Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ninaivellam Kokila
Ninaivellam Kokila
Ninaivellam Kokila
Ebook198 pages1 hour

Ninaivellam Kokila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோகிலாவின் மேல் விசுவநாதனின் மாறாத காதல், இவர்களின் செல்ல மகன் கிட்டப்பா, கோகிலாவின் வாழ்வில் வரும் அடுக்கடுக்கான துன்பங்கள் சோதனைகள். கிட்டப்பா தானும் வளர்ந்து தன் தந்தையின் வியாபாரத்தையும் வளர்க்கும் சுவையான தருணங்கள், இடை வந்த செல்வி, இன்னும் என்னென்ன வாழ்க்கையில் வரும் அத்தனை மாற்றங்களுடன் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத நாவலாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. படித்துப் பாருங்கள்.

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580173810582
Ninaivellam Kokila

Read more from Susri

Related authors

Related to Ninaivellam Kokila

Related ebooks

Reviews for Ninaivellam Kokila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ninaivellam Kokila - Susri

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நினைவெல்லாம் கோகிலா

    Ninaivellam Kokila

    Author:

    சுஶ்ரீ

    Susri

    For more books

    https://www.pustaka.co.in/home/author/susri

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    வாழ்த்துரை

    முனைவர், கலை நன்மணி

    கே.ஜி. ஜவஹர்

    எழுத்தாளர், பத்ரிகையாளர்

    புல்புல் இசைக் கனைஞர்

    விபரீத ஆசை ஒன்று விருதினை வாங்கித்தருமா? தந்திருக்கிறதே ஸ்வாமி, மதுரையைச் சேர்ந்த சுஸ்ரீ என்ற ஸ்ரீனிவாசனுக்கு! அந்த விபரீத ஆசையானது கதை எழுதினால் என்ன? என்ற ஆசைதான்.

    2019 ஆம் வருடத்தின் கடைசி அத்யாயத்தில் ஸ்ரீனிவாசன் தன் எழுத்தின் முதல் அத்தியாயத்தைப் போட்ட நேரம் நல்ல நேரமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆம். எழுத்தின் பரமபத விளையாட்டில் அவர் கண்டது அத்தனையும் ஏணிப் படிகளே. பாம்புகள் எல்லாம் சிதைந்து சின்னாபின்னமாகிப் போயின... அதன் பிறகென்ன வெற்றி மேல் வெற்றிதான். அந்த வெற்றிதான் அவருக்கு ஆசிரியர் ராம்கியைக் கொண்டு அட்டகாசமாக வெளி வந்து கொண்டிருக்கும் ‘ஷமலர்வனம்’ மின்னிதழின் ‘ஷசிறந்த எழுத்தாளர்’ விருதினை ஈட்டித் தந்தது! வேலை நிமித்தம் மும்பை, கர்னாடகா என்று பல இடங்களில் இருந்த போது ஊர் சுற்றிப்பார்க்காமல் படிக்கும் வழக்கத்தை பின் பற்றிய இவர் தன் கதைகளுக்கு கருக்களை உருவாக்கியதும் அங்குதான்... முக நூலிலும் எழுதி வருகிறார். சமீபத்தில், ‘ஜானு’, ‘இரத்தினாவாகிய நான்’ ஆகிய நூல்களை வெளியிடப்பட்டன.

    சுஸ்ரீயின் கதைகளில் கதை அமைப்பும், பாத்திரங்களின் வடிவமைப்பும் மிக நேர்த்தியாக படைக்கப்படுகின்றன, ஆர்ப்பரித்து விழும் அருவியாக இல்லாமல் அமைதியாக தவழும் சிற்றோடைகளாக இருக்கின்றன.

    இந்த ‘நினைவெல்லாம் கோகிலா’ நாவலும் விதி விலக்கில்லை.

    இட்லிக்கடை வைத்திருக்கும் விசுவநாதன், கோகிலா களமாகட்டும், பிறகு கிட்டா, செல்வி களமாகட்டும் மனதை வருடிக் கொண்டே செல்கிறது. அதுவும் விசுவநாதன் கோகிலாவை நினைக்கும் பக்கங்களும்,

    கிட்டா செல்வியை சந்திக்கும் பக்கங்களும் அமர்க்களம்.

    இயல்பான பேச்சுக்கள், நடை உடை பாவனைகள்... அதுவும் அவர்கள் சந்திப்பு காதலாக மாறும் இடம், ‘முதலாளி பெண்ணையே விரும்புகிறோமே’ என அவன் மனச்சாட்சியுடன் பேசும் இடம், அவள் கன்னத்தில் சட்டென முத்தமிடும் இடம் அத்தனையும் கிளாசிக்!

