Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalyana Oorvalam Varum
Kalyana Oorvalam Varum
Kalyana Oorvalam Varum
Ebook133 pages48 minutes

Kalyana Oorvalam Varum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த கல்யாண ஊர்வலம் வரும் சிறுகதை தொகுப்புல மொத்தம் 18 சிறுகதைகளை தொகுத்து கொடுத்துள்ளேன். மிக அழகான அட்டைப் படத்தை ஓவியர் ஜெயராஜ் கொடுத்து சிறப்பித்துள்ளார் புஸ்தகா வழங்கும் இந்த அழகிய கதை தொகுப்புக்கு. வெவ்வேறு ருசியில் அனைத்து கதைகளையும் தர முயற்சித்துள்ளேன்.

அவள் பறந்து போனாளே, ரஷ்ய,இஸ்ரேல் போர் உக்ரமாக நடந்த போது எழுதியது.உன் வயசுக்கு “ஆன்மீகத் தேடல்”ஆன்மீகம் எழுத மாட்டயா காதல் கதைகளா எழுதித் தள்றயேனு கேட்ட சிலருக்காக மஸ்தில(கொழுப்பு)எழுதினது. ஃபோனை மேயறப்ப கிடைச்ச ஒரு செய்தி அமெரிக்க ஹோட்டல்கள்ல பழைய சாதம் பாபுலர் ஆகிறது இக்கரைக்கு அக்கரை பச்சை சிறுகதைக்கு வித்து.

இங்கிதம், ஊர் பெருமை, எங்கள் குடும்பம் பெரிசு படிச்சுப் பாருங்க உங்களுக்கு பிடிக்கும்.இதுல “என்றென்றும் காதல்”னு ஒரு சற்றே நீண்ட சிறுகதை மனதைத் தொடும்னு நம்பறேன்.ஒரு கதை “காடராக்ட் ஆபரேஷனும் தன்னுப் பாட்டியும்” சொந்த அனுபவம் நிறைய கற்பனை கலந்து. புஸ்தகத் தலைப்புக்கான கதை “கல்யாண ஊர்வலம் வரும்”புது வருஷ ரெசல்யூஷன்ஸ் எல்லாரும் எடுப்பாங்க இல்லையா, அதை கருவா வச்சு ஜாலியா எழுதின காதல் கதை.

Languageதமிழ்
Release dateMar 2, 2024
ISBN6580173810794
Kalyana Oorvalam Varum

Read more from Susri

Related authors

Related to Kalyana Oorvalam Varum

Related ebooks

Reviews for Kalyana Oorvalam Varum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalyana Oorvalam Varum - Susri

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கல்யாண ஊர்வலம் வரும்

    Kalyana Oorvalam Varum

    Author:

    சுஶ்ரீ

    Susri

    For more books

    https://www.pustaka.co.in/home/author/susri

    பொருளடக்கம்

    1. அவள் பறந்து போனாளே

    2. ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்

    3. ஆன்மீகத் தேடல்

    4. இக்கரைக்கு அக்கரை பச்சை

    5. இங்கிதம்

    6. ஊர் பெருமை

    7. எங்கள் குடும்பம் பெருசு

    8. எனக்கு ஒரு ஆசை

    9. என்றென்றும் காதல்

    10. ஏதோ நினைவுகள்

    11. கல்யாண ஊர்வலம் வரும்...

    12. கல்யாணம்தான் கட்டிக்கிட்டு

    13. காட்ராக்ட் ஆபரேஷனும் தன்னுப் பாட்டியும்

    14. காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்

    15. காத்திருப்பு

    16. சத்தியம்

    17. சிக்கனம்

    18. தொலைஞ்சது யார்

    1. அவள் பறந்து போனாளே

    எப்போதும் போல சத்ரபதி சிவாஜி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சுறுசுறுப்பாய் இருந்தது. ஸ்வப்னாலி தன் இமிக்ரேஷனை

    முடித்துக் கொண்டாள் முதலில், பெரிய செக்இன் லக்கேஜ்

    இரண்டு பெட்டிகளும் பெல்ட்டில் போடப்பட்டு மாஸ்கோ செல்லும் கல்ஃப் ஏர்வேசின் பறந்து விரிந்த வயிற்றுக்குள் நுழைய புறப்பட்டது.

    கையில் சின்ன கேபின் லக்கேஜ் மட்டும்தான் இப்ப. செக்யூரிடி

    செக் அப் வரிசைக்கு போறதுக்கு முன்னால, ஸ்வப்னாலி

    திரும்பிப் பார்த்தாள் விசிட்டர் காலரி பக்கம், ‘ரத்தன் ஷர்மா’

    பளிச் நீலக் கலர் ஷர்ட்டில் நிற்பது தெரிந்தது. இவள்

    திரும்புவதை பார்த்து கையை தூக்கி ஆட்டினான்.

