Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manjal Kaadu
Manjal Kaadu
Manjal Kaadu
Ebook183 pages1 hour

Manjal Kaadu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மஞ்சள்காடு. பாரிவள்ளல் வாழ்ந்த பறம்பு. பரோபகாரம் வளர வேண்டிய இடத்தில் பயம் வளர்த்தார்கள் பாரியின் பரம்பரையினர் (என்று சொல்லிக் கொண்டவர்கள்). ஏன் அப்படி? எழுபது வருடங்கள் ராஜ்யம் நடத்தி வாழ்ந்தவர்கள் ஒரேநாளில் எப்படி அழிந்தார்கள்? இப்போது பாரியின் அரண்மனையை ரிஸார்ட்டாக மாற்ற விரும்புகிறவர்களின் முயற்சி ஏன் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது? அங்கு நடக்கும் அசம்பாவிதங்களை ஏற்படுத்துவது யார்? சிறையிலிருந்து தப்பித்துவந்த கைதி பத்ரி இப்போது எங்கே? அம்மனா, அமானுஷ்யமா, என்ன இருக்கிறது அந்த அரண்மனையில்? அப்படி என்னதான் நடக்கிறது மஞ்சள்காட்டில்?

Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580111410768
Manjal Kaadu

Read more from Sairenu Shankar

Related to Manjal Kaadu

Related ebooks

Reviews for Manjal Kaadu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manjal Kaadu - Sairenu Shankar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மஞ்சள்காடு

    (பஞ்சமுகி படைப்பு)

    Manjal Kaadu

    Author:

    சாய்ரேணு சங்கர்

    Sairenu Shankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sairenu-shankar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 01

    அத்தியாயம் 02

    அத்தியாயம் 03

    அத்தியாயம் 04

    அத்தியாயம் 05

    அத்தியாயம் 06

    அத்தியாயம் 07

    அத்தியாயம் 08

    அத்தியாயம் 09

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    இந்த மஞ்சள்காடு பஞ்சமுகி என்று அழைக்கப்படும் ஐந்து எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய நாவல்.

    பஞ்சமுகி அறிமுகம்

    எழுத்தாளர் G.A. பிரபா அவர்களின் ஊக்குவிப்பால் மாலா மாதவன், விஜி சம்பத், செல்லம் ஜரீனா, மதுரா மற்றும் சாய்ரேணு என்ற ஐந்து பெண்கள் இணைந்து பஞ்சமுகி என்னும் பெயரில் எழுதி வருகிறார்கள்.

    மாலா மாதவன்:

    சென்னையைச் சேர்ந்த MCA பட்டதாரி. தமிழில் கவிதைகள், கதைகள் எனப் பயணிக்கிறார். இவரது கதை கவிதைகள் கல்கி, குமுதம் சிநேகிதி, ராணி போன்ற முன்னணிப் பத்திரிக்கைகளிலும் இணைய இதழ்களிலும் வெளி வந்துள்ளன. வெண்பா எழுதுவதில் விருப்பம் அதிகம்.

    விஜி சம்பத்:

    சேலத்தில் வசிக்கும் முதுகலைப் பட்டதாரி. தினமணி கதிர், தினமலர் வாரமலர் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். இவரது சிறுகதைகள் அனைத்து முன்னணி வார,மாத இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் வெளி வந்துள்ளன. தினத்தந்தியில் சில கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன. ஆன்மீகப் பாடல் எழுதுவதில் வல்லவர்.

    செல்லம் ஜரீனா:

    சென்னையைச் சேர்ந்தவர். பல முன்னணி பத்திரிக்கைகளில் இவரது கதை வந்துள்ளது. இவருடைய சிறுகதைகள் சில ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு புத்தகமாகவும் வந்துள்ளன. வரலாற்று நாவல் படைப்பதில் சிறந்தவர்.

    மதுரா:

    தேன்மொழி ராஜகோபால் என்ற இவர் படித்தது ஆங்கில இலக்கியம்.மரபு நவீனக் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் பிரபல இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் மின்னிதழ்களிலும் படைப்புகள் வெளியாகி உள்ளன

    சாய் ரேணு:

    தென்காசியில் வசிக்கும் பொறியியல் பட்டதாரி. ஆன்மீகத் துறையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை குங்குமம் ஆன்மீகம், அம்மன் தரிசனம் போன்ற ஆன்மீகப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. துப்பறியும் நாவல் எழுதுவதில் திறம் மிக்கவர்.

    அத்தியாயம் 01

    தங்கம்.

