Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Madasamiyin Manasatchi
Madasamiyin Manasatchi
Madasamiyin Manasatchi
Ebook519 pages3 hours

Madasamiyin Manasatchi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

யாரிடமிருந்தும் தப்பிக்கலாம். ஆனால் மனசாட்சியினிடமிருந்து தப்பிப்பவன் எவனும் இல்லை. மனசாட்சியை கேட்டு திருந்தினவனும் உண்டு. திருந்தாமல் சீரழிகிறவனும் உண்டு. இக்கதையிலும் மாடசாமி அவனின் மனசாட்சியை கேட்டு திருந்தினானா? இல்லையா? அரசியல் நயத்துடன் அழகுற சிரிப்புடன் வெளிப்படுத்தும் இக்கதையை வாசிப்போம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateMay 27, 2023
ISBN6580160109369
Madasamiyin Manasatchi

Read more from Thuglak Sathya

Related to Madasamiyin Manasatchi

Related ebooks

Related categories

Reviews for Madasamiyin Manasatchi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Madasamiyin Manasatchi - Thuglak Sathya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாடசாமியின் மனசாட்சி

    Madasamiyin Manasatchi

    Author:

    துக்ளக் சத்யா

    Thuglak Sathya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. முதல்வர் இட்ட கட்டளை

    2. இரு திட்டங்கள்

    3. அமைந்தது ஆட்சி மன்றக்குழு

    4. கமிஷனரின் நடவடிக்கை

    5. முதல்வர் எடுத்த முடிவு

    6. தேர்தல் பரபரப்பு

    7. தலைவர்களின் கலக்கம்

    8. பொதுக் கூட்டத்தில் கலாட்டா

    9. டி.ஜி.பி.க்கு முதல்வரின் அறிவுரை

    10. மாறியது ஆட்சி

    11. சட்டசபை மோதல்

    12. நிதி நெருக்கடி

    13 திடீர் சந்திப்பு

    14. அண்ணனும், அண்ணியும்

    15. மந்திரியானான் மாடசாமி

    16. பதவியேற்பு

    17. திரிபுரசுந்தரியின் ஃபோன்

    18. மாடசாமிக்கு வந்த புகழ்

    19. ஒரு ரிஹர்ஸல்

    20. திடீர் ரெய்டு

    21. அமைச்சரின் அழைப்பு

    22. நிர்வாகச் சீரமைப்பு

    23. நிதி அமைச்சருக்கு நேர்ந்த கதி

    24. போலீஸ் நடவடிக்கை

    25. சிறப்பு நீதிமன்ற விசாரணை

    26. கான்ட்ராக்டர்களின் புகார்

    27. ஊழல் வெளியானது

    28. மந்திரி சபைக் கூட்டம்

    29 அரைநாள் உண்ணாவிரதம்

    30. மாடசாமியின் ஆவேசம்

    31. வேலை கிடைத்தது

    32. பெண் பார்க்கும் நிகழ்ச்சி

    33. அனுக்ரஹா நிதி நிறுவனம்

    34. புருஷோத்தமன் கண்ட காட்சி

    35. மத்திய அரசு நடவடிக்கை

    36. முதல்வரின் கோபம்

    37. ஞாபகமறதி வியாதி

    38. மயக்கம் தெளிந்தது

    39. மாடசாமியும் இண்டர் நெட்டும்

    40. முதல்வரின் எச்சரிக்கை

    41. மாடசாமி கொடுத்த அறை

    42. சி.பி.ஐ. சோதனை

    43. திரிபுரசுந்தரியின் திட்டம்

    44. கம்பர் சமாதி ஊழல்

    45. ஹைகோர்ட் தீர்ப்பு

    46. கௌரவமான வேலை

    என்னுரை

    நகைச்சுவைக் கட்டுரைகள், கட்டுரைத் தொடர்கள் என பலவற்றை நான் ஏற்கெனவே எழுதியிருந்தாலும், ‘நகைச்சுவைத் தொடர்கதை’ என்கிற வடிவத்தில் எனது முதல் முயற்சி. ‘மாடசாமியின் மனசாட்சி.’ இதை உருப்படியாக எழுதி முடிக்க முடியுமா என்பதில், என்மீதே எனக்கு அரைகுறை நம்பிக்கை இருந்தபோது, என்னை முழுமையாக நம்பி, துணிந்து அந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள்.

    முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இக்கதையில் இடம் பெறும் கேரக்டர்களும் சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல. முற்றிலும் கற்பனையே. ஆனால், நீங்கள் அறிந்த அரசியல் தலைவர்களின் சாயல் கதையில் உங்களுக்கு எங்காவது எவரிடமாவது தெரிந்தால், கதையைவிட அந்த அரசியல் தலைவர்கள் உங்களை அதிகம் பாதித்திருப்பதாகவே அர்த்தம்.

    மற்ற நகைச்சுவை எழுத்தாளர்களைவிட என்மீது சற்று கூடுதல் பொறுப்பு திணிக்கப்பட்டதாகவே நான் உணர்ந்தேன். ஏனென்றால், தொடரில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதி முடிக்கும்போது, ‘துக்ளக்’கில் என்னுடன் பணிபுரியும் நண்பர்களின் கருத்தைத் தெரிந்துகொள்வதற்காக அவர்களிடம் நான் காட்டுவதுண்டு. கதையில் நான்கு வரிகளை படித்து முடிப்பதற்குள், ‘என்ன இது? இன்னும் ஹ்யூமரே வரலையே?’ என்று கேள்வி கேட்டு அவர்கள் மிரட்டிக்கொண்டிருந்தார்கள். வாசகர்கள் பலருக்கும்கூட என்னிடம் இத்தகைய எதிர்பார்ப்பு இருப்பதால், தொடரின் ஆரம்பம் முதல் கடைசி வரை எழுதப்படும் ஒவ்வொரு வாக்கியமும், ஒன்று, நகைச்சுவையாக இருக்க வேண்டும் அல்லது கதைக்கு அவசியமானதாக இருக்க வேண்டும் என்பதில் நான் அதிக அக்கறை செலுத்த வேண்டியவனாக இருந்தேன். முடிந்தவரை அப்படி எழுதியிருப்பதாகவே நினைக்கிறேன்.

