Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Smile Please
Smile Please
Smile Please
Ebook178 pages1 hour

Smile Please

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாட்டு நடப்புகள் கவலைக்குரியவை; எந்தக் கவலையையும் மறந்து நாட்டு நடப்புகளை ரசிக்க வைப்பது சத்யாவின் நகைச்சுவை. தமிழில் இவ்வளவு அழகாக Parody-யையும் Satire-யையும் கையாண்டவர்கள் மிக மிகக் குறைவு. அவர்களில் முன்னிலையில் சத்யா நிற்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பே சான்று.

Languageதமிழ்
Release dateMay 13, 2023
ISBN6580160109371
Smile Please

Read more from Thuglak Sathya

Related to Smile Please

Related ebooks

Related categories

Reviews for Smile Please

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Smile Please - Thuglak Sathya

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    ஸ்மைல் ப்ளீஸ்

    Smile Please

    Author:

    துக்ளக் சத்யா

    Thuglak Sathya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    முன் உபத்திரவம்

    ஒரு சினிமாப் பாடலின் பிரசவ வலி

    ஸ்டோரி டிஸ்கஷன்

    ஹேமலதாவின் கேள்வி ஞானம்

    தன்மானக் கவிஞன் ராஜாமணி

    மூன்று லட்சம் விற்பனைக்கு முத்தான யோசனைகள்!

    தினமும் தியானம் செய்!

    ஒரு குடிமகனின் டைரி

    ஒரிஜினல் ஜாக்கிரதை

    டாக்டர் கொடுத்த அட்வைஸ்

    பிடிபடாத பைத்தியங்கள்!

    முகம் மூடாத கொள்ளைக்காரர்கள்

    அரசு இயந்திரத்தின் அசாத்திய வேகம் - ஒரு சாம்பிள்

    எத்தனை கோடி இன்னல் வைத்தாய் இறைவா...?

    வரட்டும் அயல்நாட்டுப் பத்திரிகைகள்!

    துக்ளக் அளிக்கும் தீபாவளி மொட்டு

    டிஸிப்ளின் இல்லேன்னா எப்படி?

    இங்கே ஒரு பட்டி மண்டபம் பாரீர்!

    வாருங்கள் அடுத்த நூற்றாண்டுக்கு...

    முன்னுரை

    Parody, Satire என்கிற ஆங்கில வார்த்தைகளுக்குச் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வழக்கில் இருக்கும் கிண்டல், நக்கல், அங்கதம், நையாண்டி போன்ற சொற்கள் அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை, என்பது என் கருத்து. முதல் தரமான ‘ஸடையர்’ – (Satire) மற்றும் சிரிப்பைப் பொத்துக்கொண்டு வரவழைக்கும் ‘பேரடி’ (parody), எப்படி இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள ‘சத்யா’வின் கட்டுரைகளைப் படித்தால் போதும். satire-க்கும் parody-க்கும் இலக்கணம் அவருடைய கட்டுரைகள்.

    எடுக்க எடுக்க வற்றாத ஒரு ஊற்றாக சத்யாவிடம் நகைச்சுவை உணர்வு பொங்குகிறது. நாட்டின் அரசியலையும், மக்களின் வாழ்க்கையையும் மிகவும் நுணுக்கமாகக் கவனித்து, குறைகளையும் பலவீனங்களையும் நகைச்சுவையுடன், சுட்டிக்காட்டி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது என்பது மிகவும் கடினமான காரியம். அது சத்யாவிற்கு கைவந்த கலையாக இருக்கிறது.

    துக்ளக்கில் அவருடைய கட்டுரைகளுக்கு வாசகர்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. துக்ளக்கின் பக்கங்களில் சத்யாவின் கட்டுரைப் பகுதி ஒன்று. துக்ளக்கிலும், மற்ற பத்திரிக்கைகளிலும் அவர் எழுதியுள்ள ஏராளமான கட்டுரைகளிலிருந்து, ஒரு சிலவற்றின் தொகுப்பே இந்தப் புஸ்தகம். நாட்டு நடப்புகள் கவலைக்குரியவை; எந்தக் கவலையையும் மறந்து நாட்டு நடப்புகளை ரசிக்க வைப்பது சத்யாவின் நகைச்சுவை. தமிழில் இவ்வளவு அழகாக parody-யையும் satire-யையும் கையாண்டவர்கள் மிக மிகக் குறைவு. அவர்களில் முன்னிலையில் சத்யா நிற்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பே சான்று.

    முன் உபத்திரவம்

    அன்பு நிறைந்த வாசகர்களுக்கு,

    வணக்கம். 1980 முதல் துக்ளக் பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதி வரும் வாய்ப்பு கிடைத்ததின் மூலமாக, அதன் வாசகர்களிடையே அறிமுகம் ஆகி இருப்பேன் என்ற குருட்டு நம்பிக்கையில், எனது நகைச்சுவைக் கட்டுரைகள் சிலவற்றைப் புத்தகமாக்கி வெளியிடும் எண்ணம் வந்தது.

