Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Endrum Irupean
Endrum Irupean
Endrum Irupean
Ebook289 pages1 hour

Endrum Irupean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கற்பனைக் கவியரங்குகள், நாடக மேடையில் நடப்பதாக விரியும் இந்த நாடகத்தில் கற்பனை மாந்தர், கவிஞர்களாக உலா வருகிறார்கள். தங்கள் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவரவர் கதைகளையும் கூறுகிறார்கள். தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். வாசித்து மகிழ்வோம்.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580147909285
Endrum Irupean

Read more from S. Madhura Kavy

Related to Endrum Irupean

Related ebooks

Reviews for Endrum Irupean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Endrum Irupean - S. Madhura Kavy

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    என்றும் இருப்பேன்

    Endrum Irupean

    Author:

    எஸ். மதுரகவி

    S. Madhura Kavy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-madhura-kavy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்றும் இருப்பேன்

    முன்னுரை

    முதற் காட்சி

    இரண்டாம் காட்சி

    மூன்றாம் காட்சி

    நான்காம் காட்சி

    ஐந்தாம் காட்சி

    மேடைகளைச் சுற்றி...

    முன்னுரை

    முதற்காட்சி

    இரண்டாம் காட்சி

    மூன்றாம் காட்சி

    ஐந்தாம் காட்சி

    ஆறாம் காட்சி

    ஏழாம் காட்சி

    எட்டாம் காட்சி

    ஒன்பதாம் காட்சி

    பத்தாம் காட்சி

    பதினொன்றாம் காட்சி

    பனிரெண்டாம் காட்சி

    உழைப்பால் உயர்வோம்

    முன்னுரை

    முதற்காட்சி

    இரண்டாம் காட்சி

    மூன்றாம் காட்சி

    நான்காம் காட்சி

    ஐந்தாம் காட்சி

    என்றும் இருப்பேன்

    முன்னுரை

    கற்பனைக் கவியரங்குகள், நாடக மேடையில் நடப்பதாக விரியும் இந்த நாடகத்தில் என்னுடைய கற்பனை மாந்தர், கவிஞர்களாக உலா வருகிறார்கள். தங்கள் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவரவர் கதைகளையும் கூறுகிறார்கள். தங்களுக்குத் தெரிந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். வாசகர்களுக்கு விருந்தாகும் என்ற நம்பிக்கையில் சமர்ப்பிக்கிறேன்.

    எஸ். மதுரகவி

    கவிதை என்றால் என்ன?

    கம்பனை மேற்கோள் காட்டி பாரதியார் தரும் விளக்கம்.

    சவியுறத் தெரிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியை வீரர் கண்டார்.

    சவி என்பது ஒளி. இது வட சொல். கம்பன் காலத்தில் அதிக வழக்கத்தில் இருந்தது போலும். ஒளி பொருந்தும்படி தெளிவு கொண்டதாகித் தண்ணென்ற (குளிர்ந்த) நடையுடையதாகி மேலோர் கவிதையைப் போல கிடந்தது கோதாவரி என்று கம்பன் வர்ணணை செய்கிறார். எனவே, கவிதையில் ஒளி, தெளிவு, குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும் என்பது கம்பனுடைய மதமாகும். இதுவே நியாயமான கொள்கை.

    இவ்வாறு பாரதியார் குறிப்பிடுகிறார்.

    குறிப்பு

    இந்த நாடகத்தின் சூழ்நிலை, பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.

    காணிக்கை

    இன்றும் நாடகத் தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும்  கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும்

    முதற் காட்சி

    (திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. மேடையில் கவியரங்க அமைப்பு காணப்படுகிறது. நடுவே பெரிய ஆசனத்தில் கவியரங்க நடுவர் நடுநாயகமாக அமர்ந்திருக்கிறார்.

    அவருக்கு இரண்டு பக்கங்களிலும் ஆடவரும் மகளிருமாக சிறிய ஆசனங்களில் அமர்ந்துள்ளனர். நடுவர் அமர்ந்தபடியே பேசுவார். மற்றவர்கள் நின்று பேச மேடையின் வலப்பக்கத்தில் உரை மேசை உள்ளது.

    சரி, வாருங்கள் வசன கவிதை மழை பொழியும் கவியரங்கத்தைக் காண்போம்.)

    நடுவர் அரங்கநாதனின் முன்னுரைப் பேச்சு

    கடல் சூழ்ந்த உலகின் கண் உறையும் கருணை மிக்க மகாசனங்களே! தன்னிகரில்லா தமிழ் மொழியில் கவியரங்கம் நடத்திட அடியேன் இங்கு வந்துள்ளேன்.

