Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Kural (Twitter Pathevukalin Thoguppu)
En Kural (Twitter Pathevukalin Thoguppu)
En Kural (Twitter Pathevukalin Thoguppu)
Ebook293 pages1 hour

En Kural (Twitter Pathevukalin Thoguppu)

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Dr. S. Ramadoss is the founder and president of the Pattali Makkal Katchi (PMK), an Indian political party.

Under the leadership of Ramadoss, PMK was able to obtain a significant share of power both in the regional government in Tamil Nadu and the central government, primarily due to coalition pressures.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352854103
En Kural (Twitter Pathevukalin Thoguppu)

Read more from Dr. S. Ramadoss

Related to En Kural (Twitter Pathevukalin Thoguppu)

Related ebooks

Reviews for En Kural (Twitter Pathevukalin Thoguppu)

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Kural (Twitter Pathevukalin Thoguppu) - Dr. S. Ramadoss

    http://www.pustaka.co.in

    என் குறள்

    (டுவிட்டர்ப் பதிவுகளின் தொகுப்பு)

    En Kural

    (Twitter Pathevukalin Thoguppu)

    Author:

    மருத்துவர் ச. இராமதாசு

    Dr. S. Ramadoss

    For more books
    http://www.pustaka.co.in/home/author/dr-ramadoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    ஜனவரி, 2016

    ஜனவரி, 1

    மீனவர்கள் கைது: சிங்களப் படையினரின் அத்துமீறலைத் தடுக்க அவசர நடவடிக்கை தேவை!

    வங்கத்தில் தோல்வியைத் தவிர்க்க காங்கிரசுடன் கூட்டணி சேர மார்க்சிஸ்ட் திட்டம்: நல்ல கொள்கை... அப்படியே கேரளாவில் பாஜகவுடன் சேர்ந்துடுங்க!

    அதிமுகவுக்கு இனி தோல்வி இல்லை: ஜெயலலிதா - அர்ஜுனா அர்ஜுனா இடிமழைக்கு... தோல்வி இல்லை தோல்வி இல்லை தேர்தலுக்குப் போலும்!

    தில்லியில் ‘மகளிர் மட்டும்’ மதுக்கடைகள் திறப்பு: இப்ப தெரியுதா உச்சநீதிமன்றம் செவிடன் காதில் சங்கு ஊதுகிறதென்பது?

    சிகரெட், மது விற்பனையை மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் & -நல்ல அறிவுரை தான். ஆனால்என்ன, செவிடன் காதில் அல்லவா சங்கு ஊதப்படுகிறது.

    ஜனவரி, 2

    மின்சாரம் வாங்குவதில் தொடரும் ஊழல்: வரவு & செலவுக் கணக்கை வெளியிடுக!

    தில்லியில் புதிய போக்குவரத்து முறை நடைமுறை: இது வெற்றி பெற்றால் சென்னையிலும் நடைமுறைப்படுத்தலாமே?

    ஆலயங்களில் ஆடைக்கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்தது: சரி தான்... அப்படியே அரசு அலுவலகங்களில் ஊழல் கட்டுப்பாட்டைக் கொண்டு வாருங்களேன்!

    ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்திப் போராட்டம்: மு.க.ஸ்டாலின் -& நீங்கள் அறிவிப்பீங்க.. உங்கள் தந்தை ரத்து செய்வார்... இதுவே பெரிய ஜல்லிக்கட்டு தான்!

    ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி தருவதில் சட்டச் சிக்கல்: மத்திய அரசு & இதைக் கண்டுபிடிக்கவே ஓராண்டு என்றால், சரி செய்ய இன்னும் எத்தனை ஆண்டுகளோ?

    கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளராக இருந்த பரதன் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்தேன்.

    ஜனவரி, 3

    அதிமுகவிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கம்: அம்மாவைப் புகழ்ந்தால் பரவாயில்லை... புகழ்வது போல இகழ்ந்தால் விடுவார்களா?

    தி.மு.க.வுடன் கூட்டணி சேர காங்கிரஸ் தயக்கம்: வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கணும்னா தயக்கம் வருவது சகஜம் தானே!

    சென்னையில் சாலைகளில் திடீர் பள்ளங்கள்: திராவிடக் கட்சி ஆட்சிகளுக்கு முடிவுகட்ட இயற்கையே தயாராகிறது போலும்!

