Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aaludaiyarasarum Aaludaipillaiyum
Aaludaiyarasarum Aaludaipillaiyum
Aaludaiyarasarum Aaludaipillaiyum
Ebook290 pages1 hour

Aaludaiyarasarum Aaludaipillaiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஈஶ்வரனின் அடியார்களில் நால்வர் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்கள் திருநாவுக்கரச பெருமான், சுந்தரரமூர்த்தி ஸ்வாமிகள், திருஞானசம்பந்தர பெருமான், மாணிக்கவாசகப் பெருமான். இந்த நால்வரின் புண்ணிய சரித்திரங்களை பெரிய புராணம் எவ்விதமாக விவரித்திருக்கிறதோ அதே விதமாக எளிய தமிழில் அனைவருக்கும் பயன்படுவதற்காக எழுதவேண்டும் என்ற எண்ணம் ஈசனருளால் ஏற்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனாரின் சரித்திரம் சுந்தரர் (சங்கரன் தோழன்) என்ற புத்தகமாக புஸ்தகா நிறுவனத்தின்மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் இருவருடைய சரித்திரம் எழுதப்பட்டுள்ளது. வாழ்காலம் ஒன்றாக இருப்பதாலும் பல இடங்களில் இருவர் சந்தித்து, சேர்ந்திருந்து அடியார்கள் பலருக்கு ஈஷ்வரனுடைய பெருமைகளை உணர்த்தியிருப்பதாலும் இருவரையும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.

பெரியபுராணத்தில் ஈஶ்வரன் திருநாவுக்கரசா என்று மருள் நீக்கியாரை அழைத்ததும் அப்பெயர் நிலைபெற்றது. அவரை குழந்தை ஞானசம்பந்தப்பெருமான் 'அப்பரே' என்று அழைத்ததால் நாம் அப்பர் என்றும் அழைக்கின்றோம். சேக்கிழார் ஆளுடையரசர் என்கிறார். ஆளுடை என்பது ஈஶ்வரனைக் குறிக்கிறது.

அதேபோல ஞானசம்பந்த பெருமானை ஆளுடைப்பிள்ளை என்கிறார் சேக்கிழார். இவ்விரண்டு சொல்லாடல்களும் மிக அழகாக இருந்ததால், செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் இனிதே என்ற வகையில் இவ்விரு அடியார்களின் புண்ணிய சரித்திரத்திற்கு ஆளுடையரசரும் ஆளுடைப்பிள்ளையும் என்று பெயரிடப்பட்டது.

இப்புத்தகத்தை வாசித்து இன்புறும் அனைவர்க்கும் இறையருள் பரிபூரணமாகக் கிடைக்க என் மனமார்ந்த ப்ரார்த்தனைகள்.

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580173310955
Aaludaiyarasarum Aaludaipillaiyum

Related to Aaludaiyarasarum Aaludaipillaiyum

Related ebooks

Reviews for Aaludaiyarasarum Aaludaipillaiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aaludaiyarasarum Aaludaipillaiyum - Usha Sankaranarayanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆளுடையரசரும் ஆளுடைப்பிள்ளையும்

    Aaludaiyarasarum Aaludaipillaiyum

    Author:

    உஷா சங்கரநாராயணன்

    Usha Sankaranarayanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/usha-sankaranarayanan

    பொருளடக்கம்

    முன்னுரை

    ஆளுடையரசர்

    மருள் நீக்கியார் யார்?

