Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Moondravathu Kann
Moondravathu Kann
Moondravathu Kann
Ebook213 pages1 hour

Moondravathu Kann

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செய்திகளை அறிவதிலும் பகிர்வதிலும் இந்தியர்களுக்கு இணையே இல்லை . நமது சாதாரண நலம் விசாரித்தலில் கூட முதலில் வருவது 'என்னப்பா, என்ன சேதி?' என்பதுதான். மகாபாரதத்தில், 18 நாள் நடைபெற்ற போரை கண் தெரியாத திருதராஷ்டிரனுக்கு எடுத்துக் கூறிய சஞ்சயன்கூட ஒரு செய்தித் தொகுப்பாளர்தான். அதனால்தான் செய்திகளை, தகவல்களைக் கூறும் இதழ்களுக்கு, வடமொழியில் சஞ்சிகா என்று பெயர் வந்தது. தமிழில் கூட, சஞ்சிகை என்று கூறுவார்கள். அந்த வகையில், இன்றைய நிருபர்களுக்கும் வர்ணனையாளர்களுக்கும் தொகுப்பாளர்களுக்கும் சஞ்சயன் ஒரு முன்னோடி என்று கூறலாம்.

நமது ரத்தத்தில் ஊறிப்போன செய்திகளை அறியும் ஆர்வத்தையும், அதற்கு உதவுகின்ற நூல்களையும் இணைத்துப் பாருங்கள், அதுதான் இதழியல். அந்த இதழியலை வாசிக்கலாம் வாங்க

Languageதமிழ்
Release dateNov 2, 2021
ISBN6580149107576
Moondravathu Kann

Read more from Padman

Related to Moondravathu Kann

Related ebooks

Reviews for Moondravathu Kann

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Moondravathu Kann - Padman

    https://www.pustaka.co.in

    மூன்றாவது கண்

    Moondravathu Kann

    Author:

    பத்மன்

    Padman

    For more books

    https://www.pustaka.co.in/home/author/padman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    செய்திகளை அறிவதிலும் பகிர்வதிலும் இந்தியர்களுக்கு இணையே இல்லை . நமது சாதாரண நலம் விசாரித்தலில் கூட முதலில் வருவது 'என்னப்பா, என்ன சேதி?' என்பதுதான்.

    மகாபாரதத்தில், 18 நாள் நடைபெற்ற போரை கண் தெரியாத திருதராஷ்டிரனுக்கு எடுத்துக் கூறிய சஞ்சயன்கூட ஒரு செய்தித் தொகுப்பாளர்தான். அதனால்தான் செய்திகளை, தகவல்களைக் கூறும் இதழ்களுக்கு, வடமொழியில் சஞ்சிகா என்று பெயர் வந்தது. தமிழில் கூட, சஞ்சிகை என்று கூறுவார்கள். அந்த வகையில், இன்றைய நிருபர்களுக்கும் வர்ணனையாளர்களுக்கும் தொகுப்பாளர்களுக்கும் சஞ்சயன் ஒரு முன்னோடி என்று கூறலாம்.

    நமது ரத்தத்தில் ஊறிப்போன செய்திகளை அறியும் ஆர்வத்தையும், அதற்கு உதவுகின்ற நூல்களையும் இணைத்துப் பாருங்கள், அதுதான் இதழியல். பலருக்கு, காலைக் கடனே நாளிதழைப் படிப்பதிலிருந்து தான் தொடங்குகிறது. படிக்காத பாமரர்கள்கூட ஒருவரை பேப்பரைப் படிக்கச் சொல்லி, சுற்றியிருந்து கேட்பதை டீக்கடைகளிலும் சலூன் கடைகளிலும் காணலாம்.

    இப்படி செய்திகளைச் சொல்லும் இதழியலுக்குத்தான் எத்தனைக் கவர்ச்சி?

