Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puranangal Pottrum Penmanigal
Puranangal Pottrum Penmanigal
Puranangal Pottrum Penmanigal
Ebook149 pages57 minutes

Puranangal Pottrum Penmanigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆன்மீக பூமியான பாரதத்தில் எண்ணற்ற புராணக் கதைகள் வழங்கிவருகின்றன. அதில் பல பெண்மணிகளின் கதை நிகழ்வுகள் நினைவு கூறத்தக்கவர்களாக விளங்குகின்றார்கள். சிவனால் "அம்மையே" என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார், சாவித்திரி, சீதாதேவி, திரௌபதி என்று நாம் அறிந்த பலருடன், நாம் அறியாத சிலரைப் பற்றியும், சுவைபடவும் எழுதியுள்ளார். அனைவரும் படிக்க வேண்டிய "பக்தி நூலாக" உள்ளது.

Languageதமிழ்
Release dateAug 19, 2023
ISBN6580160609681
Puranangal Pottrum Penmanigal

Read more from Mayooran

Related to Puranangal Pottrum Penmanigal

Related ebooks

Reviews for Puranangal Pottrum Penmanigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puranangal Pottrum Penmanigal - Mayooran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புராணங்கள் போற்றும் பெண்மணிகள்

    Puranangal Pottrum Penmanigal

    Author:

    மாயூரன்

    Mayooran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mayooran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அருந்ததி

    2. அனுசுயா

    3. அகல்யா

    4. ஆண்டாள்

    5. காரைக்கால் அம்மையார்

    6. சாவித்திரி

    7. சீதா

    8. சுகன்யா

    9. தமயந்தி

    10. தாரா

    11. திரெளபதி

    12. மதயந்தி

    13. மண்டோதரி

    14. லோபா முத்திரை

    1. அருந்ததி

    ஆகாயத்தில் ‘சப்தரிஷி மண்டலம்’ என்று ஒரு நட்சத்திரக் கூட்டம் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலர் பார்த்தும் இருக்கலாம். பிருகு, வசிஷ்டர், ஆங்கீரஸர், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிராது ஆகியோர் அந்த ஏழு ரிஷிகள் என்பார்கள். சற்று உற்றுப் பார்த்தால் வசிஷ்டரோடு அவர் அருகிலேயே அவர் மனைவி அருந்ததியும் நட்சத்திரமாகப் பிரகாசிப்பதைப் பார்க்கலாம். இதர ரிஷி பத்னிகளுக்கு இல்லாத தனிச்சிறப்பு அருந்ததிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    திருமணங்கள் முடிந்தபிறகு, புரோகிதர் புதுமணத் தம்பதியரை மணமேடையைவிட்டு வெளியே அழைத்துச் செல்வதைப் பார்த்திருக்கலாம். ஆகாயத்தில் சுட்டிக்காட்டி அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கச் சொல்வார். அருந்ததியைப் பார்த்தாயா? என்று மணமகன் கேட்க, தெரிந்ததோ தெரியவில்லையோ பார்த்ததாக தலையை ஆட்டுவாள் மணப்பெண். இது ஒரு சடங்கு! அருந்ததியைப்போல் மன உறுதி, நேர்மை, கற்புநெறி தவறாமை போன்ற குணங்களோடு இல்வாழ்க்கை அமையவேண்டும் என்பதற்காக இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    ஒரு சமயம் அக்னிதேவன் தன் மனைவி ஸ்வாஹாவிடம் ரிஷி பத்னிகளின் முழு உருவத்தைப் பார்க்க விரும்புவதாகத் தன் இச்சையைத் தெரிவித்தான். உடனே ஸ்வாஹா தானே ஒவ்வொரு ரிஷி பத்னிபோலவும் உருவமெடுத்து அக்னியின் இச்சையைப் பூர்த்தி செய்தாளாம். ஆனால், எவ்வளவு முயன்றும் அவளால் அருந்ததிபோல் உருவம் மாற முடியவில்லையாம்!

    ரிஷி பஞ்சமி என்று ஒரு விரதம். பொதுவாக நடுத்தர வயதைக் கடந்த மங்கையரே இந்த விரதத்தை மேற்கொள்வார்கள். பூஜைக்கு எழுந்தருள வேண்டும் என்ற சப்த ரிஷிகளையும் வேண்டிக்கொண்டு செய்யும்போது ஆவாஹனம் அருந்ததி தேவியையும், அருந்ததி நமஸ்துப்யம் மஹா புண்ய ப்ரவர்த்தினி, பதிவிரதா நாம் ஸர்வாஸாம் தர்மசீல ப்ரவர்த்தினி அருந்ததீம் ஆவாஹயாமி என்று ஆவாஹனம் செய்து ஷோடச உபசாரங்களைச் செய்வது வழக்கம். இங்கேயும் மற்ற ஆறு ரிஷி பத்னிகளுக்கும் இல்லாத முக்கியத்துவம் அருந்ததிக்கு அளிக்கப்படுகிறது.

