Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Geethai Sirukathaigal
Geethai Sirukathaigal
Geethai Sirukathaigal
Ebook197 pages1 hour

Geethai Sirukathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கீதை என்கிற வற்றாத ஜீவநதி அதைப் பயன்படுத்துபவர்களின் திறமைக்கும், கிரகிக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவகையில் பல அற்புத கருத்துகளை வாரி வழங்கியிருக்கிறது. உலகின் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை பல நாட்டுப் பேரறிஞர்கள், தத்துவ மேதைகள் வியந்து பாராட்டும் வகையில் உலகின் தலைசிறந்த தத்துவ நூல்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580160609674
Geethai Sirukathaigal

Read more from Mayooran

Related to Geethai Sirukathaigal

Related ebooks

Reviews for Geethai Sirukathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Geethai Sirukathaigal - Mayooran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கீதைச் சிறுகதைகள்

    Geethai Sirukathaigal

    Author:

    மாயூரன்

    Mayooran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mayooran

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. கீதை காட்டும் பாதை

    2. சாரதி

    3. பரிசு கிடைத்தது

    4. கண்ணன் பொம்மை

    5. தவம்

    6. கிரிக்கெட் கிட்டு

    7. மாணிக்கம் ஒரு ரத்தினம்

    8. மூன்று நண்பர்கள்

    9. காற்றாடி

    10. வெற்றியும் தோல்வியும்

    11. வேண்டியவர் வேண்டாதவர்

    12. விநாயகர் பண்டிகை

    13. அளவுக்கு மீறினால்...

    14. நேர்மையின் பரிசு

    15. காக்கைச் சிறகினிலே

    16. கண்ணா சரணம்

    17. கிழக்கு வெளுத்தது

    18. முற்பகல் செய்யின்...!

    முன்னுரை

    பகவத் கீதை வேதங்களின் சாரம் என்பார் ஆதிசங்கரர். பாவம் என்கிற பிணிக்கு கைகண்ட சஞ்சீவி மருந்து பகவத் கீதை என்பார் இராமானுஜர். கடமையைச் செயலாற்றும் போது அங்கே பாசம் குறுக்கிடக்கூடாது என கடமைக்கு வழிகாட்டும் நூல் பகவத் கீதை என்பது லோகமான்ய திலகர் கருத்து. மகாத்மா காந்தி அடிகள், மாசற்ற தூய்மையான பக்திக்குத் துணை நிற்கும் நூல் கீதை என்கிறார். பகவான் கிருஷ்ணன் நேரில் உபதேசம் செய்ததாக வியாசமுனிவர் வழங்கியிருக்கும் கீதை வேத சாஸ்திரம் மட்டுமல்ல, உலக வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகள் அடங்கிய உயர்ந்த நூல் என்று போற்றுகிறார் மூதறிஞர் இராஜாஜி.

    இப்படி கீதைக்கு உரை எழுதி விளக்கம் அளித்துள்ள ஆதிசங்கரர், இராமானுஜர், ஸ்ரீமத்வர், காந்தியடிகள், வினோபாபாவே, திலகர், விவேகானந்தர், அரவிந்தர், சிவானந்தர், இராஜாஜி, சித்பவானந்தர், சின்மயானந்தர், பாரதியார் போன்ற மகான்களும், மேன்மக்களும், அறிஞர்களும் கீதையைப் போற்றிப் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள்.

    கீதை என்கிற வற்றாத ஜீவநதி அதைப் பயன்படுத்துபவர்களின் திறமைக்கும், கிரகிக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவகையில் பல அற்புத கருத்துகளை வாரி வழங்கியிருக்கிறது. உலகின் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை பல நாட்டுப் பேரறிஞர்கள், தத்துவ மேதைகள் வியந்து பாராட்டும் வகையில் உலகின் தலைசிறந்த தத்துவ நூல்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

    திருக்குறள் உள்பட நமது நீதி நூல்கள் பலவற்றின் ஆழ்ந்த கருத்துகள் கீதையில் காணப்படுவது அந்நூலின் தனிச்சிறப்பு. வர்ணாசிரம தர்மத்தை உபதேசித்திருப்பதன் மூலம் கீதை சாதி வித்தியாசத்திற்கு வழி வகுத்திருக்கிறது என்று ஒரு கருத்து உருவாக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.

