங்கிக்கொண்டு வந்த குங்குமப் பூ போட்டு ரெடியா இருக்கு. ஏலக்காய் போட்டாச்சுன்னா உங்க அம்மாவுக்குக்கூட நீங்க ஒரு கூஜா தூக்கிட்டுப் போகலாம்.

    'அம்மா'வுக்காக அப்புசாமி எதையும் செய்யும் மனோபாவத்திலிருந்தார்.

    தனக்கும் கொஞ்சம் பாதம்கீர் வேண்டும் என்று அவரது தொண்டைக் குழியும் கடைசி நிமிடத்தில் தன் இஷ்டத்துக்குத் தொகுதி கேட்கும் வேட்பாளர் போல் அவசரக் குரல் எழுப்பியது.

    சரி... சரி. கல்லைக் கொண்டா. எடு ஏலக்காயை. என் மாதிரி ஒரு வருங்காலத் தலைவரை ஏலக்காய் நசுக்கு, எலிவாலை இழுன்னெல்லாம் சொல்ற வேலைய இன்னையோட ஏரைக் கட்டிக்க... அம்மாவுக்கு நான் எடுத்திட்டுப்போகலான்னு சொன்னியே. அதுக்காகச் செய்யறேன்... என்றார்.

    சீதாப்பாட்டி ஏலக்காய் டப்பாவிலிருந்து ஒரு பத்து ஏலக்காயை எடுத்து வெளியே வைத்தாள்.

    பிறகு, வந்து... வந்து... தோலை உரிச்சிட்டு பவுடர் செய்யணும்... வந்து கல் இஸ் த ப்ராப்ளம்... ஏலக்காய் பொடி செய்யறதுக்குன்னு ஒரு கல் வைத்திருப்பேனே... யூ ரிமெம்பர்... நாங்க கழகத்திலே லாஸ்ட் சம்மர்லே டூர் போனப்போ உடுப்பி சுப்ரமண்யா ரிவர் சைடிலிருந்து ஒரு ஃன்டா ஸ்டிக் கல் எடுத்துட்டு வந்தேன்... வந்து வந்து...

    சொல்லித் தொலை... அங்கே அம்மா காத்துகிட்டிருப்பாங்க... இன்னைக்கி தொகுதி உடன்பாடு இறுதியா விவாதித்து எனக்கு எங்கே இடம்னு அம்மா எழுத்து மூலமாகக் கொடுத்திடப் போறாங்க...

    சீதாப்பாட்டி ஆச்சர்யத்துடன் "ந்யூஸ் ஃபர்மி? தொகுதி? உடன்பாடு? கட்சி? ஐ கான்ட் காச்

    Enjoying the preview?
    Page 1 of 1