Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siva Kali Peralai
Siva Kali Peralai
Siva Kali Peralai
Ebook194 pages1 hour

Siva Kali Peralai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எளிய சொற்கள், மென்நடை, ஆழக்கருத்து இவற்றை உணர்த்திடும் பாங்கு, கவிதை இலக்கணத்தோடு தெள்ளிய நீரோடை போன்ற தமிழ்ப் (பா)பூக்கள்.

இந்த நூலைப் படித்ததும் நமது மனதினுள் தோன்றிய முதல் எண்ணங்கள் இவை.

வடமொழிப் புலமை மிக்கப் பக்தி இலக்கியங்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடத்து "அண்ணா" சுப்ரமணியம் அவர்களால் தற்காலத்து தமிழறிந்த நல்லோரைச் சென்றடைந்தன. அவை யாவும் விளக்கவுரைகளாகி எல்லோருக்கும் உயர் மறைகள் எளிதில் கிட்டிய பேறு பெற்றோம்.

ஆனாலும் பகவத்பாதர் ஆதிசங்கரரின் கவிதை நயங்களில் ஒருசில, கவிதை வடிவிலேயே தமிழுலகம் காணப் பெற்றது வெகு சிலரால் மட்டுமே.

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580149107575
Siva Kali Peralai

Read more from Padman

Related to Siva Kali Peralai

Related ebooks

Reviews for Siva Kali Peralai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siva Kali Peralai - Padman

    https://www.pustaka.co.in

    சிவகளிப் பேரலை

    Siva Kali Peralai

    Author:

    பத்மன்

    Padman

    For more books

    http://www.pustaka.co.in/home/author/padman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சிவகளிப் பேரலை என்ற நூலுக்கான அணிந்துரை

    எளிய சொற்கள், மென்நடை, ஆழக்கருத்து இவற்றை உணர்த்திடும் பாங்கு, கவிதை இலக்கணத்தோடு தெள்ளிய நீரோடை போன்ற தமிழ்ப் (பா)பூக்கள்.

    இந்த நூலைப் படித்ததும் நமது மனதினுள் தோன்றிய முதல் எண்ணங்கள் இவை.

    வடமொழிப் புலமை மிக்கப் பக்தி இலக்கியங்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடத்து ‘அண்ணா’ சுப்ரமணியம் அவர்களால் தற்காலத்து தமிழறிந்த நல்லோரைச் சென்றடைந்தன. அவை யாவும் விளக்கவுரைகளாகி எல்லோருக்கும் உயர் மறைகள் எளிதில் கிட்டிய பேறு பெற்றோம்.

    ஆனாலும் பகவத்பாதர் ஆதிசங்கரரின் கவிதை நயங்களில் ஒருசில, கவிதை வடிவிலேயே தமிழுலகம் காணப் பெற்றது வெகு சிலரால் மட்டுமே.

    மகாகவி பாரதியும், பின்பு கவியரசர் கண்ணதாசனும் வெளிக்கொணர்ந்த சில கவிதைப் பூக்களில் விடுபட்டுப் போனவை பல. அவற்றுள் ஒன்று, ‘சிவானந்த லஹரி’ என்ற அரும் பெரும் பக்தி இலக்கியம். அதனைத் தமிழ் வடிவில் கவிதையாக்கித் திறம்பட விளக்கமும் கொடுத்துள்ள இந்தப் புத்தக வடிவிலான ‘சிவகளிப் பேரலை’ என்ற நூல் ஓர் உயரிடத்தைப் பெறுகிறது. ஆசிரியர் பத்மனுக்கு நன்றி.

    ஆசிரியரின் கவிதைத் திறத்திற்கும், சிந்தனைக்கும் ஒருசில, சோற்றுத்துளிகள் போல...

    முன்னுரையில் ‘நிர்குண’ வழிபாடு மற்றும் ‘நற்குண’ வடிவம் என்ற சொல்லாதிக்கம் எளிமையாக வடமொழி - தமிழ் மூலமாக உணர்த்துகிறது. அதுபோன்று, காப்புச் செய்யுளில் ‘பாதமபத்மம் காப்பு’ என்ற சொற்றொடர் ஆசிரியர் பெயரையும், இறைவனின் பொற்றாமரை என்ற விளக்கத்தையும் ஒருசேர உணர்த்தும் சிலேடைப் பாங்கும் நல்ல முத்திரை உத்தி.

