Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

(Vi)chithira Ulagam
(Vi)chithira Ulagam
(Vi)chithira Ulagam
Ebook283 pages1 hour

(Vi)chithira Ulagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோலிவுட் உலகத்தை கண்முன் கொண்டு வர முயற்சித்துள்ளேன். நமது கதாநாயகன் வினித் எப்படி சாதாரண விவசாயக் குடும்பத்திலிருந்து திரையுலகத்தை அடைகிறான். அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அவன் திரையுலகில் ஏதாவது சாதிக்க முடிந்ததா? இதை சுவாரசியமாக சொல்லும் கதை. இது தவிர இந்த புஸ்தகத்தில் மற்ற கதைகளும் ஒவ்வொரு மணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580173810830
(Vi)chithira Ulagam

Read more from Susri

Related authors

Related to (Vi)chithira Ulagam

Related ebooks

Reviews for (Vi)chithira Ulagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    (Vi)chithira Ulagam - Susri

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    (வி)சித்திர உலகம்

    (சிறுகதைகள்)

    (Vi)chithira Ulagam

    (Sirukadhaigal)

    Author:

    சுஶ்ரீ

    Susri

    For more books

    https://www.pustaka.co.in/home/author/susri

    பொருளடக்கம்

    1. (வி)சித்திர உலகம்

    2. அம்மா கிட்ட

    3. எங்கள் பொங்கல்

    4. கண்கண்ட தெய்வம்

    5. காசித் துண்டு

    6. காதலர் தினம்

    7. குறை ஒன்றும் இல்லை

    8. சுயகவுரவம்

    9. தங்க ரதம்

    10 .நானே நான்

    11. நான் ஒரு வக்கீலுங்க

    12. நேரம் நல்ல நேரம்

    13. பயமுறுத்தும் வருங்காலம்

    14. புரியாத புதிர்

    15. பொய் என்றால் என்ன

    16. மழையும் நானும்

    17. மறைந்து போனதும் மறந்து போனதும்

    18. மனைவியா அம்மாவா

    19. மன்னவன் வந்தானடி

    20. மன்னிக்க வேண்டுகிறேன்

    21. முதல் காதல்

    22. யானையாய் அவர் இருந்தார்

    23. ராணி மகாராணி

    24. ரெயின் கோட்

    25. லட்சுமி வந்தாச்சு

    26. வயதுக்கு மரியாதை

    27. வலிகளை ரசிப்போம்

    28. வாழையடி வாழை

    29. வெளிநாட்டு படிப்பு

    30. வைசாக் விஜயம்

    1. (வி)சித்திர உலகம்

    1

    வினித் சென்னைக்கு வந்தது எப்படியும் ஒரு சினிமாவிலாவது தலை காட்டிடணும்னுதான்.என்ன இப்ப ஒரு 2 வருஷம் இருக்குமா?

    சேலம் ஆத்தூர் பக்கம் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் ராஜதுரை. அப்பா விவசாயி 5 ஏக்கர் தோட்டத்தின் நடுவுலயே வீடு. ஆத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளில 10 வது முடிச்சு சேலம் வித்யோதயால 11வது சேந்தப்ப வந்த ஆசை. பசங்கள்லாம்

    டேய் ராஜா, நீ கமல் மாதிரி இருக்கேடா,ஒரு சாயல்ல அஜீத் மாதிரி இருக்கேனு ஏத்தி விட்டதுல அவனோட தலை அலங்காரம், ஆடை அலங்காரம் மாறியே போனது. அவனோட அப்பாவுக்கும் பெருமைதான் அவனுடைய வித விதமான அலங்காரங்களை பாத்து. அவன் கேக்கும் போதெல்லாம் பணம் புரட்டிக் கொடுத்தார், பையன் படிச்சு கலெக்டர் ஆயிடுவான்னு எண்ணம்.

