Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chinna Maapley Periya Maapley
Chinna Maapley Periya Maapley
Chinna Maapley Periya Maapley
Ebook119 pages42 minutes

Chinna Maapley Periya Maapley

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சோனாசலம் தன் இரண்டாவது பெண் ஹேமாவிற்கு அவள் காதலிக்கும் ஜனாவையே கல்யாணம் செய்து வைக்கிறார். அவரது குடும்ப விஷயத்தில் அடிக்கடி மூக்கை நுழைக்கும் துப்பறியும் புலியான பெரிய மாப்பிள்ளை டாக் நரசிம்மன் ஜனாவைப்பற்றி அவதூறாகக் கூறி அவனையும் ஹேமாவையும் பிரிக்க நினைக்கிறார். முதலிரவை தடுத்து நிறுத்துகிறார். தன் மேல் அபாண்டமாக பழி சுமத்தி பெரிய மாப்பிள்ளையை படாதபாடு படுத்த ஹைதராபாத் செல்கிறான் ஜனா. அவர் வீட்டிலேயே செந்தமிழ் பேசத் தெரிந்த சமையல்காரனாக வேலைக்கு சேருகிறான். நிஷா என்ற பெண்ணை கடத்தியதில் பெரிய மாப்பிள்ளை மாட்டிக் கொண்டு விட, ஜனா அவரை பிளாக்மெயில் செய்கிறான். P.M. (பெரிய மாப்பிள்ளை) யை தன் வாயாலேயே C.M. (சின்ன மாப்பிள்ளை) நல்லவர் என்று கூற வைக்கிறான்.

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580148907597
Chinna Maapley Periya Maapley

Read more from S.Ve. Shekher

Related to Chinna Maapley Periya Maapley

Related ebooks

Related categories

Reviews for Chinna Maapley Periya Maapley

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chinna Maapley Periya Maapley - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    சின்ன மாப்ளே பெரிய மாப்ளே

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Chinna Maapley Periya Maapley

    கதை, வசனம்

    TDR

    நாடகமாக்கம், இயக்கம், தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சேகர் எப்பவும் ராஜாதான்

    தமிழ் நாடக உலகில் இன்று ஓர் அபூர்வ சாதனையாளராக விளங்குபவர் நம் எஸ்.வி. சேகர். தமிழ் கூறும் நல்லுலகம் பூராவும் அறிந்த தலை சிறந்த நாடக நடிகர் அவர்.

    Nothing Succeeds Like Success. வெற்றியே வெல்லும். சேகர் விஷயத்தில் இது முழுமையாகப் பொருந்தும். தொட்டதெல்லாம் பொன்னாகும் ராசி அவருக்கு நிறைய உண்டு. இல்லாவிட்டால் 1974இல் மேடையில் பிரவேசித்து இந்த 22 ஆண்டுகளுக்குள் 3500 தடவையும் வெற்றி காண்பது என்பது ஓர் அசுர சாதனைதான்.

    சேகர் மேடைக்கும் திரைக்கும் வருவதற்கு முன்பிருந்தே அவரை எனக்குத் தெரியும் என்பது மட்டுமில்லை. எங்களுடைய சில நாடகங்களுக்கு அவருடைய ரிகார்டிங் தியேட்டரில்தான் Special Effect இசை எல்லாம் பதிவு செய்தோம். அவர்தான் தயாரித்துக் கொடுத்தார். பல ஆண்டுகளுக்கு முன் அவர் பதிவு செய்து கொடுத்த இசையும், எஃபெக்ட்ஸ்-ம் இன்றும் தரம் குறையாமல் நிறைவாயிருப்பது அவரது திறமைக்கும் ஈடுபாட்டுக்கும் தகுந்த சான்றாகும்.

    நகைச்சுவையும் நடிப்பும் சேகரின் ரத்தத்திலேயே இருப்பவை. அவருடைய தந்தை எஸ்.வி. வெங்கட்ராமன் நெடுங்கால மேடை அனுபவம் கொண்ட சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் நான் ஒரு நாடகத்தில் சேர்ந்து நடித்து மகிழ்ந்திருக்கிறேன். எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருக்கும் தந்தையைப் பின்பற்றி சேகரும் வாய்விட்டுச் சிரிப்பதையே அன்றாட வாழ்க்கையின் அடித்தளமாகக் கொண்டிருக்கிறார். அவருடன் நாம் ஒரு பத்து நிமிடமே பேசினாலும் பல தடவை உரக்கச் சிரிக்க வைத்துவிடும் நகைச்சுவை அவரிடமிருந்து இயல்பாகவே வெளிப்படும். அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு அஸ்திவாரம் வாய்விட்டுச் சிரிப்பதுதான். அதனால்தானோ என்னவோ சேகர் மேடையேற்றும் எல்லா நாடகங்களும் சத்தான நகைச்சுவை நிறைந்து ஜொலிக்கின்றன. தலைப்பிலிருந்து கடைசி வார்த்தை வரை எல்லாமே சுவாரஸ்யம்தான்.