    இத்தொடர் துக்ளக்கில் வெளிவந்து கொண்டிருந்தபோது, அரசியல் பிரமுகர்கள் உட்பட பல வாசகர்கள் எனக்கு அவ்வப்போது ஃபோன் செய்தும், கடிதங்கள் எழுதியும் ஊக்குவித்தது, இக்கதையை நான் ஆர்வத்துடன் எழுதி முடிக்க உறுதுணையாக இருந்தது. அவர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.

    சில வாசகர்கள், ‘அடுத்த வாரம் என்ன வரப்போகுது ஸார்?’ என்று முன்கூட்டியே ஃபோன் செய்து என்னை திகைக்க வைத்ததும் உண்டு. உண்மையில், அடுத்த வாரம் நான் என்ன எழுதப் போகிறேன் என்று தெரியாத நிலையில்தான் ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதிக் கொண்டிருந்தேன்.

    தொடரை ஆரம்பிப்பதற்கு முன், அதன் சுருக்கத்தை மட்டுமே ஆசிரியரிடம் காட்டி ஒப்புதல் பெற்றிருந்தேன். ஏனென்றால் சுருக்கம் மட்டும்தான் அப்போது என்னிடம் இருந்தது. அதற்கு பிறகு நாட்டு நடப்புகள்தான் எனக்கு பக்கபலமாக இருந்து கதையை வெற்றிகரமாக எழுதி முடிக்க உதவின. அதனால் நாட்டு நடப்புகளும் என் நன்றிக்கு உரியவையே.

    இப்புத்தகத்திற்கு கவிஞர் வாலி ஸார் அவர்கள் முன்னுரை வழங்கியிருப்பதை எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவமாகக் கருதுகிறேன். அவர் ‘துக்ளக்’கின் தொடர் வாசகர். எனது கட்டுரைகளை அவர் மிகவும் விரும்பிப் படிக்கிறார் என்பதை நண்பர் சீனுவாசன் மூலம் அறிந்ததும், அதையே சாக்காக வைத்துக்கொண்டு அவரது முன்னுரையைப் பெற நாங்கள் முயன்றோம். கடுகளவும் மறுப்பின்றி முன்னுரை தர முன்வந்த அவரது பெருந்தன்மையை என்னால் மறக்க இயலாது.

    சிலர் தமிழில் சிந்திப்பார்கள். சிலர் ஆங்கிலத்தில் சிந்திப்பார்கள். ஆனால், கவிஞர் வாலி ஸார் கவிதையிலேயே சிந்திப்பார் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு அவரது பேச்சே கவித்துவம் மிகுந்தது. அவரது தாய்மொழியே கவிதைதானோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும் பேச்சுத்திறன் கொண்டவர். அவரை நான் சந்தித்துப் பேசிவிட்டு திரும்பிய போதெல்லாம், ஒரு புத்தகத்தைப் படித்து முடித்த உணர்வே ஏற்பட்டது. அத்தகைய அறிவுசால் கவிஞர், தனது மதிப்பு மிக்க நேரத்தை ஒதுக்கி, முன்னுரை எழுதித் தந்தமைக்காக எனது இதயமார்ந்த நன்றிகளை இங்கே பதிவு செய்கிறேன்.

    அன்புடன்

    சத்யா

    நான், சத்யாவின் ரசிகன்!

    மரகதத்திற்கு ஒரு விசேஷ குணம் உண்டு எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது தன்னுடைய பச்சை நிறத்தைத் தன்னைச் சுற்றியுள்ள பொருள்கள் மீது பாய்ச்சுமாம்.

    என் இனிய நண்பர், நான் வெகுவாக மதிக்கும் ஒரு சிலரில் மிக முக்கியமானவர் திரு. சோ அவர்கள் மரகத மணியைப் போன்றவர்.

    அவர் தன்னிடமுள்ள அங்கதச் சுவையை, அரசியல் நையாண்டியை அழகுற ஏட்டில் வெளிப்படுத்தும் சாதுர்யத்தை தன்னைச் சுற்றியுள்ள அணுக்கமான நண்பர்கள்மீதும் பாய்ச்சவல்ல மரகத மணியைப் போன்றவர்.

    திரு. சோ அவர்களின் ‘துக்ளக்’ ஏட்டில் பணிபுரியும் திரு. சத்யா அவர்களிடம் நான் சோவின் பாதிப்பைப் பார்க்கிறேன்.

    திரு. சத்யா அவர்களுக்கு, அதாவது அவரது எழுத்துகளுக்கு நான் பரம ரசிகன். அரசியல், சமூகம், கலை, இலக்கியம் எதுவாயினும் அவற்றின் நல்லது கெட்டதை நியாயப்படுத்தி அதே நேரத்தில் யாரையும் காயப்படுத்தாமல், எடுத்தோதுகின்ற பாங்கு எனக்கு நிரம்பப் பிடிக்கும்.

    வேண்டுதல் வேண்டாமை இன்றி, நடுக்கண்ட நியாயத்தை, நடுமுள் நடுங்காத ஒரு தராசு போல் எடை போட்டுச் சொல்வது, எல்லோர்க்கும் எளிதான காரியமல்ல.

    சிரிக்கச் சிரிக்க எழுதி, சிரித்தபின் சிந்திக்கவும் வைக்கின்ற எழுத்தை முதன் முதலில் தமிழில் துவங்கிய புண்ணியவான் அமரர் திரு. எஸ்.வி.வி. ஆவார்கள். அதற்குப் பிறகு அத்தகு எழுத்து, என் அருமை நண்பர் ‘சோ’ அவர்களுக்குக் கைவந்த கலையாகி, நாடகமாகவும் பத்திரிகைத் தலையங்கமாகவும் பரிணமித்து, இன்றளவும் எல்லோரையும் பரவசப்படுத்திக் கொண்டிருக்கிறது.

    வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதற்கு ஒப்பான, அந்த அரிய கலை, திரு. சத்யாவிடம் அமோகமாகத் துலங்குகிறது.

