Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manohara - Parasakthi Puthiya Kaappi
Manohara - Parasakthi Puthiya Kaappi
Manohara - Parasakthi Puthiya Kaappi
Ebook188 pages1 hour

Manohara - Parasakthi Puthiya Kaappi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேர்தல் விதிகளின் மூலம் நம் நாட்டு அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்துவது என்பது, 'பானைக்குள் யானையை அடைப்பது போன்றது.' இதிலும் அரசியலின் பலம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளும் விதமாக, பல அரசியல் விமர்சனம் நிறைந்த கலக்கலான அரசியல் கட்டுரைகளை வாசிப்போம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580160109931
Manohara - Parasakthi Puthiya Kaappi

Read more from Thuglak Sathya

Related to Manohara - Parasakthi Puthiya Kaappi

Related ebooks

Related categories

Reviews for Manohara - Parasakthi Puthiya Kaappi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manohara - Parasakthi Puthiya Kaappi - Thuglak Sathya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனோகரா - பராசக்தி புதிய காப்பி

    Manohara - Parasakthi Puthiya Kaappi

    Author:

    துக்ளக் சத்யா

    Thuglak Sathya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. சோனியாவின் தூதர்கள் அறிவாலயத்துக்கு வந்தால்...?

    2. விஜயகாந்தை இழுக்கப் போவது யாரு?

    3. உடன்பிறப்புகளின் உரிமைப் போராட்டம்

    4. மலேசியாவுக்குப் போன விஜயகாந்த்

    5. ராஹுல் காந்தியின் காமெடிப் பேட்டி!

    6. மனோகரா பராசக்தி (புதிய காப்பி)

    7. மன்மோகன் சிங்கின் மனஉறுதி!

    8. நேர்காணலில் வெற்றி பெறுவது எப்படி...?

    9. தேர்தல் அறிக்கைக்குத் தேவையான விஷயங்கள்!

    10. இலங்கைப் பிரச்சனையும் இரு நாட்டுத் தலைவர்களும்

    11. அடிமட்டப் பேச்சாளரின் ஆவேச உரை!

    12. அளவோடு மோதி, வளமோடு வாழ்க

    13. கலைஞர் பேச்சு - துக்ளக் விளக்க உரை

    14. தேர்தல் நெருங்க நெருங்க...

    15. புத்தகம் வரும் பின்னே விமர்சனம் வரும் முன்னே!

    16. கனவுகள் சொல்லும் கதைகள்

    17. நடத்தை விதிகளும், நம்நாட்டு அரசியல்வாதிகளும்...

    18. விடைபெறுகிறார் பிரதமர்

    19. புதிய எம்.பி.க்களுக்கு ஒரு பாடம்

    20. தமிழகத் தலைவர்களைக் கவர்வது எப்படி?

    21. பத்திரிகைகள் ஆற்ற வேண்டிய பணி

    22. ஸி.பி.ஐ. இயக்குநரிடம் ஒரு விசாரணை!

    23. நீதித் துறைக்கு வந்த சோதனை

    24. சந்திரசேகர ராவ் எடுக்கத் தவறிய சர்வே

    25. ஸ்டாலினைப் பேட்டி காண்கிறார் ஸ்டாலின்!

    முன்னுரை

    அன்பார்ந்த வாசகர்களுக்கு,

    பணிவான வணக்கம். அடியேன் துக்ளக்கில் எழுதி 2014-ஆம் ஆண்டு வெளியான கட்டுரைகள் சிலவற்றை இத்தொகுப்பில் காணலாம்.

    1980-ஆம் ஆண்டு துக்ளக்கில் எழுதத் தொடங்கியபோது (அப்போது மாதம் இருமுறை) தொடர்ந்து அரசியல் நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதும் அளவுக்கு விஷயம் கிடைக்குமா என்று கவலைப்பட்டேன். நாற்பது ஆண்டுகளுக்கும் பிறகும் வாரா வாரம் விஷயம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது என்பதிலிருந்தே அரசியலின் பலம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

    மு.க. அழகிரிக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் இடையேயான மோதலுக்கும், கலைஞரின் பராசக்தி மனோகரா வசனங்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை என்று நீங்களே பாருங்கள். (பராசக்தி - மனோகரா புதிய காப்பி)

    தேர்தல் விதிகளின் மூலம் நம் நாட்டு அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்துவது என்பது, ‘பானைக்குள் யானையை அடைப்பது போன்றது’ பார்க்க: (நடத்தை விதிகளும் நம் நாட்டு அரசியல்வாதிகளும்)

    அத்துடன் ராஹூலின் காமெடிப் பேட்டி கூடுதல் போனஸ்.