    மாணவர்களுக்கான கற்றல் கையேட்டில் ஜெயலலிதா படம்: தேர்வில் அம்மா படம் வரைந்து, அம்மா வாழ்க! என எழுதினால் 100% மதிப்பெண் போட்டாலும் போடுவார்கள்!

    ஜனவரி, 4

    பெட்ரோல், டீசல் மீது ரூ.1.12 லட்சம் கோடி கூடுதல் வரியா? உடனே திரும்பப் பெறுக!

    ஒரு லட்சம் ஈழத் தமிழர்களுக்கு வீடுகட்ட நிலம்: இலங்கை அதிபர்-. அது கிடக்கட்டும். இந்தியா கட்டித்தரும் வீடுகளை நீங்கள் பிடுங்காமல் இருந்தால் சரி!

    ஜெயலலிதா பதாகைகளை அகற்றிய மூவருக்குத் தொடர்ந்து சிறை: பதாகை வைத்தால் பதவி... அகற்றினால் சிறை... அற்புதமான ஜனநாயகம்!

    ஜல்லிக்கட்டுச் சிக்கல்: -சோனியா மன்னிப்புக் கேட்டால் பதவி விலகத் தயார் & பொன்னார். ஆக, வெட்டிப் பேச்சுத் தவிர வேறு எதுவும் நடக்காது என்பது உறுதி!

    பொதுமக்களுக்கு அம்மா சிமெண்ட் விற்பனை நிறுத்தம்: அம்மா ஆட்சியே இன்னும் 3 மாதத்தில் முடிவுக்கு வரப்போவதன் அறிகுறியே இது!

    ஜனவரி, 5

    ஜெயலலிதா வாட்ஸ்-அப் விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா?

    ஜல்லிக்கட்டு காளை முட்டி பொன்.இராதாகிருஷ்ணன் காயம்: காளை கோபமாக இருப்பதாகக் கூறி ஜல்லிக்கட்டை நிறுத்தாமல் இருந்தால் சரி தான்!

    சென்னை பொது மருத்துவமனையில் ‘தீ!’ 3 பேர் சாவு: உயிர்காக்கும் மருத்துவமனைகளை உயிர் எடுக்கும் மருத்துவமனையாக மாற்றியதே புரட்சி தானே!

    பாமக பற்றிய அரை வரிச் செய்திக்கு அட்டைப்படம் போடும் ஜூ.வி- & பரபரப்பை ஏற்படுத்திப் பத்திரிகையை விற்க எதை வேண்டுமானாலும் செய்தால் அது ஊடகமல்ல. கேடகம்!

    அதிமுக மெகா கூட்டணியில் பாமக: ஜூனியர் விகடன் செய்தி & தயவு செய்து பத்திரிகைப் பெயரை ஜூனியர் விஷ(ம)ம் என மாற்றிக் கொள்ளுங்கள்.

    திமுகவுக்கு ஆதரவாகப் புதிய கருத்துக்கணிப்பு: அப்பா மோதிரம் வாங்கிக் கொடுத்துப் போடச் சொன்னார்... மகன் கருத்துக்கணிப்புக் கொடுத்து வெளியிடச் சொன்னார்!

    எம்ஜிஆர் வீடு அதிமுக செலவில் சீரமைக்கப்படும்: ஜெயலலிதா & அப்படியே வீட்டைச் சீரமைத்த விடிவெள்ளி என எம்.ஜி.ஆர் புகழ்வது போல ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

    ஜனவரி, 6

    பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யக் கோரி 11-ஆம் தேதி பா.ம.க. போராட்டம்!

    துணை ராணுவத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு: ஆனால், பெண் ஆளும் தமிழகக் காவல்துறையில் மகளிருக்கு இன்னும் இட ஒதுக்கீடு இல்லையே?

    ஒரே நாளில் 350 பேனர் வைக்க அதிமுகவுக்கு அனுமதி மெய்சிலிர்க்கிறது: உயர்நீதிமன்றத்தின் அந்த அனுமதியும் பேனர் வைத்தபிறகே வாங்கப்பட்டது தெரியுமா?