    சேலத்துல அவனோட அபிமான நடிகர் ரூபன் நடித்த எந்த படம் ரிலீசானாலும் முதல் நாள் முதல் ஷோ பாத்தாகணும். புகழின் உச்சியில் இருந்த ரூபனோட ரசிகர் மன்றத்தின் சுறு சுறுப்பான உறுப்பினரில் ஒருவனானான். புது படம் வெளி வரும் போது பெரிய பெரிய பேனர் கட்அவுட்களில் சின்னதாய் இவன் படமும் கீழே இடம் பெறும் ரசிகர் மன்ற சார்பில். அப்போதே பெரிய நடிகனாகி விட்ட பெருமை அவனுக்கு. 11 வது பார்டர்ல பாஸ், 12 வது காபி அடிக்க தோதுப் படலை, இரட்டை டிஜிட் மார்க் கூட வரலை. ராஜதுரை வினித் குமாராகி சென்னைக்கு ரெயிலேறினான்.

    அப்பா,சென்னையில் பையன் கல்லூரிப் படிப்பு படிக்கிறான் என ஒவ்வொண்ணாய் விற்று பணம் அனுப்பி வந்தார் கடன் தொல்லை தாங்காமல் 3 மாதங்களுக்கு முன்னால் மாரடைப்பில் மறைந்து போனார். தாயாருக்கு மிஞ்சியது அரை ஏக்கர் நிலமும் குடிசை வீடும்தான்.ஊர்ல இருந்த பணம் வரது நின்னு போனது.

    வினித் குமார் கோடம்பாக்கம் லாட்ஜ் ரூமை காலி பண்ணி, 4 பேருடன் ஒரு கே.கே. நகர் வீட்டின் மொட்டை மாடி கூரை ரூமுக்குள் அடைக்கலமானான். மூணு வேளை சாப்பாடாய் இருந்தது,ரெண்டு வேளை ஏதையாவது சாப்பிட்டு வயித்தை நிரப்பும் படி ஆனது. கோடம்பாக்கம் ஸ்டுடியோக்களுக்கு நடந்து நடந்து செருப்புதான் தேய்ந்தது.

    எப்படியோ காலைப் பிடிச்சு கையைப் பிடிச்சு தன் அபிமான நடிகர் ரூபனின் உதவியாளர்களில் ஒருவருக்கு உதவியாளனா இடம் பிடிச்சான்.சம்பளம் ஒண்ணும் இல்லை ரெண்டு வேளை சாப்பாடு கிடைத்தது, ஸ்டுடியோக்களுக்குள் வாச்மேன் விரட்டாமல் நுழைய முடிந்தது அவ்வளவுதான்.நவரச நடிகர் ரூபன் ஒரு காதல் காட்சியில் நடித்துக் கொண்டு இருந்த உல்லாச நேர இடைவேளையில், நம்ம வினீத் கண்ல பட அவனைக் கூப்பிட்டு.

    நீ என்னை மாதிரியே கிராப்ல்லாம் வச்சிட்டு என் ஜாடைல இருக்கயே, இந்த படத்தில் எனக்கு டூப்பா நடிக்கறயா, ரெண்டு மூணு ரிஸ்கான சீன்ல

    கேட்டவுடனேயே வினீத் புளகாங்கிதம் அடைந்து விட்டான். தன்னை கூப்பிட்டு தலைவர் பேசிட்டாரேனு.தயங்காமல் பதில் அளித்தான், உங்களுக்காக மலைல இருந்து குதிப்பேன் அண்ணா

    உடனே டைரக்டரை கூப்பிட்டு சொன்னார் நடிகர் ரூபன், இந்த பையனை நம்ம பைக் ரேஸ் சீன், மலைல இருந்து உருண்டு விழற கிளைமாக்ஸ் சீனுக்கு யூஸ் பண்ணிக்கங்க

    டைரக்டர். ராஜராணிக்கம், இந்த பையனா இவன் உங்களை விட உயரமும் ஜாஸ்தி, கலரும் ஜாஸ்தி சரியா மேட்ச் ஆகாதே நம்ம பழைய டூப் போதுமே