    கவி மழையில் நீங்கள் நனைந்திட உறுதுணை புரிய இங்கே இத்தனை கவிகள் வந்துள்ளனர். தங்கள் அனைவரையும் இந்த நன்னாளில் கருணை உடையவர்கள் என்றே உரைத்தேன்.

    எங்கள் கவிமொழிகளைக் கேட்க வந்த நீங்கள் கருணை மிக்கவர்கள்தான் என்பதில் ஐயப்பாடு ஏதும் இல்லை அன்றோ?

    நான் செப்பும் தலைப்புகளில் தங்களைச் சிந்திக்கச் செய்யும் கவிதைளை இங்கே மடை திறந்த வெள்ளமென இங்கு உள்ள கவிஞர்கள் பொழிவார்கள்.

    ஆம். சிந்திக்க வைத்த கூற்றுதான் என்னவென்று உங்களைச் சிந்திக்க வைப்பார்கள்.

    இதோ முதலில் கவிதையை வழங்க வருகிறார் இளம் மங்கை அழகுநிலா. இவருக்கு நான் தரும் தலைப்பு கருமை

    (அழகுநிலா உரை மேசை அருகே நின்று பேசுகிறாள்)

    அழகுநிலா

    அடியேனைப் பற்றி அறிமுகமாக எதுவும் சொல்லாத நடுவர் மீது எனக்கு வருத்தம். இவரை நல்லவர் என்று கொண்டாடுவது எப்படி பொருந்தும்?

    என் கட்டழகைப் பற்றியும் கவிதைத் திறன் பற்றியும் சுட்டிக் காட்டினால் நடுவரின் செயற்கைப் பல் விழுந்து விடவா போகிறது? கருப்பு மீது எங்களுக்கு காதல் என்றும் என்றே ஆடவர் நினைக்கின்றார். கருப்பே அழகு காந்தலே ருசி என்றே பேசித் திரிகின்றார்.

    காந்தல் உப்புமாவுக்காக காரிருள் வரை சண்டை போடும் புருடர்கள் கருப்பே அழகு என்று காட்ட காந்தலைத் தூக்கிப் பிடிக்கின்றார்கள்.

    நடுவரைக் கைப்பிடித்த எங்கள் அக்காள் பங்கயப் பாவைக்கு இவருடைய கரிய நிறம் மீதா காதல்?

    இவருடைய வற்றாத செல்வத்தின் மீதுதான் காதல். ஆதலினால் இவரைக் காதலித்தாள். கரம் பற்றினாள்.

    சொத்து என்பது இல்லாவிட்டால் இந்த சொத்தைப் பல் பேராசானை எந்த தத்தை கைப்பிடிக்க வருவாய்?

    நடுவர்: என்னைப் பற்றிய புகழுரைகள் போதும். இளம் கட்டழகியே. நான் சொன்ன தலைப்பில் கவிதை மொழிந்திடுங்கள்.

    அழகுநிலா: இந்த உரை நடுவருக்குப் பெருமை சேர்க்கும் உரை நான் இப்பொழுது கவிதை பாடுகிறேன்.

    நடுவர்: அப்பாடா!

    அழகு நிலா: கருமை நிற முகில்களே கொடையாக கனமழையை அள்ளித் தருகின்றன. எப்பொழுதும் அருங்குணங்களைப் பார்க்காமல் நிறங்களைப் பார்த்து வெறுப்பது மனித குலத்திற்கு மாண்பைத் தராது என்றும்.

    திருக்கோயிலின் கருவறையில் இறைவன் கருநிறத்தில் காட்சி தருகிறான் அருளை அள்ளித் தருகிறான். அவனை அன்போடு கும்பிட்ட நெஞ்சம் ஆலயத்திற்கு வெளியே மனிதர்களிடையே நிற மாறுபாடு பார்த்து நிற்கும்.

    கருமை கருப்பு என்றெல்லாம் வெறுப்பு கொள்வது நாகரிகம் படைத்த மக்களுக்கு அழகு ஆகாது.

    நடுவர்: இரட்டை நாக்கு உடையவரா நீங்கள்?

    அழகுநிலா: இந்தக் கவிதைக்காரியின் இயல்பைப் புரிந்துகொண்ட அரங்க நாதனாரே

    நடுவர்: செவி மடுத்து நிற்கிறோம் விரைவாக கவிதை சொன்னால் நலம் பயக்கும். இவர்கள் காத்திருக்கிறார்கள்.