    தைரியமிக்க செல்வி அவனைச் சீண்டும் போது, அவனிடம் ஏற்படும் பயம், படபடப்பு அத்தனையும் அழகாக வெளிக் கொணர்ந்திருக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு வரியும் கைதேர்ந்த சிற்பக் கலைஞனைப் போல் மிக அழகாகவும், எச்சரிக்கையாகவும் செதுக்கப்பட்டுள்ளது.

    சுஸ்ரீயின் இந்த நாவல் நிச்சயம் படிப்பவர் மனதை கொள்ளை கொள்ளும்.

    அவர் இது போல பல நாவல்கள் படைக்க, அவரை மனதார வாழ்த்துகிறேன்.

    கே.ஜி. ஜவஹர்

    சென்னை – 600093

    18-01-2023

    என்னுரை

    அனைவருக்கும் வணக்கம். என்னுடைய முந்தைய நூல்கள், ஜானு சிறுகதை தொகுப்பு, ரத்னாவாகிய நான் குறு நாவல்கள் தொகுப்பு, மாறிவரும் தலைமுறைகள் என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பை தொடர்ந்து, இந்த நினைவெல்லாம் கோகிலா முழு நாவல் வெளியிடப்படுகிறது.

    என்னுடைய மற்ற புத்தகங்களைப் போலவே இதுவும் சுவாரஸ்யமாகவே இருக்கும் என உறுதியளிக்கிறேன்.

    கோகிலாவின் மேல் விசுவநாதனின் மாறாத காதல், இவர்களின் செல்ல மகன் கிட்டப்பா, கோகிலாவின் வாழ்வில் வரும் அடுக்கடுக்கான துன்பங்கள் சோதனைகள். கிட்டப்பா தானும் வளர்ந்து தன் தந்தையின் வியாபாரத்தையும் வளர்க்கும் சுவையான தருணங்கள், இடை வந்த செல்வி, இன்னும் என்னென்ன வாழ்க்கையில் வரும் அத்தனை மாற்றங்களுடன் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத நாவலாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. படித்துப் பாருங்கள்.

    உங்கள் கருத்துகள் நல்லதோ, இல்லை என் எழுத்தை மேம்படுத்த உதவும் சொற்களோ என்னுடன் பகிருங்கள்.

    1

    டேய் கிட்டா என்ன பண்றே அங்கே? இங்கே வந்து இந்த தேங்காயை துருவிக் கொடு பாப்போம். கிட்டாவுக்கு 9 வயசு படிப்பு சரியா வரலைன்னா அவன் என்ன பண்ணுவான்? அப்பா விசுவநாதன் வீட்லயே இட்லிக் கடை.

    மதுரை அழகர் கோவில் பக்கத்துல வீடு ஹோட்டல் எல்லாம் அந்த கூரை வேஞ்ச 400 சதுர அடி வீடுதான்.

    வீட்டுக்கு வெளியே 3 மர பெஞ்சு, வாடிக்கையாளர்கள் உக்காந்து சாப்பிட. வர டூரிஸ்ட் வந்து சாப்பிட்டாதான் வியாபாரம்.

    மெனு ஒரே மாதிரிதான். காலை டிபன் இட்லி, வடை, இட்லி தீந்தா தோசை மட்டும், சாம்பார், தண்ணியா ஒரு தேங்கா சட்னி.

    மத்யானம் 1 மணிக்கு மேல சாதம், சாம்பார் பொரியல், மோர், எலுமிச்ச ஊறுகாய் அவ்வளவுதான்.

    நாம சிம்பிளா எழுதிட்டோம், ஆனா விசுவநாதன் கடைல சாப்பிட மட்டுமே, மதுரைல இருந்து வர சில பேர் இருக்கதான் செஞ்சாங்க. அவ்வளவு கை மணம். ஸ்பெஷலா சனி, ஞாயிறுன்னா ரவா தோசை உண்டு, தக்காளி சட்னி, சாம்பாரோட. அங்கே சாப்பிடறவங்க கைல இருந்து சாம்பார் வாசனை போக ரெண்டு மணி நேரமாவது ஆகும். விசுவநாதன் மனைவி இருந்த வரைக்கும் ரொம்ப ஒத்தாசை. அவளுடைய சாம்பார் மசாலா கலவை ரகசியம் விசுவநாதனுக்கு கூட புலப்படவில்லை.

