Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aandroor Uthirtha Aanmeega Muthukal
Aandroor Uthirtha Aanmeega Muthukal
Aandroor Uthirtha Aanmeega Muthukal
Ebook339 pages1 hour

Aandroor Uthirtha Aanmeega Muthukal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாட்டி, அத்தை, மாமா என்ற அன்பு கலந்த கலாசாரம் காலத்தின் சீற்றத்தால் கைரைந்துவிட்டது. முதியவர்கள் நன்னெறிக் கதையோடு சாதத்தை ஊட்டி குழந்தைகளை வளர்த்த காலம் இப்போது வெறும் கனவே. அந்த முதியோர்கள் இப்போது இல்லங்களில் இல்லை; ‘முதியோர் இல்லங்களில்’ இருக்கிறார்கள்!

வீட்டில் இருக்கும் இந்தக் குறையை வெளியே சில மேடைகள் நிறைவு செய்கின்றன. ஆமாம், கோயில் பிராகாரங்களில் மட்டுமே கேட்கப்பட்டுவந்த ஆன்மிகச் சொற்பொழிவுகள் இப்போது பல மேடைகளில், பொழுதுபோக்கு அரங்குகளில் கூட ஒலிக்கின்றன. ஒருநாள் நிகழ்ச்சியாக மட்டுமின்றி, தொடர் நிகழ்ச்சிகளாக, பல நாட்களுக்கு அந்தச் சொற்பொழிவுகள் தேனமுதை வாரிவாரி வழங்குகின்றன. இதிகாச, புராண, காவியங்களிலிருந்து அப்படிச் சொற்பொழிவுகள் நிகழ்த்துபவர்கள் அள்ளித் தந்த அமுதுதான் எத்தனை இனிமை, சுவை!

திருமுருக கிருபானந்த வாரியார் ஒருமுறை சொன்னார்: “எதையாவது பார்த்துக்கொண்டேயிருந்தால் கண்கள் வலிக்கும்; எதையாவது தின்று கொண்டேயிருந்தால், அல்லது பேசிக்கொண்டேயிருந்தால் வாய் வலிக்கும். ஆனால் எவ்வளவுதான் கேட்டுக்கொண்டிருந்தாலும், காது வலிக்காது. ஆமாம், இரு காது - வலி இருக்காது!”

அத்தகைய சொற்பொழிவாளர்கள் சிலருடைய உரைகளிலிருந்து பிழியப்பட்ட கரும்புச் சாறாக இந்நூல் அமைகிறது. இதனைப் பருகப் பருக மனவலிமையும், ஆன்மபலமும் கூடும் என்பது நிச்சயம்.

- ஆசிரியர்

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580130605216
Aandroor Uthirtha Aanmeega Muthukal

Read more from Prabhu Shankar

Related to Aandroor Uthirtha Aanmeega Muthukal

Related ebooks

Reviews for Aandroor Uthirtha Aanmeega Muthukal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aandroor Uthirtha Aanmeega Muthukal - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    ஆன்றோர் உதிர்த்த ஆன்மிக முத்துகள்

    Aandroor Uthirtha Aanmeega Muthukal

    Author:

    பிரபுசங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கனவு நனவாகிறது

    கேட்கக் கேட்க இனிக்குதடா!

    அரற்றியவள் எப்படிக் குளிர்ந்தாள்?

    நாமத்தில் இருக்கிறது நன்மை

    ஆழ்மன பக்தி

    நீயா? நானா?

    தர்மக் கணக்கு

    ஒரு நாமத்தில் ஆறு தெய்வங்கள்

    தெய்வமே கேட்ட தெய்வத்தின் கதை

    கடவுள் இங்கே இருக்கிறார்

    பின்னாலேயே வரும் இறைவன்

    சுண்டுவிரலே ஆனாலும் முதல் விரல்

    அன்றைய புராணமே இன்றைய நடைமுறையானது

    தண்ணீர் தத்துவம்

    எதிர்மறையும் நேர்மறையாக

    வேள்வி என்றால் என்ன?

