Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arasiyalvaathiyin Aavi
Arasiyalvaathiyin Aavi
Arasiyalvaathiyin Aavi
Ebook154 pages58 minutes

Arasiyalvaathiyin Aavi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதை எழுதுவதை விட, நாடகம் எழுதுவது சற்றுக் கஷ்டமான காரியம். நாடகமாக எழுகம்போது, கதையில் நடக்கும் அனைத்துச் சம்பவங்களையும் கதாபாததிரங்கள் மூலமாகவே புரிய வைக்க வேண்டும். என்கிற நோக்கத்தில் கதையை சொல்வதால், வாசிப்பவர்களுக்கு விரைவில் அலுப்புத் தட்டி விடக் கூடிய ஆபத்து நாடகத்தில் இருக்கிறது. இந்த ஆபத்து நிகழாதபடி எழுத பெரிதும் கை கொடுப்பது நகைச்சுவை. அந்த நகைச்சுவை தாராளமாகக் கிடைக்கும் களம் அரசியல் களம்தான் என்பதால், அரசியலில் நகைச்சுவை களந்த நாடகத்தை கீழே காண்போம்.

Languageதமிழ்
Release dateFeb 4, 2023
ISBN6580160109370
Arasiyalvaathiyin Aavi

Read more from Thuglak Sathya

Related to Arasiyalvaathiyin Aavi

Related ebooks

Related categories

Reviews for Arasiyalvaathiyin Aavi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arasiyalvaathiyin Aavi - Thuglak Sathya

    http://www.pustaka.co.in

    அரசியல்வாதியின் ஆவி

    Arasiyalvaathiyin Aavi

    Author:

    துக்ளக் சத்யா

    Thuglak Sathya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    காட்சி - 15

    காட்சி - 16

    காட்சி - 17

    காட்சி - 18

    காட்சி - 19

    காட்சி - 20

    முன்னுரை

    முத்தமிழில் ஒன்று என்ற சிறப்பைப் பெற்றுள்ள நாடகம் ஓர் அற்புதமான கலை வடிவம். கதையை கதாசிரியரே சொல்லாமல், கதாபாத்திரங்கள் மூலமாக கதையைச் சொல்கிற முறை, கதாசிரியரின் சிந்தனைகள், கதாபாத்திரங்களின் சிந்தனைகள், வர்ணனைகள் போன்றவற்றின் மூலம் வாசகர்களை சிரமப்படுத்தாமல், நேரடியாகக் கதையை மட்டும் சொல்ல நாடகம் வசதியான சாதனம். ஆனால், கதை எழுதுவதை விட, நாடகம் எழுதுவது சற்றுக் கஷ்டமான காரியம் என்பது என் கருத்து.

    நாடகமாக எழுதும்போது, கதையில் நடக்கும் அனைத்துச் சம்பவங்களையும் கதாபாத்திரங்கள் மூலமாகவே புரிய வைக்க வேண்டும். என்பது நாடக இலக்கணத்தின் நிர்ப்பந்தம். மழை ‘சோ’வென்று கொட்டிக் கொண்டிருந்தது. அவசரம் அவசரமாக பஸ்ஸைப் பிடிக்க ஓடினான் சேகர் என்பதை விமலா... அந்தக் குடையை எடு. இந்த மழையில் எப்படித்தான் ஆஃபீஸ் போகப் போறேனோ? என்று வசனமாக எழுத வேண்டும். இப்படிச் சுற்றி வளைத்து கதையைச் சொல்வதால், வாசிப்பவர்களுக்கு விரைவில் அலுப்புத் தட்டி விடக் கூடிய ஆபத்து நாடகத்தில் இருக்கிறது.

    இந்த ஆபத்து நிகழாதபடி எழுத பெரிதும் கை கொடுப்பது நகைச்சுவை. அந்த நகைச்சுவை தாராளமாகக் கிடைக்கும் களம் அரசியல் களம்தான் என்பதால், அரசியல் நாடகம் படிப்பதற்குச் சுவையானது என்று உத்தரவாதமாகக் கூறலாம்.

    இந்நாடகத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்கள் மூலம் நாட்டின் அரசியல் போக்கை பொதுவாக நையாண்டி செய்திருக்கிறேனே தவிர, குறிப்பாக யாரையும் அல்லது எந்த அரசியல் கட்சியையும் மனதில் வைத்து விமர்ச்சிக்கவில்லை.