    "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா

    செய்தொழில் வேற்றுமை யான்"

    என்ற வள்ளுவர் வாக்குப்படி கீதை, செய்யும் தொழிலில் நான்கு பிரிவைக் காட்டுகிறது. இன்றைக்குச் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் பிறப்பை ஒட்டிய சாதிப்பிரச்சினைக்கும் கீதைக்கும் தொடர்பு கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    பெரியவர்களுக்கும் வயதில் முதிர்ந்தவர்களுக்கும் மட்டும் ஏதோ வேதாந்தக் கருத்துகளை எடுத்துக் கூறும் ஆன்மிக நூல்தான் பகவத்கீதை என்று நினைத்துவிடக்கூடாது. நாளைய தலைமுறையான இன்றையச் சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் படித்துப் பின்பற்ற வேண்டிய பல நல்ல அறிவுரைகள் கீதையில் உள்ளன.

    சிறுவர் சிறுமிகளுக்கு மிகவும் அறிமுகமான கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மூலம் சின்னஞ்சிறு கதைகள் வாயிலாக அன்புடைமை, ஆசையை அடக்குதல், இனியவை பேசுதல், உழைப்பின் பெருமை, எளிமை, கடமை உணர்ச்சி, கட்டுப்பாடு, கர்வமின்மை, தனித்தன்மை, தாழ்வு மனப்பான்மை அகற்றல், தெய்வ நம்பிக்கை, நல்லோர் நட்பு, நடுவு நிலைமை, நேர்மை, பணிவுடைமை, மனித நேயம் போன்ற நற்குணங்களையும் நற்பண்புகளையும் வளர்க்கும் அறிவுரைகளை இந்த நூலில் எடுத்துக்காட்ட முயற்சி செய்திருக்கிறேன்.

    நம்முடைய பாரம்பரியம் மிக்க இதிகாச, புராணக் கதைகள் பெரும்பாலான குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. அதை எடுத்துக் கூறுவதற்கான வாய்ப்பும், சூழ்நிலையும் இன்று குறைந்து வருகிறது என்கிற எண்ணத்தில், எடுத்துக்கொண்ட அறிவுரைகளுக்குப் பொருத்தமான சில புராணக் கதைகளையும் ஆங்காங்கே கூறியிருக்கிறேன்.

    கீதை காட்டும் பாதை என்கிற முதல் அத்தியாத்தில் கீதை நிகழ்வுக்கான சம்பவத்தை விளக்கிவிட்டு அடுத்த 15 அத்தியாயங்களில் 15 சிறுகதைகளைத் தொடர்ந்திருக்கிறேன்.

    பகவான் கண்ணன் கீதையில், என்னுடைய இந்த இரகசியமான ஞானத்தைப் பக்தர்களுக்கு எடுத்துச் சொல்பவன் என்னையே வந்தடைவான் என்றும் மனிதருக்குள் எனக்கு இனிய தொண்டைச் செய்பவர்கள் அவனைக் காட்டிலும் வேறு எவருமில்லை (மோக்ஷசந்யாச யோகம், 18-69, 70) என்றும் கூறியிருக்கிறார்.

    இந்த நல்லதொரு தொண்டில் ஈடுபட எனக்கு வாய்ப்பளித்த பாரம்பரியம் மிக்க பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்திற்கும், இந்த முயற்சியில் என்னை ஊக்கமூட்டி, உற்சாகப்படுத்தி எழுத வைத்த நண்பர் திரு.முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்னை ஈன்றெடுத்து ஆளாக்கிய என் பெற்றோர் அமரர் இராஜலட்சுமி, அமரர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி அய்யர் அவர்களின் நினைவுக்கு அஞ்சலியாக இந்நூலை சமர்ப்பணம் செய்வதில் பெருமையடைகிறேன்.

    கே. குருமூர்த்தி

    (மாயூரன்)

    1. கீதை காட்டும் பாதை

    "பரித்ராணாய ஸாதூனாம் விநாஸாயச துஷ்க்ருதாம்

    தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே"

    - ஞான கர்ம சந்யாச யோகம், 4 - 8

    "யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்ப்பவதி பாரத

    அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம் யஹம்"

    - ஞான கர்ம சந்யாச யோகம், 4 - 7

    "நல்லோரைக் காப்பதற்கும், தீயோரைத் தண்டிப்பதற்கும்,

    அறத்தை நிலைநாட்டவும் நான் யுகம் தோறும் பிறக்கிறேன்."

    - ஞான கர்ம சந்யாச யோகம், 4 - 8

    "எவ்வெப்பொழுது தருமத்திற்கு அழிவு ஏற்பட்டு அதர்மம்

    எழுச்சியுறுகிறதோ அவ்வப்பொழுதெல்லாம் நான் அவதரிக்கிறேன்."