    அண்ணலின் அருள்

    சமணர் கொடுத்த தொல்லைகள்

    புதுப்புது தண்டனைத் திட்டங்கள்

    கல்லும் மிதந்த அதிசயம்

    முதல் யாத்திரை

    சபாநாயகர் தரிசனம்

    பெற்ற பெருவரம்

    ஆளுடைப்பிள்ளை

    அதிசயத் தாளமும் அம்பிகையின் ஓசையும்

    பாலையும் பசுமையானதே

    பிள்ளையுடன் பாணர்

    பிள்ளை ஏறிய முத்துச் சிவிகை

    ஆளுடை அரசர் சந்தித்த ஆளுடைப் பிள்ளை

    அப்பர் தொடர்ந்த யாத்திரை

    திருவடி தீக்ஷை

    குருவருள்

    ஆளுடைப்பிள்ளையின் யாத்திரை

    பிள்ளைக்கு முத்துப் பந்தல்

    இடர் தீர்க்க பொருள் வேண்டிய பிள்ளை

    சிஷ்யனுக்கு உண்மை உணர்த்தல்

    காழிப்பிள்ளையை தரிசித்த திருநீலநக்கர்

    பிள்ளையின் கண்நோக்கம் மங்கையின் துயர் தீர்க்கும்

    முருக நாயனார் சந்திப்பு

    ஆளுடை அரசர் என்ன செய்கிறார்?

    பிள்ளையின் திருவாரூர் விஜயம்

    பிள்ளையின் யாத்திரை அப்பரை நோக்கி

    திருவீழிமிழலை அதிசயங்கள்

    கதவைத் திறந்தாரா?

    திருவாய்மூரில் அரன்கருணை

    பாண்டிய தேசத்து பயணங்கள்

    மதுரை வரவேற்பு

    சமணர்கள் கோபம்

    அமணர் சாயம் வெளுத்தல்

    புனல் வாதம்

    கூன் நிமிர்ந்த நின்றசீர் நெடுமாறன்

    ஆளுடையரசரின் யாத்திரைகள்

    கயிலைநாதனைக் காணும் ஆவலில் அப்பர்

    ஆனந்தக்கூத்தனின் அக தரிசனங்கள்

    காழிப்பிள்ளையின் யாத்திரைகள்

    போதிமங்கையில் போதனைகள்

    இரு அரசர்கள் சந்திப்பு

    ஆண்பனை ஈன்ற அதிசயம்

    பூம்பாவை

    திருமண ஏற்பாடுகள்

    அப்பரின் திருயாத்திரை

    முன்னுரை

    பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழலையும், ஆழிமிசைக் கல்மிதப்பின் அணைந்தபிரானின் அடியையும் போற்றி, அவ்விரு மஹான்களுடைய அற்புதமான வாழ்க்கையை, என் சிற்றறிவிற்கு ஏற்ற அளவிற்கு ஒரு புத்தகமாக படைக்க ஆசைப்பட்டேன்.

    இறையின் கருணையினாலும் சத்குருநாதரின் அருளாலும், இவ்விரு பெருங்குருமார்களின் பேரருளாலும், அடியார்கள் மனம் மகிழும்வண்ணம் இந்த நூல் நல்லுள்ளங்களைச் சென்று அடையுமாயின், அதுவே இந்நூலை ஆக்கியதன் பெரும்பயனாகும்.

    ஒரு அடியாருடைய சரித்திரத்தை நாம் மனதால் சுவைத்து வாக்கினால் அதைச் சொல்லும்போதோ அல்லது எழுத்தினால் சமைக்கும்போதோ நம் மனம் தூய்மையாகிறது. எழுதுதலும், வாசித்தலும் ஒரு ஞானவேள்வி. வேள்வியின் பயன் நம் மனத்தூய்மையே.

    நாம் செய்யும் அனைத்து அறங்களும் மனத்தூய்மையின்பொருட்டே என்பதை என் சத்குருநாதர் பூஜ்யஸ்ரீ ஸ்வாமி ஓங்காராநந்தர் எப்போதும் அறிவுறுத்தி வந்துள்ளார்.

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

    ஆகுல நீர பிற. (34)

    என்ற வள்ளுவன் வாக்கைச் சொல்லி, எந்தச் செயலைச் செய்தாலும் அதை மனத்தூய்மையின்பொருட்டே செய்தல்வேண்டும் என்று சொல்வார்.