    அழகுநிலா: மேடை கிடைத்தால் எளிதில் இறங்கி விடக்கூடாது என்பது என் பாட்டனாரின் அறிவுரை.

    பாட்டனாரை இங்கிருந்து வணங்கி கருமையைப் பற்றிப் பேசுகிறேன்.

    கருமையின் பெருமை பெண் பாலாருக்கு நன்றாகத் தெரியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய அழகிய கரு விழிகளுக்கு அழகூட்டும் கண் மை கருப்பு. எங்கள் கூந்தலைப் பார்த்து நீங்கள் சொக்கிப் போகிறீர்களே. அதற்கு காரணம் அதன் கரு நிறம்

    நடுவர்: சாயம் எங்கே வாங்குகிறீர்கள்? எந்த சாயம் வாங்குகிறீர்கள் அம்மணி

    அழகுநிலா: என்ன கேட்டீர்கள்?

    நடுவர்: சாயம், கண்மை எல்லாம் எங்கே வாங்குகிறீர்கள் என்றேன்.

    அழகுநிலா: எங்கள் ஒப்பனை இரகசியத்தை அவையில் ஒப்பித்து விடுவோம் என்று நினைக்கிறீர்களா?

    நடுவர்: பொத்தி வைக்க வேண்டிய அவசியம் என்ன? உடைத்துச் சொல்லுங்கள். அனைவரும் தங்களைப் போல் மேனி மினுங்க உலா வரட்டும்.

    அழகுநிலா: பார்த்தீர்களா அவையோரே. குறிப்பான கவிதை சொல்ல வந்த அடியாளை அழகுக் குறிப்புகளை அடுக்கு அடுக்காக அள்ளித் தரச் சொல்கிறார் அருமையான நடுவர். அடுக்குமா இந்தச் செயல்?

    நடுவர்: வாயைப் பூட்டாமல் வார்த்தை சொல்லி விட்டேன்.

    அழகுநிலா: கருமை நிறச் சாயம் ஒரு சில தினங்களில் மாயம். இதுதான் ஆடவரின் ஒப்பனை இலட்சணம். பெண்களின் கூந்தல் திட்டுத் திட்டாய் வெளுத்துச் சிரித்ததைக் கண்டதுண்டா?

    நடுவர்: என்னுடைய பாட்டிக்கு நான் பார்த்த காலம் முதலாய் பஞ்சுத் தலை

    அழகுநிலா: பாட்டியே விரும்பி ஏற்ற கோலம். நாங்கள் விரும்பாத எதையும் எங்கள் மீது திணிக்க முடியாது என்பதற்குத் தங்கள் பாட்டியின் பஞ்சுத் தலையே கட்டியம் கூறும். கருமையே சிறந்தது, கருமையே நல்லது.

    ஆடவருக்கும் பெண்டிருக்கும் இந்த அரங்கத்தில் நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான் - கருமையே அழகு. ஆம் கருமையே கூந்தலுக்கு அழகு. கருங்கூந்தல் என்பதே இந்தியப் பெண்களின் இணையற்ற மாண்பு. அதை மாற்ற முயல்வது எங்ஙனம் நியாயம்?

    ஒப்பனை செய்யுங்கள் அதற்கு கருமையை மட்டுமே தேர்ந்தெடுங்கள்.

    பல வண்ணங்களை ஏற்றிப் பார்க்க கூந்தல் ஆடையா என்ன?

    வெவ்வேறு வண்ணப் பூச்சு வேண்டாம் ஏந்திழையரே. பல் இளிக்காத கரு நிறப் பூச்சைப் பயன்படுத்துங்கள் என்றும். மங்கையரின் கூந்தல் கருப்பாக மிளிர்ந்து கவர்ந்திழுக்கட்டும் என்றும் கூறி நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.

    நடுவர்: கருமை என்ற தலைப்பில் கட்டழகி அழகுநிலா கண்ணியமாய்க் கவிதை சொன்னார்

    தலைமுடியில் பல வண்ணப் பூச்சு வேண்டாம் என்கிற சமுதாயத்திற்குத் தேவையான கருத்தை முன்வைத்தார். அலங்கார இரகசியத்தை சொல்ல மறுத்தார். என் இல்லறக்கதையைப் போட்டு உடைத்தார்.

    அவர் ஆற்றிய அரும் பணிக்கு நன்றி கூறி உமிழ் நீர் என்ற தலைப்பில் கவிதை உரை ஆற்ற தம்பி உலகநாதனை அழைக்கின்றேன்.

