Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vedikkai Manithargal
Vedikkai Manithargal
Vedikkai Manithargal
Ebook157 pages54 minutes

Vedikkai Manithargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அரசியலில் காணப்படும் அளவுக்கு நகைச்சுவை வேறு எந்தத் துறைகளிலும் காணக்கிடைக்காது என்பது எனது தீர்மானமான அபிப்பிராயம். சினிமாவில்கூட வடிவேலு, விவேக், என்று குறிப்பிட்ட சிலர் தான் நகைச்சுவை நடிகர்கள். ஆனால் அரசியலிலோ, மன்மோகன்சிங், கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், என்று ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருப்பதால் நகைச்சுவைக்கு என்றுமே பஞ்சம் ஏற்படுவதில்லை.

Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580160110710
Vedikkai Manithargal

Read more from Thuglak Sathya

Related to Vedikkai Manithargal

Related ebooks

Related categories

Reviews for Vedikkai Manithargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vedikkai Manithargal - Thuglak Sathya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வேடிக்கை மனிதர்கள்

    Vedikkai Manithargal

    Author:

    துக்ளக் சத்யா

    Thuglak Sathya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya

    பொருளடக்கம்

    இடுக்கண் வருங்கால் நகுக!

    அணிந்துரை

    1. மத்திய அரசும், மாவோயிஸ்ட்களும்!

    2. இதுதான் இந்தியப் பாராளுமன்றம்!

    3. பிரபாகரன் கற்கத் தவறிய போர் தந்திரங்கள்

    4. ஓட்டே, உன் விலை என்ன?

    5. நீயா, நானா? கருத்து மகா யுத்தம்

    6. ஒரு பயங்கர நேர்காணல்!

    7. முப்பதே நிமிடங்களில் அரசியல் கற்கலாம்!

    8. சோனியாவுக்குப் பிடித்த நேர்மை

    9. ஸி.பி.ஐ.யின் கண்டுபிடிப்புகள்!

    10. நினைத்ததை முடிக்கும் நிரா ராடியா!

    11. ஜனாதிபதி ஆற்ற வேண்டிய ஆறுதல் உரை

    12. பதிலளிக்கிறார் பிரதமர்

    13. உருவாக மறுத்த உடன்பாடு

    14. ஓர் ஏடாகூட நேர்காணல்

    15. இப்படியும் தேர்தல் அறிக்கை வெளியிடலாம்

    16. வரலாறு காட்டும் வழி

    17. ஊழலை ஒழிப்போம் வாரீர்!

    18. பொது அறிவு போதனை

    19. குப்பனும், சுப்பனும் நீதி கேட்டால்...?

    20. சுதந்திரத்தால் கண்ட பலன்

    இடுக்கண் வருங்கால் நகுக!

    பொதுவாக அரசியல் விமர்சனக் கட்டுரைகள் அந்தந்த கால கட்டத்திற்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகவும் ரசிக்கக் கூடியதாகவும் இருக்கும். ஆனால், நம் நாட்டு அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் எந்தக் காலகட்டத்திலும் புரிந்துகொண்டு சிரிக்கும் வகையில் அமைந்திருப்பது ஆச்சரியமான ஒன்று.

    துக்ளக்கில் 2010, 2011-ஆம் ஆண்டுகளில் அடியேன் எழுதிய அத்தகைய நகைச்சுவைக் கட்டுரைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ‘வேடிக்கை மனிதர்கள்’ என்ற தலைப்பில் மணிவாசகர் பதிப்பகத்தார் வெளியிடப்பட்டுள்ளது.

    அரசியலில் காணப்படும் அளவுக்கு நகைச்சுவை வேறு எந்தத் துறையிலும் காணக்கிடைக்காது என்பது எனது தீர்மானமான அபிப்பிராயம். சினிமாவில்கூட வடிவேலு, விவேக் என்று குறிப்பிட்ட சிலர்தான் நகைச் சுவை நடிகர்கள். ஆனால் அரசியலிலோ, மன்மோகன் சிங், கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ் என்று ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருப்பதால் நகைச்சுவைக்கு என்றுமே பஞ்சம் ஏற்படுவதில்லை.

    அதனால்தானோ என்னவோ, 1980 முதல் சுமார் 32 ஆண்டுகளாக துக்ளக்கில் அடியேன் நையாண்டிக் கட்டுரைகளை எழுதுவதற்குத் தேவையான விஷயங்கள் குறைவின்றிக் கிடைத்து வருகின்றன. எதிர்காலக் கட்டுரைகளுக்கும் நான் அவர்களைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் அவர்கள் என் நன்றிக்குரியவர்கள்.

    ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று திருவள்ளுவரே கூறியிருக்கிறார். எனவே சிரிக்கத் தயாராகுங்கள் கட்டுரைகளில் அரசியல்வாதிகள் வருகிறார்கள்.