    இந்த நூலைப் படிப்பவர்கள் அத்தகைய மனத்தூய்மையுடன், பேரானந்தமும் பெற எல்லாம் வல்ல தென்னாடுடையானை நான் மனம் மொழி மெய்களால் துதித்து வேண்டுகிறேன்.

    உஷா சங்கரநாராயணன்

    ஆளுடையரசர்

    திருநின்ற செம்மையே செம்மையாய்க் கொண்ட திருநாவுக்கரசர் தன் அடியார்க்கும் அடியேன் என்றாரே சுந்தரமூர்த்திப் பெருமான். அந்த அப்பர் பெருமானின் அருள் நிறைந்த சரித்திரத்தைப் பற்றி சிந்திப்போம். அப்பரின் காலமும் திருஞானசம்பந்தரின் காலமும் ஒன்றாக இருப்பதால் இருவரின் சரித்திரமும் சேர்ந்தே பார்த்துக்கொண்டு போகலாம் என்றும் தோன்றுகீறது. ஈசன் சித்தம் எப்படியோ! அப்படி நடக்கட்டும்.

    நாவை ஆள்பவர் அவர் என்பதால் நாவுக்கு அரசர் என்ற பெயர். யார் வைத்தது இந்தப் பெயர்? அந்த ஈசனே தான்.

    நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

    யாநலத்து உள்ளதூஉம் அன்று (641)

    வாய் நிறைய நன்மையே தரும் நமசிவாய நாமமும் கைநிறைய உழவாரப்பணி செய்ய உழவாரப்படையுடனே இருந்தார் வாழ்நாள் முழுதும்.

    இல்லயே! வாழ்நாள் முழுதும் இல்லையே! வேறு மாதிரி கேள்விப்பட்டிருக்கோமே! படிச்சிருக்கோமே! என்று தோன்றும். ஆம். எப்போது அவர் அன்பர்க்கு அருள் செய்யும் ஈசனால் ஆட்கொள்ளப்பட்டாரோ அன்று அவர் புதிதாகப் பிறந்தார் என்றே சொல்லலாம். அன்று முதல் இதே கோலம் தான்.

    நடு நாடு என்று சொல்லப்படும் திருமுலைப்பாடி அருகே திருவாமூர் என்ற ஊரில் புகழநாருக்கும், மாதினியாருக்கும் பிறந்த ஈசனின் கொடை மருள் நீக்கியார். மருள் என்றால், மோஹம். அறியாமையின் விளைவு. மக்களின் உலகியல் மோஹத்தால் விளையும் அறியாமையை நீக்க வந்தவர் என்று தெரிந்தே பெயர் வைத்தார்கள் போல. அவருக்கு ஒரு அக்காள். திலகவதி. எல்லா கலைகளும் கற்று தர்மத்தில் அசாத்ய நம்பிக்கையும் பற்றும் கொண்ட குணவதி.

    கலிப்பகையார் என்று ஒரு சேனாதிபதி. அவருக்கு திலகவதியைத் திருமணம் செய்ய ஆசை. ஊர் பெரியவர்களை அனுப்பி, பெண் கேட்க, 12 வயது திலகவதி, அவரது மனைவி ஆனார் மிக விரைவில்.

    அந்த சமயம் நாட்டில் போர் வரவே, சேனாதிபதியான கலிப்பகையார் போர்க்களம் சென்றார். திரும்பவில்லை. அந்த சோகத்தில் புகழநாரும் மாதினியாரும் ஈசனடியடைந்தார்கள். மிக இளம் வயதில் தனித்து விடப்பட்டாள் திலகவதி. ஒரே பற்றுக்கோடு மருள் நீக்கி தான். தானும் உயிர் துறக்க ஆசைப்பட்டாலும், தம்பியின் வேண்டுகோளுக்காக வாழ்ந்தாள். அருமையாக வளர்த்தாள்.