    யோவ் நான் சொல்றதை நீ செய், மேக்அப், டிஸ்டன்ஸ் ஷாட்ல சரி செய்ய தெரியாட்டா நீ என்ன டைரக்டர், இவன்தான் டூப், புரிஞ்சதா அட்வான்ஸ் வாங்கி கொடுத்துட்டு தயார் பண்ணு இவனை. சரி ஸ்நேகலதாவோட லிப்லாக் சீன் ஒண்ணு வை, படம் எகிரிக்கும்

    சரி சார், முனகினார் டைரக்டர் ராஜமாணிக்கம் தன் மனசுக்குள்ளே கேவலப்படுத்தறானே இவன் என்கிற துக்கத்துடன்.

    வினித்தை தனியாக கூட்டி சென்று, உனக்கு இன்னிக்கு நல்ல நாள்டா, பாத்து நடி 3 நாள் வேலைதான், 2000 ரூபா வாங்கித் தரேன், திறமை இருந்தா, லக் இருந்தா நிறைய சான்ஸ் கிடைக்கும்.

    அடுத்த 4 நாள் பரங்கி மலைல இருந்து உருண்டான் வினீத்,

    ஒரு மொட்டை மாடியிலிருந்து அடுத்த ஓட்டு வீடு அதிலிருந்து ஓடும் லாரி என தாவி சண்டையிட்டான்,கிண்டி ரேஸ்கோர்ஸில் மோட்டர் பைக் சாகசம் சில பல காயம் ஏற்பட்டாலும் ஒரே ஷாட்டில் காட்சி ஓகே ஆனது. ஸ்நேகலதாவுடன் வழிந்து கொண்டிருந்த ஹீரோ டைரக்டரைப் பாத்து, நல்லா பண்றான் இல்லே நான் சொன்ன பையன், அவன் நல்லா பண்றான்னு லவ் சீனுக்கெல்லாம் அவனை கூப்பிட்டுறாதே பெரிய ஜோக் சொன்ன மாதிரி கட கடவென சிரித்துக் கொண்டே பக்கத்திலிருந்த ஹீரோயினை கட்டி அணைத்துக் கொண்டான்.

    அந்த இளம் புது டைரக்டர் ராஜமாணிக்கம் முதல் படம் என்பதால் ஹீரோ படுத்திய பாட்டை பொறுத்துக் கொண்டார், இரு இந்த படம் ஹிட் ஆகட்டும் உன்னை பாத்துக்கறேன், கருவிக் கொண்டார் மனசுக்குள். அடுத்த பொங்கலில் வெளியான காதல் களவாணி படம் சூப்பர் டூப்பர் ஹிட். வசூலில் சாதனை படைத்தது.

    அந்த சாதனையை உபயோகித்து தங்கள் பணப்பையை நிரப்ப தயாரிப்பாளர்கள் நடிகர் ரூபனையும், அந்த புது டைரக்டர் ராஜமாணிக்கத்தையும் முற்றுகை இட்டனர். டைரக்டர் பழைய நடிகர்களை வைத்து படம் பண்ண மாட்டேன் நல்ல கதை இருக்கு புது நடிகரை போட்டு எடுப்பதென்றால் தயார் என சொல்லி விட்டார்.நடிகர் ரூபனோ சம்பளத்தை கோடிகளில் உயர்த்தி விட்டார், எவனை வேணா டைரக்டரா போடு என்னோட நடிப்பாலதான் படம் வசூல் கொடுக்கிறது என பட்ஜெட்டில் பாதி பணத்தை பறித்துக் கொள்ள தயாரானார்.

