Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sabarimalai Yathirai Oru Vazhikatti
Sabarimalai Yathirai Oru Vazhikatti
Sabarimalai Yathirai Oru Vazhikatti
Ebook171 pages55 minutes

Sabarimalai Yathirai Oru Vazhikatti

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இறை அவதாரம் என்றாலே அற்புதம் நிகழ்த்துவதாகத்தான் இருந்திருக்கிறது. ராமன், கிருஷ்ணன் போன்ற அவதாரங்கள் மனித இயல்பையும் மீறி பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கின்றன. இந்த அதிசயங்கள் எல்லாம் வெறும் பிரமிப்புக்காக மட்டுமல்ல, குறிப்பிட்ட அவதார நோக்கத்தை வலியுறுத்துவதற்காகவும்தான். அந்த நோக்கத்தின் அடிநாதம், தீமைகள் அழிய வேண்டும் என்பதுதான்.

தீய சிந்தனைகள், தீய செயல்கள் எல்லாவற்றையும் தீயிட்டுப் பொசுக்க வேண்டும் என்ற வேட்கையின் வெளிப்பாடுதான் இந்த அவதாரங்களின் நோக்கங்கள். இதை ஐயப்ப அவதாரத்திலும் உணரமுடியும். இந்த தத்துவத்தை எளிமையாக விளக்குகிறது இந்த நூல். உரையாடல் பாணியில் பல சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறது. கடுமையாக தவமிருந்து வரம் கேட்கும் அரக்கிக்கு அவ்வாறு வரம் கொடுத்ததோடு, அவளுடைய தீய எண்ணங்களை அறவே அழித்துவிடுமாறு பிரம்மன் அறிவுறுத்துவது - மகிஷமுகியின் கோபம் - துர்வாசரின் சாபம் - பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்கப்படவேண்டிய கட்டாயம் - மஹாவிஷ்ணு மோகினியாக அவதாரம் எடுக்க வேண்டிய அவசியம் - சிவ, விஷ்ணு அம்சமாக ஹரிஹரசுதன் அவதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் - அப்படிப் பிறந்த குழந்தை பிரம்மனின் வரம் பெற்ற அரக்கியை அழிக்கும் சம்பவம் என்று ஒரு புள்ளியில் ஆரம்பித்து, பல இணை சம்பவங்களை உட்புகுத்தி மீண்டும் அந்தப் புள்ளியிலேயே முடியும் அற்புதமான சரிதம் இது.

பாற்கடலைக் கடைய உதவிய வாசுகி பாம்பு, பின்னாளில் தன் வாரிசுகளை சிவபெருமானுக்கு அணிகலன்களாக விளங்கச் செய்தது; ஸ்வாமி ஐயப்பன் புலிமீது வந்ததற்கான நயமான விவரிப்பு; ஸ்வாமி வித்தியாசமாய் அமர்ந்திருக்கும் கோலத்திற்கான விளக்கம், துளசி மணி, இருமுடி மற்றும் பதினெட்டுப் படி தத்துவம், சபரிமலையில் ஸ்வாமி கோயில் திறந்திருக்கும் நாட்கள்-நேரங்கள், ஸ்வாமி ஐயப்பன் ஸ்தோத்திரப் பாடல்கள், மந்திரங்கள் என்று பல தகவல்கள்...

கன்னிசாமிகளுக்கு மட்டுமல்ல; மூத்த சாமிகளுக்கும் உகந்ததோர் வழிகாட்டி, இந்தப் புத்தகம்.

-ஆசிரியர்

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580130605196
Sabarimalai Yathirai Oru Vazhikatti

Read more from Prabhu Shankar

Related to Sabarimalai Yathirai Oru Vazhikatti

Related ebooks

Reviews for Sabarimalai Yathirai Oru Vazhikatti

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sabarimalai Yathirai Oru Vazhikatti - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    சபரிமலை யாத்திரை ஒரு வழிகாட்டி

    Sabarimalai Yathirai Oru Vazhikatti

    Author:

    பிரபுசங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கையில் இருக்க வேண்டிய ஏடு

    ஸ்வாமியே... சரணம் ஐயப்பா...

