Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ezhu Maathangal Ezhu Naadugal
Ezhu Maathangal Ezhu Naadugal
Ezhu Maathangal Ezhu Naadugal
Ebook139 pages56 minutes

Ezhu Maathangal Ezhu Naadugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்று நாடக உலகிலும் திரைப்பட உலகிலும் தனக்கென ஒரு பாணியைக் கடைப்பிடித்து தன்னிகரில்லாதவராய் விளங்கி வருபவர் திரு. எஸ்.வி. சேகர் அவர்கள். நகைச்சுவை மேதை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் நம்மை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்தார். அவர் வழியில் இன்று எஸ்.வி. சேகர் அவர்களும் சிந்தனையைத் தூண்டும் சிரிப்பைத் தருகிறார். நீங்கள் காரிலோ, பஸ்ஸிலோ பிரயாணம் செய்ய நேரிட்டால், மறக்காமல் சேகரின் புத்தகங்களையும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். பயணக் களைப்பே தெரியாது; பொழுது போவதே தெரியாது. சிரித்துக் கொண்டே இருப்பீர்கள்.

Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580148907595
Ezhu Maathangal Ezhu Naadugal

Read more from S.Ve. Shekher

Related to Ezhu Maathangal Ezhu Naadugal

Related ebooks

Related categories

Reviews for Ezhu Maathangal Ezhu Naadugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ezhu Maathangal Ezhu Naadugal - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    ஏழு மாதங்கள் ஏழு நாடுகள்!

    Ezhu Maathangal Ezhu Naadugal

    Author:

    எஸ்.வி. சேகர்

    S.Ve. Shekher

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    எஸ்.வி. சேகரின் பிற புத்தகங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பான முன்னுரை எழுதியவர்கள் (அல்லது அவரைப் பற்றி பேசியவர்கள்) எல்லாம் மிக மிகப் பிரபலமானவர்கள். அதேபோல இந்தப் பயணக்கட்டுரை நூலுக்கு யாருடைய முன்னுரையைப் போடலாம் என்று யோசித்து யோசித்து சோர்ந்து போய்விட்டோம். ஏனென்றால் பெரும்பாலான பிரபலங்களின் முன்னுரை வந்துவிட்டதே! மீண்டும் யோசனை! பிறந்தது ஐடியா! நாமே எழுதிவிட்டால் என்ன? என்று தோன்றியது. அவருடைய 32 புத்தகங்களையும் பல முறை படித்துவிட்டதால், இந்தத் தகுதி நமக்கு வந்துவிட்டதாக ஒரு எண்ணம். நான் சேகரிடம் இதைக் கூறவும் இல்லை; அவர் என்னை எழுதச் சொல்லவும் இல்லை. முழுக்க முழுக்க, நமது தலையிலேயே நாமே அட்சதை போட்டுக் கொள்வது போலத்தான். மீண்டும் சொல்கிறேன். ஒரு பதிப்பாளன் என்பதைவிட, ஒரு வாசகன் என்ற கோணத்திலேயே இதை எழுதுகிறேன்.

    இந்தப் புத்தகங்களை போட ஆரம்பித்ததிலிருந்து பல தடவைகள் நான் சேகரை சந்தித்தது உண்டு. போனிலோ கணக்கில் அடங்காத தடவைகளும் பேசியது உண்டு. அவர் தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோதும் பேசியது உண்டு. அவர் அரசியல் கட்சியில் சேர்ந்த பிறகும் பேசிக்கொண்டிருப்பது உண்டு. இவ்வளவையும் எதற்காக இப்படி நீட்டி முழக்கிச் சொல்கிறேன் என்றால், நான் முதல் முறை சேகரிடம் பேசிய போது எப்படி இயல்பாகப் பழகினாரோ, அதே போலத்தான் இன்றளவும் பழகிக் கொண்டிருக்கிறார். அவரிடம் அன்பு இருக்கும்; ஆனால் அனாவசியமான பணிவு இருக்காது. பண்பு இருக்கும்; ஆனால் படாடோபம் இருக்காது. அவரது பேச்சிலும் செயலிலும் நேர்மை இருக்கும்; ஆனால் அது வெறும் உபசார வார்த்தையாக இருக்காது. அவரிடம் உதவும் குணம் மிகுந்து இருக்கும்; ஆனால் அதில் கண்டிப்பும் கலந்து இருக்கும். மொத்தத்தில் இவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். யாரையும் அனாவசியமாகக் குறை கூற மாட்டார். இவருக்குக் கோபம் வந்தாலும், முகம் மட்டும் சிரித்துக் கொண்டே இருக்கும். இவரது நாடகங்களைக் குறித்து நாம் சொல்வதைவிட, நாடக, சினிமா பிரபலங்களே மற்ற நூல்களில் முன்னுரை மூலம் தெரிவித்து விட்டார்கள். நீங்கள் காரிலோ, பஸ்ஸிலோ பிரயாணம் செய்ய நேரிட்டால், மறக்காமல் சேகரின் புத்தகங்களையும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். பயணக் களைப்பே தெரியாது; பொழுது போவதே தெரியாது. சிரித்துக் கொண்டே இருப்பீர்கள். இவருடைய நாடகங்களையும் குறை கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்படி! ‘இவை வெறும் சிரிப்புத் தோரணங்கள்’ என்று. சேகரும் சரி, இதைப் பதிப்பித்த நாங்களும் சரி, வாசகர்களை சிரிக்க வைக்கத்தான் இந்த நூல்களெல்லாம் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறோம். சேகருக்கு சமயோசித அறிவு மிகமிக அதிகம். ஆனால் அவருடைய பேச்சுக்கள் பிறர் மனத்தை புண்படுத்தாது.