    ‘மாடசாமியின் மனசாட்சி’யைப் படித்துவிட்டு, பல இடங்களில் அடக்க முடியாமல் கொப்புளித்து வந்த சிரிப்பின் காரணமாய், நான் தாம்பூலத்தை என் சட்டை வேட்டியில் தெளித்திருக்கிறேன்.

    திரு. சத்யாவின் எழுத்து மனிதனின் அறியாமை அழுக்கைச் சலவை செய்வதோடு, அவனை ஆரோக்கியமான சிந்தனைக்கு அழைத்துச் செல்கிறது.

    நாட்டு நடப்பை, இந்த நூலைவிட வெகு நயமாக நாகரிகமாக, பிறிதொருவரால் சொல்லக்கூடும் என்று என்னால் கருத முடியவில்லை.

    வாசகர்களுக்கு இந்த நூலை வாசிப்பதன் மூலம் ஆரோக்கியம் வளரும், மனம் தன் அழுத்தம் குறைந்து மென்மையாகும். புறக் கவலைகளை மறக்கச் செய்யும்.

    திரு. சத்யாவிடமிருந்து, இதுபோன்ற படைப்புகளை இன்னமும் நான் எதிர்பார்க்கிறேன். அவர் நிறைய எழுதக்கூடியவர், நிறைவாகவும் எழுதக் கூடியவர்.

    திரு. சத்யாவிற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துடன்...

    அன்புடன்

    வாலி

    1. முதல்வர் இட்ட கட்டளை

    ‘உடனே சந்திக்கவும் மிக அவசரம்’ என்று முதல்வரிடமிருந்து வந்திருந்த ஃபேக்ஸ் செய்தியைக் கண்டதும் அமைச்சர் தணிகாசலத்துக்கு வியர்த்துக் கொட்டியது.

    நல்ல செய்தியாக இருந்தால் ஃபோனிலும், ஆபத்தான செய்தியாக இருந்தால் ஃபேக்ஸ் செய்தி மூலமும் அழைப்பது முதல்வரின் வழக்கம். பிறந்த நாள் வாழ்த்தை ஃபோன் மூலமும் அனுதாபச் செய்திகளை ஃபேக்ஸிலும் தெரிவிப்பது அவர் ஸ்டைல். அதனால்தான் முதல்வரின் ஃபேக்ஸ் செய்தி தணிகாசலத்தை வெலவெலக்கச் செய்துவிட்டது.

    முதல்வர் எதற்காக தன்னை அவசரமாக அழைக்கிறார் என்று புரிந்துகொள்ள முடியாததால், விபரீதமாகவெல்லாம் கற்பனை செய்தபடியே முதல்வரின் வீட்டிற்கு காரில் கிளம்பினார் தணிகாசலம்.

    ‘இலாகா மாற்றமாக இருந்தால்கூட பரவாயில்லை. மந்திரி சபையிலிருந்தே நீக்கிவிட்டால் என்ன செய்வது? ஸீனியர் அமைச்சர் நாகமுத்துவின் கோஷ்டியில் உடனே சேர்ந்து விடுவதா, சற்று பொறுத்து சேர்வது நல்லதா? சீச்சி! அப்படியெல்லாம் இருக்காது. எதற்காக என்னை நீக்கப் போகிறார்? நான்தான் மாதா மாதம் கட்சி நிதியை ஒழுங்காக முதல்வரிடம் செலுத்தி விடுகிறேனே.’

    சென்ற மாதம் கட்சி நிதியை முதல்வரின் மனைவி வள்ளியம்மாளிடம் கொடுத்தது அவர் நினைவுக்கு வந்தது. வள்ளியம்மாள் கட்சிப் பணத்தில் ஏதாவது ஊழல் செய்து தொலைத்து விட்டாரோ என்றும் சந்தேகப்பட்டார் தணிகாசலம். அப்படியும் இருக்க முடியாது. முதல்வர், மனைவி உட்பட யாரிடமும் ஏமாறாத ஆற்றல் கொண்டவர். ஞாபகமாக, மனைவியிடமிருந்து கட்சி நிதியை கேட்டு வாங்கியிருப்பார். தலைவர் எப்போதுமே தனக்கு என்று கேட்பவரல்ல. நாகரீகம் கருதி, கட்சி நிதி என்று கேட்பதுதான் வழக்கம். தான் வேறு கட்சி வேறு என்று நினைப்பவரல்ல அவர்.

    முதல்வர் வஜ்ரவேலுவின் ஞாபகசக்தி அபாரமானது. அவசியமில்லாத விஷயங்களைக்கூட மறக்கமாட்டார். ஒருமுறை இப்படித்தான் முதல்வருடன் காரில் போய்க் கொண்டிருந்தபோது ரெயில்வே கேட் மூடியிருந்ததால் காரை நிறுத்த வேண்டியதாயிற்று. கேட்டைச் சாத்தும் ஊழியரைப் பார்த்ததும் காரிலிருந்து இறங்கி அவரிடம் பேச ஆரம்பித்துவிட்டார் வஜ்ரவேலு.

    ‘என்ன முனுசாமி சௌக்கியமா? 12 வருஷத்துக்கு முன்னே இந்த இடத்திலே பார்த்தது உன்னை. உன் பையன் குடிக்கிறதை நிறுத்திட்டானா? உன் சம்சாரத்துக்கு இப்ப ஆஸ்த்மா எப்படி இருக்குது? கொஞ்சம் சீவல் கொடு’ என்று வஜ்ரவேலு பேசப்பேச, முனுசாமிக்கே அதிர்ச்சியாகப் போய்விட்டது. அவ்வளவு ஞாபக சக்தி கொண்டவர் வஜ்ரவேலு.

    அதுவே அவருக்கு வினையாகவும் போய்விட்டது.