    அன்புடன்

    ‘துக்ளக்’ சத்யா

    அணிந்துரை

    டாக்டர் ஆர். நடராஜன்

    (தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர், சாகித்ய அகாதமி)

    ‘சத்யா’ என்ற புனைபெயரில் துக்ளக் இதழில் தொடர்ந்து நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதிவரும் நண்பர் சத்யநாராயணன் அவர்களை நேரடியாகத் தெரிந்து கொள்வதற்கு முன்பே அவரது கட்டுரைகளை ரசித்திருக்கிறேன். அவை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் கட்டுரைகள். ஒரு வாசகனாகவும் சக எழுத்தாளனாகவும் நான் சத்யாவின் பரம ரசிகன்.

    பல கட்டுரைகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டவை. சிலவற்றில் பிரதமரையும் அவரது சகாக்களையும் கிண்டல் செய்கிறார். மன்மோகன் சிங், சோனியா, ராகுல், நீரா ராடியா, பிரதிபா பாடீல், கருணாநிதி, ராமதாஸ், ஸ்டாலின் எல்லோரும் இங்கே இடம் பெறுகிறார்கள். இவரால் நையாண்டி செய்யப்படுபவர்களும் கட்டுரைகளைப் படித்ததும் சிரிக்காமல் இருக்க முடியாது. அதே நேரம் கோபப்பட முடியாது. அதுதான் சத்யாவின் எழுத்துத் திறமை.

    படித்தவுடனேயே இவரது சில கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறேன். அவற்றில் அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கிறது. துக்ளக்கிற்குக் கட்டுரை எழுதுவதற்கு முன்பு அதே விஷயத்தை சத்யாவோ துர்வாசரோ எழுதியிருப்பார்களோ என்று யோசித்துப் பார்ப்பேன். நான் எதிர்பார்த்தபடியே இருவரும் அவை பற்றியே கட்டுரைகள் எழுதியிருப்பார்கள். என்னைவிட நயமாக சத்யா எழுதுவார். துர்வாசர் என்னைவிடக் கோபமாக எழுதுவார். துர்வாசர் என்ற புனைபெயரில் எழுதும் ராமச்சந்திரன் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் உயர்நிலைப் பள்ளியில் என்னுடன் படித்தவர். அதனால் இந்த இருவர் கட்டுரைகளையும் வரிவிடாமல் ரசித்து படிக்கும் வாசகன் நான்.

    ‘வேடிக்கை மனிதர்கள்’ என்ற இந்தத் தொகுப்பில் சத்யாவின் 20 கட்டுரைகள் வெளியாகின்றன. சத்யாவின் உத்தி உரையாடல் நடை. அநேகமாக எல்லாக் கட்டுரைகளுமே நாடக பாணியில் இருக்கின்றன. அதனால் அந்தந்தப் பாத்திரங்கள் தம் குண விசேஷங்களை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்துகின்றன.

    சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரிந்த மொழியில் இந்தக் கட்டுரைகளைப் படித்துக் காட்டினாலும், அவர்கள் வெட்கத்தில் நெளியலாமே ஒழிய கோபப்படுவதற்கில்லை. ஏனென்றால் சத்யா உண்மைகளைத்தான் பிட்டுப்பிட்டு வைக்கிறார்.

    கசக்கும் அவலங்களுக்கும் சுட்டெரிக்கும் உண்மைகளுக்கும் தன் வேதனையை மறைத்துக்கொண்டு இவர் நகைச்சுவை முலாம் பூசியிருக்கிறார். சில நகைச்சுவை எழுத்தாளர்கள் வெளியே தெரியவராத அளவுக்குக் கோபக்காரர்கள். பார்த்தால் பசுமலை, வெடித்தால் எரிமலை. சத்யா அவர்களில் ஒருவர்.

    அன்புடன்

    ஆர். நடராஜன்

    1. மத்திய அரசும், மாவோயிஸ்ட்களும்!

    ‘காஷ்மீர் தீவிரவாதம் போல் நக்ஸலைட் தீவிரவாதத்தைக் கருதக் கூடாது; மாவோயிஸ்ட்கள் நம் நாட்டு மக்கள்தான்; உயர் கல்வி வாய்ப்பு கிடைக்காததால்தான் நக்ஸலைட்களாகி விட்டார்கள்; நக்ஸலைட் பிரச்னை, தீவிரவாதப் பிரச்னை அல்ல, சமூகப் பொருளாதாரப் பிரச்னைதான்’ என்றெல்லாம் கூறிவரும் மத்திய அரசு, அவர்களைப் பேச்சு வார்த்தைக்கும் அழைத்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் மனநிலையை கவனிக்கும்போது, மாவோயிஸ்டுகள் மத்திய அரசோடு பேச முன்வந்தால், அந்த பேச்சுவார்த்தை இப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

    சிதம்பரம்: வணக்கம், சௌக்கியமா?