    சேகர் இதுபோல இன்னும் பல சிரிப்பு நாடகங்களைப் படைத்து, தமிழர்கள் வாழும் உலகின் அனைத்து பாகங்களுக்கும் சென்று, தமிழர்களை மகிழ்விக்க நாம் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். நன்றி.

    - ‘அல்லயன்ஸ்’ ஸ்ரீநிவாஸன்

    டாக்டர் எஸ்.வி. சேகர்

    வாய்விட்டுச் சிரித்தால் - நோய் விட்டுப் போகும் என்பார்கள். ஆகவே - நம்மை சிரிக்க வைப்பவரை ஒரு டாக்டர் என்று சொல்லலாம். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பதுகூட ஒரு அழகுதான் என்பார்கள். ஆகவே, நம்மை சிரிக்க வைப்பவரை ஒரு அழகுக்கலை நிபுணர் என்று சொல்லலாம். நகைச்சுவைப் பேச்சு நம் கவலையைப் போக்கிவிடும் என்பார்கள். ஆகவே, நம்மைச் சிரிக்க வைப்பவரை கவலையைத் தீர்க்கும் சித்தர்கள் என்று சொல்லலாம்.

    ஒருவரை தன்னை மறந்து ஒரே இடத்தில் உட்கார வைத்து அவர்கள் சொற்படி ஆட்டுவிப்பதை மெஸ்மரிச வித்தை என்பார்கள். இரண்டு மணி நேரம் நம்மை ஒரே இடத்தில் உட்கார வைத்து நம் அலுவல், குடும்பம் அனைத்தையும் மறக்க வைத்து அவர்கள் நகைச்சுவை பேச்சில் மயக்கிடும் நகைச்சுவை நடிகர்கள் மெஸ்மரிச வித்தைக்காரர்கள் என்றும் சொல்லலாம்.

    இன்று நாடக உலகிலும் திரைப்பட உலகிலும் தனக்கென ஒரு பாணியைக் கடைப்பிடித்து தன்னிகரில்லாதவராய் விளங்கி வருபவர் என் நண்பர் திரு. எஸ்.வி. சேகர் அவர்கள். நகைச்சுவை மேதை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் நம்மை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்தார். அவர் வழியில் இன்று எஸ்.வி. சேகர் அவர்களும் சிந்தனையைத் தூண்டும் சிரிப்பைத் தருகிறார்.

    கசப்பு மருந்தையும், கேப்ஸ்பூல் வடிவில் கசப்புத் தெரியாமல் தருவதுபோல் இவருடைய நையாண்டிப் பேச்சிலும் ஒரு நாசூக்கு இருக்கும். அரங்கத்தில் சிரிப்பு சப்தத்தை வரவழைப்பது மட்டும் இவர் நோக்கமல்ல. அதனால் சமுதாயத்தில் ஒரு நல்ல மாற்றம் வர வேண்டும் என்பதும் இவர் உள்நோக்கம். நான் இயக்கிய பல நகைச்சுவைப் படங்களின் மாபெரும் வெற்றிக்கு எஸ்.வி. சேகர் அவர்களின் நகைச்சுவை நடிப்பும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை! இவருடைய நகைச்சுவை கோமாளித்தனமானது அல்ல. கோணங்கித்தனமானதும் அல்ல... அது நிஜ வாழ்வின் நிழலானது. யதார்த்தமானது. எல்லோரும் ரசிக்கக்கூடியது. மிகைப்படுத்துவதுதான் நகைச்சுவை என்ற போதிலும், இவர் ஆட்டம் என்றும் கோட்டுக்குள்தான்.

