Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Kaaviyam
Kaadhal Kaaviyam
Kaadhal Kaaviyam
Ebook124 pages39 minutes

Kaadhal Kaaviyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே இல்லறம் இருவரும் ஒருவராய் இணைந்து வாழ்தல் வேண்டும். நப்பாசையில் சிக்கித் தவிப்பதால் திருமண வாழ்வில் சிலர் தடுமாறி தடம் மாறிப் போகின்றனர். மனித வாழ்வின் சில கூறுகளையும் காதலையும் காதலர்களையும் புதுக்கவிதை நடையில் நாடகமாக படைத்திருப்பதை நாமும் அறிந்துகொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580147910791
Kaadhal Kaaviyam

Read more from S. Madhura Kavy

Related to Kaadhal Kaaviyam

Related ebooks

Reviews for Kaadhal Kaaviyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Kaaviyam - S. Madhura Kavy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதல் காவியம்

    (நாடக சூழல் :1998 ஆம் ஆண்டு)

    Kaadhal Kaaviyam

    Author:

    எஸ். மதுரகவி

    S. Madhura Kavy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    பொருளடக்கம்

    முதற்காட்சி

    இரண்டாம் காட்சி

    மூன்றாம் காட்சி

    நான்காம் காட்சி

    ஐந்தாம் காட்சி

    ஆறாம் காட்சி

    ஏழாம் காட்சி

    எட்டாம் காட்சி

    ஒன்பதாம் காட்சி

    பத்தாம் காட்சி

    பதினோராம் காட்சி

    பன்னிரண்டாம் காட்சி

    பதிமூன்றாம் காட்சி

    பதினான்காம் காட்சி

    பதினைந்தாம் காட்சி

    பதினாறாம் காட்சி

    பதினேழாம் காட்சி

    பதினெட்டாம் காட்சி

    பத்தொன்பதாம் காட்சி

    இருபதாம் காட்சி

    இருபத்து ஒன்றாம் காட்சி

    இருபத்து இரண்டாம் காட்சி

    இருபத்து மூன்றாம் காட்சி

    முதற்காட்சி

    இடம்:

    கல்லூரி ஒன்றின் வகுப்பறைகளுக்கு வெளியே.

    மலர் மர நிழலில் கோடைகால நாள் ஒன்று. பிற்பகல் முடிந்து மாலை தொடங்குகிற வேளை.

    இரு தோழியர் மலர்விழியும் கோதையும் அமர்ந்திருத்தல். நாமும் போவோம் அங்கு.

    மலர்விழி: என்னவாயிற்று, ஓயாமல் பேசும் உன் வாய்க்கு இன்று என்ன ஓய்வுநாளா? மௌனத்தில் வசிக்கிறாய்.

    என்ன என்று சொல்லி விடு. சொல்லாவிடில் யோசித்து யோசித்து என் தலை கழன்று போனாலும் போகும்.

    கோதை: புதிதாகக் கவலையுற ஏதுமில்லை. பழைய கவலைகள். சட்டென்று என்னுள் புகுந்து என் குணத்தையே மாற்றிவிடும்.

    சந்தோஷத்தைச் சஞ்சலம் அடித்து விரட்டிவிட்டு ஆட்டம் போடும். இதற்கு என்ன செய்வது மலர்? மனத்தைக் கட்டுவது எப்படி என் சகியே?

    மலர்விழி: மகிழ்ச்சிக்குரிய யௌவனத்தில் கவலையிடம் உன் மனதை அடகு வைப்பதில் என்ன பயன்? கவலைகள் உன் விவேகங்களை அறவே செல்லரிக்கச் செய்யும். பிரச்சனைகள் கவலைகளால் தீராது. தீர்வுகளால் தீர்வுக்கான சிந்தனைகளால்தானே தீரும்?

    கோதை: நீ சொல்வது நிஜத்தின் வார்த்தைகள். என் கவலை, என் அக்காளின் வாழ்வு குறித்த கவலை. பிரச்சனையோ அவளிடம் இருக்கும்.