    ஸ்வப்னாலியின் பெற்றோர் புனாவில் இருந்து கூட வரவில்லை, அவளை வழி அனுப்ப. புனால இல்லாத கல்லூரியா ரஷ்யா போய் ஆறு வருஷம் ஏன் படிக்கணும்ன்றது அவங்க வாதம். ஆனா அவங்களுக்கு என்ன தெரியும் இந்தியால மருத்துவக் கல்லூரில சேரறது எவ்வளவு கஷ்டம்னு.

    ரத்தன் அவளோட ஃபிரண்ட் புனால இருந்து வந்திருக்கான்.மெதுவாய் விசிட்டர் காலரி நோக்கி நடந்தாள்.

    ரத்தன் ஆர்வமாய் இவளை எதிர் கொண்டான், என்ன ஸ்வப் எல்லா ஃபார்மாலிடியும் முடிஞ்சதா? இங்கே பாரு சற்றே பக்க வாட்டில் நகர்ந்தான்.

    அவனுக்கு பின்னால், வீல் சேரில் ஸவப்னாலியோட தந்தை,

    முடக்கு வாதம் கொடுக்கும் வேதனையை பொறுத்துக் கொண்டு இங்கு வந்திருக்கிறார் சர்ப்ரைசாக. ரத்தன் கொடுத்த சர்ப்ரைஸ்.

    "ஃபைனல் கால் கல்ப் ஏர்வேஸ் ஃபிளைட் ஃபிரம் மும்பை டு மாஸ்கோ பாசன்ஜர்ஸ் ஃபினிஷ் யுவர் செக்யூரிடி செக், அண்ட் ரஷ் டு

    கேட் நம்பர் 14A.

    கண் கலங்க விடை பெற்றாள் ஸவப்னாலி திரும்ப எப்போது பாக்கப் போறோம் பெற்றோர்களை, நண்பர்களை என்பது தெரியாமல்.

    கிட்டத்தட்ட 300 பேர்களை ஏற்றிக் கொண்டு அந்த விமானம் ரன்வே நம்பர் இரண்டில் இருந்து வேகமாய் ஓடி மேலே எழும்பியது. ஸ்வப்னாலி தன் ஜன்னல் சீட்டில் இருந்து கீழே மெதுவாக மறையும் வானுயர்ந்த கட்டிடங்களை, சீறிப் பாயும் அலைகளுடன் அரபிக் கடலை ஒரு துக்கத்துடன் பார்த்தாள்...விமானம் பூமியை மெதுவே இழந்து இழந்து உயரத்தை தொட்டது. பின்பு அமைதியான மிதக்கும் வான் பறவை போல விரைந்தது.

    உக்ரைன் ஜனாதிபதி ‘வோலோடிமிர் ஜெலன்ஸ்கி’தன் ராணுவத் தலைவர்களை அவசரக் கூட்டத்தில் சந்தித்தார். போரில் ஏற்பட்ட நஷ்டங்களை, உயிரிழப்பை, ஆயுத நஷ்டங்களை எதிர் நடவடிக்கைகளை விவாதித்தனர்.

    தலைநகரின் முக்கிய ஹாஸ்பிடல் தரைமட்டமாக்கப் பட்டதை கேட்டு பதை பதைத்த பிரசிடெண்ட் அந்த நேரத்தில்தான் அவசரப் பட்டு முடிவெடுத்தார்.இந்த கணமே நம் வான் எல்லையில் வரும் வேற்று விமானங்களை தாக்கி இறக்குங்கள்.

    குபியான்ஸ்க், இஸியம் நகர்களின் நடுவே ஊர்ந்து மாஸ்கோ நோக்கி அமைதியாக மிதந்து கொண்டிருந்த அந்த பெரிய விமானம் அந்த திடீர் தாக்குதலை எதிர் பார்க்கவில்லை. ஒரு உலுக்கல், டப் என ஒரு சிறு தீப் பிழம்பு சட்டென உயரம் இழந்து தலைகீழாய் பாய்ந்து தரை தொடு முன் மிஞ்சியது மிகக் கொஞ்சம்

    2. ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்

    அம்மா சொல்லுவ ஆடிக் காத்துல அம்மியும் பறக்கும்னு.அப்ப

    நான் சின்னப் பையன், போம்மா போ நான் செஞ்ச இந்த பட்டமே பறக்க மாட்டேன்னுது, அம்மி பறக்குமாம்

    அம்மா சிரிச்சிண்டே சொல்லுவா "இப்ப உனக்கு புரியாதுடா,

    நேரம் வந்தா புரியும்."