    பாம்பும் பரந்தாமனும்

    அந்நாளைய டிராவலர்ஸ் செக்

    கலியுகத் தொடக்கத்தின் அறிகுறி

    கடவுள் ஜபத்திற்குக் கணக்கு

    சிறிய பெரியவர்

    குறையொன்றும் இல்லை, கண்ணா!

    சாதிக்குள் அடங்காத சாதனையாளன்

    பாயசத்திலும் பங்கு; பாசத்திலும் பங்கு

    பற்களுக்கு நடுவே

    இயலாமை உணராமல் அளித்த வாக்கு

    உதவிய அடி

    அவமானக் கணக்கு

    கடவுளின் கருணை

    சாப்பாட்டுக் கண்ணன்?

    நான்குக்கு ஒரு ஃபார்முலா

    யானை போலும் இறைவன்

    வா கிருஷ்ணா வா!

    தியாகத்தின் உயர்வு

    யாரோ செய்த தவறுக்கு யாருக்கோ தண்டனை

    பரமேஸ்வரனையே பிடித்த சனீஸ்வரன்!

    கூவாத குயில்

    வேடனுக்குக் கட்டுண்ட நரசிம்மர்

    பக்தியால் தோலும் சுவைக்கும்

    பரிசு தராத மன்னன்

    பூஜையில் குறுக்கிட்ட பால்காரன்

    பக்தனின் பசியைப் பொறுக்காத பகவான்

    மணல் பிரசாதம்

    பக்திப் பூக்கள்

    கோபத்துக்கு வடிகால்

    தானத்தை எப்போது செய்வது?

    நாராயணா என்னும் நூல்

    என்ன நினைத்தான் கிருஷ்ணன்?

    பசி தீர்த்த பருக்கை

    மனைவிக்கு மரியாதை

    பெய்யாத மழையால் பிழைத்தவர்கள்

    தோளில் அமர்ந்த கிளி

    உரத்த குரலில் உண்மை

    பீதாம்பரத்தில் படிந்த கறை

    ஊசியின் காதுக்குள் யானை!

    இருளில் ஓர் ஒளி

    முனிவரின் பிராயசித்தம்

    நெகிழ்ந்த மோதிரம்

    ஆமாம் போட்ட அர்ஜூனன்!

    தலைவா, தீர்ப்பை மாற்றிச் சொல்லு

    கடலில் கலக்காத நதி

    அவனுக்குத் தெரியும்

    செந்தூர அனுமன்

    எது கௌரவம்?

    பக்தர்களில் ஒரு பரதன்

    வாயாடி

    ஒரே ஒரு ஆடு கொடு

    நான் நீயானால், நீ நானாவாய்!

    கண்ணன் கையில் வேல்

    கோசலையின் மகனே...

    கடவுள் வாழும் வீடு

    எப்படி நினைக்க முடியும்?

    காலில் விழுந்தான், காரியம் சாதித்தாள்!

    பழைய பெருமாள்

    அக்பரா? ஆண்டவரா?

    வாய்க்கு எட்டாதது

    இறையருள் எப்படிக் கிடைக்கும்?

    விதி

    தெய்விக இலை

    எட்டுக்கு மேல் ஐந்து

    பக்தியும் ஒரு பசிதான்

    கூட்டுப் பிரார்த்தனையின் சக்தி

    பணக்காரனே பெரிய துறவி!

    இருட்டுப் பால்

    மழையின் கோபம்

    ஊ...ர்வலம்

    மூன்று மகன்கள்

    அர்த்தமில்லாத ஆணவம்

    பெரியார் பெற்ற பிரசாதம்

    என் தங்கமே தங்கம்

    இன்றைய கும்பகர்ணர்கள்

    பயணத்தில் கிடைத்த பழம்

    அன்பே வா!

    மூன்றின் மகத்துவம்

    ஆண்டாள் பாடிய அழகு

    அவன் காலடியில் இவர்

    எப்போதும் நல்லவரே!

