Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saval
Saval
Saval
Ebook60 pages24 minutes

Saval

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சவால் என்ற சொல்லாட்சி, திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், மேடைகள் , பொது மக்களின் உரையாடல்கள் ஆகியவற்றில் இடம் பெற்று வருவதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட சவால் என்பதை அடிநாதமாக கொண்டு சவால் கதைகள் 10 என்ற இந்த சின்னஞ்சிறு புனைகதைகளைப் படைத்துள்ளேன்.

Languageதமிழ்
Release dateFeb 17, 2024
ISBN6580147910687
Saval

Read more from S. Madhura Kavy

Related to Saval

Related ebooks

Reviews for Saval

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saval - S. Madhura Kavy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சவால்

    Saval

    Author:

    எஸ். மதுரகவி

    S. Madhura Kavy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-madhura-kavy

    பொருளடக்கம்

    முன்னுரையாக ஒரு குறிப்புரை

    1. இரத்த பாசம்

    2. முறைப் பையன்

    3. சர்க்கரைப் புலவர்

    4. சென்றதினி மீளாது

    5. சிறியோர் எல்லாம் சிறியோர் அல்லர்

    6. காதலன் வந்தான்

    7. வெடிகுண்டு நிபுணர்

    8. மணிமேகலையின் அமுத சுரபி

    9. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

    10. விழுந்து விழுந்து படித்த தாத்தா

    முன்னுரையாக ஒரு குறிப்புரை

    பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் கே. எஸ். கோபால கிருஷ்ணனின் திரைப்படங்களுள் ஒன்று - 1968 ஆம் ஆண்டு வெளிவந்த உயிரா மானமா என்ற திரைப்படம். இந்த திரைபடத்தில் இடம்பெற்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் ஒன்றின் பல்லவி வரி - சவாலே சமாளி தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி. - என்பது நமக்கு இன்றும் தெம்பூட்டி வருகிறது. எழுபத்து ஒன்றாம் ஆண்டு, இந்த வரியைத் தலைப்பாக கொண்டு, நடிகர் திலகம் சிவாஜி நடித்த சவாலே சமாளி என்ற வெற்றித் திரைப்படம் வெளியானது. அதன் பின்னர் எண்பதாம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த நான் போட்ட சவால் திரைப்படமும் எண்பத்து ஒன்றாம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த சவால் திரைப்படமும் வெளிவந்தன.

    பின்னாட்களில், நாயகன் சவால் விடுத்து ஜெயித்துக் காட்டும் கதையம்சம் கொண்ட பல திரைப்படங்களும் வந்தன. (எடுத்துக்காட்டு - ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை) இவ்வாறாக, சவால் என்ற சொல்லாட்சி, திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், மேடைகள் , பொது மக்களின் உரையாடல்கள் ஆகியவற்றில் இடம் பெற்று வருவதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட சவால் என்பதை அடிநாதமாக கொண்டு சவால் கதைகள் 10 என்ற இந்த சின்னஞ்சிறு புனைகதைகளைப் படைத்துள்ளேன்.

    நன்றி

    அன்பன்

    எஸ். மதுரகவி

    (குறிப்பு - இந்தப் புனைகதைகளில், சமூக கதைகளில் விவரிக்கப்படும் சூழல்கள், பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.)

    1. இரத்த பாசம்

    மாலை நேரம். அழகான இளம்பெண் தங்கம், தன்னுடைய சின்னஞ்சிறு வீட்டின் கூடத்தில் தரையில் அமர்ந்து உதிரிப் பூக்களை மாலையாகத் தொடுத்துக் கொண்டிருந்தாள். வாசல் கதவைத் திறந்து கொண்டு அவளுடைய கணவன் கட்டுடல் கொண்ட இளைஞன் மாணிக்கம் உள்ளே வந்தான். பூக்களைத் தொடுத்துக் கொண்டே தங்கம் கணவனிடம் கேட்டாள் -

    என்ன பேக்ட்டரியிலிருந்து சீக்கிரம் வந்துட்டே... ட்யூட்டி முடிஞ்சிடுச்சா?

    மாணிக்கம் பதில் சொன்னான்

    ட்யூட்டி முடிஞ்சிடுச்சு ஆனா, மறுபடியும் போகணும்... இன்னிக்கு எங்க தொழிற்சாலையோட ஆண்டு விழா... ஸ்கூல்ல பசங்க கிட்ட சொல்லுவாங்க இல்ல பங்க்சனுக்கு கலர் ட்ரெஸ் போட்டுகிட்டு வரலாம்னு அது மாதிரி சொல்லி இருக்காங்க... அதான் வேற ட்ரெஸ் மாத்திக்கலாம்னு வந்தேன்...

    அங்க ரூம்ல அயர்ன் பண்ணி வெச்சு இருக்கேன் ஒரு செட் கலர் ட்ரெஸ் அதைப் போட்டுக்க...

    விழாவுக்கு சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

    நின்று கொண்டே மாணிக்கம் பேசினான்.

    எனக்கு என்ன தெரியும்?

    கைவேலையில் ஈடுபட்ட படி தங்கம் பேசினாள்.

    இந்த வட்டாரத்தின் அரசியல் புள்ளி இமயவரம்பன்...

    மாமாவா...

    ஆமா உனக்கு மாமனார்... என்னை பிறக்க வெச்ச எங்க அப்பா...

    வாசல் பக்கத்திலிருந்து ஓடி வந்த சிறுவன் பாபு, தங்கத்தின் முதுகில் சாய்ந்து கொண்டான்.

    வாடா என்று பாபுவை அழைத்தான் மாணிக்கம். ‘ என்கிட்ட வராத

    Enjoying the preview?
    Page 1 of 1