    நான் பார்வையாளராய்ப் பார்த்து உடன்பிறப்பாகி விட்டதால் தாங்க முடியவில்லை அவள் சோகம்.

    மலர்விழி: என்னவாயிற்று உன் அக்காவின் வாழ்வுக்கு?

    நல்ல கணவன், கண்போல் ஓர் ஆண் குழந்தை இவ்வாறெல்லாம் நீதானே சொன்னாய்.

    கோதை: ஆமாம். சொன்னதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடும் போலிருக்கிறது.

    என்ன செய்வது? எங்கள் அத்தானுக்கு இப்போது வாழ்வதில் நாட்டம் இல்லை. தத்துவ தரிசனம் தேடிப்போய்க் கொண்டிருக்கிறார்.

    வேலையை விட்டும் குடும்பத்தை விட்டும் பிரிந்து போய் தத்துவத் தேடலைத் துவங்குவதாக அவரது திட்டமாம்.

    இது அக்காவைக் கவலையில் ஆழ்த்திவிட்டது!

    எங்களிடம் முன்னைப்போல் பேசுவதில்லை அவர். அக்காவிடமும் குழந்தையிடமும் அதிகம் பேசுவதில்லை. இதற்கு என்னதான் செய்யலாம்? இந்தப் பிணிக்கு என்னதான் மருந்து?

    மலர்விழி: தத்துவம் என்பது குடும்பத்தைத் தவிக்கவிட்டுத் தேடவேண்டும் என்று எவரும் விதி செய்திடவில்லை.

    வாழ்வின் அர்த்தங்கள் மனிதர்கள் தங்களுக்குள் பொழிந்துகொள்ளும் அன்பு மழையில்தான் புரிபட ஆரம்பிக்கின்றன.

    வாழ்வில் சிக்கெடுத்துச் சீராக்கி வாழ்பவர்கள் வாழ்வுக் கலையை, வாழும் கலையை முழுதாகப் புரிந்து கொண்டவர்கள்.

    விட்டுக்கொடுத்தல் மனிதக் குலத்திற்கே உகந்த தத்துவம் என்று கொண்டாடினால் வாழ்க்கைக்கலை அனைவருக்கும் ஆயாசப்படுத்தாத ஒன்றாகும்.

    கோதை: உனக்கும் எனக்கும் இப்போதே புரிந்துவிட்ட தத்துவ இரகசியத்தை அந்தப் பெரிய மனிதருக்குப் புரிபட வைப்பது எப்படி ஏந்திழையே?

    மலர்விழி: புத்தரின் மனைவி யசோதரையைப் பற்றி நான் செய்துவைத்த கவிதை ஒன்றினை உனக்குத் தருகிறேன்.

    எப்படியாவது உன் அக்காவின் அன்புக்குரிய அத்தானைப் படிக்கக் செய். மாற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சியே.

    கோதை: (படிக்கிறாள்)

    என் கண்கள் படிக்கக் கொடுமுதலில்!

    யசோதரை

    உணர்ச்சிகளை வென்றுவிட்ட புத்தன்.

    உணர்ச்சிகள் நிறைந்த

    மனிதனாய் இருந்தபோது

    உணர்ச்சிகளில் நீந்திக்

    கண்டெடுத்த

    கடற்சங்கான இராகுலன்

    அவனது மகன்

    குரல்கொடுத்து அழுதபோது

    புத்தனின் மனைவி

    யசோதரை விம்மலின்

    விளிம்பில் விழலானாள்...

    ஒவ்வொரு கணமும்

    ஒவ்வொரு கனவிலும்

    கணவரையே காதல் சுரங்கமாய்

    நினைத்து வாழ்ந்த

    யசோதரையின் வாழ்க்கை

    பாலையாகிப் போனது போதிமரத்தால்!

    பெண்மையின் அன்பின்

    ஆட்சியில்தான் கடவுள்

    ஒரு குடிமகன் என்பதைப்

    போதிமரம் எடுத்துரைக்காததால்

    புத்தனின் மனைவி

    விம்மலின் விளிம்பில்

    விழலானாள்...