    1. வாரிசு இல்லாத அரசு

    2. அரக்கிக்கு வரம், தேவர்களுக்கு சாபம்!

    3. பரமசிவனின் பாற்கடல் யோசனை

    4. கேட்டது அமிர்தம், கிடைத்ததோ விஷம்!

    5. அரக்கர்களை மயக்கிய அழகிய மோகினி

    6. அரசனுக்குக் கிடைத்த அவதாரக் குழந்தை

    7. பேச்சிழந்த சிறுவன் உச்சரித்த மந்திரம்

    8. புலிப்பால் வேண்டும். போய் வா மகனே...!

    9. முடிந்தாள் மகிஷமுகி

    10.புறப்பட்டான்புலி வாகனன்

    II. பதினெட்டுப் படியும், பரசுராமர் செய்த சிலையும்

    12. என்ன, ஏன், ஏப்போது?

    13. இருமுடியில் இருப்பது ஐயப்பனின் சந்தோஷம்

    14. அழகான பேட்டைத் துள்ளல், ஆலமரத்தில் சரக்கோல் குத்து...

    15. நதிக்கு நன்றி விளக்கு

    16.தீபஜோதித் திருவொளியே... சரணம் ஐயப்பா...

    17. சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கான விதிமுறைகள்

    சபரிமலை யாத்திரை செல்லும் வழிகளின் தூரம் பற்றிய குறிப்பு (கி.மீட்டர் கணக்கில்)

    சென்னை - எருமேலி வழி விவரம்

    சபரிமலை கோயில் நடை திறக்கும் நாட்கள், அபிஷேக நேர விவரம்

    ஐயப்பன் - மேலும் சில குறிப்புகள்

    மாலை அணியும்போது சொல்லக் கூடிய மந்திரம்

    ஐயப்ப பஜனைகளின்போது பாடப்படும் சில பிரபல பாடல்கள்

    பள்ளிக்கட்டு சபரிமலைக்கு

    பச்சை மயில் வாகனனே...

    தர்மசாஸ்தா அஷ்டோத்ர சத நாமாவளி

    சரண கோஷம்

    ஐயப்பன் கவசம்

    வழிநடைப் பாடல்

    சாஸ்தா காயத்ரி

    தர்ம சாஸ்தா மூல மந்திரம்

    மங்களம்

    மாலை கழற்றுவதற்கு முன் சொல்ல வேண்டிய மந்திரம்

    சபரிமலையில் இரவு நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

    கையில் இருக்க வேண்டிய ஏடு

    இறை அவதாரம் என்றாலே அற்புதம் நிகழ்த்துவதாகத்தான் இருந்திருக்கிறது. ராமன், கிருஷ்ணன் போன்ற அவதாரங்கள் மனித இயல்பையும் மீறி பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கின்றன. இந்த அதிசயங்கள் எல்லாம் வெறும் பிரமிப்புக்காக மட்டுமல்ல, குறிப்பிட்ட அவதார நோக்கத்தை வலியுறுத்துவதற்காகவும்தான். அந்த நோக்கத்தின் அடிநாதம், தீமைகள் அழிய வேண்டும் என்பதுதான்.

    தீய சிந்தனைகள், தீய செயல்கள் எல்லாவற்றையும் தீயிட்டுப் பொசுக்க வேண்டும் என்ற வேட்கையின் வெளிப்பாடுதான் இந்த அவதாரங்களின் நோக்கங்கள். இதை ஐயப்ப அவதாரத்திலும் உணரமுடியும். இந்த தத்துவத்தை எளிமையாக விளக்குகிறது இந்த நூல். உரையாடல் பாணியில் பல சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறது. கடுமையாக தவமிருந்து வரம் கேட்கும் அரக்கிக்கு அவ்வாறு வரம் கொடுத்ததோடு, அவளுடைய தீய எண்ணங்களை அறவே அழித்துவிடுமாறு பிரம்மன் அறிவுறுத்துவது - மகிஷமுகியின் கோபம் - துர்வாசரின் சாபம் - பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்கப்படவேண்டிய கட்டாயம் - மஹாவிஷ்ணு மோகினியாக அவதாரம் எடுக்க வேண்டிய அவசியம் - சிவ, விஷ்ணு அம்சமாக ஹரிஹரசுதன் அவதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் - அப்படிப் பிறந்த குழந்தை பிரம்மனின் வரம் பெற்ற அரக்கியை அழிக்கும் சம்பவம் என்று ஒரு புள்ளியில் ஆரம்பித்து, பல இணை சம்பவங்களை உட்புகுத்தி மீண்டும் அந்தப் புள்ளியிலேயே முடியும் அற்புதமான சரிதம் இது.