    வாலிபம். யார் எது சொன்னாலும் ஏற்கும். இப்போது மட்டுமல்ல. அப்போதும் தான். அழைப்பவர் காட்டும் பாதை சரியா தவறா என்று அறிய முற்படாத, முற்பட்டாலும் புரியாத, புரியாது இருப்பதை பெரியவர்களிடம் கேட்டுத் தெளிவும் பெறத்துணிவு இல்லாத வயது அல்லவா? நம் வீடுகளிலும் உள்ள காட்சிகள் தானே இவையெல்லாம்?!

    மருள் நீக்கியை பேசிப்பேசி, சமண மதத்திற்கு இட்டுச் சென்றனர் சிலபேர். வெளியில் அஹிம்ஸையைப் பின்பற்றுபவர் என்று சொன்னாலும், உள்ளே, வேறு ரூபத்தில் ஹிம்ஸைகள் இருந்தன அந்த காலகட்டத்தில். புத்தர் சொன்னதும், அப்போது நடந்து வந்ததும் சற்றும் பொருந்தாதவை. அவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளாதவர்களைக் கொன்று போட்ட மதமாக இருந்தது அது அப்போது. அதில் சேர்ந்ததால், மருள் நீக்கி மருள் அதிகமானவரானார்.

    இப்படித்தான் போகப்போகிறேன் என்று அக்காளிடம் சொல்லவில்லை. அவளோ வெளியே சென்றவன் வீட்டுக்கு வரவில்லையே என்று தெரிந்தவர்களை விட்டுத் தேடச் சொன்னால், சமண மதத்தில் சேர்ந்துவிட்டார், அங்கு தான் இருக்கிறார் என்று செய்திதான் வருகிறது. செய்தி கேட்டு, மனம் வெறுத்துப் போனாள். சொத்து சுகம் எல்லாம் விட்டுவிட்டு, திருவதிகை வீரட்டானத்து ஈஶ்வரனுக்கு சேவை செய்ய அங்கு சென்றுவிட்டாள்.

    திருவதிகை சென்று ஈசனிடம் முறையிட்டாள். இந்தத் தம்பிக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்? இப்படி அவன் துர்மதத்தில் சேர்ந்து பாழாய்ப் போகிறானே, காப்பாற்றக்கூடாதா? என்று கேட்டாள். ஈசனும், நான் பார்த்துக்கறேன் கவலைப்படாதே என்றார்.

    மருள் நீக்கியார் யார்?

    கைலாயத்தில், வாகீசர் என்று ஒரு ரிஷி தபஸ் பண்ணிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு, ஶிவபெருமானைப் பார்க்க, ராவணன் வந்தான். சும்மா வந்தானா? இல்லை. மகா கோரமாக சப்தம்போட்டுக்கொண்டு, பெரிய கர்ஜனையெல்லாம் பண்ணிக்கொண்டு, சிவபக்தி இருந்தாலும், அதைத் தாண்டி ஒரு பெரிய ஆர்பாட்டம் அதில் தெரிந்தது. இப்படியெல்லாம் யார் வேணும்னாலும் ஈஶ்வரனைப் பார்த்துவிட முடியாது. நந்தி பகவான் விடமாட்டார்.

    வாசலிலேயே கேட்டார். நீ யாருப்பா? எதுக்கு இத்தனை சப்தமெல்லாம் போட்டுக்கொண்டு போறே? பகவான் தவத்தில்தான் பெரும்பாலும் இருப்பார். நிறைய தவம் பண்றவங்களும் உள்ளே இருக்காங்க. நீ எதுக்கு இவ்வளவு ஆர்பாட்டம் பண்ணிட்டு வரே? என்றார். ராவணன், இலங்கேஸ்வரன் இல்லையா? திமிர் ஜாஸ்தி. ஏய், குரங்கே உனக்கு நான் யாரா இருந்தா என்ன? நீ யார் என்னைத் தடுக்க? என்று பதிலுக்குக் கத்தினான். இந்த கைலாச மலையையே என் ஒற்றைக் கையில தூக்கிட்டுப் போயிடுவேனாக்கும் என்று கர்ஜனை வேறு.