    எனது எழுத்துக்களில் நகைச்சுவை இருப்பதாகக் கண்டறிந்து ஊக்குவித்த தொடர்ந்து ஊக்குவித்து வரும் எனது எழுத்துலக ஆசான் (இப்படிக் குறிப்பிடுவதற்காக அவரிடம் திட்டு வாங்கப் போகிறேன் என்றாலும் அப்படிக் குறிப்பிடாமல் இருக்க என்னால் முடியவில்லை) உயர்திரு சோ. அவர்களுக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என்னைப் பத்திரிக்கையுலகிற்கு அறிமுகப்படுத்தியதற்காக வாசகர்களுக்குப் பதில் சொல்ல அவர் கடமைப்பட்டிருக்கிறார்.

    எனது பள்ளிக்கூட நாட்களில் விளையாட்டாக எழுத ஆரம்பித்த நான், அது இப்படி விபரீதமாக போய் விடும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. விளையாட்டே வினையாகிவிடும் என்பது, என் விஷயத்தில் உண்மையாகிவிட்டது. மற்றபடி, வாசகர்களைத் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏதுமில்லை.

    எனக்கு தமிழ் எழுத்துக்களைச் சொல்லிக் கொடுத்த என் மாமி திருமதி சரஸ்வதி; எழுதுவதில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய ஜி.எம்.டி.டி.வி. உயர்நிலைப் பள்ளியின் அப்போதைய தமிழாசிரியர் திரு. இராஜகோபாலன்; நான் எதை எழுதினாலும் ‘ஆஹா, ஓஹோ’ என்று பாராட்டிய என் தாயார் திருமதி லட்சுமி அம்மாள்; வீட்டுப் பிரச்னைகளை என்னிடம் விடாமல் (விட்டால், அவை மேலும் சிக்கலாகிவிடும் என்பதால் எனக்கு அந்தச் சலுகை) தானே பார்த்துக்கொண்டு, எழுத்தில் முழு கவனம் செலுத்த உதவி வரும் என் மனைவி திருமதி சரசுவதி; என்னை திரு. சோ அவர்களிடம் அறிமுகப்படுத்திய காலஞ்சென்ற எனது நண்பர் திரு. கே. ராஜாமணி ஆகியோருக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இப்புத்தகத்தில் அரசியல் சம்பந்தப்படாத படைப்புகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

    இப்போதைக்கு இந்த ஒரு புத்தகம் போதும். வாசகர்களை ஹிம்ஸிப்பதற்கும் ஒரு அளவு வேண்டும் என்ற என் யோசனையை ஏற்று எனது அரசியல் நகைச்சுவைக் கட்டுரைகளைப் புத்தகமாக்கும் திட்டத்தைத் தள்ளி வைத்திருக்கிறார். வாசகர்கள் சார்பில், அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இப்புத்தகம் பற்றிய பாராட்டுக் கடிதங்களை எனக்கும், அனுப்பும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    முன் உபத்திரவம் முடிந்தது. மற்ற உபத்திரவங்கள் உள்ளே...!

    அன்புடன்

    சத்யா

    ஒரு சினிமாப் பாடலின் பிரசவ வலி

    டைரக்டர்: எல்லாம் வந்தாச்சா? டிஸ்கஷனை ஆரம்பிச்சுடலாமா?

    கவிஞர்: ஆரம்பிக்கலாம் ஸார். அற்புதமான பாடலை எழுதி இருக்கேன். நீங்க ஓகே சொல்ல வேண்டியதுதான் பாக்கி.

    இசையமைப்பாளர்: நானும் ரெடி. ட்யூன் போட்டுக் காட்டட்டுமா ஸார்?

    டைரக்டர்: கொஞ்சம் இருங்க கவிஞர் ஸார். எங்கே பாட்டோட முதல் வரியைச் சொல்லுங்க.

    கவிஞர்: ‘சத்தியமே வெல்லும்.’ இதான் ஸார் முதல் வரி. பிரமாதமா இருக்கு இல்லே? திடீர்னு ஸ்ட்ரைக் ஆச்சு. அப்படியே மெய்சிலிர்த்துப் போச்சு எனக்கு.

    இசை: நல்லாயிருக்கு. பின்னாலே ஹம்மிங் வந்தா இன்னும் நல்லாயிருக்கும். சத்தியமே வெல்லும் ஹோய் ஹோய்யா... ஹோய்... ஹோய்யா!

    நடிகர்: ஹீரோ மட்டும் பாடறதா இருந்தா அவ்வளவு நல்லா வராது. டூயட்டா மாத்திடுங்க.

    கவிஞர்: மாத்திடறேன் ஸார். ‘சத்தியம் வெல்லுமாடி சரஸு’ன்னு ஹீரோ கேக்கறான். ‘பத்தியம் பாக்காதே உரசு’ன்னு ஹீரோயின் சொல்றா.

    டைரக்டர்: சத்தியத்துக்கும் பத்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

    கவிஞர்: அப்பத்தான் எதுகை சரியா வருது.

    நடிகர்: சம்பந்தம் இல்லைன்னாலும் பரவாயில்லை. கேக்கறதுக்கு நல்லா இருக்கணும்.