    அருந்ததி அரச வம்சத்தையோ அல்லது அந்தணர் குலத்தையோ சோந்தவரல்ல. செருப்பு தைக்கும் சக்கிலிய இனத்தைச் சேர்ந்தவர். சிறந்த சிவ பக்தை. அவருடைய தூய்மையான பக்திக்குக் கட்டுப்பட்ட இறைவன் அவளுக்குச் சோதனை ஏற்படும்போதெல்லாம் அவரே முன்வந்து அவளுக்கு உதவியிருக்கிறார். தவ வலிமை நிறைந்த மகரிஷி ஒருவரை மணக்கும் பேறு அவளுக்குக் கிடைக்கும் என ஆசி வழங்கினார் சிவபெருமான்.

    வசிஷ்டர் தவசீலர். பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றவர். ரகு வம்ச அரசர்களுக்கெல்லாம் குருவாக விளங்கியவர். எண்ணத்தாலும், பார்வையாலும்கூட களங்கப்படாத மனம், மெய், மொழி மூன்றிலும் தூய்மையான கற்பிற் சிறந்த பெண்ணையே தாம் மணம் செய்துகொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்தார். தம்மை மணக்க விரும்பும் பெண்ணிடம் மணலை அன்னமாகச் சமைக்க முடியுமா? என்று கேட்பார். மணலைச் சமைப்பதாவது என்று அந்தப் பெண்கள் நழுவி விடுவார்கள். அருந்ததியைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. கயிலையிலிருந்து நான் கொண்டு வந்திருக்கும் மணலை அன்னமாகச் சமைத்துத் தர இயலுமா? என்று அருந்ததியிடம் கேட்டார். தவமுனிவர் கேட்கும்போது மறுக்க முடியுமா? அருந்ததி அந்த மணலை வாங்கி, சிவபெருமானை மனதில் நினைத்து வேண்டி உலையில் இட்டாள். இறைவன் அருளால் மணல் சாதமானது. வசிஷ்டர் அசந்து போனார். மனம் மகிழந்தார். இது எப்படி சாத்தியமாயிற்று அருந்ததி? மந்திர வித்தையாக இருக்கிறதே! என்ன உபாயம் செய்தாய்? என்று கேட்டார்.

    மகரிஷி, உபாயம் நான் ஏதும் அறியாதவள். சிவபெருமானை வேண்டினேன். அவர் அருளால் பிரசாதமாகிவிட்டது என்றாள் அருந்ததி.

    உன்னைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். என்னைத் திருமணம் செய்துகொள்ள உனக்கு சம்மதமா? என்று கேட்டார்.

    என் விருப்பம் என்று ஏதுமில்லை மகரிஷி. சிவபெருமான் திரு உள்ளம் அதுவானால் தடையேதுமில்லை என்றாள் அருந்ததி பணிவாக.

    அருந்ததியின் சிவ பக்தியை வசிஷ்டர் பாராட்டினார். அருந்ததியே தமக்கு மனைவியாக வேண்டும் என்று இறைவனிடம் மானசீகமாகப் பிரார்த்தித்தார்.

    அருந்ததிக்கு உத்தரவு கிடைத்துவிட்டது. ரிஷபாரூடராய் அவளுடைய உள்ளத்தில் காட்சியளித்த சிவபெருமான் வசிஷ்டருக்கு மாலையிட்டு அவரை மணந்துகொள்ளப் பணித்தார். இறைவன் திரு உள்ளப்படி அருந்ததி வசிஷ்டரின் மனைவி ஆனாள்.

    வசிஷ்டருக்குப் பணிவிடை செய்வதை அருந்ததி பெருமையாக நினைத்தாள். அவர் எண்ணக் குறிப்புகளைப் புரிந்துகொண்டு சொல்லும் முன்னேயே செய்துவிடுவாள். மகரிஷி தன் கடமைகளைச் செய்ய முற்றிலும் துணையாக இருந்தாள் அருந்ததி. வசிஷ்டர் மனம் மகிழ்ந்தார். அருந்ததியின் கற்பின் பெருமையும், தூய்மையான தொண்டும் இதர ரிஷிகள், ரிஷி பத்னிகளுக்கு இடையில் மட்டுமின்றி தேவர் உலகிலும் புகழ்ந்து பேசப்பட்டது.

    ஒருசமயம் நீர் எடுத்து வருவதற்காக அருந்ததி நதிக்கரைக்குச் சென்றாள். கரையில் இந்திரன், சூரியன், அக்னி ஆகிய மூன்று தேவர்களும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தேவர்கள் என்று அறிந்துகொண்ட அருந்ததி அவர்களை வலம் வந்து வணங்கினாள். அவர்களை ஆசிரமத்திற்கு அழைத்தாள்.

