Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thathu Pillai
Thathu Pillai
Thathu Pillai
Ebook108 pages38 minutes

Thathu Pillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமுதாயத்தில் செல்வாக்கு படைத்த செட்டப் சித்ராதேவியின் தம்பி ராஜா, சித்ராதேவியின் மகள் கற்புக்கரசி, அரசியல்வாதி அறிவுடைநம்பி, நடிகர் அழகு சுந்தரம் தங்களுடைய காரியங்களை நிறைவேற்ற சாமி சிக்கலானந்தாவின் ஆசிரமத்திற்கு வந்து யோசனை பெறுகின்றனர். சுவாமி சிக்கலானந்தா ராஜாவை கொண்டு கற்புக்கரசியை மணக்க அறிவுடைநம்பியையும் அழகுசுந்தரத்தையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கிறார். இதனிடையே ஆசிரமத்தில் பணிபுரியும் காவ்யாவும் கற்புக்கரசியும் ராஜாவுக்கு தெரியாமல் ராஜாவை காதலிக்கின்றனர் சித்ரா. ராஜாவை பிள்ளையாக தத்து எடுத்து அவர்கள் திருமணத்தைத் தடுக்க நினைக்கிறாள். இது ராஜாவுக்கு தெரியவர சிக்கலானந்தா ஒரு போலி சாமியார் என போலீசுக்கு நிரூபிக்கிறான். இறுதியில் ராஜா கற்பு திருமணம் நடைபெறுகிறது.

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580148907554
Thathu Pillai

Read more from S.Ve. Shekher

Related to Thathu Pillai

Related ebooks

Related categories

Reviews for Thathu Pillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thathu Pillai - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    தத்துப் பிள்ளை

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Thathu Pillai

    வசனம்

    வெங்கட்

    கதை, நாடகமாக்கம், இயக்கம், தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி 1

    காட்சி 2

    காட்சி 3

    காட்சி 4

    காட்சி 5

    காட்சி 6

    காட்சி 7

    காட்சி 8

    காட்சி 9

    காட்சி 10

    காட்சி 11

    காட்சி 12

    காட்சி 13

    காட்சி 14

    காட்சி 16

    காட்சி 17

    காட்சி 18

    காட்சி 18A

    காட்சி 19

    காட்சி 20

    காட்சி 21

    வலிமையுள்ளதே எஞ்சும்...

    இது அசைக்க முடியாத, அழிக்க முடியாத வலிமையான ஒரு வாசகம்.

    கலைகள் விஞ்ஞான சாதனத்தின் மீது ஏறி, சவாரி செய்து, மக்களிடையே இடைவிடாது வலம்வரும், தெருக்கூத்தின் பரிணாம வளர்ச்சிதான் சினிமா. ஆனால் சினிமாவைக் காட்டிலும், இந்தச் சின்னத்திரை மக்களை வசீகரித்து வருகிறது.

    சின்னத்திரை சினிமாவின் தேரில் ஏறி, தம்மை விளம்பரப்படுத்திக் கொள்கிறது. இவை இரண்டும் சேர்ந்து தமிழ் நாடகத்தின் முழங்கால்களை முறித்தன.

    தெருக்கூத்துக்கு இருக்கிற வரவேற்புகூட, தமிழ் நாடகத்திற்கு இல்லை. இது காலத்தின் கோலம். ஒன்றின் அழிவில் மற்றொன்று வளரும் பரிணாமவிதி.

    ஆனால், விதி என்று ஒன்றிருப்பின், விதிவிலக்கு என்பதும் உண்டு.

    கால்கள் முறிந்த தமிழ் நாடகம் நகைச்சுவை சிம்மாசனத்தில் போய் உட்கார்ந்து கொண்டது.

    உட்கார வைத்தவர் எஸ்.வி. சேகர். இதை எந்த கர்ஜனையும் இல்லாமல், நான் செய்து காட்டுகிறேன் என்று சவால்விடாமல், தமிழ் நாடகத்தைக் காப்பாற்றுகிறேன். அதற்காகவே அவதார மெடுத்திருக்கிறேன் என்று முழக்கமிடாமல், தமிழர்களுக்கு ரசனையே இல்லை என்று புலம்பாமல், வங்காளத்தைப் பார், மராட்டாவைப் பார், கன்னடத்தைப் பார் என்று திசை காட்டாமல் நாடகக்கலையில் தனக்கு என்ன தெரியுமோ, அதை முழுபலத்துடன் பிரயோகப்படுத்தி தமிழர்களுக்கு நடுவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