    கவிஞர்: பத்தியத்துக்குப் பதிலா பைத்தியம்னு கூடப் போடலாம். சத்தியத்துக்கும் பைத்தியத்துக்கும் சம்பந்தம் இருக்குது.

    இசை: பைத்தியம்னா அரைக்கால் மாத்திரை தூக்கலா இருக்குது. பத்தியம்னே இருக்கட்டும். ட்யூனுக்கு வசதியா இருக்கும்.

    நடிகர்: எங்கே ட்யூன் போடுங்க பாக்கலாம்.

    இசை: தான தான தான்னான தான தானன

    தான தான தன்னான தன்னான தானா

    டைரக்டர்: கரெக்ட் அப்படித்தான் ஒரு பரபரப்பு தெரிக்கணும். க்ளைமாக்ஸுக்கு முன்னாலே இந்தப் பாட்டு வருது. தட் தட் தட தட்டுன்னு தூங்கறவங்களை தட்டி எழுப்புற மாதிரி இருந்தா நல்லாயிருக்கும்.

    நடிகர்: ஜனங்க க்ளைமாக்ஸை மிஸ் பண்ணிடாதபடி அவங்களை எழுப்பி விட்டுடணும்.

    கவிஞர்: அதாவது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தணும். அதானே?

    இசை: அதை இசையிலேயே கொண்டுவர முடியும். சத்... சத்... சத்... சத்தியம் வெல்லுமாடி சரஸு? பத்... பத்... பத்... பத்தியம் பாக்காம உரசு. ஹாய்... ஹாய்... ஹாய்... ஹாய்யா... ஹோய்... ஹோய்... ஹோய்... ஹோய்யா...

    நடிகர்: ரொம்ப நீளமா இருக்கற மாதிரி தெரியுதே. கொஞ்சம் குறைச்சா பெட்டர்.

    கவிஞர்: சத்... சத்... சத்... சாயான்னு ஹீரோ பாடறான். பொத்... பொத்... பொத்... போயான்னு ஹீரோயின் பாடறா. இது எப்படி?

    நடிகர்: ஃபண்டாஸ்டிக். நீங்க உண்மையிலேயே பிறவிக் கவிஞர் ஸார். வார்த்தைகள் நடனமாடுது, உங்ககிட்டே. இதெல்லாம் ஒரு கிஃப்ட்டுதான்.

    கவிஞர்: ஒரு கவிஞனுடைய இலக்கிய அறிவை கிஃப்ட்டுன்னு சொல்லி கொச்சைப் படுத்தாதீங்க.

    நடிகர்: என்ன டைரக்டர் ஸார் ஓகே தானே?

    டைரக்டர்: ஓகேதான். பாட்டுலே சாயான்னு ஒரு வார்த்தை வருதே. ஹீரோவை டீக்கடைக்காரனா மாத்திட்டா என்னன்னு யோசிக்கிறேன். பரவாயில்லை, ஸ்டோரி டிஸ்கஷன் போது அதைப் பாத்துக்கலாம். கவிஞர் ஸார், நீங்க அடுத்த வரியைச் சொல்லுங்க.

    கவிஞர்: மெத்து மெத்து மெத்திக்கோ

    தத்து பித்து பொத்திக்கோ

    வித்தையெல்லாம் கத்துக்கோ

    மொத்தத்தையும் சுத்திக்கோ

    இசை: அருமையா இருக்கு. ஆனா, அங்கங்கே தமிழ் வார்த்தை வர்ர மாதிரி தெரியுது. இசைக்கு ரொம்ப இடைஞ்சலா இருக்கும். அதை எடுத்துட்டா அருமையான பாடல்.

    கவிஞர்: அப்புறம் தமிழ்ப் பாட்டுன்னு எப்படித் தெரியும்.

    டைாக்டர்: தமிழ்ப் படத்திலே வந்தா தமிழ்ப் பாட்டு, ஹிந்திப் படத்திலே வந்தா ஹிந்திப் பாட்டு, இசைக்கு மொழி வித்தியாசம் கிடையாது. இதே படத்தை நான் ஹிந்தி, தெலுங்கு, கன்னடத்திலேயும் எடுக்கப் போறேன். இதே பாட்டை எல்லாப் படத்திலேயும் யூஸ் பண்ணிக்கலாமே. மொழி பெயர்ப்பு வேலை மிச்சம்.

    நடிகர்: ரிதம் நல்லாயிருக்கு. ஆனா, பாட்டு ஏதோ கொஞ்சம் புரியற மாதிரி இருக்குது. ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க.

    டைரக்டர்: யு ஆர் ரைட். புரியற மாதிரி இருக்கற வார்த்தைகளை மாத்திடலாம்!

    இசை: ரொமாண்டிக்கா ஹீரோயின் முனகற மாதிரி ஒரு நாலு வார்த்தை சேர்ந்தா நல்லாயிருக்கும். ரொமாண்டிக் ட்யூன் ஒண்ணு கம்போஸ் பண்ணியிருக்கேன். அதை இதுலே யூஸ் பண்ணிடறேன்.

    கவிஞர்: எங்கே ட்யூனைச் சொல்லுங்க?

    இசை:

    Enjoying the preview?
    Page 1 of 1