    பாற்கடலைக் கடைய உதவிய வாசுகி பாம்பு, பின்னாளில் தன் வாரிசுகளை சிவபெருமானுக்கு அணிகலன்களாக விளங்கச் செய்தது; ஸ்வாமி ஐயப்பன் புலிமீது வந்ததற்கான நயமான விவரிப்பு; ஸ்வாமி வித்தியாசமாய் அமர்ந்திருக்கும் கோலத்திற்கான விளக்கம், துளசி மணி, இருமுடி மற்றும் பதினெட்டுப் படி தத்துவம், சபரிமலையில் ஸ்வாமி கோயில் திறந்திருக்கும் நாட்கள்-நேரங்கள், ஸ்வாமி ஐயப்பன் ஸ்தோத்திரப் பாடல்கள், மந்திரங்கள் என்று பல தகவல்கள்...

    கன்னிசாமிகளுக்கு மட்டுமல்ல; மூத்த சாமிகளுக்கும் உகந்ததோர் வழிகாட்டி, இந்தப் புத்தகம்.

    -ஆசிரியர்

    ஸ்வாமியே... சரணம் ஐயப்பா...

    கலியுகத் தெய்வமாக வழிபடப்படும் ஸ்வாமி ஐயப்பன், மனித ரூபமாக அவதாரம் எடுத்து வாழ்ந்தது மொத்தம் பன்னிரண்டு வருடங்களே என்ற புராண உண்மை கவனிக்கப்பட வேண்டியது. அந்தக் குறுகிய காலத்தில் கடமை, ஒழுக்கம், தீயனவற்றை அழிக்கும் ஆற்றல் எல்லாம் பொருந்தியிருந்த, அதிசயிக்கத்தக்க அவதாரம் அது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சிவ சக்தி, விஷ்ணு சக்தியிடையே பேதமில்லை என்பதை வலியுறுத்துவதற்காகவே தோன்றிய அவதாரம். பக்த மனங்களிலும் எந்த பக்தி பேதமும் இருத்தல் கூடாது என்பதை நிலைநிறுத்தத் தோன்றிய அவதாரம். ஐயப்ப தரிசனத்துக்காக மாலை போட்டுக்கொள்ளும் அனைவரும் ஒரே நோக்கில், தம்மிடையே உயர்வு-தாழ்வு பாராமல், ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு சபரிமலை யாத்திரை சென்று வர வழிவகுத்த அற்புத அவதாரம்.

    கலியுகத்துக்கு இந்த ஒற்றுமை தேவை, மனக்கட்டுப்பாடு தேவை, ஒழுக்க நெறி தேவை என்பதை ஆன்மிக பூர்வமாக அறிவுறுத்தும் ஒரு பக்தி முறையாகத்தான் சபரிமலை யாத்திரை மெற்கொள்ளப்படுகிறது. ஒரு மண்டல கால விரத நெறிமுறைகளும், ஆசார பழக்கங்களும், வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான யாத்திரை அது.

    ஸ்வாமி ஐயப்பனின் புராணம் மட்டுமல்லாமல், முதன் முதலாக சபரிமலை யாத்திரை செல்லும் கன்னி சாமி மாலை போட்டுக் கொள்வது முதல் விரதம் மேற்கொண்டு, குருசாமியின் ஆதரவுடனும் வழிகாட்டுதலுடனும் யாத்திரையை முழுமை செய்வதுவரையிலான தகவல்கள் கொண்டது இந்தப் புத்தகம்.