    மாவோயிஸ்ட் தலைவர்: எப்படி சௌக்கியமா இருக்க முடியும்? மக்கள் குறைகளைத் தீர்க்கறதுக்காக 24 மணி நேரமும் நாட்டுலேயும் காட்டுலேயும் ஆயுதங்களோட திரிஞ்சுகிட்டிருக்கோம். எங்க மேலே அனுதாபம் காட்ட வேண்டிய மத்திய அரசு எங்களையே பிடிக்க தீவிரம் காட்டுதே!

    பிரதமர்: ஜனநாயக நாட்டிலே ஆயுதங்களோட திரியறது நியாயமா? உங்களை பயங்கரவாதிகளா நாங்க நினைக்கலை. உங்களைப் பார்த்தா பயமா இருக்குதுன்னுதான் சொல்றோம். தயவு செஞ்சு தீவிரவாதத்தை விட்டுருங்க உங்க கோரிக்கை எதுவாயிருந்தாலும் நிறைவேத்தி வெக்கறோம்.

    மா. தலைவர்: எங்க கைவசம் இருக்கிற ஆயுதங்கள் போதாது. இன்னும் நிறைய ஆயுதங்கள் வேணும். அதான் எங்க முதல் கோரிக்கை.

    புத்ததேவ் பட்டாச்சர்யா: ஆயுதங்கள் எதுக்கு? மம்தா பானர்ஜி சொல்லித்தானே ஆயுதம் கேக்கறீங்க?

    மா.தலைவர்: ஆயுதப் புரட்சி செய்யறதுக்கு ஆயுதங்கள் வேண்டாமா? என்ன கேள்வி கேக்கறீங்க நீங்க?

    சிதம்பரம்: ஆயுதப் புரட்சி செய்யாமலேயே மக்களுக்கு நன்மை செய்ய முடியுமே. நாங்க யாராவது ஆயுதம் வெச்சிருக்கோமா?

    மா.தலைவர்: உங்ககூட பாதுகாப்புக்கு வர்றவங்க எல்லாம் ஆயுதம் வெச்சிருக்காங்களே. அது நீங்க வெச்சிருக்கிற மாதிரிதானே? செக்யூரிட்டி வெச்சுக்க எங்களுக்கு வசதி இல்லை. அதனாலே, எங்க பாதுகாப்புக்காக நாங்க பயங்கர ஆயுதங்களோட திரிய வேண்டியிருக்குது.

    சிதம்பரம்: மக்களுக்கு நல்லது செய்ய நினைச்சா, தேர்தல்லே நின்னு ஜெயிச்சு, ஆட்சியைப் பிடிக்கலாமே! மாவோயிஸ்டுகள் முன்னேற்றக் கழகம்னு நீங்க ஒரு கட்சி ஆரம்பிச்சா, நாங்க ஏன் எதிர்க்கப் போறோம்? நாம கூட்டணியே வெச்சக்கலாமே!

    மா.தலைவர்: யாரை ஏமாத்தப் பாக்கறீங்க? நூறு கோடியாவது இல்லாம எம்.பி. ஆயிட முடியுமா? ஆயுதம் வாங்கறதுக்கே பணம் இல்லாம போலீஸ் ஸ்டேஷன்லே நுழைஞ்சு, பயந்து பயந்து துப்பாக்கிகளைப் பறிக்க வேண்டியிருக்குது. இப்படி ஒரு கேடு கெட்ட நிலையிலே நாட்டை வெச்சிருக்கீங்க. அந்த நிலையை மாற்றத்தான் நாங்க பாடுபடறோம்.

    பிரதமர்: உங்களை நாங்க மற்ற பிரிவினைவாத தீவிர வாதிகள் மாதிரி நினைக்கலை. அவங்க காரணமே இல்லாம

    வெடிகுண்டு வெக்கறாங்க. சம்பந்தம் இல்லாதவங்க கூட பலி ஆயிடறாங்க. ஆனா நீங்க, ஆள்யாருன்னு பார்த்துத்தான் கொலைபண்றீங்க. நீங்க பண்ற எந்த ஒரு அக்கிரமத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்.

    புத்ததேவ்: இருந்தாலும் ஜனநாயக ரீதியாவே அக்கிரமம் பண்றதுதான் முறை. நாங்க ஆட்சியிலே இருக்கும் போது, நீங்க அக்கிரமம் பண்றது அவ்வளவு நியாயமா எங்களுக்குத் தெரியலை. அப்ப நாங்க எதுக்கு இருக்கோம்?

    சிதம்பரம்: நீங்க ஆயுதங்களை வெச்சுக்க வேண்டாம்னு சொல்ற அளவுக்கு, நாங்க அவ்வளவு குரூரமானவங்க இல்லை. தாராளமா வெச்சுக்குங்க. ஆனா,

    Enjoying the preview?
    Page 1 of 1