    சமீபத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் டாக்டர். லோக முத்துகிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் தெரிவித்த ஒரு தகவல் என்னை பிரமிக்க வைத்தது. மருத்துவமனையில் Neuro Surgery பிரிவுக்கு சேகரின் ஒரு நாடகத்தின் மூலம் வசூலான இரண்டு லட்சம் ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தார் என்று டாக்டர் சொன்னபோது நான் நெகிழ்ந்து போனேன். சமூக நோக்கத்திலும் உயர்த்தியானவர் சேகர் என்பதற்கு இன்னும் எத்தனையோ சான்றுகள் உண்டு. எத்தனையோ நற்பணிகளுக்கு நாடகப்பிரியா மூலம் பெரும் தொகைகள் கிடைப்பது ஊரறிந்த உண்மை.

    நல்லதே நினைத்து, நல்லதே பேசி, நல்லதே செய்யும் சேகருக்கு, எடுத்த காரியம் யாவினும், வெற்றிதான். உலகம் சுற்றும் வாலிபனான அவரது செயல்வேகம் என்றென்றும் நீடிக்கும். 3500 என்ன, 35 ஆயிரம், மூன்றரை லட்சம் என்று (தலைவர்கள் வாழ்த்தியதுபோல) நிச்சயம் புதிய புதிய சிகரங்களை எட்டியே தீருவார் இந்த வசூல் மன்னர்.

    ஆம், சேகர் எப்பவும் ராஜாதான்.

    - பூர்ணம் விஸ்வநாதன்

    3500-ஆவது நாடக விழா மலரிலிருந்து

    சமர்ப்பணம்

    1990ஆம் ஆண்டு காஞ்சி ரங்கமணி அவர்கள் கிருஷ்ணகுமார் என்ற வாலிபனை எனக்கு அறிமுகப்படுத்தினார். தன்னுடைய நாடகங்களில் நடித்தவர் என்றும், நாடகப்பிரியாவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    அதற்கு முன்பே நான் நாரதர் பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது கிருஷ்ணகுமாரை சந்தித்ததுண்டு, இனிமே நாங்கதான் என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தவுடன் அதை ஒலிப்பதிவு நாடாவாக வெளியிட்டோம். நல்ல நகைச்சுவை உணர்வு மிகுந்தவன்.

    என் குடும்பத்தில் ஒருவனாக பழகும் அளவிற்கு உயர்ந்துள்ளவன். இன்று நாடகப்பிரியாவின் முழுப் பொறுப்பும் கிச்சா என்ற கிருஷ்ணகுமாரிடம்தான் உள்ளது. நான் வரும்வரை தாலிகட்டுவதற்காக காத்திருந்தவன் (சுமார் 30 வினாடிகள்).

    பெரியப்பா நாடகத்தின்மூலம் பிரபலமானவன். தன் உழைப்பாலும் மனைவியின் உந்துதலாலும் சொந்த கார், சொந்த பிசினஸ் என்று வளர்ந்துள்ளவன்.

    நாடகப் பிரியாவின் அடுத்த தலைமுறை என்று சொல்லப்பட்டாலும் எனக்கு அப்பா வேஷம் போடச் சொன்னாலும் முகம் சுளிக்காமல் போடக் கூடியவன்.

    அதேபோல பம்பாயில் சொந்த நாடகக்குழு அமைத்து நடித்துக் கொண்டிருந்த திரு. T.A. குமார் இன்று என் நாடகக் குழுவின் முக்கிய நிர்வாகி. ஒரு சமயம் எங்களின் இரண்டாவது கதாநாயகி ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டு நாடகத்துக்கு வர இயலாத நிலையில் பத்து நிமிட இடைவெளியில் அந்தப் பெண் வேடத்தை மிகச் சிறப்பாகச் செய்து நாடகப் பிரியாவின் மானத்தை காப்பாற்றியவன். பல தொழில் வித்தகன். நல்ல உழைப்பாளி. நாடகப்பிரியாவின் நிரந்தர அவசர கால நடிகன். கிச்சா, குமார் இருவருக்கும் இந்தப் புத்தகத்தை என் அன்புக் காணிக்கையாக்குகின்றேன்.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 10A

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    காட்சி - 15

    காட்சி - 16

    காட்சி - 17

    காட்சி - 18

    காட்சி -

    Enjoying the preview?
    Page 1 of 1