Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Thalai Kadhal
Oru Thalai Kadhal
Oru Thalai Kadhal
Ebook147 pages59 minutes

Oru Thalai Kadhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நாவல் காதலின் தவிப்புகளைக் குமிழி இட்டுக்காட்டுகிறது. காதலித்த இதயங்கள் வயது முதிர்ந்த காலத்தில் உடல் கவர்ச்சியை விரும்புவதில்லை ஆன்ம வாசனையைத்தான் விரும்புகின்றன. இதயத்தில் ஏற்பட்ட காதல் அடியாழத்தில் வேரூன்றி, வேறு இடத்தில் கல்யாணமானாலும் அது மூளை நரம்புகளில் பின்னிக்கிடக்கும் என்பதை இந்த நாவலின் நூலாசிரியர் எழுத்துகளால் பின்னிக் காட்டுகிறார்.

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580173810683
Oru Thalai Kadhal

Read more from Susri

Related authors

Related to Oru Thalai Kadhal

Related ebooks

Reviews for Oru Thalai Kadhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Thalai Kadhal - Susri

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒருதலைக் காதல்

    (நாவல்)

    Oru Thalai Kadhal

    Author:

    சுஶ்ரீ

    Susri

    https://www.pustaka.co.in/home/author/susri

    பொருளடக்கம்

    முன்னுரை

    வாழ்த்துரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    முன்னுரை

    நான் ஸ்ரீனிவாசன், பிறந்து வளர்ந்தது மதுரை, பொறியாளராக வேலைபார்த்து செட்டில் ஆனது மும்பை. காலம் பந்தாடி கடைசியில் கொண்டு போட்டது இந்த சிங்காரச் சென்னை.

    சென்னை மண் தூண்டியதா, இளவயதில் படித்த வாரப் பத்திரிகைகள், நாவல்களா எதுனு தெரியலை. காலம் போன காலத்துல கதை எழுதணும்னு விபரீத ஆசை உதித்தது. ஆரம்பத்தில் முகநூலில் என் கார்ட்டூன் ஜோக்னு போட்டுப் பாத்தேன், வரவேற்பு இருந்தது.

    நானே தமிழ்ச் சிறுகதைகள், நெடுங்கதைகள்னு ஒரு குழு ஆரம்பிச்சு, நானும் எழுதினேன், பிறர் எழுத்துக்களையும் வெளியிட்டேன். சஹானா என்ற இணைய இதழ் என் கதைகளை வெளியிட்டன.

    என் இனிய முகநூல் நண்பர் ராம்கி என்கிற கார்டூனிஸ்ட் ‘மலர்வனம்’ என ஒரு மின்னிதழ் தொடங்கினார். அதற்கும் கதை எழுதினேன், அவர் வெளியிட்டு ஆதரவு கொடுத்தது மட்டுமின்றி சிறந்த எழுத்தாளர் என்ற விருதும் கொடுத்து சிறப்பித்தார்.

    படித்துப் பாருங்கள், உங்கள் மேலான கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

    சுஸ்ரீ

    9819065814

    Address: Srinivasan.S (SUSRI)

    4/4, Koyaratti flats, Sasthri nagar,

    Near KVT kalyana mahal,

    Koyambedu,Chennai-6

    ‘சுஸ்ரீ’ன் நூல்கள்:

    ஜானு - சிறுகதைத் தொகுப்பு

    ரத்னாவாகிய நான் - குறு நாவல் தொகுப்பு

    மாறி வரும் தலைமுறைகள் - சிறுகதைத் தொகுப்பு

    நினைவெல்லாம் கோகிலா - முழு நாவல்.

    அது ஒரு கனாக் காலம் - சிறுகதைத் தொகுப்பு.

    வாழ்த்துரை

    Jayaraj (Artist)

    156 Old /212 Choolaimedu High Road

    G-2, Shera Square, Chennai – 94

    Ph: 24831300 & 52046306

    Email: jeyarajartist@hotmail.com

    jeyarajartist@gmail.com

    சுஸ்ரீயின் உரைநடை களைப்பு இல்லாமல் நிச்சல் குளத்தில் நீந்தி வரும் ஒரு நீச்சல் வீரனின் சுகமான அனுபவமாக தெரிகிறது. அந்தக் காலத்தையும் இந்தக் காலத்தையும் இணைக்க கதாசிரியர் சற்று தடுமாறி இருந்தாலும் உரைநடையின் சுகமான போக்கு அதை மறக்கச் செய்கிறது என்றே சொல்லலாம்.