    நடிகர் ரூபன் என்ற குதிரை மேல் ரேஸ்ல பணம் கட்டத் தயாரானார் ஒரு பெரும் ஆந்திர தயாரிப்பாளர் பணத்தை கொட்டினார்,

    பேர் பெற்ற டைரக்டர், புகழ் பெற்ற நடிகை உப நடிகர்களுடன் படம் பூஜை போடப்பட்டது. இதே வேளையில் ஒரு செட்டிநாட்டு பெரிய பணக்காரர் டைரக்டரை நம்பி பணம் முதலீடு செய்யத் தயாரானார். ராஜமாணிக்கத்துக்கு கணிசமான் பட்ஜெட்டை கொடுத்து பொறுப்பை கொடுத்தார்.

    2

    கே.கே. நகர் வீட்டு மொட்டை மாடியில் தன் ஜட்டி, பனியன், கிழிந்த கைலியை துவைத்து கயிற்று கொடியில் காயப் போட்டிட்டிருந்த வினீத்துக்கு அப்ப வந்தது அந்த ஃபோன்.தன் கையடக்க பட்டன் ஃபோன் ஹீனஸ்வரத்தில் முனகியதை கேட்ட வினீத், எப்படியாவது ஒரு நல்ல மொபைல் வாங்கிடணும்னு நினைத்துக் கொண்டே ஃபோனை எடுத்தான். இவன்கூட சான்ஸ் தேடி அலையும் சந்திரன்தான், "டேய் என்னடா பண்றே புது டைரக்டர் ராஜமாணிக்கம் சார் உன்னை தேடறார்டா, அடுத்த படம் பண்றார் அதுல ஒரு சின்ன வேஷமாவது உனக்கு கிடைக்கும், பரணி ஸ்டுடியோல

    இப்ப இருக்கார் ஓடு சீக்கிரம், எனக்கும் காமெடி டிராக்ல ஒரு போர்ஷன் கொடுக்கறேன்னார், 4 நாள் ஷூட்னா கூட ஒரு 20k தேறும்" சந்தோஷமாய் சொன்னான் சந்திரன்.

    அடுத்த 20 வது நிமிஷத்தில், பரணி ஸ்டுடியோ வாச்மேனோட மன்றாடிக் கொண்டிருந்தான் வினீத்.அதற்குள் தூரத்தில் நின்று மூன்று பேர்களுடன் பேசிக் கொண்டிருந்த ராஜமாணிக்கம் இவர்களை கவனித்து விட்டார்.

    அங்கிருந்தே சைகையில் உள்ளே வா என கை ஆட்டினார். வாச்மேன் சரி போ, சார் கூப்பிடறார்னு அனுப்பி வைத்தான்.பாதி ஓட்டமாக டைரக்டரை அணுகினான் வினீத்.

    என்னய்யா டூப் ஆக்டர், ரெண்டு நாளா தேடறேன் எங்கே போனே

    வினீத் முனகல் குரலில் இல்லை சார் இங்கேதான்...

    சரி, இப்ப என் அடுத்த படம் இந்த வெள்ளிக்கிழமை பூஜை நீ வேற எந்த படத்துலயாவது வேலை செய்றயா

    இல்லை சார் சும்மாதான் இருக்கேன், வில்லன் கூட வர ரோல், காமெடியன் கூட வர ஆள், இல்லை ஹீரோவுக்கு டூப் எதுவானாலும் செய்றேன் சார்.

    இந்தா என் கார்டு, என் வடபழனி ஆபீசுக்கு நாளைக்கு காலைல 9 மணிக்கு வந்துடு

    சரி சார் ரொம்ப தேங்க்ஸ் சார், கரெக்டா 9 மணிக்கு வரேன் சார்

    ரோல் கிடைச்சா குறைஞ்சது ரெண்டு மூணு மாசமாவது சாப்பாட்டுக் கவலை இல்லை நடிகரின் அசிஸ்டண்டுக்கு அசிஸ்டண்ட்னு சம்பளம் இல்லாத வேலை வேண்டாம்.