    உலகநாதனும் அடியேனைப் பற்றிப் பேசிக் கலகம் விளைவித்து விடக் கூடாது என்பதால் அறிமுகமாக சில வார்த்தைகள் சொல்லி வைக்கிறேன்.

    உலகநாதன் கவிதை உரைத்தால் எவரும் அருகில் நிற்பதில்லை என்பதால் அடியேன் ஈரம் கொண்டு அவரை நான் இங்கே அழைத்து வந்தேன்.

    எட்டு இலட்சம் கொடுத்தாலும் எட்டே நாளில் செலவழித்து மீண்டும் கடன் கேட்க வரும் உலகநாதனைக் கண்டால் உறவினர் ஓடி விடுவர். தோழர்கள் பறந்தோடுவார்கள். வங்கிக் கணக்கு பல உண்டு. எதிலும் பணம் போடுவதில்லை எல்லாம் பேருக்கு.

    இல்லக் கிழத்தி பணம் கேட்பாள் என்பதால் பல நாள் இரவிலும் அலுவலகத்தின் குளுகுளு அறையில் உறங்கிடுவார்.

    ஈன்றெடுத்த அன்னை மாத்திரை மருந்துக்காகிலும் பணம் கொடு என்றே இறைஞ்சுவதால் அவர் இருக்கும் பக்கம் இவர் எட்டிப் பார்ப்பதில்லை.

    இப்படிப்பட்ட பண்பாளர் தம்பி உலகநாதன் வருகிறார் வாருங்கள்.

    (உலகநாதன் உரை மேசை அருகே)

    உலகநாதன்

    அனைவருக்கும் வணக்கம்.

    நல்லவரான நடுவர் அவர்களே,

    தங்கள் தந்தையார் உமக்கு சேர்த்து வைத்த செல்வம் ஏராளம். தாராளத்திற்கு மேல் ஏராளம்.

    அதன் பயனாக அருமை அக்காள் தங்களுடன் இணைந்தார் என்பதை ஆயிழை அழகுநிலா ஊரறியச் சொன்னார்.

    நடுவர்: அதை ஏன் மீண்டும் கிளறுகிறீர்? உமக்கு இட்ட பணியைப் பாரும்.

    உலகநாதன்: என்ன சொல்ல விழைகிறேன் என்றால் பொருளாதாரம் வலுவாக இருந்ததால், நல்ல மெல்லிடையார் உமக்குத் தாரமாக வாய்த்தார்.

    நடுவர்: என் இல்லத்தரசியை நீர் பார்த்தது இல்லை போலும்.

    உலகநாதன்: உயர்வு நவிற்சி. அக்காளை மெல்லிடையார் ஆக நினைத்துப் பார்க்க உமக்கு வாய்ப்பளித்தேன்.

    நடுவர்: சரிதான்.

    உலகநாதன்: என் தந்தையார் வைத்து விட்டுப் போன கடன்களை அடைக்க அடியேன் பட்டபாடு ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

    இதனிடையே மாமனார் அடைக்காமல் விட்டு வைத்த கடனையும் தீர்க்க வேண்டும் என்றே இல்லாள் ஓயாமல் கூறுவதால் இராப்பொழுதையும் கழிக்கிறேன் அலுவலக அறையில். உலகம் காண சொந்தக் கதையைக் கொட்டுவது தான் இன்றைய நாகரிகம் என்பதால் உரைத்தேன். அதனால் எனக்கு இல்லை வெட்கம் என்ற ஒன்று.

    நடுவர்: அதுதான் தெரிந்ததே... மேலே...

    உலகநாதன்: அடியேனுக்கு மாமன் அருமையான தலைப்பு அளித்தார்.

    நடுவர்: மாமனா?

    உலகநாதன்: தங்கள் மனைவியார் எங்களுக்குத் தமக்கை என்றோமே, அதனால் தங்களுக்கு மாமன் இடம்

    நடுவர்: சரி மருமகனே..... கடன் தீர்க்க புதல்வியை இரண்டாம் தாரமாகத் தாருங்கள் என்று கேட்டு விடப்போகிறீர்.

    உலகநாதன்: என் மனைவியும் தங்கள் மகளும் உடன்பட்டால் கடன் தீர்க்க இது நல்ல ஏற்பாடு. சாத்தியமாக்க முயற்சி செய்கிறேன்.

    நடுவர்: தவளை வாய் எனக்கு.

    உலகநாதன்: உமிழ் நீர் பற்றி பேசுகிறேன். எச்சில் துப்பாதே என்று எழுதி வைத்த இடத்திலும் துப்பாமல் இருப்பதில்லை நம் மக்கள். நடுவர் அவர்களே...