    கண்ணனின் பங்காளி

    நான், நானில்லை

    பாமாவுக்கு மட்டும்தான் பாரிஜாதமா?

    தென்றலே என்னைத் தொடு

    பெயர் ஆராய்ச்சி

    பாச விழிகள்

    வசீகரித்த வளையல் ஒலி

    பீஷ்மரும் பீமனும்

    பாதுகை அடமானம்

    கடிதத்தில் கண்ணீர்த்துளி

    பசி தீர்த்த விரல்

    திருப்பித் தந்த தீ

    வேண்டுமா வேண்டாமா?

    ஒரு முறை, ஒரே முறை...

    நதியில் நகராத படகு

    குதிரைகளைக் குளிப்பாட்டிய கிருஷ்ணன்

    வழியில் கிடைத்த வைரம்

    மன்னரின் ஓவியம்

    குதிக்கச் சொன்ன குரல்

    பால்சாதமா? தயிர்சாதமா?

    அரண்மனையில் அடைபடாத பாட்டு

    நீர் மேல் நடந்தவள்

    சேர்க்கை வாசம் சோகமும் தரும்!

    தமிழ் என்ற அமிர்தம்

    வாழ்வின் பொருள்

    குறைந்த சுவாசம், அதிக ஆயுள்!

    கடவுளின் ஆள்காட்டி விரல்!

    நாக்கும் மூக்கும்

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

    மகானைச் சோதித்த மன்னன்

    குருவின் அருள்

    மனமும் பால்போல

    வறட்டியிலும் இறையொலி

    பூஜைகள் யாருக்கு?

    கூப்பிடும் தூரமும் கைக்கெட்டும் தூரமும்

    புனிதமானது கங்கை

    பார்வை

    இறைவனின் இடுப்பளவு

    சனிப் பார்வை

    யார் வல்லவன்?

    எல்லாமே இன்சுவைதான்

    ஒற்றுமைதான் சுபிட்சம்

    அகன்றது அகங்காரம்

    கர்ணன் கர்ணன்தான்

    அதிகம் படித்தவர்

    எது முடியுமோ, அது போதும்

    யார் யாருக்கு எந்தெந்த இடம்?

    விஷ்ணுவுக்கு ருத்ராட்சம்

    இசையின் மகிமை

    மேகமே மழை தடுக்கும் அரணாக...

    மன்னன் மனம்

    பக்தனுக்குத் தண்டனை, பெருமாளுக்கு வேதனை

    யார் பக்தி சிறந்தது?

    செங்கல் மீது நின்ற பாண்டுரங்கன்

    கணக்குப் பார்க்கும் வேண்டுதல்கள்

    பக்தி உலகின் சக்கரவர்த்தி

    தெய்வ சிகாமணி

    பக்தப்ரியன்

    ஒன்பது வகை பக்தி

    விஞ்ஞானத்திற்கும் மேம்பட்டது ஜோசியம்

    திருப்பதியில் எப்படித் தரிசனம் செய்யவேண்டும்?

    உளமார்ந்த இறைவழிபாடு

    ஆதித்ய ஹ்ருதயம் அறிவோமா?

    பக்தியில் முழு ஈடுபாடு

    தாயுமானவர் யார்?

    கும்பாபிஷேகம் என்ற அபூர்வ நிகழ்ச்சி

    தெய்வங்களுக்கு ராஜ அலங்காரம்

    புராணங்களில் வியத்தகு காட்சிகள்

    கடவுளை எப்படி நினைப்பது?

    ஆண்டவனின் அடிச்சுவடுகள்

    எதெல்லாம் பாவங்கள்?

    விபூதியை வீணாக்கலாகாது

    துன்பமில்லாப் பெருவாழ்வு

    கடவுளுக்கு நைவேத்தியம்

    கடவுளுக்குச் செய்யப்படும் வழிபாடுகள்

    தெய்வத் திருவடி

    இறைவனிடம் எதைக் கேட்பது?