    இருள்

    சித்தார்த்தன் புத்தனாகப்

    பரிணாமம் பெறும் முதல் கட்டத்தில்

    உடன் இவன்தோள்மீது

    தலைசாய்ந்து உறங்கிக்கொண்டிருக்கும்

    அன்பும் அழகும் மிளிரும்

    அவன் மனைவி யசோதரை.

    மழலைகள் பொழிந்து

    மயக்கவைத்து, இப்போது

    நித்திரையில் திளைத்திருக்கும்

    அருமை மகன் இராகுலன் இப்புறம்.

    சித்தார்த்தன், தோளிலிருந்து

    மனைவியின் முகத்தை மெதுவாய்

    நகர்த்தித் தலையணைக்குத்

    தருகிறான்.

    அவளது சாந்தம்

    அவனை ஒருநொடி

    அவனது அப்போதைய முடிவுகளை

    மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது.

    இராகுலனின் இராத்தூக்க

    உளறல்களோ அப்பா அப்பா

    என்று சன்னமாய்

    அவனது செவிகளுக்கு

    இனிமை பரப்புகிறது.

    சில கணப்பொழுதுகளில்

    தடுமாறுகிறான் சித்தார்த்தன்.

    ஆனால், மனஉறுதி

    அவனை மயக்கிலிருந்து

    மீட்டுவிடுகிறது.

    இருளில் தெரிகிற அவனுக்கே

    சொந்தமான அந்த இரண்டு

    ஒளிகளை விட்டுவிட்டு

    சித்தார்த்தன் புறப்படலானான்.

    அன்றைய விடியல்

    யசோதராவைக் கனவுகளிலிருந்து

    அதிர்ச்சிக்கு மாற்றுகிறது.

    துன்பமறியாத அவளது

    கணவன் இரவோடிரவாக

    விட்டுப்பிரிந்தான் என்ற

    செய்தியால் உயிரோடு செத்துப்போனாள்.

    இராகுலன் நிகழ்ந்தவை

    யறியாது மலர்ந்து சிரிப்பதில்

    தன்னைச் சுதாரித்துக் கொள்ள

    முனையலானான்.

    வருடங்கள் வந்து வந்து

    போனதில் சித்தார்த்தன்

    உலகம் போற்றும்

    புத்தனாகப் பரிணமித்தான்.

    இராகுலன் வளர்ந்து

    இளைஞனாகி யசோதரையின்

    கண்களுக்குக் குளிர்ச்சியைத்

    தந்தான்.

    பந்தங்கள் அற்றுப்போன

    புத்தன் ஒருநாள் வந்தான்

    யசோதரையின் அரண்மனைக்கு.

    முன்னிலும் ஒளிமிகு

    அவன் முகத்தைக்கண்டு

    வாழ்வில் இழந்தவற்றையெல்லாம்

    திரும்பப் பெற்றவளாய்

    மகிழ்ச்சியில் பூரித்தாள் அவள்.

    புத்தனிடமிருந்தோ

    ஒரு வெற்றுப்புன்னகை

    இவள்பால்.

    அதையும் வாங்கி மனதில்

    பூட்டிக் கொண்டாள்.

    அரண்மனையில் தங்கியிருந்த

    இரண்டே நாட்களில்

    தந்தையின் சீலம்

    இராகுலனை நிரம்ப ஈர்த்ததாம்.

    தானும் தந்தையுடன்

    செல்லப்போவதாய் வந்துசொன்ன

    மகனைப்பார்த்து

    விக்கித்துப்போனாள், யசோதா.

    சித்தார்த்தன் புத்தனான

    காலங்களில்

    ஒரு தவம்போல் இப்பிள்ளையையே

    முழு உலகாய் நினைத்து

    வளர்த்ததென்ன?

    வளர்ந்தபின் அவன்

    கணவனைப் போலவே

    சிரித்த சிரிப்பில்

    மகிழ்ந்ததென்ன?

    உள்ளுக்குள் புன்னகைத்து

    Enjoying the preview?
    Page 1 of 1