    இந்தக் கதைக்கு அட்டைப்படம் வரையச் சொல்லி ஆசிரியர் என்னைக் கேட்ட போது நான் பாதி கதையை மட்டுமே படித்துவிட்டு அட்டைப் படம் போட்டு நிறைவு செய்து விட்டேன். பிறகு வழக்கத்திற்கு மாறாக அட்டைப் படத்தை வரைந்து முடித்த பின் மீதி கதையையும் படித்தேன் ஏன் அப்படி? கதையின் நடை அவ்வளவு சுகமாக இருந்தது.

    கதையை படிக்கும் ஒரு வாசகனின் ஆர்வத்தை இனிமையாக கொண்டு செல்லக் கூடிய நம் சுஸ்ரீயின் எழுத்துப் பணி மேலும் இனிதே தொடரட்டும் என்று வாழ்த்தி மகிழ்ந்தேன்.

    இப்படிக்கு,

    ஜெயராஜ்

    1

    ஆனந்தராஜ் இருக்கானே அவன்தான் எனக்கு ரொம்ப பிடிச்ச நண்பன். எப்பன்றீங்க நான் 7வது படிக்கறப்ப எங்க ஸ்கூல்ல புதுசா வந்து சேந்தான், அப்பத்தில இருந்து ஒரு காந்தம் மாதிரி என்னை கவர்ந்துட்டான்.

    வந்த அன்னிக்கு பாக்கணுமே அப்ப ஃபேமசா இருந்த டெரிலின் ஷர்ட் லைட் கலர்ல, அது பேர் என்னவோ மறந்து போச்சு, செல்ப் டிசைன்ல புளூ கோடுகோடா வளவளப்பா இருக்கும் அதுல கருப்பு கலர் முழு டிரவுசர். ஷர்ட் இன் பண்ணி ஸ்டைலா உள்ளே நுழைஞ்சான். யூனிபாரம்லாம் கிடையாது அப்ப. நாங்க எல்லாரும் வாயைப் பிளந்து அவனையே பாத்தோம்.

    எல்லோரும் கொஞ்சம் நகர்ந்து இடுப்பை அசைத்து அவனுக்கு கொஞ்சம் இடம் பண்ணி கொடுக்க பாத்தாங்க, நானும்தான். அவன் என்னமோ வீரபாண்டிய கட்டபொம்மன் சினிமால, சிவாஜி மாதிரி இடுப்புல கை வச்சிண்டு சுத்திப் பாத்துட்டு என் பக்கத்துல வந்து உக்காந்தான். நான் கட்டபொம்மனுக்கு பக்கத்துல வெள்ளையத்தேவன் மாதிரி நெஞ்சை நிமித்தி உக்காந்து எல்லோரையும் ஒரு பார்வை பாத்தேன்.

    அப்படியே நல்ல நட்பை வளத்துட்டேன். அவன் கூட. பல சமயங்களில் பரிட்சைக்கு என் வீட்டு மாடில சேர்ந்து உக்காந்து படிப்போம். என் உயிர் நண்பனா அவன் எப்பவும் என்கூட இருந்தான். காலேஜ்லயும் நட்பு தொடர்ந்தது. ஒரே காலேஜ் ஒரே கோர்ஸ். இப்ப நீங்க எல்லாம் எதிர்பாத்ததுதான் நடந்தது. ஆமாம் பிரேமா.

    அச்சோ இவ்வளவு சொல்லிட்டு என்னை பத்தி ஒண்ணுமே சொல்லலையே. நான்தான் பரமேஸ்வரன். எல்லாரும் பரமுனு கூப்பிடுவாங்க, என் தங்கை மட்டும் பரமு பக்கினு கூப்பிடுவா. ஈரோடு எங்க ஊரு உண்மைல சொல்றேன் ஈரோடு மாதிரி ஒரு ஊர் இந்தியாலயே கிடையாதுன்றது என் நினைப்பு.

    காவிரி, பவானி ஆறு நின்னு பாத்துட்டே இருக்கலாம். அதுவும் வெள்ளம் வரப்ப நுப்பும் நுரையுமா கோவமா பாயறதை பாத்தா ஒரு புலி நம்ம மேல பாய வரதைப் போல பயமா இருக்கும். தட்சிணப் பிரயாகையா காவிரி, பவானி கலக்கும் கூடுதுறை அங்கே சங்கமேஸ்வரர் கோவில் எல்லாம் எங்க ஊர் பெருமை.

    சரி அதெல்லாம் சாவகாசமா பேசலாம், இப்ப நீங்க எல்லாரும் பொறுமையா எதுக்கு காத்திருக்கீங்கனு எனக்கு தெரியும். என் காலேஜ் லைஃபுக்கு போவோம். அது ஈரோட்ல பெயர் பெற்ற கோ எட். காலேஜ்.