    இந்த நூலைப் பிரசுரம் செய்ய மனமுவந்து அனுமதி அளித்த தினகரன் நிர்வாக இயக்குநர் திரு ஆர்.எம்.ஆர். ரமேஷ் அவர்களுக்கு என் வாழ்நாள் நன்றிகள் உரித்தாகும். இந்த நூல் உருவாக அரிய பல யோசனைகளைச் சொல்லி, தகவல்களும் அளித்த என் இளவலுக்கு ஒப்பான திரு ந. பரணிகுமார் அவர்களுக்கும் என் நன்றி.

    பிரபுசங்கர்

    1. வாரிசு இல்லாத அரசு

    சுவாமியே சரணம் ஐயப்பா!

    காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா!

    ஜோதி வாழ்பவனே சரணம் ஐயப்பா!

    சபரிமலை வாசனே சரணம் ஐயப்பா!

    -சரணகோஷம் வானம்வரை ஒலித்தது.

    குருசாமி கோபாலனின் வீட்டிலிருந்துதான் புறப்பட்டு விண்ணோக்கிப் பரவியது, அந்த தெய்வீகப் பரவச கோஷம்! அன்று கார்த்திகை மாதம் முதல்நாள். சபரிமலை யாத்திரைக்காக விரதம் ஏற்கும் நாள். அதற்கான மாலை தரிக்கும் நாள்.

    அந்த வீடு முழுக்கவே தெய்வீக மணம் கமழ்ந்தது.

    கட்டுக் கட்டாக ஏற்றப்பட்ட ஊதுபத்திகள், வாசனை சாம்பிராணி என்று நறுமணம் சற்று அடர்த்தியாகவே அனைவரையும் வசீகரித்தது.

    நடுக்கூடத்தில் அழகாய்ச் சிறிய அளவில் பதினெட்டு படிகள். அதற்கு மேல் வீற்றிருந்தான் ஹரிஹரசுதன்! அவன் எழில்கோலம் காட்டிய படத்தை, மலர்களும் குருத்தோலைகளும், விரிந்த தென்னம்பாளைகளும் அலங்கரித்திருந்தன. சுற்றிலும் தீபங்கள் அழகாகப் பிரகாசித்தன.

    எதிரே, அவன் பாதத்துக்கு அருகில், ஜெகஜ்ஜோதியாக கற்பூர ஜ்வாலை திகுதிகுவென ஆனால் ஒயிலாக அசைந்தாடி எரிந்து கொண்டிருந்தது! ஐயன் கற்பூரதீபப் பரிமளப் பிரியனல்லவா!

    சரண கோஷத்தைத் தொடர்ந்து பஜனைப் பாடல்கள் தொடங்கின.

    குருசாமி கோபாலனும், அவருடன் மாலை தரித்துக் கொண்ட நிறைய பக்தர்களும், மனம் லயித்துப் பாடினார்கள். இதயம் கசிய ஐயப்பனை எண்ணி எண்ணிக் கரைந்தார்கள்.

    பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது. அடுத்து அன்னதானம்!

    கற்பூர ஆரத்தி கரையட்டும் சாமி, அப்புறம் சாப்பிடலாம்! என்றார் ஒரு பக்தர்.

    அதுவரைக்கும் ஐயப்பனைப் பற்றியும், சபரிமலை யாத்திரை பற்றியும் சொல்லுங்க சாமி. இந்த முறை நம்மோடு நிறைய கன்னி சாமிங்க வராங்க. இந்த விரதம் பற்றிய முறைகளெல்லாம் தெரிஞ் சுக்க அவங்களும் ரொம்ப ஆவலாக இருக்காங்க சாமி! என்று கேட்டார் இன்னொருவர்.

    "அதைவிட பாக்கியம் எனக்கு வேறென்ன இருக்கு சாமி? முதல்ல கலியுக வரதனும், கண்கண்ட தெய்வமுமாகிய ஐயன் ஐயப்பன் வரலாறை ஒரு கதை போலவே சொல்லிவிடுகிறேன். பிறகு சபரிமலை யாத்திரை பற்றியும்

    Enjoying the preview?
    Page 1 of 1