    பார்த்தார் ஸ்வாமி, சும்மா கால் கட்டை விரலை லேசாக அழுத்தினார். அவ்வளவு தான் கைலையைத் தூக்குகிறேன் என்று சொன்ன ராவணன் கை, மாட்டிவிட்டது. குய்யோ முறையோன்னு அலற, அங்கு தவம் செய்து கொண்டிருந்த வாகீசர் தவம் கலைந்து என்ன ஆச்சு என்று கேட்கறார். இவனும் ஸ்வாமி குடுத்த தண்டனையைச் சொல்கிறான். அவர் ஒரு யோசனை சொன்னார். ஸாம கானம் பண்ணு. உனக்கு ஸ்வாமி மன்னிப்பு தருவார் என்று. இவனும் பாட, பாட்டிலே மனம் குளிர்ந்து போனால் போகிறான் என்று விட்டுவிட்டார் ஸ்வாமி. நிறைய வரங்களும் தந்தார். சந்த்ரஹாஸன் என்ற வாளும் கொடுத்தார். அவனும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று இலங்கைக்கே ஓடிப்போய் சத்தம் போடாமல் சிம்மாசனத்தில் உட்கார்ந்தான்.

    இங்கே, பரமேஶ்வரனுக்கு கடுமையான கோபம். வாகீசரைக்கூப்பிட்டு, நந்தியைக் கிண்டல் பண்ணினான் அவன். உள்ளே வந்திருக்கான், நீ என்ன பண்ணிட்டிருந்தே என்று கேட்டார். வாகீசர், நான் தபஸ் பண்ணிட்டிருந்தேன் என்று சொன்னார். அவனுக்கு தண்டனை குடுத்தா, அதிலிருந்து தப்பிக்க ஐடியா குடுத்திருக்கே!. நீ பூமிக்குப் போய் கொஞ்ச நாள் சுக துக்கங்கள் எல்ளாம் அனுபவிச்சுட்டு பிறகு வா கைலாயத்திற்கு என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஒரு நோய் வரும், அச்சமயம் என்னைச் சேர்வாய் என்று சொல்லி போகச்சொன்னார்.

    இப்ப மருள் நீக்கியாக வந்தது அந்த வாகீசர் தான். இது மருள் நீக்கிக்குத் தெரியாவிட்டாலும், ஸ்வாமிக்குத் தெரியுமில்லையா? அதனால்தான் திலகவதி வந்து அழுதபோது நான் பார்த்துக்கறேன் என்றார் ஸ்வாமி.

    சமணத்தில் சேர்ந்த மருள் நீக்கி, இளம் வாலிபன் இல்லையா? சுறுசுறுப்பாகவும், நல்ல அறிவோடும் இருக்கிறார். அதனால், சீக்கிரமாகவே அந்தக்கூட்டத்திற்குத் தலைவர் ஆகிவிட்டார். அப்போது அவர் பெயர் தர்மசேனர்

    விப்ரக்ஷயம் ஒன்று தான் மந்திரம் அங்கு. அதற்கு அர்த்தம், வேதம் சொல்பவர்கள் அழியட்டும் என்பது தான். எப்பவும் இந்த ப்ரச்சனை இருந்திருக்கிறது. இவரும், வேதம் வகுத்ததெல்லாம் பொய் என்று ப்ரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறார்.

    ஒரு நாள் கடுமையான வயிற்றுவலி. நிறைய வைத்யம் செய்து பார்த்தார்கள். மந்திரம் செய்து பார்த்தார்கள். எதுவும் பலிக்கவில்லை. வலியோ அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. அப்போது இருந்த ராஜா, சமணத்தை நம்புகிறார். அவர்கள் செய்யும் மாந்த்ரீகங்களை வைத்து ராஜாவை நம்ப வைத்திருந்தார்கள். ராஜாவுக்குத் தெரிந்தால், இப்போது சமணத்தை நம்புபவர், இனி நம்ப மாட்டாரே! தன் தலைவனின் நோயையே தீர்க்கத் தெரியாத இவர்கள் எப்படி மற்றவர்களுக்கு உதவுவார்கள் என்று ராஜா நினைப்பாரே என்று வேறு எல்லோருக்கும் பயம். இந்த தர்மசேனரோடு இருந்தால், நம் குட்டு வெளிப்பட்டுவிடுமே என்று அந்த சமண மடத்தில் இருந்த அத்தனை பேரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள். ஒரே ஒரு சமையல்காரர் தவிர.