    முதல் நாள் காலேஜ் சேரறப்ப நானும், ஆனந்தராஜும் தோள்மேல கை போட்டுட்டு ஜாலியா போனோம். கேர்ல்ஸ்கூட சேர்ந்து கிளாஸ்ல உக்காரப்போறோம், அந்த வயசுல ஒரு கிளர்ச்சிதான். ஆனா பாருங்க அங்கே கேர்ல்ஸ் தனியா, பாய்ஸ் தனியானு உக்கார வச்சிட்டாங்க. முதல் அவர்ல வைஸ் பிரின்சிபல் கெமிஸ்ட்ரி கிளாஸ். வந்தவுடனே எல்லாரையும் உறுத்துப் பாத்தார்.

    என் கிளாஸ்ல யாராவது தேவையில்லாம பேசினா சிரிச்சா வெளியே அனுப்பிடுவேன்.

    ஓகே சார் கோரஸ் சத்தம்.

    அந்த சிடுமூஞ்சி சார் முகத்துல இப்ப லேசா சிரிப்பு மாதிரி ஒண்ணு.

    சரி முதல்ல பாய்ஸ் வரிசை ஒவ்வொருத்தரா எழுந்து பேரை சொல்லுங்க, அப்பறம் கேர்ல்ஸ்

    ஒரு முதல்வரிசை அதி புத்திசாலி யார் பேரை சொல்லணும் சார்

    பாய்ஸ் எல்லாம் அவங்க தாத்தா பேரு. கேர்ல்ஸ்லாம் அவங்கபாட்டி பேரு

    திரும்ப அந்த முதல் வரிசை எங்க தாத்தா பேரு குஞ்சிதபாத முதலியார் சார்

    டேய் ஏண்டா என் கிளாஸ்ல மட்டும் இப்படி புத்திசாலிகள் வரீங்க, உங்க பேரை சொல்லணும்னு கூடவா தெரியாது.

    வரிசையா எல்லாரும் பேர் சொல்றப்ப கேலி கிண்டல் சத்தமில்லாத சிரிப்பு. நான் பிரேமா, பவானில் இருந்து வரேன்னு அந்த தேன்குரலில் சொன்னப்ப பசங்க சொக்கிப் போயிட்டானுங்க. வகுப்பே நிசப்தம். இப்படி ஒரு அழகு தேவதை இந்த காலேஜ்லயே கிடையாது. வைஸ் பிரின்சிபல் கூட ஒரு நிமிஷம் திகைச்சு போயிட்டார்.

    நல்லா இருக்கறா இல்லை ஒரே டயத்தில எங்க ரெண்டு பேர் வாயில இருந்தும் ஒரே சமயம் வந்தது. உடனே பலமா சிரிச்சோம். யூ டூ ஸ்டாண்ட் அப், அண்ட் கெட் அவுட் ஆஃப் மை கிளாஸ். அந்த அகோரமூர்த்தி சார் எங்களை கிளாசை விட்டு விரட்டினார். பிரேமாவை ஒரு பக்கமா பாத்துட்டே வெளியே வந்தேன். அவ ஒரு சைடா சிரிச்சது தெரிஞ்சது. ஆனந்தும் அதேதான் வெளிய வந்தவுடனே சொன்னான், அழகா சிரிக்கறாடானு. முதல் முறையா எனக்கு அவன் மேல லேசா கோவம் வந்தது.

    அன்னில இருந்து அப்பப்ப அந்த பொண்ணை பாத்து லேசா ஸ்மைல் பண்ணுவேன், பேசல்லாம் இன்னும் தைரியம் வரலை. அவளும் ஏதோ பேருக்கு ஸ்மைல் பண்ற மாதிரி தெரியும். ஆனந்த்கூட ஒரு நாள் கேட்டான் என்னடா அந்த பிரேமா பேச மாட்டேன்து எதாவது பண்ணணுமேனு. எனக்கு அவன் மேல் கோபம் கோபமாக வந்தது இவன் ஏன் அவகூட பேசணும்.

    பொதுவா லன்ச் டைம்லே சிலர் காலேஜ் கேன்டின்ல போய் சாப்பிடுவாங்க, சில பேர் கிளாஸ் ரூம்லயே. நானும் ஆனந்தராஜும் எப்பவும் கேன்டீன்ல போய்தான் சாப்பிடுவோம். உக்காந்து சாப்பிடதான் கேண்டீன், முக்காவாசி நம்ம வீட்டுல இருந்து கொண்டு போற டப்பால இருந்து தயிர்சாதம் ஊறுகாய்தான்.

    அன்னிக்கு லன்ச் டைம்ல ஆனந்த் சொன்னான், பரமு நீ

    Enjoying the preview?
    Page 1 of 1