Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennai Pol Oruvan
Ennai Pol Oruvan
Ennai Pol Oruvan
Ebook51 pages20 minutes

Ennai Pol Oruvan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரட்டைப் பிறவிகள் பற்றிய சின்னஞ்சிறு கதைகளை ட்வின்ஸ் கதைகள் 10 என்னும் தலைப்பில் எழுதிய பின்னர், என்னைப் போல் ஒருவன் கதைகள் 10 என்னும் இந்த சின்னஞ்சிறு நூலை சமர்ப்பிக்கிறேன்.

வெவ்வேறு பெற்றோர்களுக்குப் பிறந்தவர்களில் ஒரே தோற்றம் உடைய இருவர் பற்றிய இரு வேடங்கள் சார்ந்த புனைகதைகள் தமிழ் சினிமாவில் படைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் என்னைப் போல் ஒருவன், மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களின் மாட்டுக்கார வேலன், நினைத்ததை முடிப்பவன்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த போக்கிரி ராஜா, ஜானி, ராஜாதி ராஜா ஆகிய படங்களைக் கூறலாம். மற்ற முன்னணி நட்சத்திரங்களும் இது போன்ற கதைப் பின்னணி உள்ள படங்களில் நடித்துள்ளனர். இவ்வளவு ஏன்? உலகப்புகழ் பெற்ற, நாம் அனைவரும் படித்த, ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் அவர்களின் டேல் ஆஃப் டூ சிட்டிஸ் நாவலில் வரும் சிட்னி கார்ட்ட்டன் தியாகம், ஒரே உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது தானே?

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580147910608
Ennai Pol Oruvan

Read more from S. Madhura Kavy

Related to Ennai Pol Oruvan

Related ebooks

Reviews for Ennai Pol Oruvan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennai Pol Oruvan - S. Madhura Kavy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    என்னைப் போல் ஒருவன்

    Ennai Pol Oruvan

    Author:

    எஸ். மதுரகவி

    S. Madhura Kavy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-madhura-kavy

    பொருளடக்கம்

    முன்னுரையாக ஒரு குறிப்புரை

    1. நாற்காலி ஆசை

    2. தாம்பத்யம்

    3. குருதிக் கொடை

    4. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

    5. பண்ணை வீடு

    6. விருந்தோம்பல்

    7. காலம் மாறினால் காதலும் மாறுமோ?

    8. ஸ்லீப்பர் செல்

    9. களங்கம்

    10. மறதி

    முன்னுரையாக ஒரு குறிப்புரை

    இரட்டைப் பிறவிகள் பற்றிய சின்னஞ்சிறு கதைகளை ட்வின்ஸ் கதைகள் 10 என்னும் தலைப்பில் எழுதிய பின்னர், என்னைப் போல் ஒருவன் கதைகள் 10 என்னும் இந்த சின்னஞ்சிறு நூலை சமர்ப்பிக்கிறேன்.

    வெவ்வேறு பெற்றோர்களுக்குப் பிறந்தவர்களில் ஒரே தோற்றம் உடைய இருவர் பற்றிய இரு வேடங்கள் சார்ந்த புனைகதைகள் தமிழ் சினிமாவில் படைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் என்னைப் போல் ஒருவன், மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களின் மாட்டுக்கார வேலன், நினைத்ததை முடிப்பவன்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த போக்கிரி ராஜா, ஜானி, ராஜாதி ராஜா ஆகிய படங்களைக் கூறலாம். மற்ற முன்னணி நட்சத்திரங்களும் இது போன்ற கதைப் பின்னணி உள்ள படங்களில் நடித்துள்ளனர். இவ்வளவு ஏன்? உலகப்புகழ் பெற்ற, நாம் அனைவரும் படித்த, ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் அவர்களின் டேல் ஆஃப் டூ சிட்டிஸ் நாவலில் வரும் சிட்னி கார்ட்ட்டன் தியாகம், ஒரே உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது தானே?

    அந்த உத்தியின் அடிப்படையில் இந்த சின்னஞ்சிறு புனைகதைகளைப் படைத்துள்ளேன்.

    நன்றி

    அன்பன்

    எஸ் மதுரகவி

    1. நாற்காலி ஆசை

    நண்பகல் பன்னிரண்டு மணி உச்சி வெயில் நேரத்தில், ஆர் ஆர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநரின் அறைக்குள் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தனர் ஒடிசலான தோற்றம் கொண்ட அழகான இளம்பெண்கள் இருவர்.

    அங்கே சுழல் நாற்காலியில் அமர்ந்து இருந்த இளைஞன் லேப்டாப்பில் மூழ்கி இருந்தான். ஒரு நொடி அவர்களைப் பார்த்து விட்டு, எதிரே இருந்த பார்வையாளர்கள் நாற்காலிகளில் அவர்களை உட்காரும்படி சைகை காட்டி விட்டு மீண்டும் லேப்டாப்பில் மூழ்கினான். சில நிமிடங்கள் கழித்து லேப்டாப்பில் இருந்து விடுபட்டு சாரி என்றபடியே அவர்கள் இருவரையும் பார்வையால் அளந்தான். குளுகுளு சாதனத்தின் அளவைக் குறைத்து விட்டு, அந்த இளம்பெண்கள் கொடுத்திருந்த விசிட்டிங் கார்டை பார்த்தான்.

    ‘ஆர் என் கன்சல்டன்ட்ஸ் ன்னு போட்டு இருக்கீங்க….’

    ஓர் இளைஞி பேசினாள் ‘ சார் என் பேரு ரஞ்சனா இவங்க நிரஞ்சனா அதான்….’

    ‘அப்படியா…. பிஏ நீங்க டிடெக்ட்டிவ்ன்னு சொன்னாங்க... கன்சல்டன்ட்ஸ் ன்னு போட்டு இருக்கீங்க… பீல்டுல இருக்கிற மத்த டிடெக்ட்டிவ்ஸ்க்கு தெரியாம இதுல இறங்கி இருக்கீங்க…. சரியா ‘ என்றான்

    Enjoying the preview?
    Page 1 of 1