    இப்ப அம்மா இல்லை, நான் கோயமுத்தூர்ல கவர்மென்ட் காலேஜ்ல புரொபசரா இருக்கேன்,ரெண்டு வருஷமா. இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை, பண்ணக் கூடாதுனு இல்லை என்னமோ

    நேரம் வரலை.காந்திபுரத்துல சொந்தமா ஒரு ஃபிளாட்,

    சாப்பாடு ஒரு மாமி அவ வீட்லயே பண்ணி ரெண்டு வேளையும் அனுப்பிடறா, அப்பறம் என்ன 28 வயசாச்சு, என் மாமாதான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோனு வற்புறுத்தறார். வேறு யாரை

    அவர் பொண்ணு சுசிலாவைதான்.

    சுசிலா நல்ல பொண்ணுதான் ஆனா எனக்கென்னமோ தயக்கம்.

    இந்த வருஷம் ஆடி மாசம், முதல் திங்கள் அன்னிக்கு காலேஜ்

    என் புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்ல காலேஜ் கிளம்பினேன்.

    அப்படி ஒரு காத்து, ஸ்கூட்டரை ஒரு பக்கமா இழுத்தது. அம்மாவோட பழமொழி ஞாபகம் வந்தது சிரிச்சிண்டேன்.

    அம்மா நீ சொன்ன மாதிரி அம்மி பறக்காட்டாலும்

    என் ஸ்கூட்டர் பறக்கறதம்மா.

    காற்றின் இழுவை தாங்காம ஒரு பஸ் ஸ்டாப் பக்கமா ஒதுங்கி நின்னேன்.அங்கே கூட்டம் இல்லை ஒரே ஒரு பொண்ணு

    பொம்மை மாதிரி.,சாரல்,காத்துல வெட வெடனு நடுங்கிண்டு நின்னா.

    பயங்கர விண்ட் இல்லைன்னு சொல்லிண்டே அந்த பெண்ணை பாத்தேன்.

    "ஆமாம் சார் பயமா இருக்கு, பஸ் கண்ல காணோம், ரிகார்ட்ஸ்

    சப்மிட் பண்ண கடேசி நாள்"

    என் காலேஜ்ல படிக்கற பொண்தான். பேரு மாயா. பி.எஸ்.சி

    ஃபைனல் இயர் படிக்கறா.

    "டோண்ட் ஒரி மிஸ். மாயா காத்து கொஞ்சம் கம்மி ஆகட்டும்

    நானே டிராப் பண்றேன்."

    அப்பறம் என்ன கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடுச்சு, காதல்ல விழுந்துட்டோம்.நானும் என் பொம்மியும் (என்னோட மாயாவுக்கு

    நான் வச்ச செல்லப் பேரு பொம்மி)

    கோயமுத்தூர் பூரா சுத்தினோம், ஒரு தடவை ஊட்டி, பல தடவை

    பிளாக் தண்டர் ரிசார்ட், மாதங்கள் ஓடித்து வேகமாய்.

    மாதங்கள் உருண்டோட கேக்கவா வேணும்.போன ஆடில நாங்க

    சேந்தோம் இந்த ஆடி வந்தாச்சு. மாயா டிகிரி முடிச்சாச்சு கம்ப்யூட்டர்

    மேல் படிப்பு யு.எஸ்.ல பண்ண ஆசைப்படறா.

    ஹோட்டல்அன்னபூர்ணாலா அன்னிக்கு டின்னருக்கு கூப்பிட்டிருக்கேன்

    என் பொம்மியை. எங்க ஃப்யூச்சரை இன்னிக்கு முடிவு பண்ணிடணும்னு. 7.30 மணிக்கு வந்தா. என்னை பேர் சொல்லி கூப்பிட மாட்டா எப்பவும்,

    டியர் இல்லை டார்லிங்தான்.

    இன்னிக்கு வந்தவுடனே, ஶ்ரீதர், என் யு.எஸ் கனவு பலிக்கப் போறது

    ஓ குட், என்னாச்சு

    நான் சொல்லி இருக்கேன் இல்லை என் அத்தை பையன் மங்கேஷ் யு.எஸ் ல செட்டிலாயிருக்கான்னு

    ஆமாம், அவன் ஸ்பான்சர் பண்றானா உன் படிப்பை

    "இல்லை இங்கே வந்திருக்கான், என் அப்பா கிட்டே மாயாவை

    எனக்கு உடனே கல்யாணம் பண்ணிக் கொடுங்க உடனே

    யு.எஸ் கூட்டிட்டு போறேன்னான்.அப்பா சரின்னு சொல்லிட்டார்.

    என்னை பேசவே விடலை. 10 நாள்ல கல்யாணம்

    இந்த மாசமே யு.எஸ் போறோம். உன்

    Enjoying the preview?
    Page 1 of 1