    இத்தனைக்கும் அவன் சொன்ன அளவு சாமான்தான், அந்த கூடுதல் ருசி எங்கே இருந்து வருது அதுதான் கைமணம் என்பார்களோ. அவளை சைட் அடிக்க வந்த இளசுகளும் நிறைய உண்டு, நல்ல ஆரோக்ய அழகி. இப்ப அவ இல்லை, செத்துப் போனதாவே நினைச்சிக்கோங்களேன்.

    அந்த பம்பாய்கார டூரிஸ்ட் பஸ் வந்ததுதான் வினை. அதுவும் இப்ப அஞ்சு வருஷம் ஆச்சு. 4 வயசு குழந்தையை விட்டுட்டு அப்படி என்ன? என்ன குறை? விசுவநாதன் இளவட்டம்தான், வேற ஒரு கல்யாணம் பண்ண தைரியம் வரலை, போட்டும், இப்ப அதைப் பேசி என்ன பண்ண.

    இப்ப விசுவநாதனுக்கு உதவிக்கு மலை மேல இருந்து ஒரு கிழவி வரா, பாத்திரம் கழுவ, வெங்காயம் காய்கறி நறுக்கி கொடுத்துட்டு போவா.

    சாயானு ஒரு பேரு, சினிமா நடிகை போல கிழவிக்கு, நிஜப் பேரா, ஊர்க்காரங்க கிண்டலா வச்சதா தெரியாது.

    ஆனா கொடுத்ததை சாப்பிட்டுட்டு கொடுக்கற பணத்தை வாங்கிப்பா. விசுவை பிடிக்கும் அவளுக்கு.

    ஏன் பேத்தியை கட்டிக்கடா, ஆனா நீ ஐயமாரு, என் பேத்தி மா நிறம்தான், நீ தக்காளி கணக்கா இருக்கே சரி வராது, ஏதோ சின்ன வயசுல கஷ்டப்படறயேனு கேட்டுட்டேன். ரோசனை பண்ணி சொல்லுடா ராசா.

    விசுவநாதன் சிரிச்சிட்டே ஜாதி நிறம் பெரிசில்லை, நீ தயார்னா சொல்லு உன்னை கட்டிக்கறேன்.

    போடா போக்கத்தவனே, நானே தேஞ்சு மாஞ்சு ஏதோ சொல்லுவாகளே அதை மாரி இன்னைக்கோ நாளைக்கோனு கிடக்கேன், கேலி பண்ரீயளோ.

    கோகிலா ஞாபகம் வரும் அப்பப்ப, பிரியமாதானே இருந்தா.

    விசுவநாதன் 27 வயசுல கல்யாணம் பண்ணின்டான் கோகிலாவை.

    கிளி மாதிரி அவ்வளவு அழகு, அந்த காலத்து பத்மினின்னு ஒரு நடிகை இருப்பாளே அவ மாதிரி இருப்பா, ஏன் அதை விட அழகு. 19 வயசுதான்.

    சோழவந்தான் சிவன் கோவில் குருக்கள் பொண்ணு. யாரோ சொல்லி, குருக்கள், பையனை பாத்து பிடிச்சுப் போய் திருப்பரங்குன்றத்துல கல்யாணம். 7, 8 வயசு வித்யாசம்.

    அப்ப சகஜம்தானே.

    கோகிலாவுக்கும் விசுவநாதனை பிடிச்சிருந்தது. ஏன் பிடிக்காது,

    உழைச்சு உரம் ஏறின கட்டு மஸ்தான தேகம், சந்தன நிறம், சின்னதா குடுமிதான் கொஞ்சம் கோகிக்கு பிடிக்கலை. பிரியமா வச்சிண்டான், அவளும்தான். வேலைலயும் இழுத்துப் போட்டுண்டு செய்வா.

    ராத்திரி கடை ஏழு மணிக்கு சாத்திட்டா, ஒரே கொண்டாட்டம்தான்.

    கோகிலா, ஐய்யே என்ன இப்படி காணாததை கண்ட மாதிரி, பறக்கறேள்.

    ஆமாண்டி என் கோகிச் செல்லம், காணாததைதான் கண்டேன், என்னன்னல்லாம், வச்சிருக்கேடி உனக்குள்ளே.

    போறும் ரொம்பதான் பண்றேள்.

    என்னடி இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே.

    ஐய்யோ நான் அதை சொல்லலை

    இதை சொன்னயா, இதை சொன்னயா இல்லை இதை சொன்னயா?

    கூசறதுன்னா தினம் தினம் என்ன இப்படி வெறி பிடிச்ச மாதிரி, போறுமே.