    நான்காம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதும் போது, தேவையில்லாமல் இரண்டாம் வகுப்புப் பாடங்கள் எல்லாம் அவர் நினைவுக்கு வந்து அவற்றை எழுதியதால் நான்காவது வகுப்பில் தேற முடியாமல் போய்விட்டது. அந்த கோபத்தில், அத்தோடு பள்ளிப் படிப்புக்கே முழுக்கு போட்டு விட்டார். பிற்காலத்தில், கல்வி முறையில் பல மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்ற முடிவுக்கு முதல்வர் வந்ததற்கும் இச்சம்பவம்தான் காரணம்.

    கார் முதல்வரின் வீட்டருகே நின்றது. டிரைவர் கார் கதவை திறந்த பிறகே, தணிகாசலம் பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டார்.

    உள்ளே நுழையும் முன் ஒருமுறை கடவுளை நினைத்தது அவர் மனம். அவர் சார்ந்திருக்கும் ‘மக்கள் முன்னேற்றக் கழகம்’ நாத்திகக் கொள்கை உடைய கட்சி. அதன் காரணமாக அக்கட்சிப் பிரமுகர்கள் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் கடவுளை வணங்கி வந்தார்கள். முதல்வர் வஜ்ரவேலு கடவுளைக் கும்பிடுவார் என்பது தணிகாசலத்துக்கும், தணிகாசலம் கடவுளைக் கும்பிடுவார் என்பது வஜ்ரவேலுவுக்கும் தெரியும். இவருக்கு தெரியும் என்பது அவருக்கும் தெரியும். அவருக்கு தெரியும் என்று இவருக்கும் தெரியும். ஆனாலும் இருவரும் அவ்வப்போது தங்களது நாத்திகக் கொள்கை பற்றி பெருமையாக உரையாடுவதுண்டு.

    ‘உள்ளே போங்க ஸார்’ என்று டிரைவர் நினைவுபடுத்தியதும் முதல்வரின் வீட்டுக்குள் நுழைந்தார் தணிகாசலம். அவருடைய நெஞ்சு துடிக்கின்ற சப்தம் அவருக்கே கேட்டது. இத்தனைக்கும் அவருக்கு காது கொஞ்சம் மந்தம்.

    முதல்வரின் அறையில் ஏற்கெனவே மூத்த அமைச்சர் நாகமுத்து வந்து அமர்ந்திருந்தார். முதல்வர் அவருக்கும் ஃபேக்ஸ் செய்தி அனுப்பினாரா அல்லது இருவரும் சேர்ந்து தனக்கு மட்டும் ஃபேக்ஸ் செய்தி அனுப்பினார்களா என்று அவரால் அந்த நிலையில் யூகிக்க முடியவில்லை.

    மூத்த அமைச்சர் நாகமுத்துவைப் பற்றி இங்கே சில வார்த்தைகள் குறிப்பிட வேண்டியது அவசியம். கட்சியில் நாகமுத்துவைவிட ஒரு வருடம் ஸீனியர் வஜ்ரவேலு. கட்சியின் ஸ்தாபகர் திருவேங்கடம் மறைந்தபோது, இந்த ஒருவருட ஸீனியர், என்ற தகுதியின்படி வஜ்ரவேலு கட்சியின் முதலிடத்தைப் பிடிக்க, நாகமுத்து இரண்டாம் இடத்தைப் பிடிக்க நேர்ந்தது.

    கிட்டத்தட்ட 28 வருடங்களாக, அந்த ‘ஒருவருட ஸீனியர்’ என்ற அடிப்படையிலேயே வஜ்ரவேலு கட்சித் தலைவராகவும் முதல்வராகவும் நீடித்து வருவதால் விவரிக்க முடியாத எரிச்சலுக்கு ஆளாகியிருந்தார் நாகமுத்து.

    வஜ்ரவேலுவுக்கு அடுத்து, கட்சி நம்மிடம் வரும் என்று காலம் காலமாக காத்திருப்பதால், வஜ்ரவேலுவும் தானும் சமம்தான் என்று கட்சியில் மற்றவர்களுக்கு அவ்வப்போது ஜாடைமாடையாக உணர்த்துவது நாகமுத்துவின் வழக்கமாகி விட்டிருந்தது.

    மற்ற அமைச்சர்கள் வஜ்ரவேலுவுக்கு அதீத மரியாதை காட்டும்போது நாகமுத்து மட்டும் சற்று அலட்சியமான தோரணையில் நடந்து கொள்வார். அதே நேரத்தில், தான் அலட்சியப்படுத்தவது வஜ்ரவேலுக்குத் தெரிவதும் நல்லதல்ல; தனது பதவியையே பறித்து விடவும் அவர் தயங்க மாட்டார், என்பதும் நாகமுத்துவுக்கு புரிந்துதான் இருந்தது. அதன் காரணமாக வஜ்ரவேலுவுக்கு தெரியாதபடியே வஜ்ரவேலுவை அலட்சியப்படுத்திக் கொண்டிருந்தார்.

    முதல்வர் வஜ்ரவேலுவுக்கு, சுமார் 15 வருடங்களுக்கு முன் ஹார்ட் அட்டாக் வந்தது. மிகவும் சீரியஸான நிலையில் படுத்திருந்தார் வஜ்ரவேலு. முதல்வர் மறைந்த பிறகு, தான் தலைவராகிவிட்டால் கட்சியில் என்னவெல்லாம் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்று உற்சாகத்துடன் யோசித்தபடியே அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார் நாகமுத்து. ஆனால், துரதிர்ஷ்டவசமாக வஜ்ரவேலு பிழைத்துக் கொண்டு விட்டதால், நாகமுத்துவின் கனவுகள் மாண்டு விட்டன.

    அதற்குப்பிறகு, வஜ்ரவேலுவுக்கு உடல் நலம் குன்றும் போதெல்லாம், நாகமுத்துவுக்கு அவர் மேல் அனுதாபம் வருவதற்குப் பதில் ஆத்திரம் வர ஆரம்பித்தது.

    கட்சியில் வஜ்ரவேலுக்கு அடுத்து நாகமுத்து முதல்வராவார் என்று பரவலாக நம்பப்பட்டு வந்ததால், நாகமுத்து ஆட்சியைப் பிடிக்கும்போது தன்னை ஒதுக்கி விடக்கூடாதே என்று முன் யோசனையுடன் கணக்கிட்ட தணிகாசலம், வஜ்ரவேலுவிடம் பேசும்போது வஜ்ரவேலுவின் ஆதரவாளராகவும், நாகமுத்துவுடன் பேசும்போது நாகமுத்துவின் ஆதரவாளராகவும் காட்டிக் கொண்டிருந்தார்.