    அந்த மஞ்சள்காட்டில் வானும் மண்ணும் நாற்றிசைகளிலும் மேலும் கீழும் ஒரே தங்கம்.

    என்ன டைரக்டரே! எப்படி லொகேஷன்? என்றார் புரொட்யூஸர்.

    இந்த மஞ்சள் காட்டிலேயே ஒரு ஃபுல் ஸாங் ஸீக்வன்ஸ் எடுத்துடலாம் சார்! அந்த அரண்மனையில் இண்டோர் எல்லாம் முடிச்சுடலாம். சுற்றி இருக்கற குடிசைகளில் ஹீரோ அம்மா-அப்பா கிராம ஸீன், அந்தத் திறந்தவெளில வில்லன் கொடுமை எல்லாம் முடிஞ்சுடும். ரெண்டு ஸாங்குக்கு மட்டும் ஜெர்மனி, கனடா போய் வந்துட்டோம்னா... என்று இழுத்தார் டைரக்டர் எழில்மாறன்.

    ஆமா, என் செலவில் யூனிட் மொத்தமும் ஜெர்மனி, கனடா போகணுமாக்கும்? ஒண்ணும் வேண்டாம். இப்போ கனடால ஸ்ட்ரைக் வேற நடக்குது. எதுனாலும் இங்கே சுத்துவட்டாரத்திலேயே முடிக்கப் பாருங்கப்பா என்றார் அந்தப் புரொடியூஸர் (பாவம்!).

    சரி சார், நாங்க இங்கேயே ஒரு வாரம் தங்கி, பேக்கிரவுண்ட் எல்லாம் ஷூட் பண்ணிட்டு வந்துடறோம். அப்புறம் ஸ்டுடியோ ஸீன்ஸ் முடிச்சுட்டு, ஹீரோ ஹீரோயினோட இங்கே வந்து ஸாங்ஸ் ஷூட் பண்ணிடலாம். ஒரே வாரம், அப்புறம் பொட்டுபொடி ஸீன் எல்லாம் என் அஸிஸ்டெண்ட் பார்த்துப்பான் என்று சொன்ன எழில்மாறனை நீயும் உன் அஸிஸ்டெண்ட்டும் நாசமாய்ப் போக என்ற மாதிரிப் பார்வை பார்த்துவிட்டு அதுக்கென்ன, தாராளமா தங்கி வேலையை முடிங்க. உங்க திறமை தெரிஞ்சுதானே உங்களை நம்ம படத்தில் போட்டேன்? என்னவோ, உங்களை நம்பிட்டேன் என்றார் புரொடியூஸர்.

    ***

    தமிழ்நாட்டின் வெற்றி டைரக்டர்களுள் ஒருவர் எழில்மாறன். பெரிய புரட்சிப் படம், மக்களைத் திருத்துகிறேன் பேர்வழி என்றெல்லாம் அவர் இறங்குவதேயில்லை. ஆறு பாட்டு, ஐந்து ஃபைட், நான்கு ஃபாமிலி செண்டிமெண்ட், மூன்று வில்லன்கள், இரண்டு ஹீரோயின், ஒரு தங்கை என்பது அவர் ஃபார்முலா. புராணக் கதையிலிருந்து சயின்ஸ் ஃபிக்ஷன் வரை என்ன கதை கொடுத்தாலும் அவருடைய வெற்றி ஃபார்முலாவில் தயார் செய்த மசாலாவைத் தூவிப் படம் எடுத்துவிடுவார். எழில்மாறனின் படங்கள் எல்லாமே குறைந்தது சில்வர் ஜூபிலி கண்டிருக்கின்றன. அவர் பட ஹீரோக்கள் புரட்சிக் குயில், மிரட்சி திலகம் என்று ஏதேதோ பட்டம் வாங்கி, முதலமைச்சர் கனவு காண ஆரம்பிப்பார்கள். எழில்மாறனின் தயாரிப்பாளர்கள் எல்லோருமே அவருடைய பட்ஜெட்டைக் கேட்டு மிரளுவார்கள். ரிலீசானதும் வசூலைக் கேட்டு ஆனந்தத்தில் பிரமிப்பார்கள். அடுத்த படமும் அவர்தான் என்று காலில் விழுவார்கள்.