    சமையல்காரர் மூலமாக, தன் ப்ரச்சனைக்கு ஒரு விடிவு வரும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் வந்தது.

    அண்ணலின் அருள்

    தருமசேனரொடு இருந்த அந்த ஒரே ஒரு துணை சமையல் காரர்தான் என்று பார்த்தோம் இல்லையா? அவர் ரொம்ப நல்லவர். அவரிடம், தயவு செய்து என் அக்கா திலகவதிகிட்ட போய் என் நிலைமையைச் சொல்லி, அழைச்சுட்டு வாங்க என்றார் தருமசேனர்.

    எங்க இருக்காங்க? உங்களுக்கு அக்கா இருக்காங்கன்னே தெரியாதே! என்று கேட்டார் அவர். திலகவதி, திருவதிகை கோவில் நந்தவனத்தைப் பார்த்துக்கொண்டு ஸ்வாமிக்கு சேவை செய்து வருகிறாள் என்று தருமசேனர் சொல்லி, அவரை திருவதிகைக்கு அனுப்பினார். தான் உயிர் போகும் நிலையில் இருப்பதால், அக்காவைப் பார்க்க மிகவும் ஆசைப்படுவதாகவும் செய்தி சொல்லி அனுப்பினார்.

    சமையல்காரர் திருவதிகையில் திலவதியை சந்தித்தார். விஷயம் சொன்னார். சமணப்பள்ளிக்கெல்லாம் வருவதற்கில்லை. வேணும்னா அவனை இங்க வரச் சொல்லுங்க என்று சொல்லி அனுப்பி விட்டாள். அவரும் வந்து செய்தியைச் சொல்ல, இருவரும் கிளம்பி அந்த சமணப்பள்ளியை ஒருவழியாக காலி செய்துகொண்டு திருவதிகைக்கே சென்றனர்.

    சமணப்பள்ளியில் காவி உடுத்திக்கொண்டு இருந்தார். அதைக் களைந்து வெள்ளை வஸ்த்ரம் போட்டுக்கொண்டு போனார். அக்காவை வெகு நாட்களுக்குப் பிறகு பார்க்கப்போகிறார். பார்த்தவுடனே பழையதெல்லாம் ஞாபகம் வந்து, அதனால் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டால்!! வளர்த்தவள் அல்லவா? அவள் வைராக்யம் தெரியும்.

    திருவதிகை வந்தார். திலகவதியைக் கண்டார். நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுந்தார். நெடுநாள் பார்க்காமல், குடும்பத்து பழக்கவழக்கங்கள் விட்டுப் போனதற்காக இருந்த கோபம் எல்லாம் அவரை நேரில் கண்டதும் மறைந்தது திலகவதிக்கு. கண்ணீர் வந்தது. மறைத்துக்கொண்டாள். ஏன் என்னைப் பார்க்க இத்தனை ஆர்வம் இப்போது உனக்கு? என்று கேட்டாள்.

    தீராத வயிற்றுவலியால் அவஸ்த்தைப் பட்டுக்கொண்டிருக்கிறேன் அக்கா. என்னால் தாங்க முடியவில்லை. எவ்வளவோ வைத்தியம் பார்த்தாச்சு. ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒன்றும் சாப்பிட முடியவில்லை. குடலைப் புரட்டி, முடுக்கி எடுக்கிறது. என்னால் எவ்வளவு நாட்கள் உயிரோடு இருக்கமுடியும் என்று தெரியவில்லை. அதனால் தான் உன்னைப் பார்க்கணும்னு வந்தேன் என்றார் அழுகையின் ஊடே.