    நடப்பு அரசியல்பற்றி அவர் என்ன நினைப்பார் என்பதையும் ஒரு கட்டுரையில் கொண்டுவர முயன்றிருக்கிறேன். (சொர்க்கத்தில் ஸோ சார்)

    கற்றது கை மண்ணளவு என்பதுபோல அடியேன் எழுதியுள்ள அரசியல் விமர்சனக் கட்டுரைகள் கடுகளவுதான். விட்டுவைத்திருப்பது கடல் அளவு.

    ‘துக்ளக்’ சத்யா

    1. சோனியாவின் தூதர்கள் அறிவாலயத்துக்கு வந்தால்...?

    C:\Users\System 1\Downloads\jerry.1-min (1).JPG

    நான்கு மாநிலத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் முகாமில் சோகம் சூழ்ந்துள்ளது. ‘காங்கிரஸ் சோதனைக் காலத்தில் உள்ளது. தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டோம்’ என்று சிதம்பரம்கூட வெளிப்படையாக வருந்தியிருக்கிறார். காங்கிரஸின் கோணத்தில் சிந்தித்தால், மீண்டும் தி.மு.க.வுடன் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொள்வதே சிறந்த வழி என்று நமக்குப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்களை அறிவாலயத்துக்கு அனுப்பி, சோனியா இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டால் என்ன தவறு?

    சிதம்பரம்: வணக்கங்க. சோனியா உங்களுக்கு அவசரமா புத்தாண்டு வாழ்த்து தெரிவிச்சுட்டு வரச்சொன்னாங்க. அநேகமா பொங்கல் வாழ்த்து தெரிவிக்கவும் வருவோம்.

    கருணாநிதி: வாங்க, வாங்க. பொதுக்குழுவுக்குப் பிறகு மனசே சரியில்லை. நானே டி.ஆர். பாலுவையும், ராசாவையும் டெல்லிக்கு அனுப்பலாமான்னு நினைச்சிட்டிருந்தேன். அதுக்குள்ளே நீங்களே வந்துட்டீங்க.

    அந்தோணி: பொதுக்குழு முடிவுகளைக் கேள்விப்பட்டு சோனியா ரொம்ப வருத்தப்பட்டாங்க. ‘என்ன நம்ம கலைஞர் இப்படிப் பண்ணிட்டாரு? போன மாசம்கூட மணிமேகலைன்னு பாராட்டினாரே. அதுக்குள்ளே என்ன ஆச்சு? போய் விசாரிச்சுட்டு வாங்க’ன்னு சொல்லி அனுப்பினாங்க.

    குலாம்நபி ஆஸாத்: ‘கேட்ட பதவி, கேட்ட இலாகா கொடுத்தோமே. 2ஜி ஊழலைத் தவிர, தி.மு.க. ஊழல் வேறே ஏதாவது வெளியே வந்ததா? நிரா ராடியா பேச்சைக்கூட கண்டுக்காமத்தானேவிட்டோம்? இவ்வளவு சிறப்பா ஆட்சி நடத்தியும் ஏன் நமக்கு எதிரா சிந்திக்கிறாரு?’ன்னு கேக்கறாங்க.

    அன்பழகன்: பத்து வருஷமா நடந்ததையெல்லாம் சமீபத்திலேதான் யோசிச்சுப்பாத்தோம். அந்த நேரம் பாத்து, வட மாநிலத் தேர்தல் முடிவுகள் வேறே வெளியாச்சு. அதனாலேதான், ‘இவ்வளவு அவமானங்களைத் தாங்கிட்டு இந்தக்கூட்டணி தொடரணுமா?’ன்னு எங்களை நாங்களே கேட்டுக்கற நிலைமை ஏற்பட்டுது.

    சிதம்பரம்: நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்றதெல்லாம் முரசொலிக்குச் சரியா வரும்ங்க; அரசியலுக்குச் சரியா வருமா? இப்ப என்னாச்சு பாருங்க. உங்களுக்கும் சரியான கூட்டணி கிடைக்கலை. எங்களுக்கும் சரியான கூட்டணி கிடைக்கலை. எப்படி இருந்த கூட்டணி இப்படி ஆயிடுச்சி பாத்தீங்களா?