    இதழியல் என்ற பெயரில்தான் எத்தனை மென்மை? ஆனால், இத் துறை சார்ந்த பணியோ மிகவும் கடினமானது. செய்தி சேகரிப்பதற்கே படாதபாடு படவேண்டியிருக்கும். சில சமயங்களில் சேகரித்த செய்திகை வெளியிட்ட பின்னர் மேலும் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இருந்தாலும், இதழியல் துறை மீதான கவர்ச்சி நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

    இதழியலை ஒரு படிப்பாகச் சொல்லித்தர, சமீபகாலங்களில் பட்ட மேற்படிப்புகளும், பட்டயப் படிப்புகளும் வந்து விட்டன. இதழியல் துறையில் தேர்ச்சி பெற நேரடி அனுபவம்தான் சிறந்த வழி என்றாலும், படிப்பறிவும் கைகொடுக்கும். மேலும், பல்வேறு துறைசார்ந்த தகவல்களைப் படித்து, மனத்தில் தேக்கி வைத்தால் தான் சிறந்த இதழியலாளராக ஒருவர் பிரகாசிக்க முடியும். அப்படியானால், இதழியல் தொடர்பான நூலறிவும் அவசியம் தானே? ஆனால், தமிழில் இதழியல் குறித்து அதிக அளவில் நூல்கள் வெளிவராதது ஒரு குறைபாடு.

    இந்நிலையில் ஓர் இதழியலாளன் என்ற முறையிலும், இதழியலை முதுகலைப் படிப்பாகப் பயின்றவன் என்ற முறையிலும், இதழியல் தொடர்பான இந்த நூலைப் படைத்து, வாசகர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இதழியல் துறையில் நான் நேரடியாக அறிந்து கொண்டதையும், இத்துறை குறித்து பல்வேறு நூல்களில் படித்து அறிந்து கொண்டதை யும் இதழியல் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் சாதாரண மனித ருக்குப் பயன்படும் நோக்கில், இங்கு தொகுத்து வழங்கியுள்ளேன். இது, சக இதழியலாளர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறோம்.

    இந்த நூல் உருவானதற்கு நான் மட்டும் காரணமல்ல. பலர் இதற்குப் பின்புலத்தில் ஊக்குவித்த, உபதேசித்த காலஞ்சென்ற எனது தந்தை ப. நாகராஜன், சிறந்த இலக்கிய ரசிகரும் டி.வி.எஸ். நிறுவனத்தின் முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரியுமான பி. வெங்கட்ராமன், இந்த நூலை எழுதுவதற்கு எனக்குப் பல வகையில் உறுதுணை புரிந்த எனது நண்பரும் பத்திரிகையாளருமான வி.எஸ். மீனாட்சி சுந்தர், சோர் வடைந்தபோது எனக்கு உற்சாகமூட்டிய எனது தாயார் மதுரம், மனைவி கிரிஜா, பத்திரிகையாளரும் நண்பருமான திருப்பூர் கிருஷ்ணன், இந்த நூலைப் பிரசுரத்துக்குத் தேர்ந் தெடுத்த ஆசிரியர் குழுவினர் ஆகிய அனைவருமே இந்த நூல் உங்கள் கைகளில் தவழக் காரணமானவர்கள்.

    நன்றியுடன்

    பத்மன்

    (நா. அனந்த பத்மநாபன்)

    நூலடக்கம்

    1. இதழியலும் செய்தித் தொடர்பும்

    1. அறிமுகம்

    2. எது செய்தி?

    3. செய்தி மூலங்கள்

    4. செய்தி சேகரிக்கும் முறை

    5. செய்திகளின் வகைகள்

    6. செய்தி வெளியிடும் தளங்கள்

    2. இதழியலின் வித்தும் விழுதுகளும்

    1. ஆதிகாலச் செய்தித் தொடர்பு

    2. அறிவியல் வளர்ச்சியும் இதழியலும்

    3. உலக அளவில் பத்திரிகை வளர்ச்சி

    4. இந்தியாவில் பத்திரிகைகள்

    5. செய்தி நிறுவனங்கள்

    6. வானொலி, தொலைக்காட்சி

    7. இணையத்தளம்

    3. எழுதும் கலையும் இதழியல் உத்திகளும்

    1. தலைப்பு (Headline)

    2. முகப்பு (Lead)

    3. செய்திகளை அளிக்கும் முறை

    3A. பார்வைகள் பலவிதம்

    4. பேட்டி

    5. தலையங்கம், கட்டுரை, மதிப்புரை முதலியவை

    6. வானொலி, தொலைக்காட்சிக்கு எழுதுதல்

    7. இணையத்தில் எழுதுதல்

    7A. இணையத்தில் செய்திகள்

    4. பணி வாய்ப்புகளும் கடமைகளும்

    1. ஆசிரியர் குழுவினர்

    2. நிருபர்கள், செய்தியாளர்கள்

    3. பிழை திருத்துவோர்

    4. சுதந்தர எழுத்தாளர் (Freelancer)