    - ஞான கர்ம சந்யாச யோகம் 4 - 7

    உலகம் முழுவதிலுமே, விடுமுறை என்றால் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான். இந்த ஆண்டு விடுமுறையைக் கொண்டாட தாத்தாவின் வீட்டிற்கு வந்திருந்தார்கள் அநிருத்தும் ஆதித்யாவும். அவர்களைப் போலவே அமெரிக்காவிலிருந்து அபர்ணாவும் அஜய்யும் வந்திருந்தார்கள். கூடவே ஆனந்தும் வந்திருந்தான். குழந்தைகளின் வாய்க்கு ருசியாகப் பாட்டி வகைவகையான தின்பண்டங்களைச் செய்து கொடுத்தார்.

    தாத்தா பாசமாக இருப்பார். ஆனால் கண்டிப்பானவர். அவரிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும். இந்த விடுமுறையில் அவரிடமிருந்து பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முயற்சி பண்ணுங்கள் என்று குழந்தைகளிடம் அவர்களுடைய பெற்றோர் கூறி அனுப்பியிருந்தார்கள்.

    குழந்தைகள் மெல்ல தாத்தாவின் அறைக்குள் நுழைந்தார்கள். தாத்தா ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். குழந்தைகளைப் பார்த்ததும் படித்துக் கொண்டிருந்த பக்கத்தில் அடையாளம் வைத்துக்கொண்டே, என்ன செய்தி? என்பது போலப் பார்த்தார்.

    மன்னிச்சுக்குங்க தாத்தா. படிக்கும் போது தொந்தரவு கொடுத்திட்டோம் என்றாள் அபர்ணா.

    பரவாயில்லை. குட்டிப் பட்டாளம் ஒன்று சேர்ந்து வந்திருக்கிறதே, ஏதேனும் விசேஷம் உண்டா?

    நீங்க ரொம்ப நல்லா கதை சொல்வீங்கன்னு அம்மா சொன்னாங்க. அதனாலே கதை கேட்க வந்தோம் என்றான் ஆனந்தன். அவர்களில் வயதில் சிறியவன் அவன்தான்.

    தாத்தா, என்ன புத்தகம் படிச்சிட்டிருந்தீங்க? அநிருத் கேட்டான்.

    இந்தப் புத்தகமா? இது பகவத் கீதை

    கதைப் புத்தகமா தாத்தா? ஆனந்தன் குறுக்கிட்டான்.

    இல்லை. ஒரு வரலாற்றுக் கதையிடையே வரும் உபதேசம், அறிவுரை என்று சொல்லலாம். கிருஷ்ண பகவான் நேரில் உபதேசித்ததாக வியாசர் தந்திருக்கும் சாஸ்திரம் பகவத் கீதை.

    மகாபாரதத்தில்தானே வருகிறது தாத்தா? என்று ஆதித்யா வினவினான்.

    உனக்கு மகாபாரதக் கதை தெரியுமா?

    தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்களே!

    இராமாயணம், மகாபாரதம் இரண்டும் இதிகாசங்கள். ‘எவ்வெப்பொழுது தர்மத்திற்கு அழிவு ஏற்பட்டு அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் நல்லவர்களைக் காப்பாற்றி, தீயவர்களைத் தண்டித்து தர்மத்தை நிலைநிறுத்த நான் அவதரிக்கிறேன்’ என்கிறார் பகவான் கீதையில். பகவான் இராமாவதாரத்தில் அரக்கன் இராவணனை அழித்து தர்மத்தை நிலை நிறுத்தியது இராமாயணக் கதை. அதேபோல கிருஷ்ணாவதாரத்தில் அரக்கன் கம்சனை அழித்ததும், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமிடையே ஏற்பட்ட போரில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநிறுத்த பகவான் ஆற்றிய செயல்களும் மகாபாரதமாகும். இந்த தர்ம யுத்தத்தில் பகவான் பாண்டவர்கள் பக்கம் சேர்ந்ததே ஒரு சுவையான நிகழ்ச்சி என்றார் தாத்தா.

    அந்தக் கதையைச் சொல்லுங்கள் தாத்தா என்றான் அநிருத்.