    அதுதான் சடாரி

    கேரளத்துக் கடவுள்

    மாதா, பிதா, குரு, தெய்வம்

    சுயம்பு மூர்த்திகள்

    யாகப்பொருட்கள் கடவுளைப் போய்ச் சேருமா?

    பொறுப்புள்ள சந்நியாசிகள்

    பொம்மைக் கடவுள்கள்

    ஆன்மிகப் பயிற்சிகளால் ஆனந்தமே

    முனிவர்கள் சாபமிடலாமா?

    இறைவனுக்கு இடம் கொடுப்போம்!

    சொர்க்கம் யாருக்கு?

    உதவுவதே மனித மாண்பு

    கனவு நனவாகிறது

    பாட்டி, அத்தை, மாமா என்ற அன்பு கலந்த கலாசாரம் காலத்தின் சீற்றத்தால் கைரைந்துவிட்டது. முதியவர்கள் நன்னெறிக் கதையோடு சாதத்தை ஊட்டி குழந்தைகளை வளர்த்த காலம் இப்போது வெறும் கனவே. அந்த முதியோர்கள் இப்போது இல்லங்களில் இல்லை; ‘முதியோர் இல்லங்களில்’ இருக்கிறார்கள்!

    வீட்டில் இருக்கும் இந்தக் குறையை வெளியே சில மேடைகள் நிறைவு செய்கின்றன. ஆமாம், கோயில் பிராகாரங்களில் மட்டுமே கேட்கப்பட்டுவந்த ஆன்மிகச் சொற்பொழிவுகள் இப்போது பல மேடைகளில், பொழுதுபோக்கு அரங்குகளில் கூட ஒலிக்கின்றன. ஒருநாள் நிகழ்ச்சியாக மட்டுமின்றி, தொடர் நிகழ்ச்சிகளாக, பல நாட்களுக்கு அந்தச் சொற்பொழிவுகள் தேனமுதை வாரிவாரி வழங்குகின்றன. இதிகாச, புராண, காவியங்களிலிருந்து அப்படிச் சொற்பொழிவுகள் நிகழ்த்துபவர்கள் அள்ளித் தந்த அமுதுதான் எத்தனை இனிமை, சுவை!

    திருமுருக கிருபானந்த வாரியார் ஒருமுறை சொன்னார்: எதையாவது பார்த்துக்கொண்டேயிருந்தால் கண்கள் வலிக்கும்; எதையாவது தின்று கொண்டேயிருந்தால், அல்லது பேசிக்கொண்டேயிருந்தால் வாய் வலிக்கும். ஆனால் எவ்வளவுதான் கேட்டுக்கொண்டிருந்தாலும், காது வலிக்காது. ஆமாம், இரு காது - வலி இருக்காது!

    அத்தகைய சொற்பொழிவாளர்கள் சிலருடைய உரைகளிலிருந்து பிழியப்பட்ட கரும்புச் சாறாக இந்நூல் அமைகிறது. இதனைப் பருகப் பருக மனவலிமையும், ஆன்மபலமும் கூடும் என்பது நிச்சயம்.

    -ஆசிரியர்

    கேட்கக் கேட்க இனிக்குதடா!

    பெரும்பாலும் தெரிந்த விஷயங்கள்தான். ஆனால் அவற்றை ஒவ்வொருவரும் தத்தமக்கே உரிய பாணியில், தம் கற்பனைக்கு எட்டிய நயங்களைச் சேர்த்துச் சொல்லும்போதுதான், கேட்பதற்கு அவை எத்தனை சுவையாக இருக்கின்றன! வித்தியாசமான கருத்துகள், வர்ணனைகள், விளக்கங்கள், உபமான உபமேயங்கள்...