    5. செய்திப் புகைப்படக் கலைஞர்

    6. பத்திரிகை ஓவியர்கள்

    7. தொலைக்காட்சி செய்தித் தயாரிப்பாளர்கள்

    8. செய்தி வாசிப்பாளர்கள்

    9. செய்தி, நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்

    5. இதழியல் தொடர்பான சட்டங்களும் நெறிமுறைகளும்

    1. இதழ்கள் தொடங்குவதற்கான வழிமுறைகள்

    2. பத்திரிகைச் சுதந்தரம்

    3. முக்கியப் பத்திரிகைச் சட்டங்கள்

    4. இதழியல் நெறிமுறைகள் (Ethics inJournalism)

    5. பத்திரிகை கவுன்சில் (Press Council)

    6. இதழியல் துறைக்கு ஏற்படும் இடையூறுகள்

    6. இதழியலும் சமூகமும்

    1. அறிவை வளர்த்தல்

    2. மகிழ்ச்சி அளித்தல்

    3. சமூக மாற்றம் ஏற்படுத்துதல்

    4. வரலாறு, அறிவியலைப் பாதுகாத்தல்

    5. பக்க விளைவுகள்

    7. பின்னிணைப்பு

    இதழியல் கலைச்சொற்கள்

    1

    இதழியலும் செய்தித் தொடர்பும்

    1. அறிமுகம்

    பேச்சு பிறப்பதற்கு முன்னர் ஆதி மனிதன் உபயோகித்த சைகை மொழி, மனித குலத்தின் முதல் செய்தித் தொடர்பு எனலாம். பேச்சு தொடங்கி, எழுத்து பிறப்பதற்கு முன்னர், குகைகளில் மனிதன் வரைந்த சித்திரங்கள், இதழியலுக்கான பிள்ளையார் சுழி என்று கூறலாம். கற்காலக் குகை ஓவியங்களும், கல்வெட்டுகளும் செய்திகளை ஆவணப்படுத்தும் முன் முயற்சிகள்.

    அதாவது, தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பிறருக்குச் சொல்ல வேண்டும் என்ற மனித முயற்சியின் காரணமாகச் செய்தித் தொடர்பு உருவானது. அதற்கான வழிமுறைகளை மனிதன் கண்டுபிடித்து உபயோகப்படுத்தத் தொடங்கியபோது இதழியல் பிறந்தது. இப்போது பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் என்று இதழியல் பரிணமித்துள்ளது.

    பத்திரிகைகளில் வருகின்றவை மட்டுமல்ல, துண்டுப் பிரசுரங்களில் காணப்படுவதும் செய்திதான். விளம்பரங்களின் மையமாக இருப் பதும் செய்திதான். நாடகம், சினிமா என்கிற எல்லாவிதத் தகவல் தொடர்புகளிலும் ஊடுருவி இருப்பது செய்திதான். எல்லாவற்றிலும் ஒரு Message - செய்தி இருக்கிறது. அதை எப்படி முறையாக எடுத் துரைப்பது என்பதைச் சொல்லித் தரும் கலைதான், இதழியல்.

    இதழியலின் விஸ்வரூபம் தொலைக்காட்சி, இணையம் என்று இப்போது பரந்து பட்டிருந்தாலும், அதன் முக்கியத் தொடக்கமான

    பத்திரிகைதான் இப்போதும் முதன்மையாக இருக்கிறது. தொலைக் காட்சி நிருபர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் கூட 'PRESS' என்ற வாசகம் ஒட்டப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். Press என்ற சொல், குறிப்பாக பத்திரிகைத் துறையைச் சுட்டிக் காட்டினாலும், பொதுவாக அனைத்துவிதச் செய்தி தகவல் ஊடகங்களையும் (Media) உணர்த்துகிறது.

    இந்தப் பத்திரிகைத் துறையை (இதழியல் துறையை) ஆங்கிலத்தில் Fourth Estate என்று சொல்வார்கள். தமிழில் இதனை 'ஜனநாயகத்தின் நான்காவது தூண்' என்று வர்ணிப்பார்கள். முதல் மூன்று தூண்கள் யாவை?