    ஆசிரியரின் கவிதைகளில் சில சொற்கள், தான் சொல்ல வந்த கருத்துகள், வேறு ஒரு கோணத்தில் யதார்த்தத்தைச் சுட்டிக் காண்பிப்பது போன்ற ஒரு நயத்தைக் காண முடிந்தது.

    ‘வீண்வாதம் வேண்டாம்’ என்ற 6-வது தலைப்பில் உள்ள கவிதையில் இது காணப்படுகிறது. கவிதையின் முதல் வரிக்கான விளக்கவுரை, உயர் வேதாந்த வாதங்களை இயம்புகிறது.

    சில சொல்லாட்சிகள் மனதைத் தொடுகிறது.

    ‘சிந்தையெல்லாம் சிவமயம்’ என்ற 7-வது கவிதையின் விளக்கத்திற்கு ‘இறைவனுக்கு ஆக்கிவிட்டால் இரையாக மாட்டோம்’ (பாம்பன் சுவாமிகள் கூறிய கருத்து) என்பதும்.

    9-வது கவிதைத் தலைப்பான ‘உள்ள மலரால் அர்ச்சிப்போம்’ என்பது ‘உள்ளமாகிய மலரால்’ என்றும் மற்றும் அவரவரிடம் ‘உள்ள’ மலரால் அர்ச்சித்தல் என்றும் பொருள்பட அமைந்தது சிறப்பு.

    20-வது கவிதையின் விளக்கவுரையின் கடைசி வரியில், ‘பிறகு இந்த மனக்குரங்கு எப்படிக் கூத்தாடும்?’

    ‘கூத்தனிடம் அதன் கூத்து எடுபடுமா?’ என்பது நயம்.

    ஆசிரியர் பத்மன், சிவானந்த லஹரியில் பகவத்பாதர் கூறிய உயர் வேதாந்தக் கருத்துகளை நன்கு உள்வாங்கி, தனக்கே உரித்தான முறையில் கவிதையில் சிறிது பரிச்சயம் உள்ளவர்கள்கூட ஆழ்ந்து நோக்கும்படித் தன் திறமையைக் கையாண்டிருக்கிறார்.

    இந்தப் புத்தகம் தமிழ் ஆன்மிக அன்பர்களுக்கு ஒரு நல்ல விருந்து. வாழ்த்துகள்.

    இந்த நல்ல நூலைக் கற்கும் அனைத்து உள்ளங்களும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளைப் பெறப் பிரார்த்திக்கிறோம்.

    இறைவன் தொண்டில்

    சுவாமி விமூர்த்தானந்தர்

    ஆசிரியர்,

    ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

    01.09.2012

    சென்னை

    ஸ்ரீ ஆதிசங்கரரின் பக்தி வெள்ளம்

    அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஆண்டவனின் ஏகான் வடிவத்தை ஞானமார்க்கத்தால் ஸ்தாபித்தவர் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர். உன்னுள்ளும், என்னுள்ளும், யாவருள்ளும், யாவற்றுள்ளும் உறைந்திருப்பது ஒரே சக்திதான். அந்த ஒற்றைச் சக்திதான், வானத்துச் சூரியன் பல நீர்நிலைகளில், பாத்திரங்களில் பிரதிபலிப்பதுபோல் எல்லாவிடத்தும் தோற்றமளிக்கிறார் என்ற ஒப்பற்ற அத்வைத தத்துவத்தை தனது உயரிய விளக்கங்களால் பலருக்கும் விளங்கவைத்தவர் ஸ்ரீஆதிசங்கரர்.

    தன்னுள் இறைவன் வீற்றிருப்பதை ஐயமற அறிந்துகொண்டவனுக்குத் தனியே ஒரு கடவுள் வழிபாடு எதற்கு? பதில்: தன்னுள் கடவுள் இருப்பதை அறிந்து கொண்டால் மட்டும் போதுமா? அதனை ஆராதிக்க வேண்டாமா?

    அடுத்த கேள்வி: ஏன் ஆராதிக்க வேண்டும்? இதற்குப் பதில்: கடவுளை அறிந்துகொண்ட அந்த நிலையில் இருந்து வழுவாது இருக்க. பழைய வினைகளின்படி எடுத்த இப்பிறவி நீங்கும்வரை புதிய வினைகள் பற்றாதிருக்க. மீண்டும் பூரணமாம் இறைநிலையுள் புகுவதற்கு தயார் செய்துகொள்ள. அதற்கான ஆத்ம சாதகம்தான் இறை வழபாடு.