    திருமுருக கிருபானந்த வாரியார் ஒருமுறை சொன்னார்: எதையாவது பார்த்துக்கொண்டேயிருந்தால் கண்கள் வலிக்கும்; எதையாவது தின்றுகொண்டேயிருந்தால், அல்லது பேசிக்கொண்டேயிருந்தால் வாய் வலிக்கும்.ஆனால் எவ்வளவுதான் கேட்டுக்கொண்டிருந்தாலும், காது வலிக்காது.ஆமாம், இரு காது -வலி இருக்காது!

    அதனால்தான் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும், பஞ்ச தந்திரக் கதைகளையும், ஸ்ரீமத் பாகவதத்தையும், திருவிளையாடற்புராணத்தையும் எத்தனை பேர் சொன்னாலும், எத்தனை முறை சொன்னாலும், கேட்டுக்கொண்டேயிருக்கத் தோன்றுகிறது; காதுகளில் தேன் வந்து பாய்கிறது; கேட்கக் கேட்க இனிக்கிறது.

    அந்த வகையில் ஆன்மிகச் சொற்பொழிவாளர்களின் உரைகளைக் கேட்டபோதும், அவர்களைத் தனியே சந்தித்துப் பேசிய சில சந்தோஷ சந்தர்ப்பங்களிலும், சிலசமயம் பத்திரிகைகளுக்காக அவர்களைப் பேட்டி கண்டபோதும் என்னைக் குதூகலிக்கவைத்த, என்னை மயக்கிய கருத்துகள், வர்ணனைகளின் தொகுப்பே இந்த நூல்.

    இதுபோன்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் மத்தியில் கையில் நோட்டுப் புத்தகத்துடனும், பேனாவுடனும் உட்கார்ந்திருக்கும் ஒரே நபர் பெரும்பாலும் நானாகத்தான் இருப்பேன். சொற்பொழிவாளர் சொல்லும் மிகவும் நயமான எந்தச் சிறு விஷயத்தையும் விட்டுவிடக்கூடாது என்ற தீர்மானத்துடன், காதுகளைக் கூர்மையாகத் தீட்டியபடி காத்திருப்பேன். அப்படிக் கேட்ட தேன்துளிகளை என் பேனா உடனே பிரதி எடுக்கும். எனக்கு மட்டுமே புரியக்கூடிய சில சுருக்கு எழுத்துகளைப் பயன்படுத்தி முழுமையாகப் பதிவு செய்துகொண்டுவிடுவேன். நிகழ்ச்சி முடிந்த பிறகு, நான் கேட்ட ஆன்மிக முத்துகளை மனதுக்குள் அசைபோட்டபடி மீண்டும் மீண்டும் ரசித்து மகிழ்வேன். எண்ணத்தையும், குறிப்பேட்டில் நான் பதிவு செய்தவற்றையும் கட்டுரையாக மாற்றும்போது, சிலசமயம் சந்தேகம் வந்துவிடும். இந்த வார்த்தை சரியா, அவர் சொன்னதுதானா, கிறுக்கலாகப் பதிவு செய்துகொண்ட குறிப்பை எளிதாகப் படித்துவிட முடியும் என்ற மிகை நம்பிக்கை இப்போது காலை வாரிவிடுகிறதே என்றெல்லாம் குழப்பம் வரும்.

    வேறு சிலசமயங்களில் சொற்பொழிவாளர் பேச்சில் அப்படியே நெகிழ்ந்துபோய் உட்கார்ந்துவிடுவேன். குறித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே தோன்றாதபடி அவர் சொல்லும் கருத்தில், வர்ணனையில் லயித்துவிடுவேன். பளிச்சென்று சுயநினைவுக்கு வந்து குறித்துக்கொள்ள முயலும்போது அவர் அடுத்த சுவையான கருத்தை விளக்கிக்கொண்டிருப்பார்.