    இப்போது முதல்வரின் அறையில், இருவருமே அமர்ந்திருந்ததால் யாருக்கு முதலில் விஷ் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. ஒரு கணம் தடுமாறிய தணிகாசலம் இருவருக்கும் மத்தியில் கண்ணை மூடிக்கொண்டு நடுநிலையோடு கும்பிட்டார்.

    முதல்வரின் எதிரே வந்து அமர்ந்த தணிகாசலம், முதல்வர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற கவலையில் இருவரையும் மாறி மாறி பார்த்தார். முதல்வர் தணிகாசலத்தை உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையின் தீட்சண்யத்தைத் தாங்க முடியாத தணிகாசலம் முதல்வரின் பார்வையைத் தவிர்க்க விரும்பி, அங்கிருந்த காலண்டரில் தேதியையும், கடிகாரத்தில் மணியையும், ஜன்னல் வழியே மரங்களையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார்.

    தங்களை வரவழைத்த விஷயம் பற்றி முதல்வராகவே கூறுவார் என்று நாகமுத்துவும் தணிகாசலமும் காத்திருந்தனர்.

    ‘லேசா நெஞ்சு வலி’ என்று பேச்சை ஆரம்பித்தார் முதல்வர்.

    சாதாரணமாகவே, தணிகாசலத்துக்கு காது அவ்வப்போது சரியாகவும் மற்ற சமயங்களில் அரை குறையாகவும் கேட்கும். இப்போது பயத்தில் இருந்ததால், முதல்வர் ‘நெஞ்சுவலி’ என்று கூறியது தணிகாசலத்தின் காதில் ‘தீபாவளி’ என்று விழுந்து தொலைத்தது. அடுத்த மாதம் வரவிருக்கும் தீபாவளி பற்றித்தான் தலைவர் ஏதோ கூறுகிறார் போலிருக்கிறது என்று நினைத்து, முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொண்டார் தணிகாசலம்.

    நாகமுத்துவின் கணக்குப்படி, வஜ்ரவேலுவுக்கு இது வரைக்கும் 38 தடவைக்கும் மேல் நெஞ்சுவலி வந்து விட்டதால், அவர் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ‘இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை’ என்றுதான் நினைத்தார். அதனால், முதல்வர் நெஞ்சுவலி என்று கூறியதை ‘இன்று அதிக வெயில்’ என்ற தகவலைப் போலவே எடுத்துக்கொண்டு ‘ஓஹோ’ என்றார் ஸ்டைலாக காலாட்டியபடியே.

    நெஞ்சுவலின்னு சொன்னேன்’ என்று வஜ்ரவேலு கத்திய பிறகுதான், ‘ஐயையோ...! அப்படியா?’ என்று பதறினார் தணிகாசலம். ‘எத்தனை நாளாங்க?’ என்று அக்கறையை சிரமப்பட்டு வரவழைத்துக்கொண்டு கேட்டார் நாகமுத்து.

    ‘பிரதமர் ஒரு தகவலைச் சொன்னார். அதுலேர்ந்து நெஞ்சு ஒரு மாதிரியா இருக்குது. இப்ப பரவாயில்லை’ என்று வஜ்ரவேலு கூறியதும், ‘நல்ல வேளை’ என்று வேதனையுடன் கூறினார் நாகமுத்து.

    ‘பிரதமர் என்ன சொன்னாருங்க’ தணிகாசலம் கேட்டார்.

    ‘இன்னும் ரெண்டு, மூணு மாசத்திலே சட்டசபைக்கு தேர்தல் நடத்திடலாம்னு சொன்னார். அதைச் சொல்லத்தான் உங்களை வரச் சொன்னேன்.’

    ‘எப்படிங்க? இன்னும் நம்ம பதவிக்காலம் எட்டு மாசம் இருக்குதே’ என்று கேட்டார் நாகமுத்து படபடப்புடன்.

    ‘பாராளுமன்றத் தேர்தலோட சேர்த்து, சட்டசபைத் தேர்தலையும் நடத்திடலாம்’னு பிரதமர் சொல்றார். என் உடம்பு இருக்கிற நிலையிலே இன்னும் ஆறு மாசம் பொறுத்து பிரசாரம் செய்ய முடியுமான்னு சந்தேகமா இருக்குது. அதான் நானும் சரின்னு சொல்லிட்டேன்.’

    இரண்டு மாதத்தில் தேர்தல் என்று நினைக்கும்போதே நாகமுத்துவுக்கும் தணிகாசலத்துக்கும் பகீர் என்றது. பதவி போவதைவிட, தாங்கள் பார்த்த ஃபைல்கள் எல்லாம் எதிரிகளின் கரங்களுக்குப் போய்விடுமே என்று நினைக்கும்போதே குலை நடுங்கியது.

    அந்த குலை நடுக்கத்தோடு, ‘இருப்பது இரண்டே மாதம்தான். அதற்குள் தேர்தல் செலவு, அதற்குப் பின் வரப்போகிற வழக்கு செலவு, எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்’ என்ற எண்ணமும் தோன்றியது.

    தேர்தலையொட்டி, மக்களிடமிருந்து வஜ்ரவேலு வசூலிக்கும் கட்சி நிதியை, வஜ்ரவேலுவிடமிருந்து முழுமையாக வசூலிக்கும் ஆற்றல் கட்சிக்கு இல்லாமல் இருந்தது.

    மக்களின் மன நிலை பற்றி அறிந்து தெரிவிக்கும்படி உளவுத்துறையிடம் முதல்வர் ஏற்கெனவே கூறியிருந்தார். உளவுத்துறை முதல்வரின் மனநிலையை உளவு பார்த்து அதை பிரதிபலிக்கும் வகையில் அறிக்கை வழங்கியிருந்தது. அந்த தெம்பில்தான், பிரதமர் கேட்டுக்கொண்டவுடன், தேர்தலைச் சந்திக்க முதல்வர் சம்மதித்திருந்தார்.