    கருணாநிதி: தம்பி விஜயகாந்த் எங்க அணிக்கு வருவார்னு எதிர்பார்க்கறோம். கம்யூனிஸ்ட்களுக்கு அ.தி.மு.க.விலே பிரச்னை ஏற்பட்டா, அவங்களை அணைச்சுக்கப் போறவனே நான்தான். அநேகமா மருத்துவரும் வரலாம். கழகம் அவருக்கு தாய் வீடு மாதிரி. எப்பவேணாலும் வருவார். எப்ப வேணாலும் போவார்.

    துரைமுருகன்: இதுக்கிடையிலே மோடி நல்லவர், சிறந்த நிர்வாகி, திறமையாளர்ன்ற தகவலும் கலைஞருக்கு கிடைச்சுது. அதைப்பத்தியும் யோசிச்சுட்டிருக்கோம்.

    முகுல் வாஸ்னிக்: அஞ்சு வருஷம் ஆட்சியிலே பங்கு கேக்காம தி.மு.க.வை ஆதரிச்சிருக்கோம். காங்கிரஸுக்கு எத்தனை கோடி நஷ்டம்னு கணக்குப் போட்டு பாருங்க. இவ்வளவு பெருந்தன்மையா மற்ற கட்சிகள் நடந்துக்குமான்னு நீங்க யோசிச்சுப் பாக்கணும்.

    கருணாநிதி: நாலே முக்கா வருஷத்துக்கு முன்னாலே - அதாவது 2009-லே என்ன நடந்ததுன்னு நீங்களும் யோசிச்சுப்பாருங்க. என் உயிரைத் துச்சமா மதிச்சு நான் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அதை நிறுத்திட்டீங்க. இன்னும் ஓரிரு மணி நேரம் தொடர்ந்திருக்கக்கூடிய என் தியாக வேள்வியைத் தடுத்த வஞ்சகச் செயலை எப்படி பொறுத்துக்க முடியும்?

    குலாம்: அதுக்குப் பிறகு நடந்த சட்டசபைத் தேர்தல்லே, காங்கிரஸுக்கு 63 ஸீட் கொடுத்து கூட்டணியைத் தொடர்ந்தீங்களே...?

    கருணாநிதி: ஏன் அவ்வளவு ஸீட் கொடுத்தோம்ங்கற பிரச்னையிலே புக நான் விரும்பலை. 2ஜி வழக்கு கோர்ட்லே இருக்கும்போது அது சம்பந்தப்பட்ட விஷயங்களிலே கருத்துச்சொல்றது முறையில்லை.

    முகுல் வாஸ்னிக்: 2ஜி வழக்கை நினைச்சு ஏன் பயப்படறீங்க? இப்படித்தான் ராபர்ட் வதேராவுக்கு என்ன ஆகுமோன்னு சிலபேர் பயந்தாங்க. என்ன ஆச்சு?

    ஊழலைக் கண்டுபிடிச்ச அதிகாரி மேலேதான் ஏராளமான குற்றச்சாட்டுகள் பதிவாகியிருக்குது. அவ்வளவு ஏன்? க்வாட்ரோக்கி மட்டும் இப்ப உயிரோட இருந்தா, அவருக்குப் பயந்து ஸி.பி.ஐ. இயக்குநரே தலைமறைவாகியிருப்பாரே. அப்படி இருக்கும்போது தி.மு.க.வை நாங்க கைவிட்டுருவோமா?

    சிதம்பரம்: போனது போகட்டும். மத்தியிலே மறுபடியும் ஐ.மு. கூட்டணி அரசு மலரும்போது உங்களுக்கு எத்தனை மந்திரிகள் வேணும்? அழகிரி, தயாநிதிக்கு என்ன இலாகா? உங்க குடும்பத்துலேர்ந்து வேறே யாராவது அரசியலுக்கு வர்றதா இருந்தா அவங்களுக்கு என்ன இலாகா? எல்லாத்தையும் பேசி ஒரு நல்லமுடிவுக்கு வருவோமே...

    துரைமுருகன்: இதையெல்லாம் நீங்க சொல்லணுமா? மறுபடியும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துட்டா, ‘மதவாத பா.ஜ.க.வை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்த சோனியாவுக்கு வாழ்த்து’ன்னு சொல்லி, கலைஞரே குடும்பத்தோட டெல்லிக்கு வந்து ஆதரவு தெரிவிச்சு, யாருக்கு என்ன இலாகான்னு பேசி முடிச்சிடுவாரு. இப்ப அதுவா பிரச்னை? கனிமொழியையும் ராசாவையும் சிறையில் அடைச்ச கட்சியோட இனிமேலும் எப்படி கூட்டணி தொடர முடியும்ன்றதுதான் கேள்வி.