    திலகவதிக்கு மனம் இளகியது. சரி வா என்னுடன் என்று திருவதிகைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றாள், ஸ்வாமியைப் பார்க்க. நெற்றியில் விபூதி இட்டு, அவரைக் கையைப் பிடித்து மெதுவாக உள்ளே அழைத்துச் சென்றாள். இந்த இடத்தில், ஸ்வாமியிடம் கூட்டிக்கொண்டு போகும் திலகவதி, அக்காவாக மட்டும் இல்லாமல், குருவாகவும் இருக்கிறாள். ஏனென்றால், குருவால் மட்டும் தான் இறைவனைக் காட்ட முடியும். குரு இல்லாமல் இறைவனின் துணைகூட கிடைக்காது. இறைவனே குருவாகவும் வருவார். அவர்தான் திலகவதியாக அவருக்கு வழியும் காட்டுகிறார் என்று புரிந்து கொள்வது சிறப்பு.

    ஸ்வாமியைப் பார்த்ததும், இத்தனை நாட்கள் பிரிந்திருந்த பாசம் கண்களில் பொங்க, உணர்ச்சிப்பிழம்பாக ஆனார் தருமசேனர். வாகீசராக இருந்து இறைவனைப் பிரிந்து இங்கு வந்து, சைவ மதத்தையும் விட்டு சமணர்களோடு சுற்றி வெகுதூரம் பயணித்து, இப்போது மறுபடியும் வந்து சேர்ந்ததால், புலம்புகிறார். புத்தி கெட்டுப் போய் உன்னை மறந்தேனே என்று.

    அப்போது பாடியது தான்,

    கூற்றாயின வாறுவி லக்ககிலீர்

    கொடுமைபல செய்தன நானறியேன்

    ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்

    பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

    குடரோடு துடக்கி முடக்கியிட

    ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில

    வீரட்டா னத்துறை அம்மானே.

    பாடல் முழுவதும் படித்து அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு வரியிலும், வயிற்றுக்குள் நடக்கும் போராட்டத்தைப் படம் பிடித்துக் காட்டியிருப்பார். சூலை நோய் சுடுகின்றதே என்பார். அதைப் பாடப்பாட அவரது வலியின் தீவிரம் குறைந்தது, ஸ்வாமி நாவுக்கரசா என்று அழைத்தார். அப்பா மகனைக் கூப்பிட்டால் எப்படி இருக்கும்? அதுவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு? அதுவும் நாம் இனி இறந்தே போவோம் என்ற நிலைக்குப் போன நிலையிலிருந்து மீண்டு வந்த மகனைக் கூப்பிட்டால்? புதிய பிறவி எடுத்த தரும சேனர், புதிய பெயரும் பெற்றார். அதுவும் ஸ்வாமியிடமே.

    திலகவதியார் குருவின் கடமையை நன்றாகச் செய்து முடித்தாள். ஸ்வாமி அவரை ஏற்றுக்கொண்டதற்காகவும், நோயைத் தீர்த்ததற்காகவும், இனி வாழ்நாள் முழுவதும் சிவத்தொண்டில் மட்டுமே ஈடு படவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். திலகவதியும், அவரிடம் அதையே எதிர்பார்த்தாள்.

    இனி எங்கெல்லாம் சிவபெருமானின் கோவில் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று தொண்டு செய் என்று சொல்லி, உழவாரப்படையும் கொடுத்து அவரை நன்றாக வாழ்த்தினாள்.

    அதுசரி, தொண்டுக்கு உழவாரப்படை என்ற ஆயுதம் எதற்கு? ஆலயத்தில் ஆயுதத்திற்கு என்ன வேலை?

    சமண ஆதிக்கமும், மன்னனும் சமணர்களுக்கு ஆதரவாக இருந்ததாலும்,

    Enjoying the preview?
    Page 1 of 1