    பாண்டவர்கள் ஐந்து பேர். அவர்களில் மூத்தவர் தருமன். பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் அவருடைய சகோதரர்கள். கௌரவர்கள் நூறு பேர். அவர்களில் மூத்தவன் துரியோதனன். சிறுவயதிலிருந்தே துரியோதனனுக்குப் பாண்டவர்களிடம் பொறாமை, வெறுப்பு. துரியோதனன் மாமனாகிய சகுனி, துரியோதனனின் மனத்தில் குடிகொண்டிருந்த பொறாமையையும் வெறுப்பையும் மேலும் மேலும் தூண்டிவிட்டு வளர்த்தார். ஆனால் நாளுக்கு நாள் பாண்டவர்களுடைய திறமையும், அதனால் பாராட்டுதல்களும் வளர்ந்து கொண்டே இருந்தன. பாண்டவர்கள் ராஜசூயயாகம் செய்தார்கள். அதனால் அவர்களைப் பற்றிய நன்மதிப்பு இன்னும் பல மடங்கு பெருகியது. சகுனியின் யோசனையின்படி துரியோதனன் தருமனைச் சூதாட்டம் விளையாட அழைத்தான். சூதாடுவது ஒரு தீய பழக்கமல்லவா? ஆனால், அக்காலத்திய வழக்கப்படி அரசனிடம் சூது விளையாட வருமாறு அழைப்பு விடுத்தால் அரசன் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும். சகுனியின் உதவியால் சூழ்ச்சி செய்து துரியோதனன் சூதில் தருமனையும் அவன் உடைமைகளையும் வென்று விடுகிறான். பாண்டவர்களும் அவர்கள் மனைவி திரௌபதியும் பன்னிரண்டு ஆண்டுகள் வனத்திலும் பின்னர் ஓராண்டு யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி மறைந்தும் வசிக்க வேண்டும். இவ்விதம் 13 ஆண்டுகள் துரியோதனன் இராஜ்யம் முழுவதையும் ஆளவேண்டும். பிறகு பாண்டவர்களுக்கு அவர்கள் நாட்டைத் திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    வனவாசமும் அஞ்ஞாதவாசமும் முடிந்து பாண்டவர்கள் நாட்டைத் திரும்பிக் கேட்டபோது, துரியோதனன் மறுத்து விடுகிறான். கிருஷ்ணபகவான் உட்பட பலர் நியாயத்தை எடுத்துக் கூறியும் துரியோதனன் ஏற்க மறுத்து விடுகிறான். இரு தரப்பிலும் போர் முயற்சிகள் ஆரம்பமாயின. போரில் கண்ணனுடைய உதவி பெறுவதற்காகத் துரியோதனன் துவாரகை சென்றான். பகவான் அப்போது நித்திரையில் இருந்தார். துரியோதனனுக்கு எப்போதும் தான் என்ற கர்வம் உண்டு. கிருஷ்ணபகவானின் பாதங்களின் பக்கத்தில் இரண்டு ஆசனங்கள் இருந்தன. துரியோதனன் அவற்றில் ஓர் ஆசனத்தை இழுத்து கிருஷ்ணபகவானின் தலைக்கருகில் போட்டுக்கொண்டு அதில் ஓய்யாரமாக உட்கார்ந்து கொண்டான். அதே சமயத்தில் அர்ஜுனனும் கண்ணனின் உதவி வேண்டி அங்கு வந்தான். பகவான் நித்திரையிலிருப்பதையும் அவர் பாதத்தருகில் ஓர் ஆசனம் இருப்பதையும் பார்த்து அதில் பணிவுடன் உட்கார்ந்து கொண்டான். கண்ணன் கண் விழிக்கும் சமயம் எழுந்து நின்று அவரை வணங்கினான். கண்ணன், என்ன அர்ஜுனா, எப்பொழுது வந்தாய்? வெகுநேரம் காத்திருக்கிறாயா? என்னிடம் ஏதேனும் கூற வேண்டுமா? சொல் என்றார்.

    அப்போது பகவானின் தலைமாட்டில் உட்கார்ந்திருந்த துரியோதனன் கணைத்து, நானும் வந்திருக்கிறேன். நான்தான் முதலில் வந்தேன். என்னிடம்தான் முதலில் பேச வேண்டும் என்றான் செருக்கோடு. பகவான் புன்னகை புரிந்தார். நீ முதலில் வந்திருந்தாலும்கூட என் பார்வையில் முதலில் பட்டது அர்ஜுனன்தான். தவிர அவன் வயதிலும் சிறியவன். முதலில் அவன் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் முறை. ஆகையால் நீ பொறு என்று கண்ணன் கூறிவிட்டு அர்ஜுனனிடம் என்ன வேண்டும் என்று கேட்டார். இரண்டு பேருமே போருக்குத் தம்முடைய உதவியை நாடி வந்திருப்பதை அறிந்ததும், "என்னால் இரண்டு வழிகளில் உதவிசெய்ய முடியும். ஒன்று என்னுடைய வலிமை மிக்க நாராயணி சேனை. அந்த சேனை

    Enjoying the preview?
    Page 1 of 1