    அதிமுகவினர் குடும்பத்தில் 4பேருக்கு நிவாரண நிதி:அதிமுக 4 எழுத்து, முறைகேடு 4 எழுத்து,நிவாரணம் 4 பேருக்கு கூட்டிக் கழித்துப் பாருங்க சரியாக வரும்!

    சென்னை வெள்ளப் பாதிப்புக்கு யார் காரணம்? கலைஞர் கேள்வி: அப்படியே கண்ணாடியையும், முதலமைச்சர் படத்தையும் மாறி மாறிப் பாருங்க... விடை தெரியும்!

    ஜனவரி, 7

    மோசடிக் கருத்துத்திணிப்புகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

    ஆசிரியர்கள் பெயரின் தலைப்பெழுத்தை இனித் தமிழில் எழுத அரசு ஆணை: நல்ல முடிவு. அனைத்து அரசாணைகளையும் தமிழில் வெளியிட்டால் மிக நன்று!

    கட்சிகளின் சமூக ஊடகச் செலவுகளையும் கண்காணிப்போம்: தேர்தல் ஆணையம் & -சொல்வது எல்லாம் நல்லா சொல்லுங்க.... செயலில் மட்டும் கோட்டை விட்டுடுங்க!

    சென்னையின் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் இலட்சியப் பேரணி: அதுசரி... சென்னை நகருக்குள் ஊர்வலம் நடத்த இவர்களுக்கு மட்டும் எந்தச் சட்டம் அனுமதி தந்தது?

    2 கோடிப் பேருக்குப் பொங்கல் பரிசு: ஒரு கிலோ அரிசி, சர்க்கரை கூட வாங்க வழியில்லாத நிலையில் 90% மக்கள்... தமிழகத்தின் வளர்ச்சி அபாரம்?!

    சஞ்சய் தத் முன்கூட்டி விடுதலை: ஆயுதம் வைத்திருந்தவருக்கு உடனடி விடுதலை. தெரியாமல் பேட்டரி வாங்கித் தந்தவருக்கு வாழ்நாள் சிறை. வாழ்க ஜனநாயகம்!

    ஜனவரி, 8

    நெல்லை அருகே பேருந்து விபத்தில் 10 பேர் சாவு: உயிரிழந்தோருக்கு அஞ்சலி & இத்தகைய விபத்துக்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டுக்கு இன்னும் சில மணி நேரங்களில் அனுமதி: பொன். இராதாகிருஷ்ணன் தகவல் & நல்ல செய்தி வந்தால் வரவேற்று பாராட்டுவோம்.

    தேம்ஸ் நதி தொடங்கி கிரேக்க வரலாறு வரை பேசும் வைகோவுக்கு உள்ளூர் அரசியல் வரலாறு தெரியாமல் போனது சோகமா... செலக்டிவ் அம்னீசியாவா?

    ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்ததை அமைச்சரவையில் இருந்த திமுக, பாமக ஏன் எதிர்க்கவில்லை: வைகோ & அப்போது மத்திய அரசில் பாமக இல்லையே?

    மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் பதவிக்குப் போட்டி: அதனால் அனைவரும் சேர்ந்து ஜெயலலிதாவை முதல்வர் வேட்பாளராக ஏற்க ஒருமனதாக முடிவு?!?!

    ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி: மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்பு

    திருவள்ளுவர் பல்கலைக்கழக நிலத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதா? தனியாருக்குத் துணைபோகக் கூடாது.

    ஜனவரி, 9

    தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வாய்ப்புற்றுநோய்: புகையிலை விற்பனையை நிறுத்துக!

    விமானக் கட்டணத்தை விஞ்சும் சிறப்பு ரயில் கட்டணம்: மக்கள் பணத்தைத் தனியாள் பறித்தால் கொள்ளை.... அரசே பறித்தால் சிறப்புக் கட்டணம்!

    ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் திமுக தான்: மு.க.ஸ்டாலின்& நீங்க எப்போதுமே இரட்டைவேடம் தான்னு மக்களுக்குத் தெரியும். அதைவேறு சொல்ல வேண்டுமா?

    அண்ணா நூலக வழக்கில் பொய்ச்சாட்சி அளித்த கல்வித்துறைச் செயலர்: முதல்வர் எவ்வழியோ... அமைச்சர்களும், அதிகாரிகளும் அவ்வழி!