    இதுபோன்ற சமயங்களில் அந்தச் சொற்பொழிவாளரையே நேரில் சந்தித்து என் சந்தேகங்களை, தவறவிட்ட குறிப்புகளை அவருடைய வார்த்தைகளிலேயே மீண்டும் கேட்டு எழுதிக்கொண்டு வருவேன். அப்படிப்பட்ட சந்திப்பில், முந்தினநாள் நிகழ்ச்சியில் சொல்லாத வேறு பல விஷயங்களையும் அவர் பரிமாறிக்கொள்வார். இது என்னைப் பொறுத்தவரை போனஸ்தான்!

    திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாச்சார்யார், சுவாமி சின்மயானந்தர், புலவர் கீரன், பாலகிருஷ்ண சாஸ்திரிகள், பகவான் சத்யசாயிபாபா மற்றும் ஜெயராமசர்மா, மதிவண்ணன், சரஸ்வதி ராமனாதன், பருத்தியூர் சந்தானராமன், கிருஷ்ண ப்ரேமி, மா.கி. ரமணன், கல்யாணபுரம் ஆர்.ஆராவமுதன், வி.எஸ். கருணாகரன், கண்ணன் ஸ்வாமிகள், ஆர்.பி.என்., அரங்கராமலிங்கம், நாகை முகுந்தன், கலியாணபுரம் வீரராகவன், ஓதுவார் மாணிக்க உடையார், வடகுடி நாராயணதீட்சிதர், சந்தான கோபாலாச்சாரியார், இளம்பிறை மணிமாறன், கபிஸ்தலம் ஸ்வாமிகள் ஸ்ரீநிவாசன், முரளிதர ஸ்வாமிகள், ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர்... என்று எத்தனையோ ஆன்மிகப் பெரியோர்கள் அருளிய நல் முத்துகளின் தொகுப்பே இந்த அழகு மாலை.

    பல பத்திரிகைகளில் நான் எழுதிய இந்த உரைப்பகுதிகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட மனமுவந்து இசைவளித்த கல் பதிப்பக நிர்வாக இயக்குநர் திரு ஆர்.எம்.ஆர்.ரமேஷ் அவர்களுக்கு என்றென்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    - பிரபுசங்கர்

    prabhuaanmigam@gmail.com

    சாமர்ப்பணம்

    இத்தனை கருத்துகளை

    சேகரித்துக்கொள்ளவும்

    அவற்றைப் பத்திரிகைகளில்

    வெளியிடவும் அருள்கூர்ந்து

    அனுமதி அளித்த அனைத்துச்

    சொற்பொழிவாளர்களுக்கும்...

    அரற்றியவள் எப்படிக் குளிர்ந்தாள்?

    துரியோதனனின் அரசவையில் திரௌபதி நூற்றுக்கணக்கானோர் சூழ்ந்திருக்க, தன்னைத் துகிலுரிக்கும் காமுகனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத வேதனை கொண்டாள். தன்னை உரிமை கொண்டாடுபவர்களும், அடிமைகளாய்ச் சொல்லிழந்து, செயலிழந்து, தலைகுனிந்து அமர்ந்திருக்க, இறுதி முயற்சியாகக் கிருஷ்ணனையே சரணாகதியடையும் எண்ணத்தில் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று அரற்றினாள் திரௌபதி.

    இதை வில்லிப்புத்தூரார் சொல்லும்போது, ‘கோவிந்தா, கோவிந்தா என்றரற்றி குளிர்ந்து உடல் புளகித்து உள்ளமெல்லாம் உருகினாளே’ என்கிறார்.

    அரற்றுதல் என்பது தன்னால் ஏதும் செய்ய இயலாத வெறுமை நிலையில் கதறிக் கதறித் தன் துன்பத்தை வெளிப்படுத்தும் ஓர் ஆற்றாமை நிலை. ஆனால், ‘கோவிந்தா’ என்று அரற்றிக் ‘குளிர்ந்தாள்’ என்கிறாரே வில்லிப்புத்தூரார், அது எப்படி?