    மறுநாள் 8 மணிக்குள்ளே குளிச்சு சுத்தபத்தமா இருக்கற 4 சட்டைல தேயாத சட்டை, ஜீன்ஸ் பேண்ட், பாண்டி பஜார்ல வாங்கின கூலிங் கிளாஸ் சகிதம் முதல்ல வடபழனி கோவில், அப்பறம் ராஜமாணிக்கத்தோட ஒரு வீட்டு முதல் மாடில இருந்த 10x10 ஆபீஸ் ரூம் (பாவம் அவரும் வளற டைம் வேணுமே).9 மணிக்கு அவர் வர வரை வெயிட்டிங்.

    சரியா 9 மணிக்கு அவர் வந்தார், என்னப்பா வினீத் குமார் ரொம்ப நேரமா வெயிட் பண்றயா? 9 மணிக்குதானே கூப்பிட்டேன்.

    இல்லை சார், கோவிலுக்கு வந்துட்டு அப்படியே வந்தேன்

    ஓ தெய்வ நம்பிக்கையெல்லாம் இருக்கா? இருக்கும்,இருக்கும் கைல காசு வர வரை.

    அப்படி இல்லை சின்ன வயசுல இருந்தே நம்பிக்கை உண்டு சார்

    சரி டிபன் சாப்டயா?

    இல்லை மத்யானம் ஒரேடியா லன்ச் சாப்பிடுவேன்

    அடப் பாவி பட்னியோட எப்படி தயாரிப்பாளருக்கு ஸ்டண்ட் பண்ணி காட்டுவே. இப்ப தயாரிப்பாளரோட கார் வருமே, இரு ஃபோன் பண்ணி யாரிடமோ பேசினார், ஐந்தே நிமிஷத்தில் டிபன் அறைக்கே வந்தது. சாப்பிடு முதல்ல

    கண்ணீரை கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டு, டிபன் பொட்டலத்தை காலி செய்தான் வினீத்

    சரி வா இப்ப தயாரிப்பாளர் வீட்டுக்கு போலாம், உன் ஸ்டில் ஃபோட்டோ ஆல்பம் ஏதாவது இருக்கா

    அதெல்லாம் ஒண்ணும் தயார் பண்ணலை சார், நடிப்பு இல்லைன்னாலும், கதை வசனம் கூட எழுதுவேன் சார், எப்படியும் வாய்ப்பு கொடுங்க. பாட்டெல்லாம் கூட எழுதியிருக்கேன் சார்

    ராஜமாணிக்கம் சிரித்துக் கொண்டே, சரி வா பாப்போம் என் கைல என்ன இருக்கு பணம் போடற தயாரிப்பாளர் ஒத்துக்கிட்டா வேலை கிடைக்கும் புறப்படு போலாம்

    தயாரிப்பாளரின் கார் இவர்களை சுமந்து நுங்கம்பாக்கத்தில் ஒரு பங்களா போர்டிகோவில் நுழைந்தது. பரந்து விரிந்த ஹாலில் கப்பலாய் விரிந்த சோபாவில் அமர்ந்து ஏதோ சினிமா சம்பந்தமான ஆங்கில ஜர்னலை புரட்டிக் கொண்டிருந்தார், அருணாசலம் செட்டியார்.

    இவர்களை பார்த்ததும், வாய்யா ராஜா, இவன்தான் நீ சொன்ன பையனா? பாக்க சரிதான், நல்லா பண்ணுவானா? சல்லிசா பணம் கேப்பானா எப்படி

    ஏய் வினீத் முதலாளிக்கு நடிச்சு காட்டுய்யா ஏதாவது

    செட்டியார், அதெல்லாம் எனக்கு வேண்டாம்யா, அவர் கிட்ட வேலை வாங்கறது உன் திறமை, எனக்கு என் பணம் வட்டியோட வந்தா போதும்

    அதெல்லாம் ஜமாய்ச்சிடலாம் முதலாளி, 4 மாசத்துல படம் ரிலீஸ், வசூலுக்கு நான் காரண்டி

    தம்பி உன் பேர் என்னப்பா, ஒரு படம் ஹிட்டானா தலைல ஏறாமா இருப்பயா, இவளைப் போடு அவளைப் போடுனு வரக் கூடாது 3 படத்துக்கு ஒப்பந்தம் போடணும் இன்னிக்கே, நடுவுல ஓடினே சந்தி சிரிக்க வச்சிருவேன், சரிதானே ராஜா?