    மேடை நாடகம் போடும் எனது நண்பர் ஒருவருக்காக எழுதப்பட்டதுதான் இந்நாடகம். இது மேடை நாடகமாக்கப்படும்போது, அதற்கேற்ற வகையில் சிதைக்கப்பட்டு விடக்கூடும் என்பதால், முதலில் புத்தக வடிவில் கொண்டு வர விரும்பினேன். அதன்படி, இந்நாடகத்தைச் சிறப்பான முறையில் புத்தகமாக வெளியிட்டமைக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அரசியல் நகைச்சுவை எழுதும்போது, நகைச்சுவைக்காக அதிகமாக மெனக்கெட வேண்டிய அவசியம் இருப்பதில்லை. அரசியலில் நடப்பதை அப்படியே சொன்னாலே, தேவையான அளவுக்கு நகைச்சுவை கிடைத்து விடுகிறது. எனவே, அரசியலை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதும் என் கடமையாகிறது.

    வணக்கம்.

    அன்புடன்

    ‘துக்ளக்’ சத்யா

    பாத்திரங்கள்

    1. ரவி - வேலையில்லாத இளைஞன்

    2. கதிரேசன் - ரவியின் தந்தை

    3. லட்சுமி - ரவியின் தாய்

    4. வேதநாயகம் - தொழிலதிபர்

    5. அலமேலு - வேதநாயகத்தின் மனைவி

    6. கீதா - வேதநாயகத்தின் மகள்

    7. டாக்டர் கணேஷ் - ரவியின் நண்பன்

    8. கந்தசாமி - கணேஷின் தந்தை

    9. தரகர் சிங்காரம்

    10. வீட்டுக்காரர் மற்றும் இரு அடியாட்கள்

    11. இரு பத்திரிகை நிருபர்கள்

    காட்சி - 1

    இடம்: கதிரேசன் வீடு

    பாத்திரங்கள்: ரவி, கதிரேசன், லட்சுமி, வீட்டுக்காரர்

    ரவி: பிள்ளையாரப்பா! இன்னைக்கு நான் போற இன்டர்வியூவிலே செலக்ட் ஆகி எனக்கு வேலை கிடைக்க நீதான் அருள் புரியணும். எனக்கு வேலை கிடைச்சா உன்னை கடல்லே கரைக்கும்போது வழக்கம் போல அஸால்ட்டா தூக்கிப் போடாம, அடிகிடி பாடாதபடி கெளரவமா கரைக்கிறேன்.

    லட்சுமி: ரவி... இன்டர்வியூவுக்குப் போகும்போது வெறும் வயித்திலே போகாதப்பா, உப்புமா பண்ணியிருக்கேன். சாப்பிட்டுப் போ.

    ரவி: உப்புமாவா? போம்மா. மனுஷன் சாப்பிடுவானா அதை? எனக்கு வேண்டாம். அப்பாவுக்குக் குடு.

    லட்சுமி: தினமும் அதைத்தானே சாப்பிட்டுப் போறே? இன்னைக்கு மட்டும் வேண்டாம்னா என்ன அர்த்தம்? நீ சாப்பிடலைன்னா ஏகப்பட்ட உப்புமா மீந்துப் போயிடும்டா. அப்புறம் ராத்திரி வந்து நீதான் அதைச் சாப்பிடணும். அதுக்கு இப்பவே சாப்பிடலாம். சொல்றதைக் கேளு.

    ரவி: ஒரு இட்லி, தோசைன்னாவது செய்யக்கூடாதா?

    கதிரேசன்: சொந்தமா ஒரு வேலை தேடிக்கத் துப்பில்லே. நாக்கு மட்டும் விதம் விதமா கேக்குது. உன் வயசுப் பசங்க எல்லாம் உன்னை மாதிரிதான் சாப்பிட்டு ஊரைச் சுத்தறாங்களா?

    ரவி: அவங்களுக்கெல்லாம் பொறுப்பான அப்பா இருக்காங்க. எனக்கு அப்படியா?

    கதிரேசன்: இந்தக் கிண்டலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே. ஒரு இண்டர்வியூவிலேயாவது கேக்கற கேள்விக்கு ஒழுங்க பதில் சொல்றியா? வாய்தான் கிழியுது.

    ரவி: வாய் மட்டும் கிழியலை. பேன்ட் கூட கிழிஞ்சுதான் இருக்குது. அதையே அட்ஜஸ்ட் பண்ணிப் போட்டுக்கறேன்.

    லட்சுமி: நீங்கதான் உங்க ஆஃபீஸ்லேயே இவனுக்கு ஒரு வேலை வாங்கித் தரக்கூடாதா?

    கதிரேசன்: எங்க ஆஃபீஸ் கவர்மென்ட் ஆஃபீஸ்டி. எனக்கே அங்கே உருப்படியா வேலை இல்லை.