    ‘மறுபடியும் ஆட்சியை நாமதான் பிடிப்போம். இருந்தாலும் ராஜரத்தினம் பொல்லாதவன். நியாய உணர்வே இல்லாதவன். அவன் ஆட்சிக்கு வந்துட்டா, நம்ம ஊழலையெல்லாம் வெளியே கொண்டு வந்துட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். பழிவாங்காம விடமாட்டான். அதனாலே, உடனடியா உங்க துறையிலே பிரச்னைக்குரிய கோப்புகளை பட்டியல் போட்டு தேர்தலுக்கு முன்னாலே எரிச்சுடணும். பட்டியல் நகலை மட்டும் என்கிட்டே கொடுத்துடுங்க. எல்லா அமைச்சர்கள் கிட்டேயும் சொல்லிடுங்க.’

    தனது துறையில் எந்தெந்த ஃபைல்களில் ஊழல் செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தணிகாசலத்திடம் இல்லை. பணக் கணக்கு மட்டும்தான் அவரிடம் இருந்தது. ஃபைல் விவரங்களை பி.ஏ.விடம்தான் கேட்க வேண்டும். ஆனால், அதில் இன்னொரு பிரச்னையும் இருந்தது. ஒவ்வொரு துறையிலும் இரு வகை ஊழல்கள் உண்டு. முதல்வருக்கு தெரிந்து செய்யப்படுகிற ஊழல்கள். முதல்வருக்கு தெரியாமல் செய்கிற ஊழல்கள். இந்தப் பட்டியலை எப்படி முதல்வரிடம் கொடுப்பது? அமைச்சர்கள் தன்னிடம் கட்சி நிதி என்று கொடுத்த கணக்கு சரியானதுதானா என்று சரி பார்க்கவே ஊழல் கோப்புகளின் பட்டியலை, முதல்வர் கேட்கிறார் என்று புரிந்ததால் தணிகாசலம் பயந்தார்.

    தணிகாசலம் மட்டுமல்ல, எல்லா அமைச்சர்களுமே முதல்வருக்குத் தெரியாமல், ஊழலிலேயே ஊழல் செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த காலத்தில் யார் நேர்மையாக ஊழல் செய்கிறார்கள்?

    இப்படியெல்லாம் நினைத்த தணிகாசலம் ‘எரிக்க முடியாத ஃபைலையெல்லாம் என்னங்க பண்றது?’ என்று கேட்டார்.

    ‘ஏன் எரிக்க முடியாது? நெருப்பு வெச்சா எந்த ஃபைலும் எரிஞ்சுத்தானே போகணும்.’

    ‘அதில்லைங்க. இத்தனை வருஷத்துக்கு அப்புறம்தான் ஃபைலை எரிக்கணும்னு சில அதிகாரிகள் அடாவடியா ரூல் பேசுவாங்க’ என்றார் தணிகாசலம்.

    நாகமுத்துவுக்கும் நியாயமானதொரு சந்தேகம் தோன்றியது. ஊழல் கோப்புகளையெல்லாம் எரிப்பது என்றால், அநேகமாக ஆபீஸ் மொத்தத்துக்குமே நெருப்பு வைத்தால்தான் முடியும். இது சாத்தியமா என்று கவலைப்பட்டார். அவர் கூர்மையான நுண்ணறிவு படைத்த முதல்வர் வஜ்ரவேலு, பிரச்னையை தீர்த்து வைத்தார்.

    ‘இத்தனை வருஷம் மந்திரியா இருந்து என்னதான் கத்துக்கிட்டீங்க? எரிக்கணும்னா எரிக்கிறது இல்லை. சரி பண்றது. எந்த ஃபைல் யார் கையிலே கிடைச்சாலும், ஊழலைக் கண்டுபிடிக்க முடியாதபடி, எந்த பேப்பரை சேர்க்கணும்; பேஜ் நம்பரையெல்லாம் எப்படி மாத்தணும்னு பார்த்து உடனே சரி பண்ணுங்க. தெரியலைன்னா மூத்த அமைச்சர்களைக் கேளுங்க. நம்ம மந்திரிகள் எல்லார்கிட்டேயும் சொல்லுங்க. நாளைக்கு உங்க ஃபைல் கோர்ட்லே மாட்டிகிட்டா என்ன கதி ஆகும்னு யோசிச்சுப் பார்த்து, போர்க்கால அடிப்படையிலே நடவடிக்கை எடுக்கணும். புரியுதா?’ என்று கூறியபடி முதல்வர் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

    திடீரென போலீஸ் கைது செய்தால், எப்படி புன்னகைப்பது, ஃபோட்டோவுக்கு எப்படி போஸ் தருவது, கையசைப்பது எப்படி என்றெல்லாம் வேண்டாத நினைப்புகள் தணிகாசலத்தின் சிந்தனையில் தோன்றிக் கொண்டிருந்தன.

    நாகமுத்துவோ விபரீதமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

    2. இரு திட்டங்கள்

    அமைச்சர்கள் நாகமுத்துவும், தணிகாசலமும் வெளியேறியதும். என்னங்க, தேர்தலா வரப்போகுது? என்று முதல்வர் வஜ்ரவேலுவைக் கேட்டார் அவரது மனைவி வள்ளியம்மாள்.

    ஆமா! எக்கச்சக்கமான டென்ஷன். கூட்டணிக் கட்சித் தலைவர்களைக் கூப்பிட்டு ஸீட் ஒதுக்கீடு பத்திப் பேசணும். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கணும். தேர்தல் செலவுகளுக்கு ஏற்பாடு செய்யணும்.

    அதெல்லாம் இருக்கட்டுங்க. நம்ம சின்னகண்ணு விஷயத்தை எப்ப கவனிக்கப் போறீங்க? நீங்க இருக்கும் போதே அவனுக்கு ஒரு வழி பண்ணிடுங்களேன்.

    திடுக்கிட்டார் வஜ்ரவேலு.