    டைரக்டர், அதெல்லாம் பயம் வேண்டாம் நல்ல பையன்

    வினீத்துக்கு ஒண்ணும் புரியலை ராஜமாணிக்கத்தை திகைப்புடன் பாத்தான்.

    ராஜமாணிக்கம், என்ன வினீத் முளிக்கறே, நம்ம படத்துல ஹீரோ நீதான், ஒப்பந்தம் போடதான் முதலாளி கிட்ட வந்திருக்கோம்.

    செட்டியார், ஆமாம்யா மூணு படம், மூணு வருஷ காண்ட்ராக்ட்.வேற வேலை பண்ணக் கூடாது நடுவுல சம்பளம் ஏத்தி கேக்கக் கூடாது, இவளைப் போடு அவளைப் போடுனு கேட்டு வரக் கூடாது.நானோ,டைரக்டரோதான் மத்த நடிகர்களை தேர்வு செய்வோம். சரின்னா ஒப்பந்தம் இப்பவே என்ன சொல்றே

    வினீத் முழுதும் புரியாமல் ராஜமாணிக்கத்தை பாத்தான்.

    ராஜமாணிக்கம்,சரின்னு சொல்லுய்யா நல்ல நேரம் முடியறதுக்குள்ளே ஒப்பந்தம் போடலாம்.

    வினீத், அதில்லை நான் படம் முழுவதும் ஹீரோவுக்கு டூப்பா?

    டைரக்டர் சிரித்தார், இல்லை ஹீரோவே நீதான், சம்பளம், 30, 40,50 சரியா, கூப்ட உடனே ஸ்பாட்டுக்கு வரணும்

    வினீத்துக்கு புரியலை முப்பதாயிரம் சம்பளமா நமக்கானு திகைச்சு போனான், 40,50 ன்னாரே அது என்ன.

    இப்ப ஒரு உதவியாளர் எங்கிருந்தோ கட்டு ஸ்டாம்ப் பேப்பர்களுடன் வந்தார். வினீத் பக்கம் அமர்ந்து படித்துக் காட்டினார், முதப் படம் சம்பளம் 30 லட்சம். ரெண்டாவது 40 லட்சம் மூணாவது படத்துக்கு 50 லட்சம்.

    மயக்கம் போடாத குறை வினீத்துக்கு. லட்சங்களா, எனக்கா, என திகைப்பிலிருந்து வெளி வர முடியலை.

    ஒரு வக்கீல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அட்வான்ஸ் 10 லட்சம் ரொக்கமாக சூட் கேசில் உதவியாளர் அவன் கையில கொடுத்த போது வினீத்தோட கைகள் நடுங்கினது உண்மை.

    ராஜமாணிக்கம் கை குலுக்கி வாழ்த்தினார் வினீத் அவர் காலிலும், செட்டியார் காலிலும் விழுந்தான். நல்லா முன்னுக்கு வா, வளர்ச்சி, கர்வம் தலைக்கு ஏறாம கட்டுப்பாடா இரு செட்டியார் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

    கூடவே வந்த ராஜ மாணிக்கம், வினீத்குமார் பெயரில் ஒரு நல்ல பேங்கில் கணக்கு தொடங்கி பணத்தை போட உதவினார்.கூடவே புத்திமதிகள் சொன்னார், உன் கிட்ட திறமை இருக்கு உன் திறமைகளை ஒரு கட்டமைப்பில் கொண்டு வந்து நடிகனாக்குவது என் பொறுப்பு. ஆனால் வெற்றிக்குப் பின் தலைக்கனம் பிடிக்க விடாதே கீழே தள்ளி விடும் ஒரேடியா. அம்மாவை இங்கேயே கூட்டிட்டு வா, ஒரு வீடு லீஸ் கொடுத்து எடு ஒரே வருஷத்துல சொந்த வீடு வாங்கிடலாம், ஆல் தி பெஸ்ட்.