    இவர் நாடகத்தில், சினிமாவில், இரட்டை வேடம் போட்டு நடித்திருக்கிறாரே தவிர இரட்டை அர்த்த வசனம் பேசி நடித்ததில்லை. நடிப்பில் மட்டுமல்ல, வாழ்விலும் கண்ணியம் மிக்கவர். மனித நேயமுள்ள சிறந்த மனிதர். எல்லோரிடமும் நட்பு பாராட்டும் நல்லவர்.

    டி.வி., வீடியோ போன்ற விஞ்ஞான வளர்ச்சியால் - சபா நாடகங்கள் அழிந்து வருகின்றன என்ற கூற்றைப் பொய்யாக்கி, இன்றும் வெற்றிகரமாக மேடையில் பவனிவரும் இந்த மாபெரும் கலைஞனை, பாராட்ட பக்கங்கள் போதாது. இவருடைய ஆற்றலுக்கும், வளர்ச்சிக்கும் பெரிதும் காரணமான இவர் தந்தையார் எஸ். வி. வெங்கட்ராமன் அவர்களுக்கும் நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

    தம் நகைச்சுவைப் பேச்சால் நடிப்பால் நம்மை மனம் விட்டு வாய்விட்டு சிரிக்க வைத்து நம் கவலைகள், நோய்களை எல்லாம் தீர்த்து வைக்கும் திரு. எஸ்.வி. சேகர் அவர்களை ஒரு டாக்டர் என்பதும் பொருத்தமாகத்தான் இருக்கும் என்பதோடு, கடலலை ஓயும் வரை, இவர் எழுப்பும் சிரிப்பலையும் ஓயாமல் இருக்க வேண்டும் என்று இவரையும், நாடகப்பிரியா குழுவினரையும் மனமார வாழ்த்துகிறேன்.

    - இராம. நாராயணன்

    a
    சமர்ப்பணம்

    இந்தியாவில் கம்ப்யூட்டர் பிரபலமாவதற்கு முன்னரே கம்ப்யூட்டர் எழுத்தாளர் என்ற பெயர் பெற்றவர் எழுத்தாளர் திரு. சுஜாதா.

    அறிவு பூர்வமான பல விஞ்ஞானக் கதைகளுக்கு முன்னோடி. ஒவ்வொரு நாடகம் எழுதும் போதும் அந்த வசந்தி பாத்திரத்தை அப்படியே சுட்டு நம்ப கதைக்குள்ள கொண்டு வரலாமா என்று எண்ண வைத்தவர். சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு பிரிண்ட் ஆனாலும் படிப்பதற்கு வாசகர்கள் உள்ளார்கள் என்று எண்ண வைத்தவர். ஒவ்வொரு முறை பெங்களூர் செல்லும் போதும் அவரின் எழுத்துக்களின் ரசிகனாக நாடகத்திற்கு அழைப்பேன். தவறாமல் வருவார். மிகவும் புகழ்பெற்ற அவர் - எஸ்.வி. சேகர் இன்று வியாழக்கிழமை என்றால்கூட ஜனங்கள் சிரிக்கிற அளவிற்கு தயார்படுத்தியுள்ளார் என்று ஒரு முறை ஆனந்த விகடனில் எழுதி பெருமைப்படுத்தியவர். சிறுகதை, தொடர் கதை, நாவல்கள், அறிவியல், விஞ்ஞானம், சினிமா, நாடகம் அனைத்திலும் சாதித்துக் காட்டியவர். இன்றும் பல ஆரம்ப கால எழுத்தாளர்கள் சுஜாதா போல வரவேண்டும் என்ற லட்சியம் கொள்ளும் அளவிற்கு அவருடைய புத்தகங்கள் வரவேற்பை அடைந்துள்ளன. என்னுடைய நாடகங்களும், கேள்வி பதில்களும் முதன்முறையாக புத்தகமாக வெளிவரும்போது சிரஞ்சீவி எழுத்தாளராக விளங்கும் திரு.

    Enjoying the preview?
    Page 1 of 1