    மறுபடியும் எனக்கு வலிமையுள்ளது எஞ்சும் என்ற வார்த்தைதான் ஞாபகம் வருகிறது. இன்றைக்கும் அவர் நாடகத்திற்கு நல்ல கூட்டம் வருகிறது. இன்றைக்கும் ஜனங்கள் கைதட்டி, ஆரவாரமாய் சிரிக்கிறார்கள்,

    எஸ்.வி. சேகரின் வலிமை வாழ்க்கையின் நடப்புகள் பற்றி, அவர் செய்யும் விமர்சனத்தில் இருக்கிறது. இது எளிதல்ல இதைச் செய்ய அசாத்திய தைரியம் வேண்டும். பல பேரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தன் நாடகத்திற்கு இடைஞ்சல் செய்யும், தன் நாடக இமேஜுக்கு எதிராக இருக்கும் பாத்திரங்களை செய்யும்படி சினிமாவுலகம் அவரை கைதட்டி அழைத்தாலும், அதிக காசு என்று ஆசை காட்டினாலும் எஸ்.வி. சேகர் அதை ஏற்பதில்லை இதுவும் அவர் வலிமை,

    எஸ்.வி. சேகரின் இன்னொரு வலிமை அவர் குடும்பம், குறிப்பாய் எஸ்.வி. சேகருடைய தகப்பனார் திரு. வெங்கட்ராமன், சேகருக்கு பெரிய பலம்.

    தனக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட வலிமையும், தானாய் வளர்த்துக் கொண்ட வலிமையுமாய் எஸ்.வி. சேகர் உயர்ந்து நிற்கிறார்.

    எஸ்.வி. சேகர் குழுவோடும், குடும்பத்தோடும் நெடுங்காலம் நலமாய் நிலைத்து வாழ, என் சத்குருநாதன் யோகி ராம் சுரத்குமார் அவர்களை மனமார வேண்டுகிறேன்.

    குறை சொல்பவர்களையெல்லாம் மீறி. அவர் வளர்ந்து கொண்டே வருவதை என் சககாலத்துக் கலைஞன் எனது நண்பன் என்ற முறையில் சந்தோஷப்படுகிறேன். எஸ்.வி. சேகரின் வெற்றி வியப்பேயில்லை. ஏனெனில் வலிமையுள்ளதே எஞ்சும்....

    மீண்டும் பிரியங்களுடன்

    பாலகுமாரன்.

    சமர்ப்பணம்

    என் மகள் அனுராதா சேகர் பாடுவதை கேட்பவர்கள் என்னை பாராட்டும் போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியாது. காரணம் எனக்கும் சங்கீதத்திற்கும் நம்நாட்டிற்கும் இந்திக்கும் உள்ள தூரம். ஆனால் அனுவோ என் மகன் அஷ்வின் சேகரோ பாடுவதற்கு காரணம் என் மனைவி இசைக் குடும்பத்தின் வழி வந்ததால்தான். இன்று பலர் தான் வாழும் காலத்திற்குள்ளாகவே புகழையும் அடைந்து அதை இழந்தும் விடுகிறார்கள். ஆனால் சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு இன்றும் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் திரைப்பட பாடல்கள் பிரபலமாயிருக்கக் காரணமாயிருந்த பிரபல இசையமைப்பார் ஜி. ராமநாதன் அவர்களின் மகள் வயிற்றுப் பேத்தி என் மனைவி உமா கலை உணர்வு ரத்தத்தில் கலந்தது. என்னைச் சந்திக்கும் ரசிகர்களில் பலர். உங்க மாமியார் சாய்தேவிதான் என் பொண்ணுக்கு வீணை கத்துக் கொடுத்தாங்க அப்படீம்பாங்க. இன்றும் சிலர் மாமனார் சங்கரன் கரூர் வைசியா பேங்குல இருந்த போது நிறைய கடன் உதவிகள் செய்து இன்னைக்கு நான் ஒரு நல்ல நிலையில் இருக்கக் காரணம்னு சொல்வாங்க. மிக நல்ல புகழ் பெற்ற நல்லவர் குடும்பத்தில் பெண் எடுத்ததால் எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அதிகமான பல பாராட்டுக்கள் என் மனைவி உமாவிற்குத்தான் சேர வேண்டும். அப்படிப்பட்ட கலைக் குடும்பத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் திரு. ஜி. ராமநாதன், மனைவி ஜெயா ராமநாதன், திரு. சங்கரன், சாயி

    Enjoying the preview?
    Page 1 of 1