    ஜல்லிக்கட்டு நடக்கக் காரணமே நான் தான்: ஜெயலலிதா& ஒருவேளை உச்சநீதிமன்றம் தடை விதித்தால் அதற்குக் காரணம் மத்திய அரசு... அப்படித்தானே!

    உடன்கட்டை, வரதட்சணை ஆகிய தீமைகளுடன் ஜல்லிக்கட்டை ஒப்பிட்ட ஜெய்ராம் ரமேஷை விடத் தமிழர் கலாச்சாரத்தை யாரும் அவமதிக்க முடியாது.

    ஜனவரி, 10

    குழந்தைத் திருமணம், உடன்கட்டை தொடர்கிறதா, ஜல்லிக்கட்டு மட்டும் ஏன் தொடர வேண்டும்?: ஜெய்ராம் ரமேஷ் & தாமாக முன்வந்து அடையாளம் காட்டிய தமிழர் எதிரி இவர்.

    அண்ணாவின் வாழ்க்கை ஒரு தங்கச் சுரங்கம்: துரைமுருகன் & -அப்பவே சொல்லியிருந்தால் அண்ணாவின் இதயத்துக்கு பதில் வாழ்க்கையை எடுத்துக் கொண்டிருப்பாரே கலைஞர்!

    அடுத்த 40 ஆண்டுக்கான திட்டத்தை இப்போதே வகுப்பவர் மோடி: இல.கணேசன் & அடுத்த 40 ஆண்டுக்கான வெளிநாட்டுப் பயணத்தையும் இப்போதே போகிறார் போலும்!

    தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் கண்டனம்: எவ்வளவு அடிச்சாலும் தமிழக அரசு தாங்கும்... அது ரொம்ப நல்ல அரசு!

    சாலை விதிகளை மதிக்க வேண்டும்: ஜெயலலிதா & எப்படி எனத் தெரியாவிட்டால் அதிமுக பொதுக்குழுவுக்காக நாங்கள் செய்த கூத்துக்களைப் பாருங்கள்!

    ஜனவரி, 11

    முல்லைப்பெரியாறு அணையில் கேரளா அமைத்த காவல் நிலையத்தை மூட நடவடிக்கை தேவை!

    சென்னையில் திமுக நிர்வாகி மீது மர்ம மனிதர்கள் துப்பாக்கிச் சூடு: நம்புங்கள்.... தமிழகம் அமைதிப் பூங்கா... அதற்குக் காரணம் அம்மா ஆட்சி!

    32 நாளில் ரூ.700 கோடி நிவாரணம் வழங்கியது அம்மாவின் சாதனை: அதிமுக & அப்ப.. ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி சேதத்துக்குக் காரணமாக இருந்தது புரட்சியா?

    அதிமுகவினருடன் ஜெயலலிதா படம் ஏந்திப் பேரணி வந்த நாமக்கல் ஆட்சியர், எஸ்.பி: இது என்ன பிரமாதம், பலஅதிகாரிகள் அம்மாவுக்காகத் தீ மிதிக்கவே தயார்தான்!

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: மு.க.ஸ்டாலின் & பா.ம.கவிடம் காப்பி அடித்த 12ஆவது அறிவிப்பு!

    வெட்கமே இல்லாமல் என்னுடன் கூட்டணி சேர திமுக முயல்கிறது: விஜயகாந்த் & -யாருக்கு இருக்கிறது, யாருக்கு இல்லை என்பது சில வாரங்களில் தெரிந்து விடும்!

    ஜனவரி, 12

    ஒரு மாதத்தில் 500 மீனவர்களைக் கைது செய்யத் துடிப்பதா? இலங்கையை எச்சரிக்க வேண்டும்!

    உயர்நீதித்துறையில் இடஒதுக்கீடு வழங்கச் சட்டத்திருத்தம் தேவை: நீதிபதி ஹரிபரந்தாமன்: நீதித்துறையிலேயே குரல் எழுந்திருப்பது பாராட்டத்தக்கது!

    12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்: நல்ல திட்டம்... மேலும் செழுமைப்படுத்தி நடைமுறைப்படுத்தலாம்!

    வெள்ள நிவாரணம் கிடைக்காமல் 16 லட்சம் பேர் ஏமாற்றம்: இதற்குக் காரணமானவர்களுக்கு ‘16’ தேர்தலில் கிடைக்கும் ஏமாற்றம்!

    நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்தால்: கலைஞர் & ஆமாங்க... திமுக, அதிமுகவைப் பார்த்து மக்களும் இப்படித் தான் சொல்கிறார்கள்!

    தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘யி’ வடிவத்தில் புதிய கட்டிடம்: சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை சிம்பாலிக்கா சொல்றாங்க போலும்!

    ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு மீண்டும் தடை: மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பு!

    ஜனவரி, 13

    16 மாதங்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் ஜெயலலிதா: அடையாளம் தெரியவில்லை என்று கூறி அனுமதிக்க மறுத்துவிடப் போகிறார்கள்!

    தமிழகத் தேர்தலில் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகமாக இருக்கும்: லக்கானி- & அதற்காக ஆளுங்கட்சியை ஆன்லைனில் பணம் கொடுக்க அனுமதிக்காமலிருந்தால் சரி!

    மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பல்கலைக்கழக வயல்களில் பயிரிட்டு ஆய்வு செய்யலாம்: எம்.எஸ்.சாமிநாதன் & 100 நம்மாழ்வார் வந்தாலும் இவர் திருந்தமாட்டார்!

    ஆந்திராவில் ரூ.4.78 லட்சம் கோடி முதலீடு குவிந்தது: அங்கு நடந்தது உண்மையான முதலீட்டாளர் மாநாடு... தமிழகத்தில் நடந்தது அ(சு)ம்மா மாநாடு!

    அதிமுக அரசுக்கு எதிராக தி.மு.க. திண்ணைப் பிரச்சாரம்: மு.க.ஸ்டாலின் & அடப்பாவிகளா... இதிலுமா காப்பி அடிப்பது?

    ஜல்லிக்கட்டுப் போட்டி: மக்களின் உணர்வு, எதிர்பார்ப்புகளைத் தடை செய்யக்கூடாது!

    ஜனவரி, 14

    ஜல்லிக்கட்டு-: மத்திய, மாநில அரசுகள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கக்கூடாது!

    தை பிறக்கும்... நல்ல வழி பிறக்கும்... மாற்றம் வரும்... முன்னேற்றம் வரும்!...

    தூத்துக்குடி கடலில் 73 திமிங்கலங்கள் சாவு: இது மிகப்பெரிய ஆபத்தின் அறிகுறி... விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்!

    ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் பற்றி அவசரப்பட்டுக் கருத்துக் கூறமுடியாது: கலைஞர் -அனுமதி தந்தால் மட்டும் அவசரப்பட்டு ‘நமக்குநாமே’ பாராட்டிக்கலாம்!

    ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் பிறப்பிக்க மாநில அரசுக்கே அதிகாரம்: நிர்மலா சீதாராமன் & மோடியை விட லேடி பெரியவர். ஸ்டிக்கர் தயாராகிறதாம்!

    ஒரு கோடி சொத்துக்குவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறை, சொத்துக்கள் பறிமுதல்: அப்ப ரூ.66.65 கோடிக்கு????

    ஜனவரி, 15

    ஆந்திரத்தில் தடையை மீறிச் சேவல் சண்டை; ரூ.100 கோடிக்கு சூதாட்டம்-. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி,தமிழன் எப்போதும் நீதிக்கோயில் ஆண்டி!

    தமிழ்நாட்டில் 2ஆவது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இல்லை: மக்களை வேதனையில் ஆழ்த்திய கூட்டுச் சதியின் நாயகர்கள் விரைவில் அம்பலமாவார்கள்!

    சட்டப்பேரவைத் தேர்தலில் ஊழல் பெருச்சாளிகளை வீழ்த்த வேண்டும்: கலைஞர் & தமக்கு எதிராகத் தாமே பிரச்சாரம் செய்வதில் கலைஞருக்கு நிகர் கலைஞர் தான்!

    இலவசப் பொங்கல் பரிசு வாங்க 10 லட்சம் பேர் மறுப்பு: மக்கள் மனநிலையில் மாற்றத்திற்கான அறிகுறி... முன்னேற்றம் உறுதி!

    உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

    ஜனவரி, 16

    துணைவேந்தர் இல்லாத 8 பல்கலைக்கழகங்கள்: தமிழ்நாட்டில் உருக்குலையும்

    Enjoying the preview?
    Page 1 of 1