    *. ஆட்சி பீடம் (அரசு)

    *. நாடாளுமன்றம்

    *. நீதிமன்றம்.

    இந்த வகையில் நான்காவதாக பத்திரிகை வருகிறது. மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளையும், சுதந்தரத்தையும் காப்பாற்றுகின்ற முதல் கடமை, அரசு மற்றும் அதன் கீழான அதிகார அமைப்புக்கு உள்ளது. அந்த அரசு நேர்மையாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு, நாடாளுமன்றத்திடம் உள்ளது. தேவையானால், மக்கள் நன்மைக்காக புதிய சட்டங்களை உருவாக்கவும், பழைய சட்டங்களை மாற்றி அமைக்கவும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.

    நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள், அரசியல் நிர்ணயச் சட்டத் துக்குப் புறம்பாக இல்லாது இருக்கின்றனவா என்று தீர்மானிப்பதும், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மக்களுக்கு நீதி வழங்கு வதும் நீதிமன்றத்தின் வேலை. இந்த மூன்று அமைப்புகளுமே முறையாகச் செயல்படுகின்றனவா என்பதை பத்திரிகை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் தான் அதனை நான்காவது தூண் என்கிறார்கள்.

    ஜனநாயகத்துக்கு நான்கு தூண்களுமே முக்கியம் என்றாலும், நான்கா வது தூண் கூடுதல் சிறப்புடையது. ஏனெனில், பத்திரிகைத் துறைக்கு 'மூன்றாவது கண்' உள்ளது. (ஆங்கிலத்தில் 'Private Eye' என்று சொல்வார்கள்). அது என்ன மூன்றாவது கண்? சாதாரணமான இரண்டு கண்கள், அதற்கு நேராகத் தெரிவதை மட்டுமே பார்க்கும். மூன்றாவது கண், அதாவது ஞானக் கண் - ரகசியமாக உள்ளதையும் ஊடுருவிப் பார்க்கும். உதாரணத்துக்கு, கடந்த 2003-ம் ஆண்டு விபத்துக்குள்ளாகி, இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உள்பட ஏழு விண்வெளி வீரர்களை பலிகொண்ட, கொலம்பியா விண்வெளி ஓடம் பற்றிய செய்திகளைக் கூறலாம். போதிய பராமரிப்புச் செலவு ஒதுக்கப்படாமல் பழுதடைந்த காரணத்தால்தான் கொலம்பியா விபத்துக்குள்ளானது என்றும், உடனடியாகப் பராமரிப்பில் அக்கறை காட்ட வேண்டும் என்று முன்னதாகக் குரல் எழுப்பிய நாசா (NASA) நிர்வாக அமைப்பில் இருந்து ஐந்து பேர் நீக்கப்பட்டனர் என்றும் திடுக்கிடும் செய்திகள் வெளியாகி உள்ளன. நாட்டின் பாதுகாப்பிலே கூட ஊழல்கள் நடக்கின்றன என்பதை போபர்ஸ் செய்திகளும் தெஹல்கா செய்திகளும் மக்களுக்கு வெட்ட வெளிச்சமிட்டுக் காட்டின. இது போல் ஊடுருவி, ரகசியத் தகவல்களை வெளியிடுவதால் பத்திரிகைத் துறைக்கு மூன்றாவது கண் இருப்பதாகச் சிறப்பித்துக் கூறப்படுகிறது. இந்தச் செய்திகளில் இன்னொரு விஷயத்தையும் பார்க்கலாம். குற்றங்களை யார் செய்தாலும் பொசுக்கிவிடும் நேர்மையும், துணிவும் ஆற்றலும் கொண்ட 'நெற்றிக்கண்' (இதுவும் மூன்றாவது கண்தான்) பத்திரிகைத் துறைக்கு இருக்கிறது.

    ஆக, செய்திகளைத் தெரியப்படுத்துவது (Dissemination of Information) என்ற அடிப்படைக் கடமையுடன், சமுதாய விழிப்புணர்வுக்காக அந்தக் கடமையைச் செவ்வனே ஆற்றுவது என்ற பொறுப்புணர்வும் (Responsibility of a Watchdog) பத்திரிகைத் துறைக்கு உள்ளது. இதுதான் இதழியலின் அடிப்படையும் நோக்கமும் ஆகும்.

    இதனால்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1