    இதனை நிர்குண வழிபாடாக அதாவது உருவமற்ற ஞான வழிபாடாகவும் செய்யலாம். சகுண வழிபாடு எனப்படும் நற்குணங்கள் நிரம்பிய வடிவத்தைப் போற்றும் உருவ வழிபாடாகவும் செய்யலாம் என்பதே ஆதிசங்கரர் கொள்கை.

    மாயை என்பது இல்லாமை அன்று. அது ஒரு மயக்கம். ஒருகட்டத்தில் இருப்பதுபோல் தோற்றமளிக்கூடியது, ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லாதது. கானல்நீர்போல. கனவுபோல. நமது வாழ்க்கையும் அப்படித்தானே. மெல்லப் பழங்கனவாய் கரைந்துபோகிறதே! இதில் சாஸ்வதம் எது? இறைநிலை மட்டுமே.

    நமக்குள் இருக்கும் அந்த இறைநிலையை மறைப்பது அவித்தை. அதாவது அஞ்ஞானம். அந்த அஞ்ஞானம்தான் மாயை. அது நீங்கினால் தன்னுள்ளும் இறைவன் என்னும் பரிபூரண நிலை. அழிவில்லா அத்வைத பரமஞானம். ஆயினும் இந்த ஞானம் கைவரப் பெற்ற பின்னும் மாயை காரணமாக அதாவது மயக்கம் காரணமாக இறைநிலையில் இருந்து எந்தவொரு ஜீவனும் நழுவிவிடக்கூடும். அவ்வாறு நழுவிடாமல் இறைநிலையைப் பற்றி நிற்க உதவுவது பக்தி.

    இது முரண் அல்ல. எந்தவொரு தத்துவத்துக்கும் கொள்கை நிலை, நடைமுறை நிலை என்ற இரண்டு உண்டு. உதாரணத்துக்கு அனைவரும் சமம் என்ற பொதுவுடமைக் கருத்தை எடுத்துக் கொள்வோம். இந்தச் சமத்துவம் என்பது ஒரு கொள்கை. இதனை ஏற்றுக்கொண்ட அனைவரும் சமம் என்பதால், அனைவருமே நடைமுறையில் ஒரே எடையளவில், ஒரே அளவான உயரத்தில், ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று வாதிப்போமா? மாட்டோம். அனைவருக்கும் சம அந்தஸ்து, சம வாய்ப்பு என்பதே இதன் பொருள் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம்.

    அந்தக் கம்யூனிஸக் கொள்கையை ஏற்றுக்கொண்ட நாட்டிலும் ஆள்பவவர்கள் இருக்கிறார்கள். ஆளப்படுபவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் அனைவரும் சமம்தான். அதேபோல்தான் அத்வைதமும். நாம் அனைவருமே கடவுள் என்பதற்காக, பிரபஞ்சத்தின் ஆதார சக்தியான- அனைத்தையும் ஆக்கி, காத்து, அழிக்கின்ற மகாசக்தியாக நாம் மாறிவிட்டோம் என்று அர்த்தமில்லை. அந்த மகாசக்தியின் ஒரு துளி நாம். நாம் அனைவரும் சேர்ந்ததே அந்த மகாசக்தி என்பதே இதன் பொருள். எப்படி சமதர்மம் என்பது மனோபாவமோ, அதுபோல் ஈசத்துவமும் ஓர் ஆன்மபாவம். அகம்பாவம் அல்ல.

    ஆயினும், அத்வைதத்தையும் ஆதிசங்கரரையும் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் அவரை பிரசன்ன புத்தர் (மறைமுக புத்தர்) அதாவது மாயாவாதம் புரிபவர், ஆண்டவன் இருப்பை மறைமுகமாக நிராகரிப்பவர் என்ற தொனியில் கடும் விமர்சனம் செய்தார்கள். செய்தும் வருகிறார்கள். (அதேநேரத்தில் புத்தரையும், நிரீசுவரவாதம் புரிந்த ரிஷபரையும் மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் என்றுகூறி ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள் என்பது இனிய முரண்.) ஆனால் தத்வமஸி- நீ அதுவாக இருக்கிறாய், அஹம் பிரம்மாஸ்மி- நான் கடவுள் போன்ற வேத வாக்கியப் பிரகடனங்களைப் பல வியாக்கியானங்களால் பொலிவுறச் செய்தவர் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர்தான். அதேநேரத்தில் இறைநிலை நோக்கி மக்களை வழிநடத்துகின்ற வழிபாடுகளை அவர் மறுக்கவில்லை. மாறாக, சிதறிக்கிடந்த பல வழிபாடுகளை ஒருங்கிணைத்துத் தொகுத்து, ஷண்மத வழிபாடாக உருவாக்கித் தந்தவர் அந்த மகாத்மாதான்.