    ***

    தயாரிப்பாளர் கிளம்பியதும் வின்செண்ட்... காமிராமேனை வெச்சுக்கிட்டு இந்த ஏரியாவை முழுசா பார்த்துடு. இந்த மஞ்சள் காட்டுப் பரப்பைக் கதையிலேயே கொண்டுவர முடியுமான்னு கதாசிரியரோட டிஸ்கஸ் பண்ணிக்க. பேக்கிரவுண்ட் வெச்சுக்கிட்டு ஸ்டூடியோல ஷூட்டிங் செய்தா போதுமா, மொத்த யூனிட்டும் இங்கே வரணுமான்னு பாரு. நானும் ஒரு ரவுண்ட் சுற்றிப் பார்த்துட்டு வரேன் என்று சொல்லி வெளியே புறப்பட்டார் எழில்மாறன்.

    எங்கு பார்த்தாலும் அந்தக் காட்டுப் பகுதி முழுவதும் மஞ்சள் பூக்கள் பூத்துத் தங்கமயமாய்ச் செய்திருந்தன. பத்து நிமிடம் நடக்க வேண்டும் என்று எண்ணியிருந்த எழில்மாறன் முக்கால் மணிநேரம் நடந்துவிட்டார். அப்போது ஒரு அருவி - மிகப் பெரிதும் இல்லாமல், சின்னஞ்சிறிதாகவும் இல்லாமல் - கன்னிப்பெண் துள்ளிக் குதிப்பதுபோல் பாய்ந்துகொண்டிருந்தது. அதன் அழகை ரசிக்கும்போதே எழில்மாறனின் மனது ‘இங்கே ஹீரோயினுடைய ஸோலோ ஸாங் வெச்சுடலாம்’ என்று யோசித்தது. திரும்ப எப்படித் தாங்கள் தங்கியிருந்த இடத்தை அடைவது என்ற கவலை அவருக்கு அதன்பிறகுதான் வந்தது.

    ஐயாக்குப் பட்டணமோ? திடீரென்று தனக்கு வெகு அருகில் கேட்ட குரலினால் திடுக்கிட்டுத் திரும்பினார் எழில்மாறன்.

    முகம் முழுவதும் அம்மைத் தழும்புகளோடு, தலையில் முண்டாசோடு, சட்டை போடாமல், வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டி, கையில் கோலோடு நின்றுகொண்டிருந்தான் ஒருவன்.

    ஆமா என்றார் எழில்மாறன் சற்றுப் பயந்தவராக.

    நினைச்சேன். எங்க இப்படி? என்று கேட்டான் அவன்.

    இங்கே சினிமா எடுக்க...

    அப்படிச் சொல்லுங்க, சினிமாக்காரவுகளா? சரி சரி...

    ஏங்க, இங்கேர்ந்து அரண்மனைக்கு எப்படிப் போகணும்?

    அவன் முகம் கறுத்தது.அங்கே நீங்க ஏன் போகணும்? என்று கேட்டான்.

    எழில்மாறனுக்கு லேசாகக் கோபம் வந்தது.நாங்க அங்கேதான் தங்கியிருக்கோம் என்றார்.

    அங்கே ஏனுங்க தங்கணும்? அடிவாரத்தில் பெரிய வீடிருக்கு. அங்கே தங்கிப் படம்புடிச்சுப் போவலாமே! என்றான்.

    இந்தாங்க, உங்களால வழி சொல்ல முடியும்னா சொல்லுங்க, இல்லாட்டா வேணாம். அதுக்காக...

    ஏன் கோவப்படறீய? ஏதோ எனக்குத் தெரிஞ்ச நல்லதைச் சொன்னேன், அவ்வளவுதான். ஒங்களுக்கு என்ன, அரமணைக்கு வழி காட்டணும், அம்புட்டுத்தானே? வாங்க, கூட்டிப் போறேன் என்று முண்டாசை அவிழ்த்து உதறி முன்னால் நடந்தான் அவன். எழில்மாறன் பின்னால் சென்றார்.

    சிறிதுநேரத்தில் தான் சரியான வழியில்தான் வந்துகொண்டிருக்கிறோம் என்ற தைரியம் வந்துவிட, அந்தக் கிராமத்தான்மீது கோபம் குறைந்தது அவருக்கு.உங்க பேரென்ன? இந்த ஊர்தானா? என்று விசாரித்தார்.

    முத்துவேலுங்க. நமக்கு அடிவாரக் கிராமமுங்க. இங்கே பளம் பறிக்கறது, இன்னும் சில மூலிகையெல்லாம் பறிச்சு விக்கறது என்றான் அவன்.

    அந்த அரண்மனையில் ஏன் தங்க வேண்டாம்னு சொன்னீங்க? என்று எழில்மாறன் அவராகவே கேட்டார்.

    முத்துவேல் பேசாமல் சிறிதுதூரம் நடந்தான். பிறகு பட்டணத்தாளுங்க இதையெல்லாம் நம்ப மாட்டீங்க என்றான்.