    ஆமாம் எனக்கு கோகி கிறுக்கு, வாடின்னா ரொம்ப பிகு பண்றயே.

    கண்களில் தன்னிச்சையா வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டான், விசுவநாதன். பாவிப் பொண்ணே மறக்க முடியலையேடி, எல்லாம் கனவா போச்சே.

    கிட்டப்பாவை படிக்க வைக்க முடியலையே என்ற கவலை இருந்தது உண்மை. கிட்டப்பாவுக்கு படிப்புதான் வரலையே தவிர சமையலில் அப்பாவுக்கு சரியான துணை. அவனோட அம்மாவைக் கொண்டிருந்தான்.

    ***

    அந்த சனிக்கிழமை எப்பவும் போல சுறுசறுப்பாய் ஆரம்பித்தது.

    சனி ஞாயிறுல கூட்டம் ஜாஸ்தி வருமே. ரெட்டிப்பு மாவு அரைச்சு வச்சாச்சு. சாயா கிழவி முருங்கை காயும், பரங்கிக் காயும் கொண்டு வந்து சாம்பாருக்கு நறுக்கி வச்சாச்சு. சின்ன வெங்காயம் வேண்டு மட்டும் உரிச்சு வச்சாச்சு. ஆறரை மணிக்குள்ளே இட்லி முத ஈடு எடுத்தாகணும்.

    பக்கத்துலயே சாம்பாருக்கு பாத்திரம் ஏத்தியாச்சு, பருப்பும் வெந்தாச்சு. கிட்டப்பா இப்ப ஆட்டுரல்ல சட்னிக்கு ஆட்டிண்டிருக்கான்.

    விசுவநாதன் அந்த மேஜை மேல இருந்த சின்ன அலாரம் கடிகாரத்தை பாத்தார். ஓ டயமிருக்கே ஏழு மணிக்கு கடை திறந்துடலாம். திறக்கறதுன்னா என்ன அந்த நாலு தென்னை ஓலை தட்டியை எடுத்தா ஆச்சு.

    மெதுவா இட்லி ஆவில வெந்த வாசனை, சாம்பார் வாசனை கோவில் துளசி தீர்த்தம், கற்பூர வாசனையை மீறி அழகர் கோவிலை சுற்றியது.

    முதல் தட்டு இட்லில இருந்து நாலு இட்லி பெருமாளுக்கு நைவேத்யம்.

    7 மணி தட்டி திறந்தது. முத நாலு இட்லி மந்தாரை தையலிலைல வச்சு சாம்பார் சட்னி மேல ஊத்தி எப்பவும் அரசமரத்தடியில் குடியிருக்கும் துரைசாமி பெரியவருக்குதான்.

    விசுவநாதன் கடை வச்ச தினத்தில இருந்து பாக்கறான் அவரை, மரத்தடிதான் அவர் இடம். விசுவநாதன்தான் ஒரு பாயும் பின்னி பெட்ஷீட் (கொஞ்சம் லேசா கிழிஞ்சதுதான்) கருப்பும் சிவப்புமா கொடுத்திருந்தார். ஒரு முழு நீளச் சட்டை ஒண்ணு, அழுக்கு நீலக்கலர்ல. அதேதான் எப்பவும்.

    யாரையும் எதுவும் கேக்க மாட்டார். யார் ஏதாவது பக்கத்துல போய் பேசினாலும் ஒரு சிரிப்புதான் அவர் பதில். ஆனால் அவர் முகத்தில் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கும். கிட்டப்பாதான் அவருக்கு துரைசாமினு பேர் வச்சான்.

    எதுக்கு இந்த துரைசாமி பத்தி இப்ப வந்ததுன்னா, விசுவநாதனுக்கு ஒரு நம்பிக்கை, முதல் போணி அவருக்கு கொடுத்தா அன்றைய தினம் வெற்றிகரமா போகும்.

    மெதுவா நேரம் போனது. அன்று இன்னும் ஒருத்தர் கூட வரல்லை. முதல் ஈடு எடுத்த இட்லி ஆறிக் கொண்டிருந்தது. சூடு ஆறியதால் காற்றில் பரவி இருந்த சாம்பார் மணம் மெதுவாக கரைந்து கொண்டே போச்சு.

    ஏண்டா கிட்டா, என்னடா ஆச்சு இன்னிக்கு? ஒரு ஆளுக்கு கூடவா பசிக்கலை? துரைசாமி ஐய்யா இட்லி சாப்பிட்டாரா. மெதுவாய்

    Enjoying the preview?
    Page 1 of 1