    அந்தோணி: இதுவரைக்கும் எப்படி தொடர்ந்தீங்களோ அதேமாதிரி தொடரலாமே...

    அன்பழகன்: என்ன பேசறீங்க நீங்க? இதுவரைக்கும் தேர்தலா வந்தது? இப்ப பாராளுமன்றத்தேர்தல் நெருங்கிடுச்சு இல்லே? இனிமேலும் கூட்டணி தொடர்ந்தா சுயமரியாதை பாதிக்குது இல்லே?

    குலாம்நபி: கனிமொழியையும் ராசாவையும் திஹர்லே அடைச்சப்போகூட, எவ்வளவு பொறுமையா இருந்தீங்க! ரிலீஸ் ஆகி ரெண்டு வருஷத்துக்குப் பிறகு அதே காரணத்துக்காக பொறுமை இழக்கறதை எங்களாலே புரிஞ்சுக்க முடியலை.

    கருணாநிதி: இப்படி கேப்பீங்கன்னு தெரிஞ்சுதான் ‘என் பொறுமைக்கும் எல்லை உண்டு’ன்னு நான் பலவருஷமாவே சொல்லிட்டுவரேன். தேர்தல் பணிகள் தொடங்கிட்ட பிறகுகூட பொறுமை காட்டினா, தமிழ் சமுதாயம் எங்களை மன்னிக்குமா?

    துரைமுருகன்: அந்த ஒரு காரணம் மட்டுமில்லை. எதுக்கும் இருக்கட்டும்னு இன்னும் பல காரணங்களை யோசிச்சு வெச்சிருக்கோம். மீனவர் பிரச்சனை தொடர்பா அம்மையார் எழுதற கடிதங்களுக்கு பதில்போடாத அரசியல் நாகரீகத்தைப் பாராட்டறோம். அதே சமயத்திலே கலைஞர் எழுதற கடிதத்துக்கும் பதில் போடலைன்னா எப்படி?

    அன்பழகன்: நடவடிக்கை எடுக்கலைன்னாகூட பரவாயில்லை. ‘நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ன்னு ஒரு பதில் கடிதம் எழுதினாக்கூட, அதுலேயே ஆறுதல் அடையத் தயாரா இருக்கிறவர்தான் கலைஞர். அதுகூட இல்லைன்னா, தேர்தல் பிரசாரத்திலே தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பை எப்படி சமாளிக்கிறது?

    துரைமுருகன்: ராஹுல் இங்கே வரும்போதெல்லாம் வேணும்னே கலைஞரைப் பாக்காம போறாரு. மத்திய அரசு எந்த மசோதா கொண்டுவந்தாலும் ஆதரிக்கிற கலைஞருக்கு காட்டற நன்றி இதுதானா? விலைவாசி உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு எல்லாத்தையும் மௌனமா ஏத்துக்கிட்ட கலைஞரை சந்திச்சு நன்றி தெரிவிச்சிருக்கலாமே!

    சிதம்பரம்: ராஹுலுக்கு சில நாட்களாக ஊழலைக் கண்டாலே பிடிக்கிறதில்லை. மத்தபடி நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க. பா.ஜ.க.வுக்கு குறிப்பிட்ட சில மாநிலங்களிலே மட்டும்தான் ஆதரவு இருக்குது. மாநிலக் கட்சிகள் ஒண்ணா சேர்றது கஷ்டம். கம்யூனிஸ்ட்களும் தேறாது. அதனாலே காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் மறுபடியும் அமையப்போகுது.

    அன்பழகன்: அப்படி அமைஞ்சா, ‘நேருவின் கொள்ளுப்பேரனே வருக, நேர்மையான ஆட்சி தருக’ன்னு தமிழகத்திலேர்ந்து ஒலிக்கபோற முதல் குரல் கலைஞரோட குரல்தான். ஆனா, நாடு முழுவதும் காங்கிரஸ் செல்வாக்கு குறைஞ்சிருக்குதே...

    குலாம்: அதுக்குத் தகுந்த மாதிரி, தொகுதி ஒதுக்கீட்டி பேசித்

    Enjoying the preview?
    Page 1 of 1