Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sundarar
Sundarar
Sundarar
Ebook102 pages32 minutes

Sundarar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுந்தரர் எனப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். சுந்தரர் தோன்றிய வரலாறு, சிவபெருமானின் அருட்பார்வையால் செய்த சிவத்தொண்டு போன்றவற்றை அழகான முறையில் தொகுத்து, வாசிப்பவர்கள் அனைவரையும் ரசிக்கத் தூண்டும் வகையில் ஒரு முழுமையான வரலாற்று நூல். முத்தாய்ப்பாக பத்திரசத்தில் இன்புற்றுருக்கும் மெய்யன்பார்கள் அனைவரும் படித்து பேரின்பம் பெறுவோம். வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580173310593
Sundarar

Related to Sundarar

Related ebooks

Reviews for Sundarar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sundarar - Usha Sankaranarayanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சுந்தரர்

    (சங்கரன் தோழன்)

    Sundarar

    Author:

    உஷா சங்கரநாராயணன்

    Usha Sankaranarayanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/usha-sankaranarayanan

    பொருளடக்கம்

    முன்னுரை

    வாழ்த்துரை

    1 அவதாரம்

    2 நரசிங்கர் பெற்ற பேறு

    3 கல்யாண வைபோகமே

    4 திருவடி தீக்ஷை

    5 தோழமை ப்ரகடனம்

    6 ஸ்வாமி போட்ட முடிச்சு

    7 இல்லற தர்மம்

    8 ஸ்வீகார புத்திரிகள்

    9 பொருள் தரும் ஈசன்

    10 பசியாற்றிய அன்னப்பூரணன்

    11 அநிந்ததை சங்கிலியாய்

    12 சத்யம், பக்தி, வினைப்பயன்

    13 ஸ்வாமி போன தூது

    14 கலிக்காமர் கலிதீர்த்த படலம்

    15 அரச நட்பு

    16 சேரமானுடன் யாத்திரை

    17 உருமாறி வந்த ஈசன்

    18 முதலை வயிற்று மதலை

    19 பொன்னடிகள் கண்டு வீடுற்ற பெரும்பேறு

    முன்னுரை

    பெரிய புராணம் என்ற பெருங்கொடையை சேக்கிழார் பெருமான் நமக்கெல்லாம் கொடுக்க மிக முக்கிய காரணமாக இருந்தது சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஈசனருளால் பாடிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி, விநாயகர் அருளால் இயற்றிய திருத்தொண்டத் திருவந்தாதி என்னும் அரிய பாடல்களும்தான்.

    இந்த சிறு நூலில், அடியார்களை நமக்கு அறிமுகப்படுத்திய ஆலாஹல சுந்தரரின் கதையைச் சிறிதளவேனும் சிந்திக்க மனம் தூய்மையாகும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

    பாற்கடலில் தேவர்கள் மந்திரமலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு கடைந்தபோது வந்த பொருட்களில், வாசுகியின் வலி ஆலஹால விஷமாக வெளி வந்தது என்கிறது புராணம். அதை சிவபெருமான், விழுங்க, சுந்தரரைத்தான் சென்று திரட்டிக்கொண்டு வரப் பணித்தார். அதனால்தான் அவருக்குப் பெயர் ஆலாஹல சுந்தரர், மருவி ஆலால சுந்தரர் ஆனார். அந்த விஷத்தை உண்ட நீலகண்டனுக்கு என்ன வலிமையோ அதில் பெரும்பகுதி இவருக்கும் அளித்ததால்தான் அவரால் அதைத் திரட்டவும் முடிந்திருக்க வேண்டும் இல்லையா? அப்பேற்பட்டவரின் வாழ்வும் வாக்கும், காணலாம் இனி...

    வாழ்த்துரை

    "தென்னாடுடைய சிவனே போற்றி!

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"

    - திருவாசகம்

    சுந்தரர் எனப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.

    இவர் வாழ்ந்தது 18 ஆண்டுகள் மட்டுமே என்பது வியப்பான செய்தி.

    நம்மில் பெரும்பாலோர்க்கு தடுத்தாட் கொண்டார் புராணம் மூலமாக ஆலால சுந்தரர் எனப்படும் சுந்தரரை மட்டுமே அறிவோம்.

    யாம் அறிந்த வரையில் அற்புதமான சிவனடியாரான சுந்தரரைப் பற்றி முழுவதுமாக அறிய இந்நூல் உதவுகிறது என்றால், அது மிகையாகாது.

    மிகவும் நேர்த்தியான முறையில் இந்த வரலாற்றுப் புதினத்தை நாம் எல்லோரும் அறியும் வண்ணம் எளிய உரை நடையில் (நேரடியாக உரையாடுவது போல்) எழுதியுள்ளார் மதிப்பிற்குரிய திருமதி. உஷா சங்கரநாராயணன் அவர்கள்.

    சுந்தரர் தோன்றிய வரலாறு, சிவபெருமானின் அருட்பார்வையால் செய்த சிவத்தொண்டு போன்றவற்றை அழகான முறையில் தொகுத்து வரிசையாக படிப்பதற்கு எளிதாக அத்தியாயங்களுக்கு பெயரிட்டு வாசிப்பவர்கள் அனைவரையும் ரசிக்கத் தூண்டும் வகையில் ஒரு முழுமையான வரலாறு படைத்துள்ளார் நூலாசிரியர்.

    அதிலிருந்து ஒரு சில முத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    இந்தப் புதினத்தில் அறியப்படாத பல விஷயங்கள் இருந்தாலும் மாதிரிக்கு சில உதாரணங்கள்.

    1. செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக்கொண்டது;

    2. சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது;

    3. அவிநாசியில் முதலை விழுங்கிய ஐந்து வயதுள்ள பிராமணக் குழந்தையை அம்முதலையின் வாயின்று ஏழு வயதுள்ள வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.

    4. சேரமான் பெருமானை இவர் சந்தித்துத் திரும்பும்போது, அம்மன்னர் பொன், பொருள், மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக்கொண்டு பறித்துக்கொண்டார். சுந்தரர்,

    ‘கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்...’ எனத்தொடங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்

    5. பதினெட்டாம் பிராயத்தில் பக்தியின் உச்சத்தில் இருந்தபோது சிவனடி சேர அடைந்திட, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கேயும் நந்தி பகவான் மூலமாக சிறு சிக்கலை தன் குருவருளால் அதனையும் வெற்றிக் கண்டு கைலாயத்தில் முக்தியடைந்தார்.

    முத்தாய்ப்பாக பக்திரசத்தில் இன்புற்றிருக்கும் மெய்யன்பர்கள் அனைவரும் படித்து பேரின்பத்தில் திகழுமாறு எழுதப்பட்ட காவியம்.

    இந்நூலுக்கு வாழ்த்துரை எழுதுவதற்கு ஏற்பட்ட அனுபவம் அந்த ஈசன் அருளால் அடைந்த பொக்கிஷம்.

    மெய்யன்பன்,

    ஆர்.ஆர். லஷ்மிநரசிம்மன்

    1 அவதாரம்

    கைலாயத்தில் ஒரு நாள் ஸ்வாமியும் அம்பாளும் தனித்து இருக்கும் நேரம்.

    ஸ்வாமியும் அம்பாளும் அன்யோன்யமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அம்பாள் ஸ்வாமியையே விடாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.அவ பார்க்க மாட்டாளா என்று நாமெல்லாம் ஏங்குகிறோம். அவள் பதியைப் பார்த்துவிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1