    என்ன, ஏதாவது ஆவி கதையா? என்று சொல்லி லேசாகச் சிரித்தார் எழில்மாறன்.

    அவனும் புன்னகைத்தான்.சொல்றேன், என்ன கதைன்னு நீங்களே புரிஞ்சுக்குங்க! என்று சொல்லித் தொடங்கினான்.

    ***

    ஐயா! நீங்க தங்கற அரமணையில பல நூறு வருசங்களுக்கு முன்னால ராசா பாரிவள்ளல் வசிச்சதா சொல்வாங்க. இது உண்மையான்னு தெரியாது, எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் ரகுநாத உடையாரைத்தான். அவர்தான் நூறு வருசம் மின்ன முதன்முதலில் பக்கத்துக் கிராமம் எதிலிருந்தோ வந்தாரு, காட்டில் மறைஞ்சிருந்த இந்த அரமணையைப் புதுப்பிச்சு அதிலே வாழ ஆரம்பிச்சாரு. அவர் பாரி ராசாவோட வம்சம்னு சொல்லிக்கிட்டாரு. மலையிலும் அடிவாரத்திலும் பல சொத்துகளைக் கையகப்படுத்திக்கிட்டு, இராசவம்சத்துக்கு உண்டான பரிவட்ட மரியாதைங்க, குத்தகைங்க எல்லாத்தையும் தானே எடுத்துக்கிட்டாரு!

    அவரை எதிர்த்தவங்க எல்லாரையும் அடக்க ஒரு படையே வெச்சிருந்தாரு! குதிரையில் நாலு பேர் மின்னயும் நாலு பேர் பின்னையும் போக, அவரு நடுவில கோச்சு வண்டியில் வந்தாக்க, தூள் பறக்கும்! ஊரே நடுங்கும்!

    உடையாரைய்யவைப் பத்தி ஒண்ணு சொல்லணும். அவரு என்னதான் சனங்களைக் கொடுமைப்படுத்தினாலும், இந்த மலைமேலே இருக்கற ரணபத்ர காளியம்மனோட கோயில்ல வழிபடத் தவறவே மாட்டார். அவளுடைய பரம பக்தராயிருந்தார். ஆனா அவர் சந்ததிங்களோ, களுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதை! கொஞ்சம் கொஞ்சமா வழிபாடு குறைஞ்சது, முப்பது வருசத்துக்கு மின்ன வாழ்ந்த விஜய சேதுபதி உடையாரோ, நாஸ்திகராவேயிருந்தார். ரொம்ப குணக்கேடும் கூட.

    ஐயா சொல்ல மறந்திட்டன். ரகுநாத உடையார் காலத்தில அரமணைச் சேவுகத்துக்குன்னு அடிவாரத்திலேர்ந்து முப்பது குடும்பங்க மலைக்குப் போய் அரமணையைச் சுத்தி உடையார் கட்டிக் குடுத்த வீடுகள்ளயே வசிச்சாங்க. அந்தக் குடும்பங்கள்ள ஒரு குடும்பம் உடையார்கிட்ட ரொம்ப விசுவாசமான குடும்பம்... அவுக மகன் வெற்றிச் செல்வன்னு... வெளியூருக்குப் போய் கம்யூட்டர்லாம் படிச்சுப்போட்டு வந்த பய. இருந்தாலும் அவன் அப்பாரு அவனை அரமணையிலேயே வேலைக்குச் சேர்த்துவிட்டாக.

    எங்க விஜய சேதுபதி உடையாரய்யாவோட மகளைப் பார்த்ததில்லையே! அமுதவல்லி. தேவதை மாதிரி அழகு. பஞ்சவர்ணக் கிளியாட்டமா அரமணை முளுக்கப் பறந்து திரிவா. அவளுக்கு நம்ம வெற்றி மேலே ஆசை வந்து போச்சு. அவனுக்கும் இஷ்டந்தான். பின்னே கசக்குமா? ஆனா அவளை உடையாரய்யாவோட அக்கா மவன் இராஜசேகர உடையாருக்குக் கொடுக்கறதா சின்ன வயசிலேயே முடிவு பண்ணிருந்தாங்க. சின்னப் பிள்ளைங்க வரப் போற ஆபத்துப் புரியாம பளகிட்டிருந்துச்சுங்க.

    ஒரு நாள் உடையாரய்யாவுக்கு விசயம் தெரிஞ்சு போச்சு. அப்புறம் என்ன? உங்க சினிமாக்கள்ளே வர

    Enjoying the preview?
    Page 1 of 1