    ரவி: வேலை இல்லைன்னா என்ன? சம்பளம் கிடைக்குமே. எனக்கு வேலையும் இல்லை. சம்பளமும் இல்லை. என் கஷ்டத்தை நினைச்சுப் பாருங்க.

    கதிரேசன்: சரி சரி. பேசிட்டு நிக்காம, இன்டர்வியூக்கு புறப்படு. கேக்கற கேள்விக்கெல்லாம் பொறுப்பா பதில் சொல்லு. இன்னைக்கு பேப்பர் படிச்சியா? அநேகமா அதுலேர்ந்தே கூட கேப்பான்.

    ரவி: பேப்பர்லேர்ந்து கேட்டா டாண் டாண்ணு பதில் சொல்லிடுவேன். தீவிரவாதிகள் சுட்டு பத்து பேர் பலி அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு அரக்கோணத்தில் முகமூடிக்கொள்ளை முதல்வருக்குப் பாராட்டு விழா. வழக்கமான நியூஸ்தான்.

    கதிரேசன்: இந்தக் குசும்பு இருக்கிற வரைக்கும் நீ உருப்பட மாட்டே.

    ரவி: இந்த காலத்திலே யாராலயும் உருப்பட முடியாது. நான் மட்டும் எப்படி உருப்பட முடியும்?

    கதிரேசன்: இந்த குறும்பு புத்தியைத் தவிர வேற என்னதான் இருக்கு உன்கிட்டே? திடீர்னு நான் மண்டையைப் போட்டுட்டா இந்தக் குடும்பத்தை நீ எப்படித்தான் காப்பாத்துவியோ?

    ரவி: அபசகுனமாப் பேசாதீங்கப்பா. உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா, வீட்டுக்காரன், பால்காரன், மளிகைக்காரன் இவங்களுக்கெல்லாம் யார் பதில் சொல்றது?

    (வீட்டுக்காரர் வருவதைப் பார்த்து, கதிரேசன் சடாரென உள்ளே ஓடி மறைந்து கொள்கிறார்)

    அம்மா... வீட்டுக்காரர் வந்திருக்கார். வாங்க ஸார்.

    உப்புமா சாப்பிடறீங்களா?

    வீட்டுக்காரர்: நான் இங்கே சாப்பிட வரலை. ஆறு மாச வாடகை பாக்கி. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வாடகையே கொடுக்காம காலம் தள்ளப்போறீங்க? அதைக் கேக்கத்தான் வந்தேன்.

    ரவி: ஓ அதைக் கேக்கத்தான் வந்தீங்களா? நீங்க வாடகை கேக்கத்தான் வந்தீங்களோன்னு பயந்தே போயிட்டோம்.

    வீட்டுக்காரர்: தம்பி... இந்த கிண்டல் வேலையெல்லாம் இங்கே வெச்சுக்காதே.

    ரவி: சரி வாங்க ஸார். உள்ளே உட்கார்ந்து பேசலாம்.

    லட்சுமி: சும்மா இருடா. கொஞ்சம் பொறுத்துக்குங்க வீட்டுக்காரரே. பையனுக்கு வேலை கிடைச்சதும் வாடகை பாக்கியை மொத்தமா செட்டில் பண்ணிடறோம்.

    வீட்டுக்காரர்: வேலையா? இவனுக்கா? ஏன் இப்படி சுத்தி வளைச்சுப் பேசறீங்க? இந்த ஜன்மத்திலே வாடகை கொடுக்க முடியாதுன்னு நேரடியா சொல்ல வேண்டியதுதானே?

    ரவி: சேச்சே... அது மரியாதை இல்லை. ஸார் ஒரு ஐடியா.....! நான் உங்க கிட்டேயே வேலைக்கு சேர்ந்துடட்டுமா? வாடகை வசூல் பண்ணித் தரேன். வர்ற வாடகையை ரெண்டு பேரும் சமமாப் பிரிச்சுக்கலாம்.

    வீட்டுக்காரர்: இந்தாம்மா... மரியாதையா இவனை பேசாம இருக்கச் சொல்லுங்க. இல்லே... நான் கொலைகாரனாயிடுவேன்.

    லட்சுமி: கொஞ்சம் சும்மா இரேண்டா. கோவிச்சுக்காதீங்க வீட்டுக்காரரே. ஆவணி வந்ததும் வாடகையைக் குடுத்துடறோம்.

    வீட்டுக்காரர்: ஆவணியா? ஆவணி போன மாசமே வந்துட்டுப் போயிடிச்சு. தெரியும் இல்லே?

    ரவி: போனா என்ன ஸார்? மறுபடியும் வராதா? உலகம் உருண்டைதானே? அடுத்த ரவுண்ட் ஆவணி

    Enjoying the preview?
    Page 1 of 1