    என்ன? நான் இருக்கும்போதேவா? லேசா நெஞ்சுவலின்னு சொன்னேன். அமைச்சர்களை ஆழம் பார்க்கிறதுக்காக சோதிச்சுப் பார்த்தேன். அதுக்காக நான் போயிடுவேன்னே முடிவு பண்ணிட்டியா?

    ஐயையோ...! நீங்க முதல்வரா இருக்கும்போதே சின்னகண்ணுவுக்கு கலெக்டர் வேலையோ, ஜட்ஜ் வேலையோ வாங்கிக் கொடுத்துடுங்கன்னு சொன்னேன். அவ்வளவுதான்.

    வள்ளியம்மாள் இப்படிக் கூறியது முதல்வரை மேலும் கலவரப்படுத்தியது.

    முதல்வராக இருக்கும் போதே... என்ன கொடுமையான பேச்சு! முதல்வராக இருக்கும்போது உயிர் போவதைக்கூட தாங்கிக் கொள்ளலாம். உயிரோடு இருக்கும்போது முதல்வர் பதவி போவதை எப்படி தாங்கிக்கொள்ள முடியும்?

    நீங்க முதல்வரா இருக்கும்போதே...! என்று வள்ளியம்மாள் கூறியது மீண்டும் மீண்டும் அவர் காதுகளில் விழுந்து துன்புறுத்தியது. தன்னை மாஜி முதல்வர் என்று நினைத்துப் பார்க்கும்போது நிஜமாகவே நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது அவருக்கு.

    மைலார்ட்...! இதோ குற்றவாளிக் கூண்டில் நிற்கிறாரே முன்னாள் முதல்வர் வஜ்வேலு... என்று அரசு வழக்கறிஞர் இரக்கமில்லாமல் பேசுவது போல் தோன்றியது.

    பரவாயில்லை நீங்க உட்கார்ந்துகிட்டே பதில் சொல்லலாம் என்று பெருந்தன்மையோடு அனுமதித்தார் நீதிபதி.

    ‘அட சட்! சனியன் பிடித்த மனம் என்னவெல்லாம் நினைக்கிறது’ என்று எரிச்சலடைந்தார் வஜ்ரவேலு.

    என்னங்க? பதில் சொல்லாம இருக்கீங்களே. நம்ம சின்னகண்ணுவுக்கு ஒரு இஞ்சினீயர் வேலையோ ப்ரொஃபஸர் வேலையோ வாங்கிக் கொடுத்துடுங்களேன். நீங்க முதல்வரா இருக்... வள்ளியம்மாள் முடிப்பதற்குள் போதும் நிறுத்து என்று கத்தினார் வஜ்ரவேலு.

    சின்னகண்ணு, முதல்வர் தம்பதியின் ஒரே மகன். ஒரே பிள்ளை என்பதால் அளவுக்கு மீறி செல்லம் கொடுத்ததில் சின்னகண்ணு தத்து பித்தென வளர்ந்துவிட்டான்.

    முதல்வரின் மகன் என்பதால், மந்திரிகள் உட்பட அனைவருமே அவனிடம் மிகப் பணிவாக நடந்து கொண்டதன் விளைவாக, முரட்டுத்தனம், குழந்தைத்தனம், யாருக்கும் அடங்காத போக்கு போன்ற குணங்களோடு கிட்டத்தட்ட அரைக் கிறுக்கு போலவே வளர்ந்து வந்தான்.

    வேலை என்று எதுவும் இல்லாததால், சின்னகண்ணு பொழுது போகாத சமயங்களில் முதல்வரோடு கோட்டைக்குப் போவதுண்டு. ஏதாவது ஒரு அமைச்சரின் அலுவலகத்தில் நுழைந்து, அங்கிருக்கும் அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் மனம்போன போக்கில் கட்டளையிடுவான். முதல்வரின் மகனாயிற்றே என்பதால், தங்களைப் பற்றி அவன் முதல்வரிடம் ஏடாகூடமாக புகார் செய்து விட்டால், என்ன செய்வது என்ற பயத்தில் அவர்களும் அவன் கூறியபடி எல்லாம் செய்து வந்தார்கள்.

    ஒருமுறை, ஒரு அமைச்சரின் அறைக்குச் சென்று அவர் டேபிள் மீதிருந்த ஃபைலைக் கிழித்து கப்பல் செய்ய ஆரம்பித்து விட்டான் சின்னகண்ணு. அதிர்ச்சியடைந்த அமைச்சர் தயங்கித் தயங்கி, ஸார், அது முக்கியமான ஃபைல். உங்களுக்கு வேறே ஃபைல் தரேன். அதைக் குடுத்துடுங்க என்று கெஞ்சிப் பார்த்தார்.

    சின்னகண்ணுவுக்கு கடும் கோபம் வந்தது. தன் வேலையில் அமைச்சர் குறுக்கிடுகிறாரே என்று ஆத்திரப்பட்டான்.

    முக்கியமான ஃபைலை நீங்க மட்டும் பார்க்கலாமா? என்று கேட்டபடியே மடமடவென்று ஃபைலைக் கிழிக்க ஆரம்பித்தான்.

    ஐயையோ... ஸார்... ஸார்! சொல்றதைக் கேளுங்க. ப்ளீஸ் கதறினார் அமைச்சர்.

    நீ சொல்றதை நான் கேக்கணுமா? எங்கப்பா முதல்வரா, உங்கப்பா முதல்வரா? என்று கத்திக்கொண்டே ஃபைலை பத்தாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியே வீசி விட்டான். அப்போதும் சின்னகண்ணுவின் கோபம் தணியவில்லை. தன்னிடம் அமைச்சர் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதாக, முதல்வரிடம் சின்னகண்ணு புகார் கூற, அடுத்த நாளே அந்த அமைச்சர் கோழி வளர்ப்பு வாரியத்தின் துணைத் தலைவராக மாற்றப்பட்டார்.