    அரசியல்வாதிகளை விமர்சித்துக் கிழிக்கிறார்கள் இலக்கியவாதிகளை இரண்டில் ஒன்று பார்க்கிறார்கள்.

    சினிமாக்காரர்களையும் விட்டு வைப்பதில்லை. மக்களை விமர்சனம் செய்ய யாரும் வருவதில்லை.

    எடுத்துச் சொல்லுங்கள், படித்துப் படித்துச் சொல்லுங்கள்.

    மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் எச்சிலைக் கண்ட இடங்களில் துப்பக் கூடாது என்று எழுதி வையுங்கள்.

    கண்ட இடங்களில் துப்புவதால் பன்றிக் காய்ச்சல் பரவும் என்று பரப்புரை செய்தாலும் மக்கள் கவனத்தில் நிறுத்திக்கொள்வதில்லை.

    முகத்தைச் சுளிக்கச் செய்யும் வண்ணப் பொடி எச்சில் கோலம் மாநகரின் கட்டிடங்களில்.

    இங்கே துப்பு என்று எழுதி வைத்த இடத்தில் துப்புபவருக்கு பரிசு என்று எழுதி வைத்தால் பலன் கிட்டுமா?

    உமிழ் நீரை உடனே துப்ப உந்துதல் தரும் மூளை. அதனை அடக்கி வைத்து தக்க இடம் நாடி துப்புவதே முறையாகும்.

    அறிவுரை சொல்ல அடியேனுக்குத் தகுதி இல்லை. எனினும் சற்றே சிந்தித்துப் பாருங்கள். தூய்மை நம் கைகளில்.

    நன்றி, வணக்கம்.

    நடுவர்: சில அடுக்கக வணிக வளாகங்களில் சுவர்களில் எல்லாம் வண்ண பொடியைத் துப்பி வைப்பது தகுமா என்று வினவுகிறார்.

    நாம் அனைவரும் சிந்திப்போம். ஆனால் மறந்துவிட்டு அடுத்த வேலை பார்ப்போம்.

    நாம் இப்பொழுது அடுத்த வேலை அடுத்த கவிதையைப் பார்ப்போம்.

    பேராசிரியர் பார்த்திபன்...

    வாங்க அண்ணே இரவு நேரம் பற்றி...

    (பார்த்திபன் உரை மேசை அருகே)

    பார்த்திபன்

    அடியேனைத் தமையனாக்கித் தமது வயதைக் குறைத்துக் காட்டத் துடிக்கும் நடுவர் அவர்களே.

    நீங்கள் ஒப்பனை உத்திகள் அறிய முற்பட்டது ஏன் என்பது அவையோருக்குப் புரிந்திருக்கும்.

    நடுவர்: எனக்கு இது தேவைதான் ஐயா.

    பார்த்திபன்: இந்த ஐயா என்ற வார்த்தை முன்பே வெளிப்பட்டிருந்தால்...

    நடுவர்: என் மானம் காற்றில் பறந்திருக்காது மீண்டும். ஆனது ஆயிற்று இரவு நேரம் பற்றி சரசம் விரசம் இன்றிப்பேசுங்கள்.

    பார்த்திபன்: இரவு நேரம் உறங்கும் நேரம்

    நடுவர்: நல்ல கண்டுபிடிப்பு.

    பார்த்திபன்: இரவு நேரம் உறங்கும் நேரம் என்னை உறங்கவிடுவதில்லை யாரும்.

    என் மகன் பண்பலையை ஒலிக்க விடாமல் ஒரு நாளும் உறங்குவதில்லை. காதுக் கருவி அவனுக்குப் பிடிப்பதில்லை.

    வானொலியை நிறுத்தி வைத்தாலும் எழுந்து மீண்டும் ஒலிக்கச் செய்வான்.

    இப்படியாக இரவு நேரம் எனக்கு சோதனை நேரம்...

    நடுவர்: தொலைக்காட்சிப் பெட்டியில் நடுநிசி பாடல் காட்சியைப் பார்க்காமல் இருக்கிறானே அதற்காக மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

    பார்த்திபன்: மற்றொரு நாள் இராப்பொழுது மகனும் மனைவியும் வீட்டில் இல்லை.

    நடுவர்: நல்லது தானே.

    பார்த்திபன்: உறக்கம் என் விழிகளைத் தழுவிய நேரம். அழைப்பு மணி ஒலித்தது.

    அடுக்கக வீட்டின் பக்கத்து வீட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1