    ‘சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ!’ என்றும் ‘அறிவொன்றே தெய்வம்’ என்றும் ஓங்கி அறைந்த மகாகவி பாரதி, காளிப் பாட்டு, கண்ணன் பாட்டு, விநாயகர் நான்கணி மாலை, வேலன் பாட்டு, சிவசக்திப் பாட்டு என எண்ணற்ற பக்தி இலக்கியங்களைப் பொழிந்தது இந்த மனோநிலையில்தான். அந்த பக்தி இலக்கியங்களின் ஊடாகப் பார்த்தால்... யாதுமாகி நின்றாய் காளி, தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா, நோக்கும் இடமெல்லாம் நாமின்றி வேறில்லை போன்ற அத்வைத ரத்தினங்கள் பிரகாசிப்பதை தரிசிக்கலாம்.

    அதுதான் அத்வைத நெறியின் மகத்துவம். சமத்துவ சமபாவம். சிறிதும் துவைதமற்ற, பேதமற்ற சமநிலை. அ+துவைதம்= அத்வைதம். அ என்றால் இல்லை என்று பொருள். துவைதம் என்றால் இருநிலை என்று பொருள். இருநிலை அற்ற ஒரே ஐக்கிய பாவம்தான் அத்வைதம். அத்வைதத்தைப் பழிக்கின்ற பக்திமான்களும் சரி, அவர்களது பெரியோர்களும் சரி, பக்தி முத்திய நிலையில் இரண்டற்ற ஒன்றான அந்த மோனநிலையைத்தான் அனுபவிக்கிறார்கள். அனுபவிக்கத் துடிக்கிறார்கள்.

    இந்த பேதமற்ற உணர்வினால்தான் எந்த வடிவிலும் இறைவனைக் காணும் ஒப்பற்ற அனுபூதி ஏற்படுகிறது. கடவுள் இல்லாத வஸ்து என்று உலகத்தில் ஒன்று உண்டா? கடவுளுக்குக் கட்சி கட்டாமல், அனைத்து வடிவங்களில் அவரவர்க்குக் காட்சி தரும் ஆண்டவனின் அத்தனை பிம்பங்களையுமே அத்வைதம் ஏற்றிப் போற்றுகிறது. அதனால்தான் ஸ்ரீஆதிசங்கரர், ஞானப் பொக்கிஷங்களான தசஸ்லோகி, நிர்வாண ஷட்கம் ஆகியவற்றை மட்டுமின்றி கனகதாரா ஸ்தோத்திரம், பஜகோவிந்தம், சௌந்தர்ய லஹரீ, சிவானந்த லஹரீ போன்ற பக்திப் புதையல்களையும் நமக்கு வழங்கியிருக்கிறார்.

    எத்தனையோ வடிவங்களில் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தாலும், அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளிலும் வணங்கக்கூடிய அந்த முக்கண்ணன் சிவனாரின் மீதான ஸ்ரீஆதிசங்கரரின் பக்தி அலாதியானது. அனைத்து தெய்வங்களின் அம்சமாக அல்லவா அவரது லிங்கரூபம் இருக்கிறது. ஒரேநேரத்தில் அருவமும் உருவமும் கலந்த அருவுருவ நிலையல்லவா அது? மனிதன் கடவுள்தன்மையை உணர்ந்து வணங்கத் தொடங்கியதில் மிகப் பழமையான ரூபம் அல்லவா சிவரூபம்?

    எந்தச் சுப காரியங்களைத் தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் பிடித்தல் என்றுகூறி மஞ்சளில் பிடிக்கப்படும் மேனி, உண்மையில் சிவலிங்கம் அல்லவா? ஒரே ஆண்டவனுக்கு எத்தனையோ வடிவங்கள் இருப்பினும், அவற்றின் மேலான தத்துவ வடிவம் அல்லவா சிவரூபம்? அதனால்தானே மற்ற வடிவங்கள் எல்லாம் தேவராக இருக்க, சிவன் மட்டும் மகாதேவனாக இருக்கிறார். அதேபோல் ஈஸ்வரன் என்பது தெய்வத்துக்குப் பொதுப் பெயராக இருந்தாலும், சிவபெருமானுக்கு மட்டுமே அது சிறப்புப் பெயராக இருப்பதுடன், மகேஸ்வரனாகவும்,

    Enjoying the preview?
    Page 1 of 1