    ரிஷி பத்னி, நான் இந்திரன், இவர் சூரியன், இவர் அக்னி. எங்களுக்குள் ஒரு பந்தயம். சத்தியவாக்கு சொன்னால் இந்தக் குடம் தானாகவே நீரால் நிரம்பிவிடும் என்று நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு சத்தியவாக்கு சொன்னோம். முக்கால் குடம் நிரம்பிவிட்டது. வருணதேவன் வரவில்லை. நீ ஒரு சத்தியவாக்கு சொல்கிறாயா? இந்தக் குடம் முழுவதும் நிரம்புகிறதா என்று பார்க்கலாம் என்றார் இந்திரன்.

    அக்னி மறுத்தார், நாம் தேவர்கள். ஆனால், இவர் மானிடராயிற்றே. நமக்கு இணையானவர்கள் சொன்னால்தானே குடம் நிரம்பும். இவர் எப்படிக் கூற முடியும்? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

    இவர் வசிஷ்ட மகரிஷியின் தர்ம பத்தினி அருந்ததி. கற்புக்கரசி. ஆதவனுக்கு இணையாக வானில் பிரகாசிக்கும் ஆற்றலை ஈசனிடமிருந்து வரமாகப் பெற்றிருக்கிறார். இந்திர பூஜை, சூரிய பூஜைபோல இவருக்கும் பூஜை செய்யப்பட்டு அர்க்கியம் விடப்படுகிறது. ஆகையால் இவர் தேவர்களுக்கு இணையானவர். சத்தியவாக்கு கூறத் தகுதியானவர் என்றார் இந்திரன்.

    இந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அருந்ததி சத்தியவாக்கு கூற சம்மதித்தாள். பெண்களுக்கு உயர்வானது கற்பு. புனிதமானது. காக்கப்பட வேண்டும். அதில் சிறிதும் களங்கம் ஏற்படாமல் இருக்க ஆடவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது சத்தியமானால் குடம் நீரால் நிரம்பட்டும் என்றாள்.

    குடத்தில் தண்ணீர் மளமளவென்று பெருகி குடம் நிறைந்தது. தேவர்கள் அருந்ததியைப் பாராட்டினார்கள்.

    தேவி அருந்ததி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. தைரியமாகச் சொன்னீர்கள். பெண்கள் கற்புநெறி தவறாமல் வாழவேண்டும். அப்படி அவர்கள் வாழ ஒவ்வொரு ஆணும் துணையாக இருக்கவேண்டும் என்றீர்கள். பிற மாதர்களை ஆண்கள் தாயாகவோ, இறைவியாகவோ பார்த்தால் அவர்களுடைய கற்புக்கு களங்கம் ஏற்படாது என்பதை அழகாகப் புரிய வைத்தீர்கள். உங்களைப் பாராட்டுகிறேன். உங்கள் கணவரைவிட்டுப் பிரியாமல் நீங்கள் நட்சத்திரமாகப் பிரகாசிப்பீர்கள். புதுமணத் தம்பதிகளுக்கு வழிகாட்டியாக விளங்குவீர்கள் என்று சூரியன் பாராட்டினார்.

    கற்புக்கரசி அருந்ததி இன்றும் இல்லற வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்.

    2. அனுசுயா

    அசூயை என்றால் பொறாமை என்று பொருள். மற்றவர்களுடைய வெற்றியையோ, நல்வாழ்வையோ, புகழையோ பொறுக்காதவள் என்று கூறலாம். அனுசுயை என்றால் பொறாமையற்றவள், தயை நிறைந்தவள், கருணை உள்ளம் கொண்டவள் என்று பொருள் சொல்லலாம். அத்திரி முனிவரின் பத்தினி அனுசுயா. தவ வாழ்க்கை மேற்கொண்டவள். கணவரையே கடவுளாகக் கருதிய கற்புக்கரசி. கருணை உள்ளம் கொண்டவள். பிறர்க்கு உதவி செய்வதைப் பெரும் பேறாகக் கருதியவள்.

    இராமாயணத்தில் அனுசுயா பற்றி ஒரு குறிப்பு வருகிறது. தோல் சுருங்கி, வயது முதிர்ந்து, வனத்தில் தவ வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கிறாள் அனுசுயா தேவி. இராமரும், சீதாதேவியும் வனவாசத்தின்போது அப்பகுதிக்கு வருகிறார்கள். அனுசுயா தேவியின் கற்பின் பெருமையை அறிந்திருந்த இராமர், சீதையை

    Enjoying the preview?
    Page 1 of 1