Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaamirukka Bayam Yen?
Yaamirukka Bayam Yen?
Yaamirukka Bayam Yen?
Ebook99 pages35 minutes

Yaamirukka Bayam Yen?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறியவர்கள் செய்யும் செயல்களை பெரியவர்கள் செய்வதால் ஏற்படும் விளைவுகளே இந்த நாடகம். உபேந்திரா தன் அண்ணன் மகன் வெற்றிக்காக பெண் பார்க்க செல்லுமிடத்தில் கிருஷ்ணவேணியின் அக்கா அபிராமியைப் பார்த்து காதல் வசப்படுகிறார். சிறியவர்களை சேர்த்து வைப்பதற்கு பதில் பெரியவர்கள் கல்யாணம் செய்து கொண்டு வருகின்றனர். சைட் சாந்தி, டபுள் டெக்கர் தாமோதரன் மேலும் குழப்பத்தை உண்டாக்குகின்றனர். உபேந்திராவின் சந்தேக புத்தியால் அவர் அபிராமியை பிரிய பெரியவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் வெற்றி - கிருஷ்ணவேணி இணைகின்றனர்.

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580148907556
Yaamirukka Bayam Yen?

Read more from S.Ve. Shekher

Related to Yaamirukka Bayam Yen?

Related ebooks

Related categories

Reviews for Yaamirukka Bayam Yen?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaamirukka Bayam Yen? - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    யாமிருக்க பயம் ஏன்?

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Yaamirukka Bayam Yen?

    வசனம்

    வெங்கட்

    கதை, நாடகமாக்கம், டைரக்ஷன் & தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி 1

    காட்சி 2

    காட்சி 3

    காட்சி 4

    காட்சி 5

    காட்சி 6

    காட்சி 7

    காட்சி 7ஏ

    காட்சி 8

    காட்சி 9

    காட்சி 10

    காட்சி 11

    காட்சி 12

    காட்சி 13

    காட்சி 14

    காட்சி 15

    காட்சி 16

    காட்சி 17

    காட்சி 18

    காட்சி 19

    காட்சி 20

    26.9.1992 அன்று 3000 - ஆவது நாடக விழாவில்

    தமிழக முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் தலைமை உரையிலிருந்து

    தமிழ் நாடக உலகில் தனது சிறந்த நகைச்சுவை நாடகங்களின் மூலம், தனக்கென தனி முத்திரையை பதித்து அனைவருக்கும் அறிமுகமான நல்ல கலைஞர் எஸ்.வி. சேகர். கடந்த 18 ஆண்டுகளாக நாடகப்பிரியா என்னும் நாடக குழுவை வெற்றிகரமாக நடத்தியதோடு, 3000-வது முறையாக தன்னுடைய குழுவினரோடு நாடகங்களை நடத்தும் சாதனையை பாராட்டும் வகையில் நடத்தப்படும் இந்த இனிய விழாவில் கலந்துகொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அவரது ‘பெரிய தம்பி’ என்னும் நாடகத்தை கண்டுகளிக்கும் வாய்ப்பையும் அளித்துள்ளமைக்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், நவாப் ராஜமாணிக்கம், டி.கே.எஸ். சகோதரர்கள் மற்றும் நாடக காவலர் ஆர்.எஸ். மனோகர் போன்ற அறிஞர்கள் நாடக கலையின் வளர்ச்சிக்காக அருந்தொண்டாற்றி இருக்கிறார்கள் என்பது உண்மை ஆகும்.

    அந்த வகையில் இன்றைய கால கட்டத்தில், நகைச்சுவை நாடகங்களை படைப்பதையே தனது லட்சியமாக கொண்டு, அந்த முயற்சியில் மகத்தான வெற்றி பெற்ற நாடகங்களை நடத்தி வருபவர்தான் எஸ்.வி. சேகர். தற்போது நகைச்சுவை நாடகங்கள் என்றால், அது எஸ்.வி. சேகருடைய நாடகங்கள்தான் என்ற ஒரு சாதனையை படைத்து இருக்கிறார் சகோதரர் எஸ்.வி. சேகர்.

    "A sence of timing and the ability to deliver the punch lines effectively and the

    ability to create ripples of laughter through appropriate bodily gestures, are the important

    assets of comedy Artist" என்று கூறுவார்கள். ஒரு நகைச்சுவை நடிகருக்கு உரித்தான அத்தனை அம்சங்களும் அமையப்பெற்ற சிறந்த நடிகர் நமது எஸ்.வி. சேகர் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.

    ரசிகர்களை சிரிக்க வைப்பதையே தன் லட்சியமாக கொண்டு திகழும் எஸ்.வி. சேகர் ஒரு நாடகக்குழுவைத் தொடர்ந்து நடத்தி வருவதோடு, திரை உலகிலும் அறிமுகமாகி இதுவரை 78 திரைப் படங்களிலும் நடித்து இருக்கிறார். இவரது நாடகங்கள் தொலைக்காட்சியிலும், தொடர் நாடகங்களாக ஒளிபரப்பப்பட்டு மக்கள் மனதை கவர்ந்து இருக்கின்றன என்பதெல்லாம் நமக்குத் தெரிந்த செய்திதான். ஆனால் இவரது நாடகக்குழு பல்வேறு சமுதாய பணிகளையும் ஆற்றி இருக்கிறது என்று அறியும்போது மிகுந்த மகிழ்ச்சியை எனக்கு ஏற்படுத்துகிறது.

    அரிமா சங்கம், சுழற்சங்கம் போன்ற சமூக சேவை நிறுவனங்களின் நிதிக்காக, இவர்களது குழு நாடகங்களை நடத்தியதோடு, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, சீருடை வழங்குதல் போன்ற அரும் பணிகளையும் ஆற்றி இருக்கிறது. இந்த வகையில் கண்தானம், ரத்ததானம் ஆகியவற்றை பற்றி ‘நம் குடும்பம்’ என்ற தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சி ஒன்றையும் இவர்கள் படைத்திருக்கிறார்கள்.

    இத்தனை பெருமைகளையும் பெற்ற எஸ்.வி. சேகருக்கும். அவரது நாடகக்குழுவை சேர்ந்த நடிகர்கள், நடிகையர்களுக்கும், மற்றவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எஸ்.வி. சேகர் இங்கே பேசும்போது இரண்டு கோரிக்கைகளை சொன்னார். நாடக்குழு ரெயிலில் பயணம் செய்யும் போது சலுகை கட்டணம் வழங்கப்படுவது போல, அரசாங்க பஸ்களில் பயணம் செய்ய சலுகை கட்டணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது மிகவும் நியாயமான கோரிக்கை. அதிகாரிகளுடன் கலந்து பேசி பரிசீலித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த கோரிக்கை சென்னை கலைவாணர் அரங்கில் நாடகங்கள் நடத்த சலுகை கட்டணம் வழங்க வேண்டும் என்பது. நாடகக் கலை அழிந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவள் நான். அந்த வகையில் இதற்கு விரைவில் ஆவன செய்யப்படும். இன்னும் சொல்லப்போனால் உடனடியாக செய்யப்படும் என்று

    Enjoying the preview?
    Page 1 of 1