    3

    அதற்கப்பறம் கூட மறு நாள் வரை கனவு போலதான் இருந்தது. வெள்ளிக் கிழமை பூஜை போட்டு படம் அறிவிச்சு பேப்பர்ல எல்லாம் விளம்பரம் வந்தவுடனேதான் நம்பிக்கை வந்தது. தன் படத்தை பேப்பர்ல முதல்முதலா பாத்தவுடனே அழுகைதான் வந்தது. அப்பா நான் ஜெயிச்சிட்டேன்பா நீ இல்லையே பாக்க

    மறு நாளே ஆத்தூரிலிருந்து அம்மாவை வரவழைத்து விட்டான். சாலிகிராமத்தில் ஒரு சின்ன வீடு 8 லட்சத்தில் லீசுக்கு கிடைத்தது, ரெண்டே ரூம்தான், போதும் இப்போதைக்கு.

    ராஜமாணிக்கம் பொறுமையாக சீன் சீனாக சொல்லி எப்படி பண்ணணும்னு வினீத்துக்கும், புது முக ஹீரோயின் வனிதாவுக்கும் சொல்லிக் கொடுத்தார். வனிதாவை ஒரு கல்லூரி ஆண்டுவிழாவில் பிடித்தார் ராஜமாணிக்கம். அழகும், திறமையும் கலந்த ஒரு துறுதுறுப்பான பெண்.வனிதாவின் பெற்றோரை கஷ்டப் பட்டு சம்மதிக்க வைத்து முதல் படத்துக்கு ஒப்பந்தம் செய்திருந்தார்.

    காதல்,ஹ்யூமர்,செண்டிமென்ட் சரியான விகிதத்தில் கலக்கப் பட்ட கதை. பெண்களுடன் பழகிய அனுபவமே இல்லாத வினீத் கதாநாயகியுடன் நெருங்கி நடிக்க முதலில் கஷ்டப் பட்டான், வனிதாவே தைரியம் சொல்லும் அளவு. நாளடைவில் டைரக்டரின் முயற்சியால், பயிற்சியால் மெதுவாக இருவருக்கும் நடிப்பில் மெருகேறியது. அனேகமாக எல்லோரும் புது நடிகர்கள் இசை, சண்டை பயிற்சிக்கு மட்டும் முன்னணி விற்பன்னர்கள். நான்கே மாதத்தில் ‘காதலெனும் வீதியிலே’ டீசர் வெளி வந்து எதிர்பார்ப்பு எகிறியது.ரூபனின் கத்தரிக்காய் கூடைக்காரி டீசர் போட்டிக்கு. வந்து அதற்கும் ரசிகர்கள் எதிர் பார்ப்பு எகிறியது.

    புதிய நடிப்பு புயல் வினீத் குமார் நடிப்பில், அதிரடி டைரக்டர் வழங்கும் ‘காதலெனும் வீதியிலே" தீபாவளி வெளியீடுனு பத்திரிக்கைகளில் முழுப் பக்க விளம்பரங்கள், தமிழ்நாடெங்கும் வண்ணப் போஸ்டர்கள்.

    வசூல் நட்சத்திரம் ரூபன் படமும் தீபாவளி ரிலீசாக அறிவிக்கப் பட்டு ரசிகர்கள் ஏக எதிர்பார்ப்பில் இருந்தனர்.

    நடிகர் ரூபனும், நடிகை தேவிஶ்ரீ அமர்க்களமாய் ஆடி,.பிரபல இசையமைப்பாளர் இசையில், பிரபல பாடகர், பாடகி, பாடிய கத்தரிக்கா, கத்தரிக்கா பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது.

    டைரக்டர் ராஜமாணிக்கமும், தயாரிப்பாளர் ம.உ.அரு.செட்டியாரும் கூட ரூபன் பட

    Enjoying the preview?
    Page 1 of 1