    துச்சாதனன் தன் சேலையைத் தொட்டதுமே, துன்ப மிகுதியால் தன் உயிரே போய்விட்ட நிலையை ஏற்கெனவே அடைந்திருந்தாள் திரௌபதி. உயிர் நீத்த உடல் என்றால் அது சமாதி நிலையடைவது தானே, அடுத்தது? சாகும் தறுவாயில், ‘கோவிந்தா’ என்ற நாமத்தைத் துதித்து, அவள் சமாதி நிலையை அடைந்துவிட்டாள். அதனால்தான் கோவிந்தா என்று அரற்றி ‘குளிர்ந்தாள்’ என்கிறார் வில்லிபுத்தூரார். இல்லாவிடில் கோபத்தால், அவமானத்தால், கையாலாகாத கணவர்களின் இழிநிலையால், கண் கூசினாலும், பார்வையைத் தடுக்க முடியாத கொடுமையால் வெம்மை பூண்டு, எதையும் அழித்துவிடும் ஜ்வாலையாய், ஆக்ரோஷத்துடன் வீறுகொண்டு எழுந்திருப்பாளே! ஆனால் திரௌபதி அந்தக் கட்டத்தையெல்லாம் கடந்துவிட்டிருந்தாள். தன் தகிப்பால் மூவுலகையும் பொசுக்கும் ஆற்றலையும் மீறி, தன்னை மட்டுமே அழித்துக்கொள்ளும் சமாதி நிலைக்கு வந்துவிட்டிருந்தாள். அதனால்தான் அவள் கோவிந்த நாமம் தவிர வேறொரு சொல் உதிர்க்கவில்லை. கிருஷ்ணனும் ஓடோடி வந்தான். முடிவிலா நீளமுள்ள சேலையை அளித்தான். பாரதியார் சொன்னதுபோல ‘கடல் கலகலத்து எறிந்திட்ட அலைகள் போல வண்ணச் சேலைகளாய் அவை வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே.’

    ‘கோவிந்தா’ என்று அழைத்தவுடன் கிருஷ்ணன் ஆபத்பாந்தவனாக வந்து காத்தானே, அது ஏன்? அப்படி திரௌபதி அழைத்தும் அவன் வந்து அவள் மானத்தைக் காத்திருக்காவிட்டல் அவன் மானம்தானே போயிருக்கும்! இறைவன் நாமத்துக்கு அவ்வளவு சக்தி!

    நாமத்தில் இருக்கிறது நன்மை

    உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை, ‘நாமீயிடம் த்வேஷம் கொண்டாலும், நாமத்திடம் த்வேஷம் இல்லாதிரு’ என்கிறார். அதாவது ‘பெயரைக் கொண்டிருப்பவரிடம் உனக்கு வெறுப்பு இருந்தாலும், அவருடைய பெயரில் வெறுப்பு கொள்ளாதிரு’ என்று அதற்குப் பொருள்.

    மனைவியிடம் மோகம் கொண்ட ஒரு கணவன், அவள் பேச்சைக் கேட்டு, பெற்ற தாயைத் துன்புறுத்தி வந்தான். தினமும் காலையில் வேலைக்குப் போய் மாலையில் அவன் திரும்பி வரும்போது, மனைவி, மாமியார் மீது புகார் பட்டியல் வாசிப்பாள். உடனே, மனைவி மனம் மகிழும் வகையில் வீட்டிலிருந்த தூணில் தாயைக் கட்டிப்போட்டு மகன் அடிப்பான். இது தினசரி வாடிக்கை.

    இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு நிரந்தரமாகிவிட்டதென்றால், மாலையில் மகன் வீடு திரும்பும்போது ஒரு கயிற்றோடு தூணுக்குப் பக்கத்தில் போய் தாயே நிற்கும் அளவுக்கு!

    அதுபோன்ற ஒரு முன்னிரவு நேரத்தில் தாய்க்கு தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தான் மகன். திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு இருள் சூழ்ந்துகொண்டது. அதே கணம் ஓங்கிய கையைத் தாயின் கன்னம் நோக்கி இறக்கினான் மகன்.

    Enjoying the preview?
    Page 1 of 1