    இந்த சின்னகண்ணுதான் இப்போது வாலிபப் பருவம் அடைந்து விட்டதால், அவனது எதிர்காலம் நன்றாக அமைய வேண்டுமே என்ற கவலையில், அவனை ஒரு நல்ல வேலையில் அமர்த்தி விடும்படி வள்ளியம்மாள், வஜ்ரவேலுவிடம் கேட்டுக் கொண்டார்.

    வள்ளியம்மாள் போன்றதொரு அப்பாவியைப் பார்ப்பது கஷ்டம். ஏழாவது படித்த தன் மகன், எத்தகைய வேலைக்கு தகுதியானவன் என்பதைப் புரிந்து கொள்ளக்கூட முடியாதவர். முதல்வரால் முடியாத விஷயமே இல்லை என்பது மட்டும்தான் அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் சின்னகண்ணுவை டாக்டர், வக்கீல் போன்ற எந்த வேலையிலும் அமர்த்த முதல்வரால் முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

    வள்ளி...! நம்ம சின்னகண்ணுவுக்கு இந்த மாதிரி சின்ன வேலையெல்லாம் பாக்கணும்னு என்ன தலையெழுத்து? அவன் எதிர்காலம் எப்படி இருக்கணும்னு நான் ஏற்கெனவே முடிவு பண்ணிட்டேன் என்றார் வஜ்ரவேலு.

    அப்படியா? அவனுக்கு என்ன வேலை வாங்கிக் கொடுக்கப்போறீங்க? காலா காலத்திலே அவனை ஒரு நல்ல வேலையிலே சேர்த்து, ஒரு கல்யாணமும் பண்ணிட்டா பெரிய பொறுப்பு தீரும்ங்க என்றார் வள்ளியம்மாள் பரவசத்துடன்.

    சின்னகண்ணு ஏழாவதுதான் படிச்சிருக்கான். இந்த படிப்புக்கு அவனுக்கு டாக்டர், வக்கீல் வேலையெல்லாம் கிடைக்காது. அதைவிட பெரிய வேலைக்குத்தான் அவன் லாயக்கு என்றார் வஜ்ரவேலு.

    சின்னகண்ணுவுக்கு படிப்பு ஏறாததால், தட்டுத் தடுமாறி ஏழாவது வரை வந்தான். ஏழாவதில் நிச்சயம் தேற மாட்டான் என்று தெரிய வந்ததும் அவனுக்காக, ஏழாவது வரை எல்லா குழந்தைகளும் பாஸ் என்ற சட்டத்தையே கொண்டு வந்தார் முதல்வர் வஜ்ரவேலு. அப்படியும் சின்னகண்ணுவின் அறிவாற்றலுக்கு ஈடு கொடுக்கிற அளவுக்கு கல்வித் திட்டம் அமையாததால், அவன் படிப்பு அத்துடன் நின்றது.

    சொல்லுங்க. சின்னகண்ணுவுக்கு என்ன வேலை வாங்கித் தரப் போறீங்க ஆவலுடன் கேட்டார் வள்ளியம்மாள்.

    அவன்தான் அடுத்த முதல்வர் என்றார் வஜ்ரவேல்.

    ஏதோ ஒண்ணு என்று சொல்லியபடியே வள்ளியம்மாள் உள்ளே சென்று விட்டார்.

    தனக்குப் பிறகு தன்னுடைய ஒரே மகன் சின்னகண்ணுவை முதல்வராக்கி விட வேண்டும் என்ற ஆவல் வஜ்ரவேலுவுக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. முதல்வர் மாநிலத்துக்கு ஆற்றும் உதவி, தன் மகனை அடுத்த முதல்வராக்குதல் என்று உறுதியாக நம்பினார் அவர். முதலில் எம்.எல்.ஏ.வாக்கி, பிறகு இரண்டாவது நிலை அமைச்சராக்கிவிட்டால், அடுத்து அவனை முதல்வராக்கி விடுவது எளிது என்று திட்டமிட்டிருந்தார். அவரது திட்டத்துக்கு பெரும் தடையாக இருந்தவர் நாகமுத்து.

    வஜ்ரவேலுவுக்கு அடுத்து முதல்வராவதற்காக கழுகுபோல் காத்திருக்கும் நாகமுத்துவுக்கு, கட்சியில் கெட்ட பெயர் ஏற்படுத்தி அவரை ஒழித்து விட்டால்தான், தன் திட்டம் நிறைவேறும் என்று எண்ணியிருந்தார் வஜ்ரவேலு. இத்தேர்தல் பிரசாரத்தின் போதே நாகமுத்துவை ஒரு வழியாக்கி விட வேண்டும் என்று வஜ்ரவேலு முடிவு செய்த போது ஃபோன் ஒலித்தது.

    ஃபோனை எடுத்தார். ஃபோனில் வந்த செய்தி நல்ல செய்தியாக இல்லை என்பதை அவர் முகம் காட்டியது.

    அப்படியா? இதோ வந்துட்டேன் என்று கூறி ஃபோனை வைத்துவிட்டு அவசரமாகக் கிளம்பினார் வஜ்ரவேலு.

    ***

    நாகமுத்துவின் வீட்டில் தணிகாசலம் உள்ளிட்ட நாகமுத்துவின் ஆதரவாளர்கள் குழுமியிருந்தனர்.

    யாரைக் கேட்டுங்க முதல்வர் தேர்தலுக்கு சம்மதிச்சாரு? கட்சியிலே எவ்வளவு பெரிய தலைவர் நீங்க? உங்களைக் கூட கேக்காம அவர் எப்படிங்க முடிவெடுக்கலாம்? என்னங்க ஜனநாயகம் இது? என்று ஆவேசப்பட்டார் அமைச்சர் கலையழகன்.

    எனக்கு வந்த கோபத்துக்கு அப்பவே ராஜினாமா கடிதத்தை மூஞ்சி மேலே வீசிட்டு வந்திருப்பேன். தேர்தல் சமயத்திலே கட்சிக்குள்ளே குழப்பம் வந்துடக் கூடாதேன்னு பொறுத்துக்கிட்டேன் ராஜினாமா கடிதத்தைக் கையில் எடுத்து கோபத்துடன்

    Enjoying the preview?
    Page 1 of 1